Pages

Tuesday, April 27, 2010

இளையராஜா & சத்யன் அந்திக்காடு - இன்னொரு வெற்றிக கூட்டணி


ஒரு இயக்குனருக்குள் இசையையோ குறித்த இசையமைப்பாளரையோ நேசிக்கும் ஆத்மார்த்தமான ரசிகர் இருப்பாரேயானால் எந்தக் காலத்திலும் அவர் யாசிக்கும் மெட்டுக்களை குறித்த இசையமைப்பாளரிடம் பெற்றுக் காலத்தால் அழியாத இசைக்காவியம் படைக்கலாம் என்பதற்கு எத்தனையோ இயக்குனர்களை முன்னுதாரணங்களாகக் காட்டலாம். இங்கே நான் கொண்டுவருபவர் மலையாளப் படவுலகின் ஜனரஞ்சக இயக்குனர் சத்யன் அந்திக்காட்.

சத்யன் அந்திக்காட் பற்றி தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சாயம் இருக்காது ஆனால் அவரின் காந்தி நகர் 2nd Street, அண்ணா நகர் முதல் தெருவாகவும், நாடோடிக்காற்று கதாநாயகனாவும் தமிழில் மீள எடுக்கப்பட்ட படங்கள். இவையெல்லாம் தாண்டி சத்யன் அந்திக்காட் வெறுமனே மசாலா இயக்குனராக மட்டுமன்றி குடும்ப உறவுகளைப் பலவிதமான கோணங்களில் அவர் உருவாக்கித்தந்த வரவேற்பு, வீண்டும் சில வீட்டுக்கார்யங்கள், மனசினக்கரே, அச்சுவிண்டே அம்மா, ரசதந்திரம், பாக்யதேவதா என்று பட்டியல் நீளும் படங்களை எடுத்து வெறுமனே விருதுகளை மட்டும் குவிக்காமல் ரசிகர்கள் நெஞ்சிலும் இடம்பிடித்துக் கொண்டவர்.

சத்யன் அந்திக்காட் இன் ஆரம்பகாலப் படங்களை எடுத்துக் கொண்டால் அவற்றில் இளையராஜாவின் பங்களிப்பு இல்லை. கொச்சு கொச்சு சந்தோஷங்கள் படத்தை தொடர்ந்து ஒரு சிறு இடைவெளி விட்டு மீண்டும் சத்யன் அந்திக்காட் - இளையராஜா கூட்டணி சேர்ந்த போது வந்த படங்கள் அனைத்துமே இசைச்சாகரம் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக அவை வெறுமனே நல்ல பாடல்களைக் கொண்ட படங்கள் என்பதை விட , சத்யன் சொல்ல வந்த படைப்பை நுணுக்கமான இசையால் நெய்தளித்த அருமையான பின்னணி இசை குறித்த படங்களை ஒரு படி உயர்த்தியும் விட்டன.

இன்றைக்கு இளையராஜாவின் இசைக்கு வர்த்தக உலகில் சற்றே இறக்கம் இருந்தாலும் தொடர்ந்து ஏழாவது படமாக தொடர்ச்சியாக இளையராஜாவைப் பயன்படுத்திவரும் சத்யன் சந்தேகமே இல்லாமல் அவரின் தீவிர ரசிகராக இருக்கிறார் என்பதில் ஐயமே இல்லை. அதை நிரூபிக்குமாற் போல, இளையராஜா சத்யனோடு சேரும் ஓவ்வொரு படங்களிலும் தனித்துவமான இசையை விட்டுச் செல்வார்.
இந்த ஆண்டு சத்யன் அந்திக்காட் இற்கு மிகவும் விசேஷமான ஆண்டு. காரணம் அவர் இயக்கி வெளிவரும் 50 வது படமான "கதா தொடருன்னு" வரவிருக்கின்றது. சத்யனும் ராஜாவும் கூட்டணி வைத்த ஓவ்வொரு படத்தையும் ஆழ அகலமாக ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அதை ஆறப்போட்டு விட்டு திடீர் விருந்தாக, இவர்கள் கூட்டணியில் வந்த சில முத்துக்களை இங்கே தருகின்றேன்.

கொச்சு கொச்சு சந்தோஷங்கள்


ஜெயராம் காவ்யா மாதவன் நடித்து வெளிவந்த இப்படம் 2001 ஆம் ஆண்டுக்கான சிறந்த பிராந்திர மொழிப்படமாகத் தேர்வு செய்யப்பட்டுத் தேசியவிருதைப் பெற்றுக் கொண்டது.

