தமிழ் படைப்புலகில் ராஜேஷ்குமார் என்ற எழுத்தாளரைக் கடைக்கோடி வாசகனும் தெரிந்து வைக்குமளவுக்குப் பரவலாக அறிமுகமானவர் தன் எழுத்து மூலம். "க்ரைம் கதைகளின் மன்னன்" என்று சிறப்பிக்குமளவுக்கு இவரின் திகில் நாவல்கள் வாசகர்களிடையே பெருமதிப்புப் பெற்றவை. சின்னத்திரை வைரஸ் வராத காலகட்டத்திலும், செல்போன் செல்லரிக்காத யுகத்திலும் இவர் தான் நெடுந்தூர பஸ் பயணங்களிலும், ரயில் பயணங்களிலும் கூடவே தன் நாவல் மூலம் வந்து போகும் ஸ்நேகிதர். இன்றைக்குப் பாக்கெட் நாவல்கள் பொலிவிழந்து போனாலும் அவற்றை இன்னும் தாங்கிப்பிடிக்கும் எழுத்தாளர்கள் என்றவகையிலும், அந்தப் பாக்கெட் நாவல்களுக்கு முத்திரை கொடுக்கும் வகையிலும் ராஜேஷ்குமாரின் இடம் தனித்துவமானது.
நான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்துக்காக எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களைப் பேட்டி எடுக்க அணுகியபோது துளியும் பந்தா இன்றி உடனேயே "எப்பவேணாலும் பண்ணலாம் பிரபா" என்று முழுமனதோடு சம்மதித்துச் செய்தும் காட்டினார். இந்த வானொலிப்பேட்டியில் ராஜேஷ்குமாரின் எழுத்துலக அறிமுகத்தில் இருந்து இன்றுவரை அவர் கடந்து சென்ற எழுத்துலகத் தரிசனமாக அமைகின்றது. இதில் குறிப்பாக அவரின் துப்பறியும் நாவல்களை வாசித்த காவல்துறையில் இயங்குபவர் ஒரு கொலைக்கேஸ் இற்கு உதவ அழைத்தது, வேட்டையாடு விளையாடு சினிமா திருடிய தன் நாவல், கின்னஸ் சாதனைப் பயணத்தில் இவரின் எழுத்துக்கள் என்று மனம் திறந்து பேசுகின்றார். பேட்டியின் ஒருங்கமைப்பில் உதவிய அன்பின் ரேகா ராகவன் அவர்களுக்கும் எனது நன்றிகளை இந்த வேளை பகிர்கின்றேன்.
தொடர்ந்து எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்கள் பேசுவதைக் கேட்போம்
Download பண்ணிக் கேட்க
இனிய நண்பரும் என் மனம் கவர்ந்த எழுத்தாளரும் ஆன ஆர்.கே.வின் பேட்டியை டவுண்லோடு செய்து கேட்கும்படி கொடுத்தமைக்கு நன்றி. கேட்டுவிட்டு நாளை விரிவாக கருத்திடுகிறேன்.
ReplyDeleteSooooper!
ReplyDeleteமிகவும் "பளிச்" பேட்டி! (அவர் நடையைப் போலவே) :)
ராஜேஷ்குமார் or ராஜேஸ்குமார் ?
ReplyDeleteபதிவில் மாறி மாறி வருதே, கா.பி?
இப்போது இவரைக் கடந்துவிட்டாலும், 20 வருஷங்களுக்கு முன்னால் இவரின் எல்லா எழுத்துக்களையும் தேடி தேடிப் படித்திருக்கிறேன்.
ReplyDeleteநல்ல பேட்டி. நல்ல ஹோம் ஒர்க் செய்திருக்கிறீர்கள்.
வருகைக்கு நன்றி அன்பின் கணேஷ்
ReplyDeleteவாங்கோ கே.ஆர்.எஸ்
ராஜேஷ்குமார் தான், திருத்திவிட்டேன் நன்றி ;)
மிக்க நன்றி ராஜ் சந்திரா
ஒரு காலத்துல ராஜேஷ்குமார் நாவல்கள் அவ்வளவு பிரபலம். இப்பல்லாம் வெளிவருதான்னு தெரியலை. வாங்கியெல்லாம் படிச்சதில்லை. யாராச்சும் ஏங்கயாச்சும் வாங்கீருப்பாங்க. அதுல சிலது படிச்சிருக்கேன்.
ReplyDeleteமறக்க முடியாத தலைப்பு “திரும(ர)ண அழைப்பிதழ்”