Pages

Monday, March 30, 2009

றேடியோஸ்புதிர் 39 - இதுவும் ஒரு பூ

மீண்டும் ராகதேவனின் பின்னணி இசையோடு மலரும் புதிர் இது.

மெல்லிய மயிலிறகாய் வரும் அற்புதமான இந்த இசையோடு ஆரம்பிக்கிறது இப்படம். சாதாரண பாமரத்தனமான காதல் கதை தான் ஆனால் எடுத்த விதம் அழகு. இந்த இயக்குனர் மலையாளத்தில் பெரும் இயக்குனர்களில் ஒருவர். இவரின் இன்னொரு படம் இரண்டு பெரும் தலைகள் நடித்த பிரமாண்டமான படம். இரண்டுக்குக்குமே ராஜா தான் இசை. இந்தப் படத்தின் தயாரிப்பாளரை இரட்டை எழுத்தாலேயே கூப்பிட்டால் போதும், இந்தத் தயாரிப்பாளரும் பின்னாளில் இயக்குனர் ஆனவர்.
இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் முகப்பு இசையைக் கேட்டு அது என்ன படம் என்று கண்டுபிடியுங்களேன்.

விடையை கண்டுபிடித்தால் பூ என்று ஊதித்தள்ளி விடுவீர்கள் ;)


39.mp3 - Kana Praba

34 comments:

 1. ஃப்பூ இதானா இந்த வாரத்து புதிர் !

  சரி அப்பாலிக்கா வரேன்!

  (சோர்ஸ் யாரையும் ஆன்லைன்ல காணலியே:(()

  ReplyDelete
 2. பரதன் இயக்கத்தில் நாசர், வினீத், நந்தினி, கவுண்டமணி, ஷர்மிலி, பயில்வான் ரங்கநாதன் நடித்த

  ஆவாரம் பூ

  ReplyDelete
 3. Its Bharathan's "Aavaaram Poo"..
  His previous directorial venture is Kamal and Sivaji starer "Devar Magan"

  ReplyDelete
 4. அந்த ஃபோட்டோ காட்டிக் கொடுத்துடுச்சு குரு ;)

  ஆவாரம்பூ - இயக்குனர் பரதன் - அவருடைய இன்னொரு படம்: தேவர் மகன் - அதில் நடித்த பெருந்தலைகள்: சிவாஜி & கமல். ஓகேயா?

  தயாரிப்பாளர்தான் தெரியலை. ‘ஈரமான ரோஜாவே’ இயக்கிய கே.ஆர்.ஆ?

  - என். சொக்கன்,
  பெங்களூர்.

  ReplyDelete
 5. ஆவாரம்பூ படம்..,
  இயக்குநர் பரதன்..,
  தேவர்மகனில் இருபெரும்
  தலைகளை இயக்கியவர்.

  தயாரிப்பாளர் கேயார்..,
  பின்னாளில் ஈரமான ரோஜாவே,
  இரட்டை ரோஜா உள்ளிட்ட
  படங்களை இயக்கியவர்.

  ReplyDelete
 6. படம்; ஆவாரம் பூ ,அதில் (ஆலோலம் பாடி )என்ற பாடலை மறக்க முடியுமா?

  ReplyDelete
 7. சென்ஷி

  கலக்கல் மாம்ஸ்

  சரவண கார்த்திகேயன்

  சரியான பதில் வாழ்த்துக்கள்

  சொக்கரே

  எனக்கு நானே ஆப்பு வைக்கிறேனா ;) அதேதான் அந்த தயாரிப்பாளர் தான்

  ReplyDelete
 8. கலைக்கோவன்

  சரியாத் தான் சொல்லியிருக்கீங்க :0

  வாங்க மணி

  நீங்க சொன்ன பாட்டு சூப்பராச்சே, சரியான பதில்

  ReplyDelete
 9. வாங்க ராகவன்,ம் உங்களுக்கு ஜீஜீபி ஆச்சே

  G3 பொழைச்சிட்டீங்க ;)

  ReplyDelete
 10. பிரபா படம் ஆவாரம் பூ சரியா

  ReplyDelete
 11. வினித் நடித்த ஆவாரம் பூ !

