Pages

Saturday, February 21, 2009

"மெல்லத் திறந்தது கதவு" பின்னணிஇசைத்தொகுப்பு

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் றேடியோஸ்புதிரில் வந்திருந்த கேள்விக்கான பதிலாக அமைந்த மெல்லத் திறந்தது கதவு திரைப்படத்தின் பின்னணி இசைத் தொகுப்பை இங்கே நான் தருகின்றேன்.

இசைஞானி இளையராஜா, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்ற தமிழ் சினிமாவின் இரு சகாப்தங்கள் சந்தித்த முதல் படமே மெல்லத் திறந்தது கதவு என்பது உங்கள் அனைவருக்குமே தெரியும். இவர்கள் இருவரும் பின்னாளில் இரும்பு பூக்கள், என் இனிய பொன் நிலாவே, செந்தமிழ் பாட்டு, செந்தமிழ்ச் செல்வன் என்று சில படங்களில் இணைந்திருந்தாலும் இந்த இசைக் கூட்டணியின் உச்ச பட்ச சிறப்புமே மெல்லத் திறந்த கதவு திரைப்படத்தில் தான் வெளிப்பட்டது என்பேன்.

ஏவிஎம்மின் தயாரிப்பில் 1986 ஆம் ஆண்டில் அந்தக் காலகட்டத்தில் பிரபலமாக இருந்த இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் மோகன், ராதா, அமலா போன்றவர்கள் நடிக்க வெளியானது இப்படம். மோகனின் தந்தையாக பிரபல இசையமைப்பாளர் ஜி.கே வெங்கடேஷ் நடித்திருக்கின்றார். பின்னர் இளையராஜாவின் தயாரிப்பில் வெளியான சிங்காரவேலனிலும் ஜி.கே.வெங்கடேஷ் சிறு வேடத்தில் நடித்திருக்கிறார்.

படத்தில் பாடல்கள் சிறப்பாக இருந்த அளவுக்கு சிறந்த கதை, மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் அமையாதது பெருங்குறை. இரு இசை மாமேதைகளை வைத்துப் பண்ணும் படத்தினை முழுமையான இசையைப் பின்னணியாகக் கொண்ட கதையாகவே பின்னியிருக்கலாம். இந்த குழப்பங்களால் மெல்லத் திறந்தது கதவு திரைப்படத்தில் வெற்றி மிகப் பிரமாதம் என்று அமையவில்லை.

பாடல்களை வாலி மற்றும் கங்கை அமரன் எழுத, குழலூதும் கண்ணனுக்கு பாடல் தவிர்ந்த மற்றைய பாடல்களுக்கு எம்.எஸ்.வி மெட்டுப் போட இளையராஜா இசையமைத்திருக்கின்றார். குழலூதும் கண்ணனுக்கு பாடலுக்கு மெட்டும் இசையும் ராஜாவே.

இப்படத்தின் பின்னணி இசையைப் பொறுத்தவரை ஒரு சில இடங்களில் எம்.எஸ்.விஸ்வநாதனின் கைவரிசையும் இருந்திருக்கிறது. அதைக் கேட்கும் போது அவதானித்துக் கீழே தந்திருக்கிறேன். தொடர்ந்து மெல்லத் திறந்தது கதவு திரைப்படத்தின் பின்னணி இசையை அனுபவியுங்கள்.



படத்தின் ஆரம்ப இசை



ராதா-மோகன் முதல் சந்திப்பு, புல்லாங்குழலில் குழலூதும் கண்ணனுக்கு இழையோட



"அழகுராணி பொண்ணு" நாட்டுப்புறப்பாடலைப் பாடும் கிராமத்துப் பெரிசு



"மரிக்கொழுந்து வாசக்காரி" நாட்டுப்புறப்பாடலைப் பாடும் கிராமத்து ஆள்



மோகன் நினைப்பில் ராதா பின்னணியில் ஊருசனம் தூங்கிருச்சு பாடலின் இசை கீபோர்டில் பரவ



ராதா, மோகன் சந்திப்பும் ராதா தன் தங்கை மேல் கொள்ளும் பொறாமையும், இதிலும் குழலூதும் கண்ணனுக்கு பாட்டின் இசை பரவி இன்னொரு தடத்துக்கு மாறுகின்றது



"ஒரு ஆம்பளப்பையன் பாத்து சிரிச்சானாம்" படத்திற்காக மேலதிகமாகப் போட்ட மெட்டு



மோகன் குணமடைய வேண்டி ராதாவின் வேண்டுதல் கிராமிய மேளதாளம், உறுமி மேளம் கலக்க



மோகன் பிரிவில் ராதா, வயலின் இசையில் ஊரு சனம் தூங்கிருச்சு



ராதாவின் தாய் மரணம் , இந்தப் பின்னணி இசை எம்.எஸ்.வியின் உடையது என்பதை கேட்கும் போதே உணர முடிகின்றது



