Pages

Sunday, April 5, 2009

"ஆவாரம்பூ" பின்னணிஇசைத்தொகுப்பு

1992 இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஆண்டாக இருக்கும். அந்த ஆண்டில் தான் ரஹ்மான் என்ற புதுப்புயல் வந்து தமிழ் சினிமாவி போக்கை மாற்றியது. அத்தோடு அதுவரை ராஜாவை மட்டும் மையப்படுத்தி முதன்மைப்படுத்திய தமிழ் சினிமா இசைவிரும்பிகளின் கவனத்தை இன்னொருவர் பங்கு போட்ட ஆண்டும் கூட. இந்த ஆண்டில் ராஜாவின் இசையின் உச்சமாக அமைந்து விட்ட இரண்டு படங்களில் ஒன்று "ஆவாரம்பூ", இன்னொன்று "தேவர் மகன்". இந்த இரண்டுமே மலையாளத் திரையின் பிரபல இயக்குனர் பரதனின் இயக்கத்தில் வெளிவந்தது இன்னொரு சிறப்பு.

1980 இல் மலையாளத்தில் வெளிவந்த படம் "தகரா". பிரதாப் போத்தன், சுரேகா, நெடுமுடிவேணு போன்றோர் முக்கிய பாத்திரத்தில் தோன்றி நடித்த இப்படத்தின் கதை கூட பின்னாளில் மலையாளத் திரையுலகின் முக்கியமான இயக்குனராக வலம் வந்த பதமராஜனின் கைவண்ணத்தில் வெளிவந்தது. அந்தப் படத்தை இயக்கிய பரதனே பன்னிரெண்டு வருஷங்கள் கழித்து தமிழில் இதை "ஆவாரம்பூ"வாகக் கொண்டு வந்தார். கடலோரக் கிராமம் ஒன்றில் வாழும் சக்கர (வினீத்) என்னும் அப்பாவி & அனாதைப் பையனுக்கும், தாமர (நந்தினி) என்னும் பொண்ணுக்கும் வரும் காதலையும், அதற்கு தாமரயின் தகப்பன் தேவர் (நாசர்)ரூபத்தில் வரும் எதிர்ப்பும் என்ற சாதாரண காதலைத் தான் அதன் இயல்பு கெடாமல் அப்படியே கொடுக்கின்றது ஆவாரம்பூ. மலையாளத்தில் நெடுமுடி வேணு செய்த சபலிஸ்ட் பாத்திரத்தை தமிழில் கவுண்டமணி செய்கின்றார். வினித், நந்தினி, நாசர், கவுண்டமணி உள்ளிட்ட பாத்திரத் தேர்வுகளும், குமாரின் ஒளிப்பதிவும் கச்சிதம். ஆபாசத்தின் எல்லையைத் தொட முனையும் காட்சி அமைப்புக்கள் இருந்தாலும் "ஆவாரம்பூ" இசைஞானியின் கைவண்ணத்தில் மீண்டும் ஒருமுறை பார்க்கத் தூண்டும் வண்ணம் இருப்பது சிறப்பு.

விநியோகஸ்தராகவும், பின்னர் தயாரிப்பாளராகவும் இருந்த "கேயார்", 1991 இல் "ஈரமான ரோஜாவே" திரைப்படத்தின் மூலம் இயக்குனராகியவர். இசைஞானியின் அருட்கடாட்சம் விழுந்த தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர் என்பதாலோ என்னவோ கேயார் தயாரிப்பில் வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்களுக்கு இளையராஜாவின் இசை என்பதோடு அந்தப் படங்களின் பாடல்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை, அவ்வளவு அற்புதமாக இருக்கும்.

"ஆவாரம்பூ" போன்ற புதுமுகங்களை முதன்மைப்படுத்திய திரைப்படத்தில் வழக்கம் போல இளையராஜா தான் ஹீரோ என்பதை இப்படம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கின்றது. கங்கை அமரனும், புலமைப்பித்தனும் பாடல்களை எழுத, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, கே.ஜே.ஜேசுதாஸ, கிருஷ்ணசந்தர் இவர்களோடு இளையராஜாவும் பாடிச் சிறப்பிக்கின்றார்கள்.

