முதலில் றேடியோஸ்பதி நேயர்களுக்கு இனிய திருவோணத் திருநாள் வாழ்த்துக்களை ஒரு நாள் முன் கூட்டியே தெரிவித்துக் கொள்வதில் என்னுடன் சின்னப்பாண்டி, நிஜம்ஸ் மற்றும் தல கோபி ஆகியோர் பெருமையடைகின்றோம் ;-)
முதலில் உங்கள் மூளைக்கு வேலையாக வருவது றேடியோஸ்புதிர்.
90களில் புதுவசந்தம் ஆரம்பித்து வைத்த நான்கு நண்பர்கள் செண்டிமெண்ட் தொடந்து இரண்டு டஜனுக்கு மேல் கூட்டணி ஹீரோக்கள் படங்களை கொடுத்து வந்தது. அப்போது மலையாளத்தில் இருந்தும் ஒரு படம் இறக்குமதியாகி தமிழில் மீள எடுக்கப்பட்டது. மலையாளத்தில் கூட்டணி இயக்குனர்களாக இருந்து பல வெற்றிப்படங்களை அளித்த சித்திக்-லால் இயக்கத்தில் 1990 இல் வெளிவந்த "In Harihar Nagar" என்ற படமே அவ்வாறு மீள தமிழில் எடுக்கப்பட்ட படமாகும். இந்த "In Harihar Nagar" படம் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் '2 Harihar Nagar' என்று இந்த ஆண்டு அதே நண்பர்களை வைத்து லால் இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட்டடித்தது. கேள்வி இதுதான். ஆரம்பத்தில் வெளிவந்த அந்த மலையாளப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட தமிழ்ப்படத்தின் பெயர் என்ன? ஏகப்பட்ட க்ளூக்கள் கொடுத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று நினைத்தாலும் பாழாய்ப் போன மனம் இந்தப் பண்டிகை நாளில் உங்களைத் தோற்கடிக்க விரும்பாமல் ஒரே ஒரு க்ளூ. இந்த தமிழ்ப்படத் தலைப்பில் தலைவர் ஒருவர் பெயர் ஒட்டியிருக்கிறது.
In Harihar Nagar படத்தில் வெளிவந்த "ஏகாந்த சந்த்ரிகே" இசை:பாலகிருஷ்ணன்
2 Harihar Nagar படத்தில் வெளிவந்த "ஏகாந்த சந்த்ரிகே" ரீமிக்ஸ் இசை: அலெக்ஸ் பால்
நேற்று கேட்ட கேள்விக்கு சரியான பதில்: எம்.ஜி.ஆர் நகரில்
ஆனந்த்பாபு, சுகன்யா, விவேக் போன்றோர் நடித்து வெளிவந்த அப்படத்தின் பாடல் இதோ
தொடந்து ஓணம் ஸ்பெஷல் பாடல்களாக, தமிழில் வெளிவந்த மலையாள வரிகளைத் தாங்கிய பாடல்கள்.
முதலில் வருவது, பூந்தளிர் படத்தில் இருந்து மலையாளக் குயில் ஜென்சி பாடும் "நன் நன் பாடணும்"
அடுத்ததாக , இந்த ஆண்டின் பொன் விழா நாயகன் கமல்ஹாசனும் ஜானகியும் இணைந்து பாடும் "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்" மைக்கேல் மதன காமராஜனில் இருந்து
மந்தார மலரே மந்தார மலரே என்று பாட்டுக் கட்டுகிறார்கள் ஜெயச்சந்திரனும், எல்.ஆர்.ஈஸ்வரியும் "நான் அவன் இல்லை" படத்திற்காக
"நெஞ்சினிலே நெஞ்சினிலே" என்று ஜானகி கொஞ்சும் தமிழ் பாட, இடையில் வந்து மலையாள வாசம் பரப்புகிறார் ஸ்ரீகுமார், உயிரே திரைப்படத்திற்காக
"லாலா நந்தலாலா" பாட்டில் கேரளத்தின் கொள்ளை அழகை காட்டியது நரசிம்மா, பாடுகிறார் கவிதா சுப்ரமணியம்
"பொன்னின் திருவோணத் திருநாளும் வந்தல்லோ" என்று நிறைவாக்குகிறார்கள் இளையராஜாவும், சுஜாதாவும் " கவலைப்படாதே சகோதரா திரைப்படத்தில் இருந்து.
ஓணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள நாடு
மீ த பர்ஸ்ட்டேய்ய்ய்ய்ய்! :))
ReplyDeleteஒரே ஓணானா இருக்கு...பாஸ்..இருங்க...ரங்கீலாக்கிட்டே சொல்லி பொங்கல் போட்டாத்தான் சரி வருவீங்க..ரெண்டு பாண்டீஸூம்!! :))))))))
ReplyDeleteநல்ல கலெக்ஷன் ... ஆனா, ரசிக்கிற மூட்ல நான் இல்லை .... ஏன் தெரியுமா????????????
ReplyDeleteஎனக்கு உங்க புதிருக்கு பதில் தெரியலை ... ஆஆஆஆஆஆஆஆஆஆங்!
- என். சொக்கன்,
பெங்களூர்.
எம்ஜியார் நகரில்?
ReplyDelete(ஆனந்த் பாபு, சுகன்யா, விவேக்)
நம்ம மத்திய அமைச்சர் தானே வில்லன்?
பிச்சுக்கோ கோபாலா
MGR Nagaril!
ReplyDeleteமுரளி
ReplyDeleteநீங்கள் தான் சரியான பதிலோடு வந்திருக்கும் முதல் ஆள், வாழ்த்துக்கள்
நிஜம்ஸ்
வெற்றி உங்களுக்கும் ;)
நானும் ஓணம் வாழ்த்துக்கள் ஜொள்ளிக்கிறேன்... :)
ReplyDeleteஓண ஆஸம்சகள்!