இந்தப் படத்தில் இருந்து கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் ஒரு இனிய பாடல் "கோட மஞ்ஞில்"



மனசினக்கரே



முதுமை வரமா, சாபமா? விடைதேடும் கேள்வியோடு மனதில் பாரத்தை விதைத்த படம். அதைப்பற்றி அனுபவித்து எழுதிய பதிவு மனசினக்கரே - முதுமையின் பயணம்

மனசினக்கரே தரும் "தங்கத்திங்கள்"




அச்சுவிண்டே அம்மா


இந்தப் படத்தைப் பார்த்து மூன்று வருஷங்கள் கழிந்தும், பதிவாகப் பகிர்ந்து கொள்ள முடியா அளவுக்கு வார்த்தைகளில் அடக்கமுடியாத உணர்ச்சிச் சித்திரம் இது. ஊர்வசிக்கு காலாகாலத்துக்கும் உயிலில் எழுதி வைக்க வேண்டிய நடிப்பை அளித்தது. இசைஞானியும் சத்தியன் அந்திக்காடுவும் இணைந்து சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டே மெட்டுப் போட்டு ரசித்த சீடிக்களும் வந்து பரபரப்பைக் கிளப்பியது. இசைஞானி மத்திய கிழக்கு நாட்டுக்குக் கடத்திப் போகும் பாட்டு ஒன்று இதில் இருந்து "எந்து பறஞ்சாலும்"




ரசதந்திரம்


இந்தப் படத்தை கேரளாவின் ஆலப்புழாவில் ஒரு தியேட்டரில் பார்த்து இன்புற்ற அந்த நாள் இன்னும் பசுமரத்தாணி போல. அதைப் பற்றி தமிழ்மண நட்சத்திர வாரத்தில் நான் எழுதிய பதிவு.

ரச தந்திரம் - திரைப்பார்வை



ரசதந்திரம் தரும் "பொன்னாவணிப் பாதம் தேடி" மதுபாலகிருஷ்ணன், மஞ்சரி குரல்களில்


வினோதயாத்ரா



கதையே இல்லாத படத்தையும் கூட, ரசிகனின் கைப்படித்து உட்காரவைத்து விசிறி விட்டுப் பார்க்க வைக்கும் தந்திரம் சத்தியன் அந்திக்காடுவுக்கு உண்டு என்று நிரூபித்த இந்தப் படம் திலீப் இன் நகைச்சுவை நடிப்புக்குத் தீனி கொடுத்தது. அதில் வரும் மதுபாலகிருஷ்ணன் பாடும் "மந்தாரப்பூ" என் சர்வகாலத்து இசைப்பட்டியலில் ஒன்று



இன்னதே சிந்த விஷ்யம்



மூன்று ஆர்ப்பாட்டமான பெண்மணிகளுக்குப் பாடம் படிப்புக்கும் வேலை மோகன் லாலுக்கு, கூடவே குறும்புக்காரி மீரா ஜாஸ்மினும். சொல்லவா வேண்டும் இவர்கள் கொட்டத்துக்கு. ராஜாவை மனதில் இருத்தி வைத்து நேசிக்கும் பாடகன் சிறீகுமாருக்குக் கிடைத்த இன்னொரு பொக்கிஷ வாய்ப்பு "கண்டோ கண்டோ காக்கைக் குயிலே"



பாக்யதேவதா



சத்யன் அந்திக்காடு இயக்கி இறுதியாக வெளி வந்த படமிது. இதைப் பற்றியும் ஒரு பதிவு போட்டு நிறைவடைந்தேன்.

"பாக்ய தேவதா" என்னும் இளையராஜா


கனிகா மீது மையல் கொண்டு ஜெயராம் பாடும் "ஸ்வப்னங்கள் கண்ணெழுதிய" (பாடியவர்கள் சித்ரா, ராகுல் நம்பியார்) பாடலைக் வெறும் கேட்கும் போது இருந்த சுகம் பார்க்கும் போது இரட்டிப்பாகின்றது காட்சியோடு அளவாகப் பொருந்தி.



கத தொடருன்னு



சத்யன் அந்திக்காடுவின் கலையுலக வாழ்வில் ஐம்பதாவது படமாக வரவிருக்கும் கத தொடருன்னு ராஜாவோடு அமர்க்களமான கூட்டணியாகத் தொடர்கின்றது. சத்யனும் ராஜாவும் இன்னும் தமது வெற்றிக்கூட்டணியில் இன்னும் பல நிறைவான படைப்புக்களைத் தர வாழ்த்தி இந்தப் படத்தில் இருந்து ஹரிகரன், சித்ரா குரல்களில் "ஆரோ" பாடல் நிறைக்கின்றது.