படத்தின் ஆரம்ப இசையில் மிளிரும் புல்லாங்குழலும், கிட்டாரும், வயலினும் கொடுக்கும் சங்கதிகளும் சரி, படம் முடியும் வரை அந்தந்தக் காட்சிகளுக்கேற்ப ஆர்ப்பரித்தும், அடங்கியும், எழுந்தும், தொடரும் இசை என்னும் அந்த இன்ப வெள்ளம் இப்படம் முடிந்ததும் கூட அசை போட வைக்கின்றது. இளையராஜாவின் பல நல்ல இசை கொண்ட படங்களின் பாடல்களின் ஒலிப்பதிவு வெகு சுமாராய் கூட இருந்ததுண்டு. ஆனால் இந்தப் படத்தின் பாடல்களை சீடியிலும் சரி, படத்தினைப் பார்க்கும் போது வரும் போதும் சரி மிகத் துல்லியமாக வாத்தியங்களின் வேறுபாட்டையும் அவற்றின் சிறப்பான ஒலிநயத்தையும் காட்டி நிற்கின்றன. தனிமை, மையல், காதல், சோகம் என்று விதவிதமான இசைப்படையலாக அமைந்து நிற்கின்றது "ஆவாரம்பூ" பாடல்களின் அணி.

தொடந்து இசைஞானியின் கைவண்ணத்தில் மலர்ந்த "ஆவாரம்பூ" படத்தின் பின்னணி இசையோடு, பாடல்களையும் அனுபவியுங்கள்.

முதலில் இப்படத்தில் கிடைத்த முத்துக்களில் சிறப்பான ஒன்று.
சக்கர, தாமர காதல் வயப்படும் காட்சி, அபாரமான பின்னணி இசையில்
படத்தின் ஆரம்ப இசைதன் தாயை நிரந்தரமாக பையன் சக்கர தொலைக்கும் போதுசக்கர அநாதையாக வளர்தல், ராஜாவின் "ஆலோலம் பாடி" பாடலோடுதாமர அறிமுகக் காட்சிதாமர மேல் ஆசை கொள்ளும் ஊர் விடலைப்பையன் கிருஷ்ணசந்தரின் பாடலோடு, புல்லாங்குழல் இசை கலக்கின்றதுதாமர யை அடையத் துடிக்கும் ஆசாரி, பின்னணி இசையோடு

"மந்திரம் இது மந்திரம்" (ஜேசுதாஸ்) பாடலோடு தாமரயை வேண்டிப் பாடும் ஊர் விடலைப் பையன். இந்தப் பாடலின் இடையிசையில் வயலின் ஆவர்த்தனம் அபாரம்.சக்கர மனதில் தாமர இடம் பிடிக்கும் காட்சி, இந்தப் பின்னணி இசை அருமையானதொன்றுசக்கர, தாமர சந்திக்கும் காட்சி ஒன்றுதேவர் (நாசர்) தன் மகள் வீட்டை விட்டுப் போனதைக் கண்டு குமுறும் காட்சிதாமர , சக்கர கடலில் நீந்தி விளையாடும் காட்சி"அடுக்குமல்லி எடுத்து வந்து தொடுத்து வச்ச மால" (எஸ்.பி.பி, ஜானகி குரல்களில்) சக்கர, தாமர கடலோரச் சந்திப்பில்தேவர் (நாசர்) தன் மகளை மீண்டும் தாய் ஊருக்குச் சென்று அழைத்து வரும் காட்சி

சக்கர, தாமர மேல் மையல் கொள்ளும் காட்சி"சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்த செல்லக்கிளியே" (எஸ்.பி.பி, எஸ்.ஜானகி)தாமர, சக்கர காதல் பாட்டு"நதியோடும் கடலோரம் ஒரு ராகம் அலைபாயும்" (எஸ்.ஜானகி)சக்கரயின் பிரிவில் தாமர உருகும் காட்சிசக்கர, தாமர சேரும் இறுதிக்காட்சி35 comments:

 1. நல்ல விரிவான அலசல். பகிர்ந்தமைக்கு நன்றி

  என்னுடைய நெட்டில் சுட்ட - மின்னஞ்சலில் வந்த படங்கள்.பதிவை ஒரு முறை பார்த்து உங்கள் கருத்தைச் சொல்லவும்  நெட்டில் சுட்ட - மின்னஞ்சலில் வந்த படங்கள்.

