Pages

Wednesday, January 7, 2009

றேடியோஸ்புதிர் 33 - நான் கடவுள் இல்லை ;)

இசைஞானியின் "நான் கடவுள்" பாடல்கள் வந்து பட்டி தொட்டி, ஜீசாட், டிவிட்டார் எங்கும் அதே பேச்சுத்தான் இப்போது. "நான் கடவுள்" படம் வந்தால் பின்னணி இசையிலும் அவர் பின்னி எடுத்திருப்பது தெரியும். அதுவரை காத்திருப்போம்.

இந்தவேளை சற்றே சிறிய இடைவெளிக்குப் பின் இளையராஜாவின் கலக்கலான பின்னணி இசையோடு ஒரு புதிர். இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் இசை வரும் படத்தில் நடித்த சின்ன பொண்ணை இப்போது சின்னத் திரையில் தான் அதிகம் பார்க்கமுடிகிறது. சிறுவர்கள் அளவுக்கு மீறிப் படுத்தினால் இந்தப் படத்தின் தலைப்பில் வரும் சொல்லை வச்சு திட்டுவது இந்த கணினி யுகத்திலும் இருக்கே. அதுக்காக கடவுள் என்றெல்லாம் திட்டுவாங்களா?
தியேட்டருக்குப் போனதும் மறக்காம கண்ணாடி வாங்கிக் கொண்டு உள்ளே போவீங்களா மாட்டீங்களா?
அதுக்கு முதல் இந்தப் படம் என்னவென்று கண்டு பிடியுங்களேன், நான் ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டு வருகிறேன் ;)

புதிர் காலாவதியாகிவிட்டது

சரியான பதில்:

அந்தப்படம்: மை டியர் குட்டிச்சாத்தான்

சிறுமி: சோனியா

மை டியர் குட்டிச்சாத்தான் பின்ன‌ணி இசை வார‌ இறுதியில் வெளியிட‌ப்ப‌டும்



puthir33.mp3 - Ilayaraja

44 comments:

  1. மை டியர் குட்டிசாத்தான் :)))

    ReplyDelete
  2. My Dear Kuttichattan..

    antha kaalaththuleye (athaavathu ungge kaalathule) firstaa vantha 3D movie. :-)

    this is my first time I guessed it correctly before I finish read your post anne. :-)

    ReplyDelete
  3. Vara vara ungalukku clue kudukavae therila... clue kudukka sonna answeraiyae sollidareenga..

    Padam My dear kutti chaathaan :)

    ReplyDelete
  4. அட இப்படி ஒரு சைட் இருக்கா?
    சூப்பர் சரக்கு பிரதர்
    நான் கடவுள் இல்லை
    மை டியர் குட்டச்சாத்தான்
    என்ட அப்பச்சன்
    முப்பரிமான கிஷ்கிந்தா
    டமால்!

    ReplyDelete
  5. மை டியர் குட்டிச்சாத்தான்..

    :)

    ReplyDelete
  6. இதுவெல்லாம் ஒரு புதிரா?
    கொஞ்சம் கஷ்டமாக் கொடுத்தாத்தான் என்ன?

    உங்க புதிருக்கு விடை -
    மை டியர் குட்டிச் சாத்தான்.

    அந்த நடிகை - சோனியா

    ReplyDelete
  7. மை டியர் குட்டிச்சாத்தான் / சோனியா

    ReplyDelete
  8. நான் பாடலை கேட்கவில்லை, உங்கள் குறிப்பில் இருந்து சொல்கிறேன் நடிகை சுஜிதா, சரியா அல்லது தவறா?

