Pages

Tuesday, May 5, 2009

றேடியோஸ்புதிர் 40 - இளையராஜா எழுதிய கதை

ஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டும் றேடியோஸ்புதிர்.
இந்த வாரம் இடம்பெறும் இந்தப் புதிர் இசைஞானி இளையராஜாவின் இனியதொரு ஆரம்ப இசை கொடுத்து வருகின்றது. இந்த இசை வரும் படம் எது என்பதே கேள்வி.

குறித்த இந்தப் படத்தின் கதையை எழுதி, முழுப்பாடல்களைக் கூடத் தானே எழுதியதோடு இசையமைத்திருக்கின்றார் இசைஞானி இளையராஜா. இந்தப் படத் தலைப்பின் முதற்பாதியோடு இன்னொரு சொல்லை ஒட்ட வைத்தால் மக்கள் திலகத்துக்கு ஸ்டார் அந்தஸ்தைக் கொடுத்த படத்தின் பேர் வரும். இந்தப் படத்தின் நாயகன் நடித்த இன்னொரு படம் கூட இந்தப் படத் தலைப்பின் முதற்பதியோடு இருக்கின்றது. இசைஞானியின் கதைக்கு பிரபல எழுத்தாளர் சுஜாதா வசனம் எழுதி, மணியம் செல்வன் கைவண்ணம் ஓவியப் போஸ்டர்கள் தீட்டுவது புதுமை என்றால், இந்தக் காவியத்துக்கு ஒளிப்பதிவு செய்தது இன்னாள் குணச்சித்திரம் இளவரசு.

இப்படத்தின் நாயகன் விரும்பும் போது அரசியல் செய்யும் கட்சி நடத்த, இயக்குனரோ கட்சி இல்லாமலேயே தமிழன் என்ற உணர்வோடு இருக்க வேண்டும் என்று செயற்படுபவர். அலைந்து திரியாமல் கண்டு பிடியுங்களேன் :)

33 comments:

  1. மீ த பர்ஷ்ட்டேய்ய்ய்ய் :)))

    ReplyDelete
  2. கண்டுபுடிச்சிட்டேன் பாஸ்!

    மத்த பசங்களலெல்லாம் வரட்டும் லைன்ல ...!

    பதில் தெரிஞ்ச நானும் க்யூவுல நின்னா டிராபிக் ஜாமூ ஆகிடும்


    ஸோ நான் மெதுவா வந்து பதில் சொல்றேன்...! :)

    ReplyDelete
  3. படம்: நாடோடித் தென்றல்

    மற்ற க்ளூக்களுக்கான விடைகள்: நாடோடி மன்னன் - நாடோடிப் பாட்டுக்காரன் - கார்த்திக் - பாரதிராஜா!

    :)

    - என். சொக்கன்,
    பெங்களூர்

    ReplyDelete
  4. nadodi thendral :-) bharathiraja padam.

    ReplyDelete
  5. நாடோடி தென்றல் :))))

    ஆத்தீஈஈஈஈ இது வாத்துக்கூட்டம் பார்த்தா இவள் ஆளு மட்டும்...

    ReplyDelete
  6. ஆயில்ஸ்

    எஸ்கேப்பு விடாம பதில் பிளீஸ் :)

    சொக்கரே

    பின்னீட்டீங்க :0

    ஜி.ரா.

    கலக்கல், கை குடுங்க :)

    ReplyDelete
  7. படம்: நாடோடித் தென்றல்
    இசை: இசைஞானி இளையராஜா
    நாயகன்: கார்த்திக்
    இயக்குனர்: பாரதிராஜா
    மக்கள் திலகத்துக்கு ஸ்டார் அந்தஸ்தைக் கொடுத்த படம்: நாடோடி மன்னன்
    நாயகன் நடித்த இன்னொரு படம்: நாடோடிப் பாட்டுக்காரன்

    ReplyDelete
  8. மணியே மணிக்குயிலேவும் பின்னே யாரும் விளையாடும் தோட்டமும் எனக்கு நொம்ப்ப்ப புச்ச பாட்டு பாஸ் :))

    ReplyDelete
  9. நாடோடி தென்றல்

    ReplyDelete
  10. ஆயில்யன்

    பின்னீட்டீர்

    நிலாக்காலம்

    சரியான கணிப்பு

    வாங்க தமிழ்ப்பறவை, சரியான பதிலோடு ரொம்ப நாளைக்கு அப்புறமும் கூட :)

    ReplyDelete
  11. நாடோடி தென்றல் :)

    ReplyDelete
  12. தல

    சரியான்னு தெரியல

    நாடோடி தென்றல்!!?

    ReplyDelete
  13. படம் : நாடோடி தென்றல்...
    நாயகன் : கார்த்திக்..
    இயக்கம் : பாரதிராஜா..
    மற்ற படங்கள் : நாடோடி மன்னன், நாடோடி பாட்டுக்காரன்...