  ReplyDelete
 12. ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைகேட்டு தூங்கும் " ஆவாரம் பூவே "

  ReplyDelete
 13. படம்: ஆவாரம்பூ
  இசை: இளையராஜா
  இயக்குனர்: பரதன்
  இயக்குனரின் மற்றொரு படம்: தேவர் மகன்
  தயாரிப்பாளர்: கே.ஆர். (கேயார்)

  ReplyDelete
 14. வர வர இந்த மூளை எதையுமே ஞாபகத்துல வச்சுக்க மாட்டேங்குது...

  ReplyDelete
 15. கொஞ்சம் பொறுங்க அண்ணன்...
  இதோ வந்துடறேன்.. :)

  ReplyDelete
 16. ஆவாரம்பூ :-) sariyaa?

  ReplyDelete
 17. கரவெட்டியான்March 31, 2009 at 1:44 AM

  ஆவாரம்பூ-
  யாழ்ப்பாணத்தில்
  '80களின் தொடக்கத்தில்,
  'வயது வந்தவர்களுக்கு மட்டும்' திரையிடப்பட்ட, நெடுமுடி வேணு, பிரதாப் போத்தன் நடித்த 'தக்காரா'
  படத்தின் தமிழ் வடிவம்.
  தயாரிப்பு கே.ஆர்.
  இரு பெருந்தலைகள் நடித்த படம் தேவர் மகன்.

  ReplyDelete
 18. ஆவாரம் பூவை மறக்க முடியுமா... தாமர........ சக்கர.......

  ReplyDelete
 19. Praba.... sorry to type in english.. i am at work...

  the movie is Aavaaram Poo
  Director - Parathan
  Irandu Thalaikal nadiththa padam - Thevar Makan
  Producer - KR

  ReplyDelete
 20. ஆயில்ஸ்

  இன்னுமா கண்டுபிடிக்கல‌

  தமிழன்

  இலகுவான பதில் கண்டுபிடியுங்கோ ;)

  வணக்கம் தேவன் மயன்

  ‍எப்படி இருக்கீங்க?

  கார்த்திக், நாரதமுனி, நிஜமா நல்லவன், நிலாக்காலம், பரத், கரவெட்டியான், அத்திரி, அருண்மொழி வர்மன், அரவிந்த்

  எல்லோருமே சரியான பதிலோடு சுவையான தகவலையும் சொல்லியிருக்கீங்க, வாழ்த்துக்களும் நன்றியும்.

  ReplyDelete
 21. Please post your views on
  www.youtube.com/watch?v=tqx9Mmts6CU

  song by Ilayaraja and superhit in recent months.

  Muthu

  ReplyDelete
 22. srikanth

  ithu avaram poo padam.

  srikanth

  ReplyDelete
 23. சரி இந்த முறை நீங்களே செயிச்சுக்குங்க.. :)

  ReplyDelete
 24. வணக்கம் முத்து,

  ராஜாவின் கன்னடப்பாடல் கலக்கல், இணைப்புக்கு நன்றி நண்பரே


  srikanth

  சரியான பதில் வாழ்த்துக்கள்

  முத்துலெட்சுமி

  இது மிகவும் சுலபமானதாச்சே

  ReplyDelete
 25. கண்டுபுடிச்சேன் கண்டுபுடிச்சேன்
  பூவின் பேரைக் கண்டுபிடிச்சேன்...

  ஆவாரம்பூ...

  ரைட்டா?
  பரதன் படம்...
  அவரோட அடுத்த படம் தேவர் மகன்.

  ReplyDelete
 26. கைப்புள்ள

  அதே தான் :)

  ReplyDelete
 27. இசை எதுக்கு தல...அந்த புகைப்படம் ஒன்னே போதுமே..

  படம் - ஆவரம் பூ - மலையாளத்திலும் பார்த்திருக்கிறேன்

  அந்த இயக்குனாரின் ரெண்டவது படம் - தேவர்மகன் (கண்டிப்பாக இந்த படத்தையும் நீங்கள் போடவேண்டும்)

  ReplyDelete
 28. த‌ல‌ கோபி

  அதே தான் :)

  ReplyDelete
 29. ஒகே மக்கள்ஸ் போட்டி முடிவுக்கு வந்தது. க‌ல‌ன்து சிற‌ப்பித்த‌ அனைவ‌ருக்கும் ந‌ன்றி

  சரியான பதில் ஆவாரம்பூ
  இயக்கம்: பரதன்
  இசை: இசைஞானி
  ‍தயாரிப்பு: கேயார்

  இந்தப் படத்தின் பின்னணி இசை வெகு விரைவில் :)

  ReplyDelete