    ReplyDelete
  9. மை டியர் குட்டிசாத்தான் :)

    ReplyDelete
  10. ஆயில்ஸ்

    பழச மறக்கல போல உடனேயே வந்து சரியாவும் சொல்லீட்டிங்களே ;)

    மைபிரண்ட், G3

    இவ்வளவு சீக்கிரமா வந்து சரியான பதில் சொன்னா நான் அழுதுடுவேன் ;)

    நல்லவரே

    சரியான கணிப்பு தான்

    ReplyDelete
  11. அரை டிக்கட்டு

    நம்ம வலைக்கு புதுசா ;0 வாங்க வாங்க சரியான பதில் தான்

    கொங்கு ராசா

    சரியான பதில் சாரே

    ரிஷான்

    நீங்க சொன்னா சரியாதான், அதுதான் போன வாரம் காணாமப் போனீங்களா ;)

    சின்ன அம்மணி

    தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் சரியான பதிலுடன் வருகிறீர்களே, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. வாசு

    படத்தை சொல்லலியே, ஆனா நான் சொன்ன இன்னொரு டிவி நடிகை முக்கிய பாத்திரத்தில் இருந்தாங்க

    தமிழ்பறவை

    நீங்க இரண்டு தடவை சொன்னாலும் சரியான பதில் தான் ;)

    புகழேந்தி

    அதே அதே

    ReplyDelete
  13. மைடியர் குட்டிச்சாத்தான்!

    அட உங்களை இல்லைங்க, படத்தைச் சொன்னேன் ;)

    இந்தவாட்டியும் க்ளூ காட்டிக் கொடுத்துடுச்சு, ஆடியோ கேட்கலை ... ஆஃபீஸ்ல mp3 blocked, நீங்க ஒரு zip வெர்ஷன் கொடுத்தா இங்கயே கேட்பேன், இல்லாட்டி சாயங்காலம் வீட்டுக்குப் போனபிறகுதான் :(

    - என். சொக்கன்,
    பெங்களூர்.

    ReplyDelete
  14. /தியேட்டருக்குப் போனதும் மறக்காம கண்ணாடி
    வாங்கிக் கொண்டு உள்ளே போவீங்களா மாட்டீங்களா?//
    //நான் ஒரு குட்டி தூக்கம் போட்டு விட்டு வருகிறேன்//
    //இந்தப் படத்தின் தலைப்பில் வரும் சொல்லை வச்சு
    திட்டுவது இந்த கணினி யுகத்திலும் இருக்கே//

    Yes..... My Dear ....
    இது போதுமே

    (3D படமான)
    மைடியர் குட்டிச்சாத்தான்
    என்று சொல்ல

    ReplyDelete
  15. my dear gaana prapaa... oops my dear kuttichaataan

    ReplyDelete
  16. ஏஆர்கே

    சரியான கணிப்பு ;)

    வாங்க சொக்கன்

    நான் வேற உங்க பதில் சரி என்று சொல்லணுமா? ;) முழுத்தொகுதியையும் விரைவில் தரேன்.

    கலைக்கோவன்

    கண்ணாடி போட்டுட்டு சொல்லீட்டீங்களே ;)

    நாரத முனிவரே

    குசும்பு ;) பதிலும் சரி

    ReplyDelete
  17. மை டியர் குட்டிசாத்தான், அப்பச்சன் இயக்கத்தில் மலையாளத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத்திரைப்படம். பின்பு வெவ்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
    குழந்தை நட்சத்திரம் - சோனியா

    ReplyDelete
  18. பிரபா,
    படம்: மை டியர் குட்டி சாத்தான்

    நன்றி
    நாஞ்சில் மகி

    ReplyDelete
  19. வினையூக்கி, தங்ககம்பி, நாஞ்சில் மகி

    நீங்கள் சொல்வது சரியான பதிலே, நன்றி

    ReplyDelete
  20. தல
    மை டியர் குட்டி சாத்தான் !?

    ReplyDelete
  21. மை டியர் குட்டி சாத்தான் ல நடிச்ச பொண்ணு....சோனியா தானே??

    ReplyDelete
  22. தல கோபி, ராதா சிறீராம்

    சரியான கணிப்பு தான் ;)

    ReplyDelete
  23. வழக்கம் போல் உங்கள் தொடுப்பு தெரியவில்லை, இருந்தாலும் உங்களது விமர்சனம் வைத்து பார்க்கும் போது மைடியர் குட்டிச்சாத்தான் போல் தெரிகின்றது.

    பனிமலர்.

    ReplyDelete
  24. மைடியர்....
    அப்படின்னு ஆரம்பிக்குமா அண்ணன் படப்பெயர்..?

