Pages
▼
Wednesday, September 7, 2011
பாடகர் ஜாலி ஏப்ரஹாம் பேசுகிறார்
கே.ஜே.ஜேசுதாஸில் இருந்து கேரளத்தில் இருந்து தமிழ்த்திரையுலகில் கோலோச்சிய பாடகர்கள் எழுபதுக்குப் பின்னாலும் எண்பதுகளிலும் கணிசமாகவே இயங்கிவந்தார்கள். இவர்களில் பாடகிகள் ஒருபக்கம் இருக்க, பாடகர்களை எடுத்துக் கொண்டால் ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், உன்னிமேனன், கிருஷ்ணச்சந்தர் இவர்களோடு ஜாலி ஏப்ரஹாமின் பாடும் தொனி ஒரே அலைவரிசையில் இருப்பதை ஏனோ உணரமுடியும். அதிலும் "உறவுகள் தொடர்கதை" போன்ற பாடல்களில் ஜெயச்சந்திரனா, ஜேசுதாஸா என்ற குழப்பத்தில் ஒரு சில ரசிகர்கள் என்னோடு தர்க்கம் புரிந்தும் இருக்கிறார்கள்.
அதே குழப்பத்தின் ஒரு படியாக ஜாலி ஏப்ரஹாம் இசைஞானி இளையராஜாவுக்காக முதலில் பாடிய "அடடா அங்கு விளையாடும் புள்ளி மானே" (மாயாபஜார் 1995) பாடலை ஜேசுதாஸ் பாடியதாக இசைத்தட்டுக்களுமே வெளியிட்டுத் தம் ஞானத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஜாலி ஏப்ரஹாம் சிட்னி வருகின்றார் அறிந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் ஜாலி ஏப்ரஹாமை வானொலிக் கலையகத்துக்கு அழைத்துவரக் கேட்டேன்.
என் சின்ன வயசில் இலங்கை வானொலியின் "பொங்கும் பூம்புனல்" நிகழ்ச்சியில் அடியேனைப் பாரம்மா என்று காலையில் ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரர் பல வருஷங்கள் கழிந்த நிலையில் என் முன்னே வானொலிப் பேட்டிக்கு வந்திருக்கின்றார் என்ற பெருமிதத்தோடு ஜாலி ஏப்ரஹாமுடன் பேட்டியை ஆரம்பித்தேன். தான் பாட வந்த கதையில் இருந்து, தன் இறுதிப்பாடலான ஒரு சின்ன மணிக்குயிலு (கட்டப்பஞ்சாயத்து) பாடலோடு திரையிசைப்பாடலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு கிறீஸ்தவ மதத் தொண்டுக்காகத் தன்னை அர்ப்பணித்தது வரையான தன் இசைவாழ்வில் மைல்கல்லாய் அமைந்த பாடல்களைப் பாடிக்கொண்டே தன் வாழ்வின் சுவையான அம்சங்களைப் பகிர்ந்து கொண்டே 30 நிமிடங்கள் கடந்து பயணித்தது அவர் பேட்டி.
பேட்டி முடிந்தபின் "காஷுவலாக பேட்டி அமைஞ்சிருக்கு, ரொம்ப நல்லா இருக்கு"என்று அவர் திருப்தியோடு சொல்லிக் கொண்டே ஆசையாகத் தன் காமராவிலும் எங்களைச் சிறைப்பிடித்துக் கொண்டார். கூடவே தன் இரண்டு பாடல் இசைத்தட்டுக்களை அன்பளித்தார்.
ஜாலி ஏப்ரஹாம், நான் வானொலிப் பேட்டி கண்ட கலைஞர்களில் இன்னொரு பண்பட்ட மனிதர்.
பேட்டியைக் கேட்க
Download பண்ணிக் கேட்க
ஜாலி ஏப்ரஹாம் பாடிய சில திரையிசைப்பாடல்கள்
அடியேனைப்பாரம்மா - படம்: வணக்கத்துக்குரிய காதலியே, இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்
அடடா அங்கு விளையாடும் புள்ளிமானே - படம்: மாயாபஜார் 1995, இசை: இளையராஜா
அட மன்மதன் ரட்சிக்கணும் - படம்: ஒருதலை ராகம் இசை: டி.ராஜேந்தர்
ஒரு சின்னமணிக்குயிலு சிந்து படிக்குதடி (பவதாரணியோடு) - படம்: கட்டப்பஞ்சாயத்து இசை:இளையராஜா
அடியேனை பாரம்மா இது நாள் வரை நான் அதை பாடியது ஜேசுதாஸ் என்றே எண்ணி இருந்தேன். இப்படி பட்ட ஒரு பாடகரை எனக்கு அறிமுக படுத்திய தல உங்களுக்கு நன்றி,
ReplyDeleteபேட்டி அருமையாக இருந்தது
தல அருமையான தொகுப்பு ;-)
ReplyDeleteஅட மன்மதன் ரட்சிக்கணும்!
ReplyDeleteஅட மன்மதன் ரட்சிக்கணும்!
அட மன்மதன் ரட்சிக்கணும்!
:))