Pages

Tuesday, November 25, 2008

றேடியோஸ்புதிர் 28 - பெண் பாடும் "வீட்டுக்கு விட்டுக்கு வாசப்படி வேணும்"?

றேடியோஸ்புதிரின் கேள்வியாக இங்கே இரண்டு ஒலித் துண்டங்களை வைத்து கேட்கின்றேன். இரண்டுமே ஒரே படத்தில் இருந்து தான். முதலில் வரும் ஒலித்துண்டம் முன்னர் கிழக்கு வாசல் திரைப்படத்தில் இளையராஜா பாடி மிகப்பிரபலமான "வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்" இந்தப் பாடலை குறித்த இந்தப் படத்தின் நாயகி பாடுமாற் போல ஒரு சிறுபாடலாக மின்மினி பாட வருகின்றது. இந்தப் பாடல் அமைந்த திரைப்படம் எது என்பதே கேள்வியாகும்.
இந்தப் படத்தின் மறுபாதிக்கும், இசையமைப்பாளருக்கு வாழ்வளித்த முதல் படத்தின் தலைப்பிற்கும் நெருங்கிய உறவு இருக்கின்றது.

இந்தப் படத்தின் நாயகன் ஒரு காலகட்டத்தில் திடீரென்று தன் வேஷ்டி உயரத்துக்கு புகழடைந்து எல்லாப் பிரபலங்களையும் கடந்து வந்த வேகத்தில் போய்ச் சேர்ந்தவர் மீண்டு(ம்) வந்திருக்கிறார் குணச்சித்திர நடிகராக.
இங்கே கொடுத்திருக்கும் அடுத்த ஒலித்துண்டம் இப்படத்தின் இசையமைப்பாளரை அழைக்குமாற் போல அமையும் பாடலின் இசை, படத்தையும் காட்டிக் கொடுத்து விடும்.
கீகீகீ ;-)




52 comments:

  1. //கீகீகீ ;-)//

    தூயாவுக்கு ஹிண்ட் கொடுக்கிற மாதிரி இருக்கே?

    அப்போ எங்களுக்கு எல்லாம் க்ளூ இல்லையா?

    ReplyDelete
  2. எனக்கு சுத்தமா தெரியாது..இதுபத்தி..ஆனா பாட்டு கிளிப்பிங்கஸ் நல்லாருக்கு.:-)

    ReplyDelete
  3. // .:: மை ஃபிரண்ட் ::. said...
    //கீகீகீ ;-)//

    தூயாவுக்கு ஹிண்ட் கொடுக்கிற மாதிரி இருக்கே?//

    ஆகா இது ஓவரு, நாங்க எல்லோருக்கும் சம உரிமைதான் கொடுப்போம் ;) சீக்கிரம் கண்டுபிடிச்சு வாங்க

    //சந்தனமுல்லை said...
    எனக்கு சுத்தமா தெரியாது..இதுபத்தி..ஆனா பாட்டு கிளிப்பிங்கஸ் நல்லாருக்கு.:-)
    //

    இன்னும் கிளிப்பிங்ஸ் இதே படத்தில் நிறைய இருக்கு, அதையும் கொடுப்போம் ;)

    ReplyDelete
  4. அரண்மனைக்கிளி..ஹீரோயினை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. கன்னம் பஃப் ன்னு அமைதியா.. பாவமா.. அந்த ஸ்டில் மட்டுமே போதுமா இருந்தது எனக்கு.

    ReplyDelete
  5. ஹய்யா ரொம்பநாள் கழிச்சு எனக்கு ஈஸியா புதிரு.. ஒன்னு் பாத்ததும் கண்டுபிடிச்சிருவேன்..இல்லன்னா க்டைசியா விடை போட்டாலும் தெரிஞ்சிருக்காது இதுங்கறமாதிரி புதிர் போடறீங்க..

    ReplyDelete
  6. றேடியோஸ்பதி,

    அரண்மனை கிளி. நாயகி - அஹானா ராஜ்கிரண்

    Maestro Raja அன்னக்கிளி

    ReplyDelete
  7. அரண்மனைக் கிளி?

    ReplyDelete
  8. சொல்ல மறந்து விட்டேன்.
    பாட்டு பேரு “ராசாவே உன்னை”

    ReplyDelete
  9. ராகவன்

    நீங்க தான் முதல் ஆள் பதிலோடு ;)

    ஆயில்ஸ்

    அட நீங்களா? இருங்க என் கையை கிள்ளிப் பார்க்கிறேன் ;)

    ReplyDelete
  10. முத்து லெட்சுமி

    பாட்டு கேட்காமலே பதிலா, வாழ்த்துக்கள் ;)

    அனானி அன்பரே

    சரியான கணிப்பு

    ReplyDelete
  11. ரவிசங்கர்

    சரியான கணிப்பு, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. ராசாவே உன்னை விட மாட்டேன்...

    அரண்மனை கிளி

    ReplyDelete
  13. மைப்ரண்ட்

    பின்னீட்டிங் ;)

    ReplyDelete
  14. அரண்மனைக்கிளி?

    ReplyDelete
  15. அரண்மனைக் கிளி - இளையராஜா - அன்னக்கிளி - ராஜ் கிரண் - ஓகேயா? :)

    - என். சொக்கன்,
    பெங்களூர்.

    ReplyDelete
  16. ஹையோ..இன்னிக்கும் ரொம்ப லேசான கேள்வியா? புதிர் போடறதுன்னா கொஞ்சம் கஷ்டமான புதிரா இருக்கணும்பா..

    படத்தோட பேரு - அரண்மனைக் கிளி
    நீங்க சொல்ற அந்த நடிகர் - ராஜ்கிரண்

    இனிமேலாவது கொஞ்சம் கஷ்டமான கேள்வியா கேளுங்கப்பா..