  ReplyDelete
 2. இந்த படத்தை இன்னும் கூட முழுசா பாத்தது இல்லை. அதனால் தான் புதிருக்கு விடை தெரியல ஆனா பாட்டெல்லாம் கேட்டிருக்கேன்..

  ReplyDelete
 3. அண்ணே இந்தப்படத்தை இரண்டு முறை பார்த்திருக்கிறேன் சாமிகிட்ட சொல்லி வச்சு பாட்டு பலமுறை..

  ReplyDelete
 4. இந்தநிறத்தில்...
  தாமர எனக்கு நெருக்கமாயிருந்தாள்...

  ReplyDelete
 5. தொகுப்புக்கு நன்றி...
  ஆறுதலா கேட்டுக்கறேன்...

  ReplyDelete
 6. தல,

  அட்டகாசம்.

  ReplyDelete
 7. தல
  மிக்க நன்றி ;))

  இந்த படத்தை மலையாளத்திலும் பார்த்திருக்கேன்.தமிழ் பலமுறை பார்த்தாச்சி.;)

  ReplyDelete
 8. இந்த படத்தின் இசையை பற்றியும் இசை தெய்வத்தின் உழைப்பை பற்றியும் சொல்ல வார்த்தைகளே இல்லை.

  அந்த ஆரம்ப இசையில் ஆலோலம் பாடியை வாத்தியங்கள் மூலம் எப்படி அமைத்திருக்கிறார்..அட..அட கேட்டுக்கிட்டே இருக்கலாம்

  ஆலோலம் பாடி மிக அருமையான தாலாட்டு பாடல். அதில் இசைஞானியின் குரல் நம்மை நம் தாயின் மடிக்கே அழைத்து சொல்லும். அப்படி ஒரு இசை அதில்.

  அனைத்தையும் மீண்டும் ரசித்துவிட்டு வருகிறேன்

  இப்போதைக்கு ஒரு பெரிய நன்றி ;)

  ReplyDelete
 9. தொகுப்புக்கு நன்றி.
  ”அடுக்குமல்லி”,
  ”சாமிகிட்ட “ பாடலும்
  நீண்ட காலமாக
  காலை வேலைகளில்
  சன், சன் மியூசிக்
  தொ.கா.களில் பிரசித்தம்

  ReplyDelete
 10. தெளிவான இசை , பலமுறை கேட்டிருந்தாலும் , இவ்வளவு துல்லியமாக கேட்டது இல்லை.அது என்ன நெட்டில் ( வலையில் ) மட்டும் இச் சிறப்பு.விட்டால் பல்லவி,அனு பல்லவி,சரணம் ,ஆரோகணம்,அவரோகணம், என தெரிந்த தெரியாததையும் போட்டு 2 கட்டை ,4 கட்டை எனபின்னி பெடலெடுத்து விடுவீரோ ?

  ReplyDelete
 11. இந்த படத்தில் உள்ள அனைது பாடல்களையும் பலமுறை கேட்டிருக்கிறேன் அருமையான பதிவு

  ReplyDelete
 12. //மந்திரம் இது மந்திரம்" (ஜேசுதாஸ்) பாடலோடு தாமரயை வேண்டிப் பாடும் ஊர் விடலைப் பையன்///

  அட இந்த பாட்டு நிறைய தடவை முணுமுணுத்ததுண்டு பட் எந்த படம்ன்னு தெரியாத தருணங்கள்!

