Pages

Tuesday, February 16, 2010

உங்கள் ஆதரவுடன் 50 வது றேடியோஸ்புதிர் ;)

நேற்று ஆரம்பித்த ஓட்டம் போல இருக்கிறது, மடமடவென்று 50 ஆவது புதிரை எட்டிப் பிடித்து விட்டது றேடியோஸ்புதிர் தொடர்.

பொதுவாகவே இந்தப் புதிரில் வரும் கேள்விகள் சுலபமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், கடந்த 49 புதிர்களைப் பார்த்தீர்களாயின், ஒருவருக்குச் சுலபமாக இருக்கும் பதில் இன்னொருவருக்கு கடும் கஷ்டமானதாக அமைந்து விடும். இருந்தாலும் இந்தப் புதிரில் சுவாரஸ்யமாகக் கலந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கோடு வருகை தரும் உங்களுக்கு மீண்டும் இனிய நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு இந்த 50 வது புதிரில் ஒரு கலக்கலான திரைப்படத்தின் பின்னணி இசையோடு சந்திக்கிறேன். வழக்கம் போல் புதிர் முடிவில் அந்தப் படத்தின் முழுமையான பின்னணி இசையும் வரும்.

ஒரு காலகட்டத்தில் முன்னணி நட்சத்திரமாக விளங்கிய நடிகையின் மகள் நடித்த முதல் படம் இது, கூட நடித்த நாயகருக்கு அன்று தொட்டதெல்லாம் வசூல்படங்களாக அமைந்து விட்டது. எல்லாம் ராஜ யோகம். அண்ணன் மெட்டுக் கட்ட, தம்பி கட் சொன்ன படங்கள் பெரும்பாலும் ஹிட்டு தானே ;)

"என்ன கேட்டானா? காரை நமம வச்சிருக்கிறோம் இந்தக் காரை வச்சிருந்த சொப்பனசுந்தரியை இப்ப யாரு வச்சிருக்கிறாங்கன்னு கேட்கிறான், ஒரு வித்துவானைப் பார்த்துக் கேட்கிற கேள்வியாய்யா இது?"



போட்டியில் பங்கு கொண்ட அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு
பதிலைப் பார்ப்போம்.

படம்: கரகாட்டக்காரன்
நடிகர்கள்: ராமராஜன், கனகா (நடிகை தேவிகா மகள்)
இசை: இசைஞானி இளையராஜா
இயக்கம்: கங்கை அமரன்

33 comments:

  1. இது கரகாட்டக்காரனாச்சே :)

    ஹாஃப் செஞ்சுரிக்கு வாழ்த்துகள், எப்ப எங்க தல சச்சின்மாதிரி ஃபுல் செஞ்சுரி போடப்போறீங்க? ;)

    - என். சொக்கன்,
    பெங்களூரு.

    ReplyDelete
  2. பேசத்தெரியாத குழந்தை கூட சொல்ற கேள்வியா கேட்டு 50 வது வாரத்தில் வெற்றியை பங்கிட்டு தரும் கானா வாழ்க வாழ்க..

    ReplyDelete
  3. சொல்லி அடிச்ச படமாச்சே
    ................
    இன்னும் தெரியலியா..,
    அதாண்ணே இது...!

    கரகாட்டக்காரன்..!
    போஸ்டர் அடிச்சி சொல்லிட்டிங்க
    வாழ்த்துக்கள் 50 புதிர் ....
    இன்னும் பல சிகரம் தொடட்டும்

    அப்படியே கலந்துக்கிற
    எல்லாரும்
    விடையுடன் வாழ்த்த
    விரும்புகிறேன்

    ReplyDelete
  4. எங்களைப்போல சினிமா வித்துவான்களைப்பாத்து க்கேக்கற கேள்வியா இது கரகாட்டக்காரன் ராமராஜன் கனகா. எத்தனை த்டவை பாத்திருப்போம்.. மனப்பாடமே ஆகிடுச்சே ம்யூசிக்கும் வசனங்களும்..