ராதா வாண்டுகளைப் பிரிந்து பட்டணம் புறப்படுதல், பின்னணியில் கிட்டாரில் சக்கரக்கட்டிக்கு பாடலின் இசை



"பாவன குரு" பாடல் படத்துக்காக மேலதிகமாகப் போடப்பட்ட மெட்டு



மோகன், அமலா சந்திப்பு பின்னணியில் வா வெண்ணிலா பாட்டினை இசையாக்கி மட்டும்



மோகன் தன் காதலை அமலா வீட்டில் ஹிந்திப் பாடம் மூலம் வெளிப்படுத்த, வா வெண்ணிலா பாட்டிசை இன்னொரு வடிவில்



காதலி அமலாவுக்காக மோகன் மழையில் நனைந்து நடந்து போதல், வயலினும் புல்லாங்குழலும் ஆர்ப்பரிக்க மெல்ல வா வெண்ணிலா மெதுவாகக் கலக்கின்றது



அமலாவின் காதல் நினைப்பில் வா வெண்ணிலா பாட்டிசையோடு மோகன் சந்திக்க "சிறகை விரித்து பறக்க பறக்க" பாடல் படத்துக்காக மேலதிகமாகப் போட்ட மெட்டு, பாட்டு முடிவில் வா வெண்ணிலா வயலினிசையில்



அமலா, மோகனின் காதலை ஏற்றல், காதலர்கள் மனமகிழ்வில் வா வெண்ணிலா பாட்டிசை இன்னொரு வடிவில்



அமலா மோகன் இறுதிச் சந்திப்பு நாள் காதல் பிரவாகம் இசையில் கலக்க



அமலா புதைகுழிக்குள் விழுந்து சாகும் அவல ஓசை



ராதாவின் தற்கொலை முடிவில் மோகனின் மனக் கதவு மெல்லத் திறக்க ஜோடி சேரும் இறுதிக் காட்சி


20 comments:

  1. அழகுப் படம் அண்ணே! தொகுப்புக்கு நன்றி!

    ReplyDelete
  2. முதல் வணக்கம்!

    அருமையான தொகுப்பு!! நீண்ட நாட்களாக காணவில்லையே?

    ReplyDelete
  3. இன்னும் கேட்கலை அண்ணன் இதெல்லாம் ஆற அமர இருந்து அனுபவிக்க வேண்டிய விசயம்.

    எவ்வளவு கடினப்பட்டு இவ்வளவும் கொடுத்திருக்கிறியள் இதுக்கு சரியான மரியாதை செய்யாவிட்டால் என்ன ஆவது!

    ReplyDelete
  4. மறக்க கூடிய பாடல்களா அவை சின்ன வயசுல பாத்த அமலா புதைகுழியில் மூழ்குகிற கட்டம் மட்டும் நினைவிலிருக்க...
    பின்னர் பாடல்களுக்காகவே படத்தை தனியே அமர்ந்து பார்த்தபொழுது அட இதுதானா அந்தப்படம் என்று
    நினைத்தேன்...

    ReplyDelete
  5. தொகுப்புக்கு நன்றி அண்ணன்...

    நுணுக்கமான கடின உழைப்புக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
  6. //Blogger தமிழ் பிரியன் said...

    அழகுப் படம் அண்ணே! தொகுப்புக்கு நன்றி!//

    வருகைக்கு நன்றி தல

    ReplyDelete
  7. // அரவிந்த் said...

    முதல் வணக்கம்!

    அருமையான தொகுப்பு!! நீண்ட நாட்களாக காணவில்லையே?//

    வணக்கம் அரவிந்த்

    என்னுடைய அடுத்த வலைப்பதிவில் கொஞ்சம் பிசி ஆயிட்டேன், இனி மேல் ஒழுங்காக வரும் நன்றி

    ReplyDelete
  8. நல்ல தொகுப்பு.
    ஒரு படத்துக்கு எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது என்று நினைக்கும் போது ஆச்சரியப்படவைக்கிறது.

    ReplyDelete
  9. // தமிழன்-கறுப்பி... said...

    தொகுப்புக்கு நன்றி அண்ணன்...

    நுணுக்கமான கடின உழைப்புக்கு பாராட்டுக்கள்..//

    மிக்க நன்றி தமிழன், இசை மட்டுமே இந்தப் படத்தில் ஹீரோ எண்டு சொல்லலாம் இல்லையோ?