28 comments:

  1. அச்சுவிண்டே அம்மே மட்டும் ஞான் கண்டு - எல்லா படத்தையும் ஃப்ரீ டைம்ல நோக்கணும் தாங்க்ஸ் சாரே! :)

    ReplyDelete
  2. எந்து பறஞ்சாலும் நான் அடிக்கடி கேட்கும் பாடல் பாஸ்.. தொகுப்பு அருமை.

    ReplyDelete
  3. \\\ஆயில்யன் said...

    அச்சுவிண்டே அம்மே மட்டும் ஞான் கண்டு - எல்லா படத்தையும் ஃப்ரீ டைம்ல நோக்கணும் தாங்க்ஸ் சாரே! :)\\\

    ஈ மல்லு நாட்டுக்கார ஆளு எவ்விட போயின்னு விசாரிச்சு.. ஆளு இவ்வடத்தன்னே உள்ளும்..கொல்லாம்.

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு கானா,
    ராஜாவை பற்றி சத்தியன் சொல்வதை பாருங்கள்.
    http://www.youtube.com/watch?v=NBNGCQBiywU

    ReplyDelete
  5. பாக்கிய தேவதாவ தவிர மற்ற பாடல்கள் கேட்டதில்லை...ஆனா இளையராஜாவின் பாடல்கள் என்றால் சொல்லவும் வேணுமா...எல்லா பாட்டுமே அருமை...அதிலயும் ஜேசுதாஸ் பாடும் "கோட மஞ்ஞில்","ஸ்வப்னங்கள் கண்ணெழுதிய","ஆரோ" பாட்டுகள் இன்னும் நல்லாயிருக்கு....கலக்கல் தொகுப்பு...

    ReplyDelete
  6. எந்து பறஞ்சாலும் நான் அடிக்கடி கேட்கும் பாடல்!
    நல்ல தொகுப்பு பாடல்கள் தல!

    ReplyDelete
  7. 2 நாள் முன்னாடி தான் பாட்டை எல்லாம் கேட்டேன் உடனே உங்க ஞாபகம் வந்துச்சி....சும்மா பதிவு போட்டு கலக்கிட்டிங்க ;)))

    முதல் படம் தான் மிஸ்சிங் மீதி எல்லாம் பார்த்தாச்சி ;))

    http://www.youtube.com/watch?v=qIGwRxkBWxY

    இந்த வீடியோவை பாருங்கள்....சும்மா இசை பின்னுது...பாட்டு கேட்டும் போது கூட ..என்டான்னு நினைச்சேன் இந்த வீடியோவை பார்த்து எப்படா படம் வருமுன்னு இருக்கு ! ;))

    ReplyDelete
  8. \\ஓவ்வொரு படத்தையும் ஆழ அகலமாக ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும்,\\

    ஒவ்வொரு படமும் ஆயிரம் ஆயிரம் கதை சொல்லிகள் தல..கண்டிப்பாக ஆய்வு செய்யுங்கள்.

    \\கதையே இல்லாத படத்தையும் உட்காரவைத்து விசிறி விட்டுப் பார்க்க வைக்கும் தந்திரம் சத்தியன் அந்திக்காடுவுக்கு உண்டு என்று நிரூபித்த இந்தப் படம் \\

    அவரோட எல்லா படமும் அப்படி தான் தல எனக்கு...எந்த வித கற்பனையும் இல்லமால் போனால் மனுஷன் எப்படி தான் 3 மணிநேரம் உட்கார வச்சாருன்னு இன்னும் யோசிச்சிக்கிட்டே இருக்கேன்.

    \\அச்சுவிண்டே அம்மா\\

    யப்பா எம்புட்டு அருமையான படம்...!!! இவர் படத்தில் நகைச்சுவைக்கு தனியாக யாரும் இருந்தது இல்லை படத்தோட தானாக வரும் நகைச்சுவை கலக்கலாக இருக்கும். மீராவும் ஊர்வசியும் பேசிக்கிற அந்த இங்கீலிபிசு காமெடி செம சூப்பரு ;))

    தொகுப்புக்கு ரொம்ப நன்றி தல ;)

    ReplyDelete
  9. கத தொடருன்னு - இந்த ட்ரைலர் பார்க்கும் போது அதுல வர குட்டி பெண்ணு கலக்கியிருப்பான்னு நினைக்கிறேன்..;)

    ReplyDelete
  10. ஆயில்ஸ்

    மற்றப்படங்களையும் பார்க்கவும் ;)

    மிக்க நன்றி தமிழ்ப்பிரியன், ஆயிலை அப்படிப் பயமுறுத்தக் கூடாது ;)

    ReplyDelete
  11. எந்தா கொடுமையிது. ஈ சித்ரங்கள் ஒண்ணும் யான் கண்டிட்டில்லா. லிங்க் உண்டேங்கில் ஈமெயில் செய்யுமோ கானா பிரபா??