    ReplyDelete
  5. றேடியோஸ்புதிர் 5000 வது புதிரெல்லாம் போட்டு மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. பேசத்தெரியாத குழந்தை கூட சொல்ற கேள்வியா கேட்டு 50 வது வாரத்தில் வெற்றியை பங்கிட்டு தரும் கானா வாழ்க வாழ்க..//

    ரிப்பீட்டு. அதுவும் கன்னாபின்னா ரிப்பீட்டு

    ReplyDelete
  7. கரகாட்டக்காரன் பாஸ்

    ReplyDelete
  8. 50வது புதிர் பதிவுக்கு வாழ்த்துக்கள் பாஸ்! :))

    இந்த படத்திலேர்ந்து எனக்கு நிறைய பேக்கிரவுண்ட் தீம் ரொம்ப நாளா முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன் இப்ப சிக்கிடுச்சு :))))

    போட்டி மியூசிக் பிட்டையும் சுட்டுட்டேன்!

    ReplyDelete
  9. தாரதத்தனதானனா...தத்தரத்தத்தரதானனா...

    கரகாட்டகாரன்

    ReplyDelete
  10. இந்தப் படம் கரகாட்டக்காரன் என்பது எனக்குத் தெரியாது :)

    ReplyDelete
  11. இப்படி ஒரு சிரமமான கேள்வியைக்கேட்டு எங்களைத் திணறடிப்பீங்கன்னு கொஞ்சம்கூட நினைக்கலை :))

    ReplyDelete
  12. சொக்கன், கலைக்கோவன், முத்துலெட்சுமி, புதுகைத் தென்றல், சென்ஷி, அப்துல்லா

    ;0 நன்றிகளுடன் வாழ்த்துக்கள் சரியான பதில் தான்

    ReplyDelete
  13. தல இசையை கேட்கவில்லை...அந்த படமே சொல்லிடும் எந்த படம்ன்னு ;))

    கரகாட்டக்காரன் ;-)

    நாயகன் - இசை தெய்வம் இளையாராஜா ;)

    ReplyDelete
  14. தல ஒரே ஒரு வேண்டுகோள். அந்த பெயர் போடும் போது வரும் வீடியோவை எப்படியாச்சும் போடுங்க...அதுல தெய்வம் வரும்...பீலிஸ் ;)

    ReplyDelete
  15. தல...50வது புதிருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

    ReplyDelete
  16. முதல்ல ஐம்பதாவது புதிருக்கு வாழ்த்துக்கள் கானா பிரபா.

    என்னோட ஒரு நட்பு இந்த புதிர நான் கண்டுபிடிச்சே ஆகணும்னு அனுப்பி வச்சுது.

    நானும் இவ்ளோ நேரமா யோசிச்சு கண்டுபிடிச்சிருக்கேன்னு நினைக்கிறேன்.

    முதல் தடவ கலந்துக்கிரதால தப்புன்னா ஆறுதல் பரிசாவது அனுப்பி வைங்க :)))

    ReplyDelete
  17. விடை கரகாட்டக்காரன்.

    ReplyDelete
  18. 50வது புதிர் பதிவுக்கு வாழ்த்துகள்...!!!

    இசை மட்டுமே போதுமே இந்த படத்தை கண்டுபிடிக்க... :-)

    நன்றி, நானும் உங்கட புதிர் ஒண்டுக்காவது விடை கண்டுபிடிக்க முடிஞ்சது... ;-)

    ReplyDelete
  19. தல,
    50வது புதிர் பதிவுக்கு வாழ்த்துக்கள்...
    படம்
    "கரகாட்டக்காரன்"

    ReplyDelete
  20. அன்பு கானா, இது ரொம்ப கஷ்டமான கேள்வி. ஏதாவது க்ளு கொடுங்க :) அந்த டயலாக்கையாவது கொடுக்காம இருந்திருக்கலாம். பல மணி நேரம் மண்டையைக் குழப்பியதில் கிடைத்த பதில் "கரகாட்டக்காரன்"