    ReplyDelete
  10. லேட்டா வந்தாலும் .....
    லேட்டஸ்ட்டா வந்திருக்கு ,
    மிக்க நன்றி

    ReplyDelete
  11. மெல்லத்திறந்தது கதவு திரைப்படம் ஒரு இசைக்காவியம். தமிழகத்தின் இருபெரும் மேதைகள் இணைந்து இசையமைத்த படம். தனித்துவம் குறையாமலும் ஒத்துழைப்பு தவறாமலும் இருவரும் இணைந்து இசையமைத்திருக்கின்றார்கள் என்பது என்னுடைய கருத்து. நாம் வேலை செய்யுமிடத்தில் நம்மைப் போலவே வேலை தெரிந்த இன்னொருவனிடம் சேர்ந்து வேலை செய்வது எவ்வளவு நன்றாக இருக்கும். அந்த நிலையில்தான் இருவரும் இணைந்து மிகுந்த மகிழ்ச்சியோடு இசையமைத்திருக்கிறார்கள். மெல்லிசை மன்னருக்கும் இசைஞானிக்கும் என்னுடைய வணக்கங்கள்.

    ReplyDelete
  12. சண்டிராணிங்குற படத்துக்கு மெல்லிசை மன்னர் இசையமைச்ச பாட்டு...வான் மீதிலே இன்பத் தேன்மாரி பேயுதே. பானுமதி பாடியிருக்காங்க. அந்தப் பாட்டு மாதிரி ஒரு மெட்டு குடுங்கண்ணே என்று இளையராஜா கேட்க... அந்தப் பாட்டையே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே என்று குடுத்தாராம் எம்.எஸ்.விஸ்வநாதன்.

    ReplyDelete
  13. தல

    தொகுப்புக்கு மிக்க நன்றி ;))

    அந்த ஆரம்ப இசையே எத்தனை முறை கேட்டாலும் சளிக்கவில்லை ;)

    ReplyDelete
  14. மரிக்கொழுந்து...அழகுராணி தனித்தனியாக பிரித்து தந்தமைக்கு நன்றி தல ;)

    ReplyDelete
  15. //வடுவூர் குமார் said...

    நல்ல தொகுப்பு.
    ஒரு படத்துக்கு எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது என்று நினைக்கும் போது ஆச்சரியப்படவைக்கிறது.//

    வாங்க வடுவூர்குமார்

    இத்தனை நுணுக்கமான காட்சிகளுக்குப் பின்னால் இருக்கும் உழைப்பு பிரமிப்பா இருக்கிறது இல்லையா


    //கலைக்கோவன் said...

    லேட்டா வந்தாலும் .....
    லேட்டஸ்ட்டா வந்திருக்கு ,
    மிக்க நன்றி//

    ரொம்ப நன்றி தலைவா ;)

    ReplyDelete
  16. //G.Ragavan said...
    மெல்லத்திறந்தது கதவு திரைப்படம் ஒரு இசைக்காவியம். //


    வாங்க ராகவன்

    உங்க விரிவான/சுவையான பின்னூட்டத்துக்கு நன்றி. நீங்கள் சொல்வது போல இரு மேதைகள் இணைந்த படம் ஒத்த அலைவரிசையில் சிறப்பாவே அமைஞ்சிருக்கு.

    ReplyDelete
  17. // கோபிநாத் said...
    தல

    தொகுப்புக்கு மிக்க நன்றி ;))

    அந்த ஆரம்ப இசையே எத்தனை முறை கேட்டாலும் சளிக்கவில்லை ;)//

    வருகைக்கு நன்றி தல, இதெல்லாம் நம்ம கடம தல :)

    ReplyDelete
  18. வழக்கம்போல் நல்ல தொகுப்பு - உங்கள் பல மணி நேர உழைப்புக்கு நன்றி தலைவா :)

    //இருவரும் பின்னாளில் இரும்பு பூக்கள், என் இனிய பொன் நிலாவே, செந்தமிழ் பாட்டு, செந்தமிழ்ச் செல்வன் என்று சில படங்களில் இணைந்திருந்தாலும்//

    விஷ்வதுளசி-ன்னு ஒரு படத்துக்கும் அவங்க சேர்ந்து இசையமைச்சாங்களே :)

    செந்தமிழ்ச் செல்வன் பலருக்குத் தெரியாத படம், ‘கூடு எங்கே, தேடிக் கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே’ என்ற அற்புதமான பாட்டு அதில் உண்டு!

    - என். சொக்கன்

    ReplyDelete
  19. வாங்க சொக்கன்

    விஷ்வ துளசியை விட்டுட்டேன் தான் சேர்த்து விடுகிறேன், நன்றி :)

    செந்தமிழ்ச்செல்வன் படத்தில் குயிலே இளமாங்குயிலே பாட்டும் நல்லா இருக்கும் இல்லையா.

    ReplyDelete
  20. //சண்டிராணிங்குற படத்துக்கு மெல்லிசை மன்னர் இசையமைச்ச பாட்டு...வான் மீதிலே இன்பத் தேன்மாரி பேயுதே//

    Thalaivaa... athu chandraayan illa?? correct me if am wrong??

    ReplyDelete