Pages

Monday, December 21, 2009

றேடியோஸ்புதிர் 49 - யாரந்த சகலகலாவல்லி

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படி ஒரு விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் இயக்குனர் பற்றிய புதிர் தான் இது. இவரும் கூட நடிகை சுஹாசினி போல ஒளிப்பதிவைப் பயின்றவர். ஆனால் ஒளிப்பதிவாளராகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட இவர் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.

இவரின் தந்தை கூட சிவாஜி காலத்தில் பிரபல தயாரிப்பாளர் சக இயக்குனராக இருந்திருக்கிறார்.
இந்தப் பெண்மணி அடுத்துக் கைவைத்தது கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் என்று எல்லாவற்றையும் ஒரே திரைப்படத்தில் செய்து ஒரு படத்தினை இயக்கியிருந்தார். அந்தப் படத்தைத் தொடர்ந்து இன்னொரு படம் கூடப் பண்ணியிருந்தார். முதலில் இயக்கிய படத்தில் ஒரு பாடகரை நாயகனாக்கியதோடு பிரபல இசையமைப்பாளர் ஒருவர் பெயரில் உள்ள இன்னொரு நாயகனையும் நடிக்க வைத்தார். இரண்டு படங்களுக்குமே இசை இளையராஜா.
சரி, யார் இந்த சகலகலாவல்லி இயக்குனர் என்று கண்டு பிடியுங்களேன்.
பி.கு. இவர் இப்போது ஒளிப்பதிவில் இல்லாமல் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்தின் கிரியேட்டிவ் டைரக்டராக இருக்கிறார்.

புதிருக்கான சரியான பதில் இதோ:
அந்த இயக்குனர், ஒளிப்பதிவாளர்: பி.ஆர்.விஜயலஷ்மி
இயக்கிய படம்: பாட்டு பாடவா
ஒளிப்பதிவு செய்த படங்கள்: சின்ன வீடு, அறுவடை நாள், தாலாட்டு
அவரின் தந்தை: பி.ஆர்.பந்துலு
போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

26 comments:

  1. பி. ஆர். விஜயலஷ்மி - பாட்டுப் பாட வா - எஸ்.பி.பி, ரஹ்மான் - தாலாட்டு - அர்விந்த் சாமி :)

    அவங்கப்பா யாரு? பீம்சிங்கா, பி. ஆர். பந்துலுவா?

    - என். சொக்கன்,
    பெங்களூரு.

    ReplyDelete
  2. சரவணகார்த்திகேயன்

    ஸ்ரீபிரியா என்ற விடை தப்பு

    ReplyDelete
  3. சொக்கரே

    சரியான பதில் தான் ;)

    ReplyDelete
  4. 5 வருடங்கள் அசோக்குமாருடன் பணியாற்றி,20 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்து, SPB யை வைத்து 'பாட்டுப் பாடவா' இயக்கிய, ஒளிப்பதிவாளர், இயக்குனர் B.R.விஜயலக்ஷ்மி.
    பழம்பெறும் தயாரிப்பாளர், இயக்குனர் B.R.பந்துலுவின் மகள்.

    ஏன் இவ்வளவு இலேசான கேள்வியெல்லாம் கேட்குறீங்க? :(
    இந்த முறையாவது பரிசை அனுப்பிடுங்க பாஸ்.. :)

    ReplyDelete
  5. B.R.விஜயலக்‌ஷ்மி?

    ReplyDelete
  6. ரிஷான்

    சரியான பதில் , ஆனா ஈசியா போடும் போது தானே பதிலோட உங்களைக் காணமுடியுது ;)

    ராப்

    பின்னிட்டீங்க ;)

    ReplyDelete
  7. b.r.விஜய லட்சுமி.

    முதல் படம் பாட்டு பாடவா.

    இரண்டாவது குறிப்பு தாலாட்டு அரவிந்த்சாமியை குறிப்பது போன்று இருக்கிறது.ஆனால் தாலாட்டு பாட்டு பாடவாவிற்கு முன்னமே வந்த படம்.

    ReplyDelete
  8. விஜயலஷ்மி...கரெக்டா..

    அன்புடன்,
    சுவாசிகா
    http://ksaw.me

    ReplyDelete
  9. சிவா, மாதவ், நாடோடி இலக்கியன், வாசுகி, சுவாசிகா, தமிழ்ப்பறவை, மாலி நடராஜன், குட்டிப்பிசாசு

    நீங்கள் அனைவருமே சரியான பதில் தான் சொல்லியிருக்கிறீர்கள்

    ReplyDelete
  10. பி.ஆர். விஜயலஷ்மி

    ReplyDelete
  11. B.R.Vijayalakshmi??

    Medhuva thanthi adichane kai vechane - one of the nice song

    ReplyDelete
  12. விஜயலட்சுமி.

    படம் பாட்டுப் பாடவா

    நாயகர்கள் பாலசுப்ரமணியம், ரஹ்மான்

    (சின்னக் கண்மணிக்குள்ளே, வழிவிடு வழிவிடு, நில் நில் நில பாடல்களை மறக்க முடியுமா)

    ReplyDelete
  13. தங்ஸ், செ.நாகராஜ், அருண்மொழிவர்மன்

    சரியான பதில் தான் ;)

    ReplyDelete
  14. புதிருக்கான சரியான பதில் இதோ:
    அந்த இயக்குனர், ஒளிப்பதிவாளர்: பி.ஆர்.விஜயலஷ்மி
    இயக்கிய படங்கள்: பாட்டு பாடவா, தாலாட்டு
    அவரின் தந்தை: பி.ஆர்.பந்துலு
    போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  15. எடிட்டர் லெனின் இவரின் சகோதரர்.

    ReplyDelete
  16. ஒரு பாட்டு அல்லது இசை சமாச்சாரங்கள் இல்லாத இந்த புதிரினை ஞான் பகிஷ்கரிக்கிறேன்!

    ReplyDelete
  17. எம்.எம்.அப்துல்லா said...

    எடிட்டர் லெனின் இவரின் சகோதரர்.//

    எடிட்டர் லெனின் பீம்சிங் மகன், இவர் பந்துலு மகள்

    ஆயில்யன் said...

    ஒரு பாட்டு அல்லது இசை சமாச்சாரங்கள் இல்லாத இந்த புதிரினை ஞான் பகிஷ்கரிக்கிறேன்!//

    புதிரே முடிஞ்சு போச்சு பகிஷ்கரிப்பா

    ReplyDelete