    ReplyDelete
  25. பனிமலர்

    அதே படம் தான், நான் நினைக்கிறென் உங்கள் கணினியில் ஜாவா ஸ்கிரிப்ட் பிரச்சனை போலிருக்கிறது. அதனால் தான் பிளேயர் தெரியவில்லை.

    தமிழன்

    நீங்கள் சொன்ன வரியில் தான் ஆரம்பிக்கும்.

    ReplyDelete
  26. மை டியர் குட்டிச் சாத்தான் :-)

    மறக்க முடியுமா இந்தப் பாடல்களை...

    செல்லக் குழந்தைகளே துள்ளும் வசந்தங்களே
    பூவாடைக் காற்றே சுகம் கொண்டு வா

    ReplyDelete
  27. மை டியர் குட்டிச்சாத்தான் ?

    ReplyDelete
  28. வாங்க ராகவன்

    உங்களுக்கு ஜீஜீபி ஆச்சே ;)
    பாட்டுக்களும் வரும்

    மாயா

    வாழ்த்துக்கள், அதே தான் ;)

    ReplyDelete
  29. ஆஹா வண்ணாத்துப்பூச்சி விருது எனக்குமா, மிக்க நன்றி சிஸ், கூட வருவோருக்கும் நன்றி ;)

    ReplyDelete
  30. படம் பெயர் மை டியர் குட்டி சாத்தான்.. மீதி ஒன்னும் ஞாபகம் இல்லை,, அந்த நேரம் நானும் ஒரு குட்டி பையன் தானே. ;)

    ReplyDelete
  31. வணக்கம் லோஷன்

    சரியான பதில், நானும் அப்போது குட்டிப்பையன் தானாம் ;)

    ReplyDelete
  32. சோனியா (நிஜத்தில் "மெட்டிஒலி" போஸ் மனைவி) சரியா

    ReplyDelete
  33. குட்டிப்பையன் தானாம்... //
    ஆகா அசத்திட்டீங்களே அண்ணா.. ஆனா என்னால இதை ஒத்துக்க முடியாது.. நீங்க என்னை விட அப்போது 'பெரிய' குட்டிப் பையன்.. ஓகே? ;)

    ReplyDelete
  34. மை டியர் குட்டிச்சாத்தான்!!

    ReplyDelete
  35. லோஷன்

    கொஞ்சம் உங்களை விட வளர்ந்த பையன் ஒக்கே ;)


    வாசு மற்றும் அரவிந்த்

    சரியான கணிப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. தியேட்டருக்குப் போனதும் மறக்காம கண்ணாடி வாங்கிக் கொண்டு உள்ளே போவீங்களா மாட்டீங்களா?

    inna prabha

    my dear kuttichathaan

    3D film idhu

    correcta


    edhuna parisu kudunga thalaiva

    ReplyDelete
  37. வாங்க சுரேஷ்

    அதே தான் ;) பரிசா 3D கண்ணாடி வாங்கிப்பீங்களா ;)

    ReplyDelete
  38. இது மை டியர் குட்டி சாத்தான் படம் என்று நினைக்கிறேன்.

    இதன் வெற்றிஅயி தொடர்ந்து மை டியர் லிசா, இது தான் ஆரம்பம், 13ம் நம்பர் வீடு போன்ற திகில் படங்களும் வெளியாகின

    ReplyDelete
  39. பிரபா அண்ணா பதில் சொல்லட்டா??? வேணாமா??? அதான் கொஞ்சம் யோசிக்கிறேன்... விடை தெரியும் ஆனால் சொன்னால் என்ன சின்னப் பிளைக் கண்ணாடியா பரிசாத் தருவீங்கள்??? அப்படி என்றால் நான் சொல்ல மாட்டேன்,,,,, ஏன்னா குட்டிப் பாப்பாவிற்கு பெரிய பரிசு தருவீனம் என்று சொன்னால் தான் பதில் சொல்லு என்று அம்மா சொன்னவா..(யாரு குட்டிப் பாப்பாவா??? அதாங்க நான் தான்)

    ReplyDelete
  40. அருண்மொழி வர்மன்,

    சரியான விடைதான் ;)‍

    ReplyDelete