    ReplyDelete
  14. ஆளவந்தான்

    அதே தான் :)

    முரளிக்கண்ணன்

    சரியான கணிப்பு

    தமிழன்

    அப்புறமா வாங்க ஆனா விடையோட வாங்க :)

    த‌ல‌ கோபி

    அதில் என்ன‌ ச‌‍ந்தேகம் ;)


    அர‌விந்த்

    க‌ல‌க்க‌ல்ஸ்

    ReplyDelete
  15. padadm - நாடோடித் தென்றல்
    இயக்குணர் - பாரதிராஜா
    நடிகர் - கார்த்திக்
    நடிகர் நடித்த மற்றைய படம் - நாடோடிப் பாட்டுக்காரன்

    மக்கள் திலகத்துக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்து தந்த படம் - நாடோடி மன்னன்

    ReplyDelete
  16. அருண்மொழிவர்மன்

    அதே தான் ;)

    ReplyDelete
  17. நாடோடித் தென்றல் ரஞ்சிதாவின் அறிமுகப்படம் என நினைக்கின்றேன்.

    ReplyDelete
  18. நாடோடி தென்றல்.
    இளையராஜாவின் கதையா இது .
    பொது அறிவை வளர்ப்பதற்கு பாராட்டுக்கள்.

    முதலில் அடிமைச்சங்கிலி தான் யோசித்தேன்.ஆனால் அர்ஜுன் அரசியலில் இல்லை தானே.

    யாழ்ப்பாணத்தில் முதன் முதல் current வந்த போது ,
    எமது வீட்டில் அப்பா mgr,சிவாஜி படம் மட்டும் தான் போடுவார்.
    அனேகமாக அவர்களது முழுப்படமும் பார்த்து இருக்கிறேன்.
    அந்த கொடுமை காணாதென்று இடைக்கிடை ஜெமினி, பாகவதர் எல்லோரும் வருவார்கள்.

    ReplyDelete
  19. கதாயாகன் க்ளூ புரியுது இயக்குனர் புரியுது ஆனா மீதி சேர்த்து கோத்து விடை கண்டுபிடிக்க மட்டும் தெரியல.. சரி பாதி மார்க் 50 குடுத்துடுங்க.. :)

    ReplyDelete
  20. தமிழ் பிரியன்

    அலைகள் ஓய்வதில்லை தப்பு :)

    வாசுகி

    வாங்கோ , சரியான பதிலோடு சுவையான நினைவுகளையும் பகிர்ந்திட்டீங்க :)

    வந்தி

    சரியான பதில் வாழ்த்துக்கள்

    கயல்விழி முத்துலெட்சுமி

    அட இவ்வளவு தூரம் வந்துட்டு எஸ்கேப்புக்கிறீங்களே

    ReplyDelete
  21. நாடோடி தென்றல் தான்

    ReplyDelete
  22. எனக்கும் பதில் தெரியும்..
    எதுக்கு நாமளே பதில சொல்லிக்கிட்டு?
    அடுதவங்களும் சொல்லட்டுமே...

    எஸ்கேப்ப்ப்ப்புபு........

    ReplyDelete
  23. படம்: நாடோடி தென்றல்


    ///இந்தப் படத் தலைப்பின் முதற்பாதியோடு இன்னொரு சொல்லை ஒட்ட வைத்தால் மக்கள் திலகத்துக்கு ஸ்டார் அந்தஸ்தைக் கொடுத்த படத்தின் பேர் வரும்.///

    நாடோடி மன்னன்.

    ////

    ///இப்படத்தின் நாயகன் விரும்பும் போது அரசியல் செய்யும் கட்சி நடத்த, ///

    கார்திக்

    ///
    அஇயக்குனரோ கட்சி இல்லாமலேயே தமிழன் என்ற உணர்வோடு இருக்க வேண்டும் என்று செயற்படுபவர்///

    பாரதிராஜா

    ReplyDelete
  24. இதுக்கு மேல முடியாது,..
    தப்புன்னா ஒன்னுமே பண்ணமுடியாது

    ReplyDelete
  25. நாரதமுனி

    பின்னீட்டிங்க‌

    உருப்படாதது அணிமா

    ஏன் இந்த அவ நம்பிக்கை? சரியான பதில் தான் பாஸ் :)

    ReplyDelete
  26. நாடோடி தென்றல்..,
    நாடொடி மன்னன்..,
    நாடோடி பாட்டுக்காரன்..,
    நாடாளும் மக்கள் கட்சி.

    ReplyDelete
  27. கலைக்கோவன்

    கலக்கீட்டிங்க் :)

    ReplyDelete
  28. சரியான விடை

    நாடோடித் தென்றல்

    நாயகன்: கார்த்திக்
    இன்னொரு படம்: நாடோடி பாட்டுக்காரன்
    இயக்குனர்: பாரதிராஜா

    எம்.ஜி.ஆருக்கு ஸ்டார் அந்தஸ்தைக் கொடுத்தது நாடோடி மன்னன்


    போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி :)

    ReplyDelete
  29. உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது தொடருங்கள் வாழ்த்துக்கள். அடிக்கடி உங்கள் பக்கம் வருபவன் எனது பழைய வலைப்பதிவு மாயமானதால் புதிய வலைப்பதிவில் சந்திக்கிறேன்..
    இனி அடிக்கடி உங்கள் பக்கம் வருகிறேன்...

    ReplyDelete