Pages

Tuesday, January 4, 2011

றேடியோஸ்புதிர் 59 - மூத்த பாகம் உதவிக்கு இளைய பாகம் மூத்ததுக்கு

றேடியோஸ்பதியின் ஆங்கிலப்புத்தாண்டு ஆரம்ப இடுகையாக ஒரு புதிரோடு தொடங்குகிறேன். நீண்ட நாட்களாகப் போட்டி இன்றித் தவிக்கும் அன்பு உள்ளங்களுக்கும் ஒரு தீனி போட்டது மாதிரியும் ஆச்சு.
இங்கே ஒரு படத்தின் பின்னணி இசையைக் கொடுக்கிறேன். இந்தப் பின்னணி இசை வரும் படத்தை இயக்கியவர் எண்பதுகளின் முக்கியமான நட்சத்திர இயக்குனர். இந்தப் படத்தின் சிறப்பு என்னவென்றால் இதே படத்தின் பாகம் 1 ஐ இந்த நட்சத்திர இயக்குனரின் உதவி இயக்குனராக இருந்தவர் பாகம் 2 ஐத் தன் குருநாதர் இயக்குவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே இயக்கிப் பெருவெற்றி பெற்ற படம். சிஷ்யனுக்குக் கிடைத்ததோ பெருவெற்றி, ஆனால் பாகம் இரண்டை இயக்கிய அவரின் குருநாதருக்குக் கிடைத்ததோ தோல்விப் படம். சீமைக்குப் போனாலும் சரக்கிருந்தாத் தானே எடுபடும்.

இரண்டு படங்களின் நாயகனும் ஒருவரே, இசையும் ஒரேயொரு ராஜா அந்த இளையராஜாவே. பின்னணி இசையைக் கேட்டுக்கொண்டே ஓடி வருக பதிலோடு

போட்டி இனிதே முடிந்தது, பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி ;)

சரியான பதில்
கல்யாணராமன் - இயக்கம் ஜி.என்.ரங்கராஜன்
ஜப்பானில் கல்யாணராமன் - இயக்கம் எஸ்.பி.முத்துராமன்

19 comments:

  1. கல்யாண ராமன்?

    SP முத்துராமனின் உதவி இயக்குனர் இயக்கியது.. பேரு கூட ரங்கராஜன்னு நினைக்கிறேன்.

    ஜப்பானில் கல்யாண ராமன் - SP முத்துராமன்

    ReplyDelete
  2. ம்ஹூம்...இது செல்லாது...செல்லாது..;)

    ReplyDelete
  3. Thiagarajahsivanesan@yahoo.co.ukJanuary 4, 2011 at 9:44 PM

    Guru-sisiyan padam.,sp.muthuraman.

    ReplyDelete
  4. மைஃபிரெண்ட்

    பின்னீட்டீங் ;)

    ReplyDelete
  5. தல கோபி

    முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் ;-)

    சிவனேசன்

    விடை தவறு குருசிஷ்யன் படம் பாகம் 1, 2 என்று வரவில்லையே

    ReplyDelete
  6. பார்ட் 1 :கல்யாணராமன்
    இயக்குனர் : ஜி.என்.ரங்கராஜன்

    பார்ட் 2 : ஜப்பானில் கல்யாணராமன்
    இயக்குனர் : எஸ்.பி.முத்துராமன்

    ReplyDelete
  7. கல்யாணராமன் & ஜப்பானில் கல்யாணராமன்

    ReplyDelete
  8. மாதவ்

    சரியான பதிலே தான்

    கைப்புள்ள

    பின்னீட்டிங் ;)

    கிருத்திகன்

    சரியான விடை

    ReplyDelete
  9. நிமல்

    சரியான பதிலே தான் ;)

    ReplyDelete
  10. ஜப்பானில் கல்யாணராமன்

    ReplyDelete
  11. கார்த்திக்

    சரியான பதில்

    ReplyDelete
  12. கல்யாண ராமன் ; ஜப்பானில் கல்யாணராமன்?

    ReplyDelete
  13. மங்கை அக்கா

    விடை தவறு ;)

    லோகேஷ்

    சரியான பதில்

    கே.ஆர்.எஸ்

    அதே ;-)

    ReplyDelete
  14. நான் வர்றதுக்குள்ள விடை வந்துருச்சு....புத்தாண்டு வாழ்த்துகள்...

    ReplyDelete