  ஆவாரம்பூ ஆறேழு நாளா

  பல பல முறை கேட்டு கேட்டு ரசித்த பாடல்

  சூப்பர் நிறைய இசை துண்டுகள் இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே கஷ்டப்பட்டுருக்கிறீர்கள் :)

  ReplyDelete
 13. juper.
  //நதியோடும் கடலோரம் ஒரு ராகம் அலைபாயும்// arumayaana paattu idhu.

  kudumbathoda okkaandhu paakka mudiyaadhu padamnu nyaabagam. palaana kaatchikal sila undu ;)

  ReplyDelete
 14. Really beautiful posting!!!
  Brilliant picturs! Congrats!
  Happy day!!!

  ReplyDelete
 15. தமிழ்‍ நெஞ்சம், முத்துலெட்சுமி

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  தமிழன்

  அனுபவியுங்கோ :)

  ReplyDelete
 16. அண்ணா,
  பாடல்களை இப்படி அணு அணுவாகவா ரசிப்பீர்கள்.
  நல்ல பதிவு.
  நன்றி எம்மையும் ரசிக்க வைத்ததற்கு.

  ReplyDelete
 17. கே.ரவிஷங்கர் said...
  தல,

  அட்டகாசம்.//


  நன்றி தல :)

  //கோபிநாத் said...
  இந்த படத்தின் இசையை பற்றியும் இசை தெய்வத்தின் உழைப்பை பற்றியும் சொல்ல வார்த்தைகளே இல்லை. //


  தல

  உண்மையைச் சொல்லப்போன இந்தப் படத்தில் இசைத்தெய்வம் உழைத்த அளவுக்குப் பேசப்படாதது பெரும் குறை இல்லையா, மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு

  ReplyDelete
 18. //கலைக்கோவன் said...
  தொகுப்புக்கு நன்றி.
  ”அடுக்குமல்லி”,
  ”சாமிகிட்ட “ பாடலும்
  நீண்ட காலமாக
  காலை வேலைகளில்
  சன், சன் மியூசிக்
  தொ.கா.களில் பிரசித்தம்//

  வாங்க கலைக்கோவன்

  எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இவை இரண்டும் தவிர்க்க முடியாதவை

  //Venkatesan said...
  விட்டால் பல்லவி,அனு பல்லவி,சரணம் ,ஆரோகணம்,அவரோகணம், என தெரிந்த தெரியாததையும் போட்டு 2 கட்டை ,4 கட்டை எனபின்னி பெடலெடுத்து விடுவீரோ ?//

  வாங்க வெங்கடேசன்

  அதையும் விட்டுவைக்கமாட்டோம் ஆனா சங்கீதம் தான் தெரியாமப் போச்சே :)

  ReplyDelete
 19. //பிரியமுடன்.........வசந்த் said...
  இந்த படத்தில் உள்ள அனைது பாடல்களையும் பலமுறை கேட்டிருக்கிறேன் அருமையான பதிவு//

  மிக்க நன்றி நண்பரே

  //ஆயில்யன் said...


  சூப்பர் நிறைய இசை துண்டுகள் இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே கஷ்டப்பட்டுருக்கிறீர்கள் :)//

  நன்றி பாஸ் :)

  சர்வேசரே

  குடும்பத்தோடு உட்கார்ந்து பார்ப்பது கஷ்டம் தான் ஒத்துக்கிறேன் :)

  ReplyDelete
 20. அல்ஜீப்ரா கூட படிக்கலாம் ஆனா சங்கீதம் ?

  ReplyDelete
 21. எல்லோருடைய commentsம் போட்டிருக்கிறீர்கள். என்னுடையது ஏன் போடவில்லை.
  நீங்களும் ரசித்து எம்மையும் ரசிக்க வைத்ததுக்கு நன்றி என்று தானே எழுதினேன்.
  அது தப்பா?
  இப்படி செய்வீங்க என்று நினைக்கவே இல்லை.