ReplyDeleteஅந்த தமிழ் படம் - MGR நகரில்..?
பின்னே 2 Harihar Nagar (எழுதி,தயாரித்து,) இயக்கியது ( நீண்ட நாள் கழித்து) லால், சித்திக் அல்லா.
ReplyDelete//இந்த தமிழ்ப்படத் தலைப்பில் தலைவர் ஒருவர் பெயர் ஒட்டியிருக்கிறது.//
ReplyDeleteM.G.R. நகரில்...?!!
//நானும் ஓணம் வாழ்த்துக்கள் ஜொள்ளிக்கிறேன்... :)//
ReplyDeleteரிப்பிட்டேய்
எம்.ஜி.ஆர். நகரில்.. நகர் மற்றும் தலைவர் என்பதை வைத்தே கண்டுபிடித்தேன்..
ReplyDeleteஇது மலையாளப் படத்தின் ரீமேக்கா?? சொதப்பியிருப்பார்கள்..
எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் ஸ்டேஷன்...
ReplyDeleteஉங்களுக்கும் ஓணம் வாழ்த்துக்கள் பிரபாண்ணா...
அடிக்கடி வர்றேன். பாட்டுக்களைக் கேட்டுட்டு பின்னூட்டமிட எண்ணுவேன். பின் பாடல்களை மறந்துவிடுவேன். ஒரு தனிநாள் ஒதுக்கி விட்ட பதிவுகளில் நீங்கள் கொடுத்த பாட்டுக்களைக் கேட்கவேண்டும். அன்றுதான் எனக்கு ஓணம்...
அனைவருக்கும் இனிய ஓணம் வாழ்த்துக்கள் ;))
ReplyDeleteஇங்க சேட்டன்கள் இன்னிக்கு விருந்துன்னு சொல்லியிருக்கானுங்க..பார்ப்போம் விருந்து கொடுக்கிறானுங்களா இல்ல அல்வா கொடுக்கிறானுங்களான்னு ;)
பாட்டு எல்லாம் கலக்கல் ;))
இப்படி பதிவுல புகழ்ந்துக்கிட்டே போகலாம்...(விடை தெரியலைன்னு சொல்ல இப்படி எல்லாம் சீன் போட வேண்டியிருக்கு) ;))
அண்ணா நகர் முதல் தெரு தானே.
ReplyDeleteஆவ் , போன பதில் தப்பு
ReplyDeleteஎம்.ஜி.ஆர் நகரில் தான் கரெக்ட்
ராஜேஷ் வேணு
ReplyDeleteசரியான பதில், லால் தான் இயக்கம் திருத்தி விடுகிறேன் நன்றி ;)
கலைக்கோவரே
சரியான பதில்
அரவிந்
உங்க பதில் சரி, மலையாளதை தமிழில் சொதப்பி விட்டார்கள்
தமிழ்ப்பறவை
நீங்க சொன்னதில் பாதி சரி, இதே பேரில் 2 படங்கள் வந்தன
சின்ன அம்மிணி
முதலில் பிழை, அடுத்த ரவுண்ட்டில் சரி ;)
நீங்க இந்த போஸ்ட் போட்டதே மேல இருக்கற வீடியோவுக்காகவும்,போட்டோவுக்காகவும்தான்னு ஊர்ல பேசிக்கறாங்களே..அது உண்மையா பாஸ்? :-)))
ReplyDeleteஇனிய ஓணம் வாழ்த்துக்கள்.
ReplyDelete//பாழாய்ப் போன மனம் இந்தப் பண்டிகை நாளில் உங்களைத் தோற்கடிக்க விரும்பாமல் //
கடினமான புதிர் தந்து விட்டு இப்படி sentiment வசனம் வேறா?
'M.G.R நகரில்' என்று ஏதும் படம் இருக்கா? இந்த படத்தின் பெயர் எங்கயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கு.
(காசா பணமா? சும்மா சொல்லித்தான் பார்ப்போமே.)
(தலைவர் ஒருவரது பெயர் இருக்கு என்பதால் இதை நினைத்தேன். ஆனால் இது In Harihar Nagar ஐ தழுவி எடுக்கப்பட்டதா?
என்று எல்லாம் தெரியாது. )
இயற்கை பாஸ்
ReplyDeleteசெயற்கையா பேசி பழக்கமில்லை எனக்கு ;)
வணக்கம் வாசுகி
கஷ்டமான கேள்விக்கு சரியா சொல்லீட்டிங்கள் ;)
periya pandi ,chinna pandi matrum anavarukum onam nal valthukal
ReplyDelete" மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு " - அண்ணா நகர் முதல் தெருவுல தான்.
ReplyDeleteரவிசங்கர் ஆனந்த்
றேடியோஸ்புதிரில் கேட்கப்பட்ட கேள்விக்குச் சரியான பதில்:
ReplyDeleteஎம்.ஜி.ஆர் நகரில்
போட்டியில் கலந்தவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.
//முதலில் றேடியோஸ்பதி நேயர்களுக்கு இனிய திருவோணத் திருநாள் வாழ்த்துக்களை ஒரு நாள் முன் கூட்டியே தெரிவித்துக் கொள்வதில் என்னுடன் சின்னப்பாண்டி, நிஜம்ஸ் மற்றும் தல கோபி ஆகியோர் பெருமையடைகின்றோம் ;-)///
ReplyDeleteதன்யனானோம்! :)))
ஓணம் வாழ்த்துக்கள் பாஸ் :)