    ReplyDelete
  12. அச்சுவிண்டே அம்மே உங்க பதிவை பார்த்த பின்பு தான் இந்த படத்தை பார்தேன்..ரொம்ப நல்ல படம்...

    ஊர்வி நடித்த நல்ல காமெடிபடம் இருந்தால் எழுத்ங்க ...

    ReplyDelete
  13. வணக்கம் மணி

    வீடியோ பகிர்வுக்கும் வரவுக்கும் நன்றி, இதை முன்னரும் பார்த்திருந்தேன் அருமை


    வருகைக்கு நன்றி தாருகாசினி

    ReplyDelete
  14. என்ன தலைவா..வினோத யாத்ரால கதையே இல்லைன்னுட்டீங்க...நாஙு ஐந்து குட்டிக் கதைகள் உள்ள பிரமாதமான படம் தலைவா அது!

    ReplyDelete
  15. A very nice article!. You have written about all the films we enjoyed thoroughly. There's no need to say anything about our Maestro! A real genius. We will watch any of these movies again and again, simply marvelous films.

    ReplyDelete
  16. S Maharajan said...

    எந்து பறஞ்சாலும் நான் அடிக்கடி கேட்கும் பாடல்! //

    வாங்க தல

    கோபிநாத் said...

    2 நாள் முன்னாடி தான் பாட்டை எல்லாம் கேட்டேன் உடனே உங்க ஞாபகம் வந்துச்சி....சும்மா பதிவு போட்டு கலக்கிட்டிங்க ;)))//

    தல

    உங்களை மனசில் வச்சுத்தான் பதிவே போட்டேன். சத்யன் மற்றும் எங்க தல குறித்து எப்பவுமே நாங்கள் உயர்ந்த இடத்தில் தானே வச்சிருக்கிறோம்.

    ReplyDelete
  17. ரொம்ப நாலா கேட்க நினைத்த பாடல் 'பதிவு சூப்பர் '

    ReplyDelete
  18. சின்ன அம்மிணி said...

    எந்தா கொடுமையிது. ஈ சித்ரங்கள் ஒண்ணும் யான் கண்டிட்டில்லா. லிங்க் உண்டேங்கில் ஈமெயில் செய்யுமோ கானா பிரபா??//

    அம்மிணி,

    நெட்டில் பார்க்கல, எல்லாம் விசிடி


    malar said...

    அச்சுவிண்டே அம்மே உங்க பதிவை பார்த்த பின்பு தான் இந்த படத்தை பார்தேன்..ரொம்ப நல்ல படம்...//

    உங்கள் வேண்டுகோளுக்காக ஊர்வசி தொகுப்பு போடுறேன்


    ரெட்டைவால் ' ஸ் said...

    என்ன தலைவா..வினோத யாத்ரால கதையே இல்லைன்னுட்டீங்க/


    தல

    வினோத யாத்ரா பார்க்கும் போது கதை இருந்த பீலிங் இல்லை, ஆனா பிரமாதமான படம்.

    ReplyDelete
  19. Azhagan said...

    A very nice article!. You have written about all the films we enjoyed thoroughly./

    வாங்க அழகன்

    படங்களை நீங்களும் ரசித்ததால் மேலதிக அறிமுகமே வேண்டியிருக்காது. மிக்க நன்றி

    arise said...

    ரொம்ப நாலா கேட்க நினைத்த பாடல் 'பதிவு சூப்பர் '

    /

    மிக்க நன்றி

    ReplyDelete
  20. வினோத யாத்ரா ஒரு ட்ராவெலிங் படம். அந்த குட்டிபையன் கதை, இன்னொசென்ட் கதை, முரளி மற்றும் மீரா ஜாஸ்மின் குடும்ப கதை , முகேஷினுடைய தங்கை கதை , இவை எல்லாவற்றிலும் இடைப்படும் திலீப்பினுடைய பிரதான கதையே படம்.