  ReplyDelete
 22. வணக்கம் வாசுகி

  இப்போது தான் உங்கள் பின்னூட்டத்தை மின்னஞ்சலில் கண்டேன், உடனே போட்டுட்டேனே, அதுக்குள்ள இதுவேற, உங்கட கொமன்றை ஏன் நான் தணிக்கை செய்யப்போறன் அவ்வ்வ்வ்வ் :(

  வழக்கம் போல இந்தப் பகிர்வையும் கேட்டு உங்கள் கருத்தைத் தந்தமைக்கு மிக்க நன்றிகள். வேலைப்பழுவால் அப்படி இப்படி தாமதிக்கும் ஆனா குறை விளங்காதேங்கோ

  //Venkatesan said...
  அல்ஜீப்ரா கூட படிக்கலாம் ஆனா சங்கீதம் ?//

  அதுவென்னமோ உண்மை தான், சங்கீதம் படிச்சு வருவதில்லை அந்த ஞானமும் உள்ளேயே இருக்கணும் இல்லையா.

  ReplyDelete
 23. "அடுக்கு மல்லி தொடுத்து வச்ச” & “சாமிகிட்ட சொல்லி”...இரண்டு பாட்டே மிக அற்புதமான பாடல்கள் :)

  ReplyDelete
 24. ஆவாரம்பூவு . . . சரி , அது என்ன ஆறேழு நாளா, இது அச்சமில்லை ,அச்சமில்லை படம் அல்லவா ?

  ReplyDelete
 25. THANKS FOR THE WONDERFUL BGMS. I WELCOME YOU ALL TO PARTICIPATE IN MAESTRO QUIZ.

  http://maestroquiz.blogspot.com/2009/04/maestro-quiz-no564.html

  ReplyDelete
 26. நான் முதன் முதலாக காதலில் விழுந்த போது இப்படத்தில் வரும் “அடுக்கு மல்லி”, ஆலோலம் பாடி, மந்திரம் இது போன்ற பாடல்கள் தான் தாலாட்டி இருந்தன. போதாததற்கு, நந்தினி போன்ற எளிமையான முகம் தான் அவளுக்கு...........

  ம்ம்ம்ம்ம் அது ஒரு அழகிய நிலாக்காலம்

  ReplyDelete
 27. //பிரேம்குமார் said...
  "அடுக்கு மல்லி தொடுத்து வச்ச” & “சாமிகிட்ட சொல்லி”...இரண்டு பாட்டே மிக அற்புதமான பாடல்கள் :)//

  வாங்க தல :)

  //Venkatesan said...
  ஆவாரம்பூவு . . . சரி , அது என்ன ஆறேழு நாளா, இது அச்சமில்லை ,அச்சமில்லை படம் அல்லவா ?//

  அது வேற இது வேற படம் வெங்கடேசன்.


  naarayanan said...
  THANKS FOR THE WONDERFUL BGMS. I WELCOME YOU ALL TO PARTICIPATE IN MAESTRO QUIZ.//

  வாங்க நண்பரே

  உங்களின் பதிவில் பின்னுட்டப் பெட்டியை காணோமே , பதில் சொல்ல

  // அருண்மொழிவர்மன் said...
  நான் முதன் முதலாக காதலில் விழுந்த போது இப்படத்தில் வரும் “அடுக்கு மல்லி”, ஆலோலம் பாடி, மந்திரம் இது போன்ற பாடல்கள் தான் தாலாட்டி இருந்தன. //

  வணக்கம் அருண்மொழிவர்மன்

  எல்லாருக்கும் ராஜா பாடல்களோடு ஒரு ஆட்டோகிராப் இருக்கும் போல :)

  ReplyDelete
 28. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 29. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கலைக்கோவன்

  ReplyDelete
 30. பிரபா

  நல்ல அலசலான,அசத்தலான பதிவு.

  ராஜாவின் இசைக்கு மற்றும் ஒரு திரைப்படம்

  பாசில்ன் வருஷம் 16Malayalam : Ennennum Kannetante Music : Jeri AmaldevYoutube link:
  http://www.youtube.com/watch?v=mSvSL7KdHJM

  Tamil : Varusham 16 Music : Illayaraja Youtube link:

  http://www.youtube.com/watch?v=0N5ouNsd37k


  நன்றி
  அருண்

  ReplyDelete
 31. http://www.youtube.com/watch?v=C8QQMk_il0Q&feature=channel_page

  slumdog scandal

  ReplyDelete
 32. Prabha,

  Nice Template.

  Thanks

  ReplyDelete