Pages

Tuesday, February 22, 2011

மலேசியா வாசுதேவன் - நீங்காத எண்ணங்கள் ஒன்றல்ல


மலேசியா வாசுதேவன் என்ற பாட்டுக்குயிலின் நினைவுகள் சாகும் வரை தொடரும் பந்தம் போல அவ்வளவு சீக்கிரம் மனதில் இருந்து அகற்ற முடியாது போல. சில மாதங்களுக்கு முன்னர் மலேசியா வாசுதேவனின் தாய் மண்ணில் நடந்த பாராட்டு விழாவின் வீடியோவை எங்கே தொலைத்து விட்டுத் தேடிக் களைத்த நிலையில் இன்று ஒரு கடைக்குப் போய், கடை பூட்டும் அந்த அவசரத்திலும் கடைக்காரரை இம்சித்து வாங்கி வந்த டிவிடியைப் போட்டுப் பார்த்தேன். எஸ்.பி.பாலசுப்ரமணியமும், கங்கை அமரனும் இணைந்து கெளரவித்த இந்த விழா நிகழ்வைப் பார்க்கும் போதே தானாகவே கண்கள் தானாகப் பூக்கின்றன. நிகழ்வின் சில துளிகளாக டிவிடியில் இருந்து ஒலியாகப் பகிர்கின்றேன்.






மலேசியா வாசுதேவனைச் சந்தித்த நினைவுகளைப் பகிரும் கங்கை அமரன்



எஸ்.பி.பாலசுப்ரமணியம் மலேசியா வாசுதேவன் குறித்து வழங்கும் சிலாகிப்பு






T.M செளந்தரராஜன், P.சுசீலா, எம்.எஸ்.விஸ்வநாதன், எஸ்.ஜானகி சித்ரா, சுஜாதா, மனோ, பாரதிராஜா, சத்யராஜ், பிரபு, யுகேந்திரன் வழங்கும் பகிர்வுகள்.
குறிப்பாக எஸ்.ஜானகி அந்த நாள் நினைவுகளைப் பேசும் போது கட்டுப்படுத்த முடியாமல் அழுகை மீறப் பேசும் கணங்கள்..








மலேசியா வாசுதேவனுக்குக் கெளரவம் கொடுத்த விழாவை நடாத்திய கங்கை அமரன் முன்னர் இசையமைத்த சட்டம் திரைப்படத்தில் மலேசியா வாசுதேவனும் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பாடும்
"நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றும் தொடர்வது!"

8 comments:

  1. உண்மை தான் தல...
    அவர் மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் என்றும் அவரை நினைவு படுத்தி கொண்டே இருக்கும் .

    ReplyDelete
  2. //நண்பனே எனது உயிர் நண்பனே
    நீண்ட நாள் உறவிது
    இன்று போல் என்றும் தொடர்வது!//

    சில வரிகளின் சத்தியம்
    வெறும் வார்த்தையாகாமல்
    என்றும் வாழும்!

    ReplyDelete
  3. //கடைக்காரரை இம்சித்து வாங்கி வந்த டிவிடியைப் போட்டுப் பார்த்தேன்//

    கா.பி,
    முன்பு சொன்ன பின்னூட்டத்துக்கு, இந்த வரியே சாட்சி!

    ReplyDelete
  4. உங்கள் ப்ளாக் எப்படி இத்தனை நாள் எனக்கு மிஸ் ஆனது?

    ReplyDelete
  5. His songs will be ringing in our ears forever. Thanks for the post.

    ReplyDelete
  6. மலேசியா வாசுதேவன் என்ற மிகச்சிறந்த கலைஞனின் இழப்பு தமிழிசை ரசிகர்களுக்கு உண்மையிலேயே ஈடு செய்ய முடியாத இழப்புதான். டி.எம்.எஸ் அவர்களுக்குப் பிறகு மற்றொரு ஆண்மைமிக்க குரல் என்று அவரை மட்டும்தான் சொல்ல முடிகிறது. இதை யாரும் மறுக்கவே முடியாது.

    சமீப காலமாகவே சிறந்த கலைஞர்கள் நம்மை விட்டுப் போவது வருத்தத்தைத் தந்து கொண்டிருந்தது. இந்த ஆண்டாவது அது தொடராமல் இருக்கும் என்று நம்பினோம். அந்த நம்பிக்கையும் பொய்யானதே. :-(

    அவர் ஒரு மிகச்சிறந்த பன்முகக்கலைஞர். கீழே சுட்டியில் இருக்கும் பாடலைப் பாருங்கள். சுருளிராஜனுக்காப் பாடியிருக்கிறார். எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது.
    http://www.youtube.com/watch?v=AG0oQSU5M9E

    இதே போல உப்புமா கிண்டி வையடி என்ற பாடலையும் பாடியிருக்கிறார். அதில் உடன் பாடியிருப்பவர் வசந்தா. அதுவும் சுருளிராஜனுக்குத்தான். அந்தப் பாடல் இருந்தால் தயவு செய்து கொடுக்கவும்.

    அவரது ஆன்மா அமைதி பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  7. Good post as usual Thanks for sharing :)

    Malaysia vasudevan sir will never be forgetten by music lovers

    ReplyDelete