    இதை இங்கே சொல்வது உங்களை குறை சொல்ல அல்ல... இதை வாசிக்கும் மற்றவர்க்கு அந்த படம் பற்றிப் புரிய வைக்கவே..
    தவிர இளைய ராஜாவின் இசை சேர்த்து one of the wonderful feel good movie.

    No offence yaar! Keep up the good work going!

    ReplyDelete
  21. பாடல்கள் கேட்டேன்
    மிகவும் அருமை
    இந்த படங்களை பார்க்க வேண்டுமே
    எங்கே கிடைக்கும் என்று தெரிவித்தீர்களென்றால்
    நல்லது
    இனியன்

    ReplyDelete
  22. '''இன்னதே சிந்த விஷ்யம்''
    இந்த படமும் உங்க பதிவை பார்து தான் பார்தேன்....சூப்பர்..

    ReplyDelete
  23. "ஷாய்ம்"னு உங்க பக்கங்களில் தேடினா ஒண்ணுமே மாட்டலையே? அவர் பாடல்களை தொகுக்கலையா?

    ஷேம் ஷேம். ஒரு பதிவு ஏற்பாடு பண்ணுங்களேன்.

    உறவுகள் தொடர்ககதை ஷ்யாம் பாட்டுனு இம்புட்டு நாள் நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா, ராசாவுதுன்னு தெரிஞ்சுது. ஷியாம் அருமையான பாடல்கள் கொடுத்திருக்காருல்ல?

    ReplyDelete
  24. இனியன் பாலாஜி said...
    பாடல்கள் கேட்டேன்
    மிகவும் அருமை
    இந்த படங்களை பார்க்க வேண்டுமே
    எங்கே கிடைக்கும் என்று தெரிவித்தீர்களென்றால்
    நல்லது//

    வணக்கம் இனியன்

    இவற்றை நான் டிவிடியில் வாங்கிப் பார்த்தேன், ஆனால் கூகிளில் தேடினால் இணையத்தில் இவை கிட்டும் என்று நம்புக்கின்றேன்.

    வணக்கம் மலர்

    இங்கே பட்டியலிட்ட சத்யனின் மற்றைய படங்களையும் தேடிப்பிடித்துப் பாருங்கள் கண்டிப்பாகப் பிடிக்கும்.

    ReplyDelete
  25. SurveySan said...
    "ஷாய்ம்"னு உங்க பக்கங்களில் தேடினா ஒண்ணுமே மாட்டலையே? அவர் பாடல்களை தொகுக்கலையா?

    ஷேம் ஷேம். ஒரு பதிவு ஏற்பாடு பண்ணுங்களேன்.
    //

    சர்வேஸ்

    ஷியாம் தொகுப்பு லிஸ்ட் எல்லாம் எப்பவோ ரெடி, போடத் தருணம் காத்திருந்தேன். மெளலியின் படங்களுக்கு ஷியாம் பாடல்கள் கலக்கலா வந்திருக்கு. நிறைய முத்துக்கள் கொடுத்திருக்கார்.

    உறவுகள் தொடர்கதை நம்ம மொட்டை பாஸ் ராஜா போட்ட டியூன் தான். அதில் என்ன சந்தேகம்

    ReplyDelete
  26. டாங்க்ஸ். விரைவில் ஏற்பாடவும். :)

    ReplyDelete
  27. யார் ஏற்றுக்கொண்டாலும் சரி... ஏற்காவிட்டாலும் சரி... இளையராஜா ஒரு இசை ராஜா. அவருடைய இசைதான் என்னுடைய குழந்தைப் பருவத்தில் நிறைந்திருந்தது. அது இன்னமும் நெஞ்சில் இருக்கிறது. பின்னாளில் உடன் படித்த நண்பர்களோடு ஏ.ஆர்.ரகுமான் - இளையராஜா சண்டை போட்டாலும்... இளையராஜாவின் இசைக்கு நான் தனிமதிப்புக் கொடுக்கத் தவறியதேயில்லை.

    மலையாளத்தில் அவரது இசையைக் குறைவாகவே கேட்டுள்ளேன். அதைத் தீர்க்க பாடல்களளத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி. ஆனால் பாடல்கள் ஒலிக்கவில்லை. பிழை காட்டுகிறது.

    ReplyDelete
  28. வாங்க ராகவன்

    நீண்ட நாளைக்குப் பின் சந்திக்கிறோம் ;)


    எல்லாப்பாடல்களையும் மீள ஒலிக்க விட்டேன் எல்லாமே சரியா இயங்குகின்றனவே?

    ReplyDelete