    ReplyDelete
  21. கரகாட்டக்காரன்

    எப்பதான் கஷ்டமான புதிர் கொடுக்கப் போறீங்களோ? :-(

    ReplyDelete
  22. Engala vechu kaamedy keemedy edhum pannaliyae :P

    50-avadhu pudhirukku vaazhthukkal :)) Idhu varai pala pudhirgalukku vidai alitha google aandavarukkum avaraal mudiyaadha pozhudhu badhil alitha yahoo aandavarukkum sirappu nandrigal :)))

    ReplyDelete
  23. தல,

    இப்படி சப்பையாக ஒரு கேள்வியைக் கேட்டு எங்களை அசிங்க படுத்திட்டீங்க. இருப்பினும் எல்லாரையும் ஜெயிக்க வச்சி பார்க்க நினைத்த கானா அவர்களே வாழ்க வளமுடன்!

    படம்: கரகாட்டகாரன்
    நாயகன்: மக்கள்நாயகன்

    இந்த டியுனைக் கேட்கும்போதே சிரிப்பு வந்துடும். இதே போல சிரிப்பு வரும் டியுன்கள் வேறுபடங்களிலும் உண்டு. விஜயகாந்த் நடித்த 'நானே ராஜா நானே மந்திரி', பாக்யராஜ் நடித்த 'ராசுக்குட்டி'.

    ReplyDelete
  24. \\\பேசத்தெரியாத குழந்தை கூட சொல்ற கேள்வியா கேட்டு 50 வது வாரத்தில் வெற்றியை பங்கிட்டு தரும் கானா வாழ்க வாழ்க..//

    ரிப்பீட்டு. அதுவும் கன்னாபின்னா ரிப்பீட்டு

    ReplyDelete
  25. விடை: வில்லுப்பாட்டுக்காரன்..

    தப்பா சொன்னா எங்களுக்கு தனியா கமெண்ட் போடுவீங்களாமே.. அதனால் கரகாட்டம் ஆடுவதை விட்டு விட்டோம்.. ;-)))

    ReplyDelete
  26. நிமல், ஆயில்ஸ்

    சுலபமான கேள்வி என்று சொல்லி விட்டுப் பதில் சொல்லாமல் விட்டுவிட்டீர்கள்

    சுசி, மகராஜன், சுப்பராமன், ரிஷான், G3, குட்டிப்பிசாசு, தமிழ்ப்பிரியன்

    சரியான விடை தான்

    உங்க குசும்புக்கு அளவே இல்லை மக்கள்ஸ் ;)

    ReplyDelete
  27. கரகாட்டக்காரன் :)

    ReplyDelete
  28. கரகாட்டக்காரன் தமிழ்த்திரைப்படங்களில் ஒரு திருப்பம் என்றுதான் சொல்ல வேண்டும். இளையராஜாவின் இசைதான் அடித்தளம். அதற்கு மேல் எழும்பிய மாளிகைதான் படம். ஆனாலும் உங்கள் குறிப்புகள் குறும்பு. :)

    ReplyDelete
  29. வாழ்த்துக்கள் பிரபா

    படம் : கரகாட்டக்காரன்
    நாயகன் : ராமராஜன்
    நாயகி: கனகா
    சம்பந்தப்பட்ட காட்சியில் நடித்தவர்கள்: கவுண்டமணி, செந்தில்

    இயக்குநர்: கங்கை அமரன்
    இசை: இளையராஜா

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள்

    =இஸ்மாயில் கனி

    ReplyDelete
  31. ராகவன், அருண்மொழி வர்மன்

    அதே தான் பதில் ;)

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி இஸ்மாயில் கனி

    ReplyDelete
  32. போட்டியில் பங்கு கொண்ட அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு
    பதிலைப் பார்ப்போம்.

    படம்: கரகாட்டக்காரன்
    நடிகர்கள்: ராமராஜன், கனகா (நடிகை தேவிகா மகள்)
    இசை: இசைஞானி இளையராஜா
    இயக்கம்: கங்கை அமரன்

    ReplyDelete
  33. வாழ்த்துகள் கானாஸ்! :-)

    ReplyDelete