    ReplyDelete
  17. அரண்மனைக் கிளி...
    இந்தப் படத்துல எல்லாப் பாட்டும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.அடுத்த பதிவு இந்தப் படமா... தூள்... ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  18. பாடல் வந்தது 'அரண்மனைக் கிளி'..
    இளையராஜாவுக்கு வாழ்வளித்தது 'அன்னக்கிளி'
    எம்ஜிஆர், சிவாஜி சேர்ந்து நடிச்சது 'கூண்டுக்கிளி'
    இது போன்ற பல புதிர்களை நீ தொடர்ந்து அளி!!!

    (அப்பா... ஒரு வழியாக முடித்து விட்டேன்)

    ReplyDelete
  19. அந்த கதாநாயகியின் புகைப்படமே காட்டிக்கொடுத்து விட்டது..

    அருமையான பாடல்கள் நிறைந்த படம்.. பின்னணி இசைத்தொகுப்பை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

    ReplyDelete
  20. பதிவை முழுமையாகப் படிக்கவே தேவையில்லாம போச்சு. நீங்கள் போட்டிருக்கும் புகைப்படத்தைப் பார்த்ததுமே விடை தெரிஞ்சிருச்சு. :-)

    விடை: அரண்மனைக் கிளி.

    ReplyDelete
  21. பாட்டுக் கேக்கலை தல.. அரண்மனைக் கிளியோ?...:)

    ReplyDelete
  22. வணக்கம் கானா, நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் தளத்திற்கு வருகிறேன். பாடலை திறக்க முடியவில்லை. ஆனால் உங்களது விளக்கங்களை வைத்து பார்த்தால் அரண்மனைகிளி என்று தோன்றுகிறது......

    பனிமலர்.

    ReplyDelete
  23. இளா, என்.சொக்கன், ரிஷான், முரளிகண்ணன்

    கலக்கல்ஸ்

    ஏ ஆர் கே, தமிழ்பறவை, அரவிந்த், நிலாகாலம்

    பின்னீட்டிங்க ;)

    ReplyDelete
  24. படம் அரண்மனைக்கிளி

    தொடர்பு : இளையராஜா இசையமைத்த முதல் படம் அன்னக்கிள். இப்படம் அரண்மனைக்கிளி.

    நடிகர் : ராஜ்கிரண்

    ReplyDelete
  25. படம் பேரு அரண்மனை கிளி.

    நீங்க குடுக்கும் க்ளு படம் பெயரை கண்டுபிடிக்க மட்டுமல்லாது, படத்தை பற்றிய பல சுவாரஸ்யமான தகவலையும் தருகிறது.

    ReplyDelete
  26. >>>> அந்த கதாநாயகியின் புகைப்படமே காட்டிக்கொடுத்து விட்டது..

    ஆமாம், நிறம் மாறாத பூக்கள்போல் பூடகமாகக் கொடுக்காமல் இப்படி நேரடியாகப் போட்டு உடைத்துவிட்டீர்களே கானாபிரபா :)

    இன்னொரு விஷயம், உங்களுடைய பின்னணி இசைத் தொகுப்புகளை அறிமுகக் குறிப்புகளுடன் குறுந்தட்டாக (அதிகாரபூர்வமாக) வெளியிட வழி உண்டா? வணிகச் சந்தை இருக்குமா தெரியவில்லை. ஆனால் இதன்மூலம் ராஜாவின் மேன்மையை இன்னும் பலர் உணர்வார்கள், யாரேனும் சென்னை நண்பர்கள் உதவினால், தயாரிப்பாளர்களை அணுகிப் பார்க்கலாமே!

    - என். சொக்கன்,
    பெங்களூர்.

    ReplyDelete
  27. வாங்க சொக்கன்

    அந்தத் திருப்பணியை ராஜாவின் உரிமை பெற்று யாராவது செய்தால் என்னால் இயன்ற இலவச சேவையை வழங்கத் தயார்.

    இந்த முறை யாரும் எலிமினேட் ஆகக்கூடாதுங்ககிற நல்லெண்ணம் தவிர வேறொன்றறியேன் பராபரமே ;)

    ReplyDelete
  28. கானா என்னுடைய பின்னூட்டம் என்ன ஆனது, அரண்மனைகிளி என்று எழுதி இருந்தேனே, காலையில் பாடலை கேட்க முடியவில்லை. இப்போது தான் கேட்டேன் எனது பதில் உறுதி, அரண்மனைகிளியே தான். மறக்க முடியாத படம். இந்த படம் பார்கையில் அருகில் அமர்ந்து இருந்த ஒரு குடும்பத்தலைவன் தேம்பித்தேம்பி அரங்கில் அழ அவரது மனைவி எவ்வளவோ சொல்லியும் அடங்காமல் அழுத காட்சி இன்னமும் கண்முன்னே இருக்கிறது.....

    பனிமலர்.

    ReplyDelete
  29. தமிழ்பிரியன், அருண்மொழி, ஆளவந்தான், பனிமலர்

    கலக்கீட்டீங்க‌

    பனிமலர்

    மன்னிக்கவும் தாமதமாகவே உறுதிப்படுத்தியதற்கு

    ReplyDelete
  30. அண்ணன்...
    ராஜ்கிரண் அப்படின்னு நினைக்கிறேன் அந்த நடிகர், கோடிகளில் சம்பளம் வாங்கிய நடிகர்னு சொல்றாங்க...

    படம்- அரண்மனைக்கிளி...அப்படித்தானே?

    இசையமைப்பாளருக்கு வாழ்வளிவத்த படம்-
    அன்னக்கிளி என்று நினைக்கிறேன்..?

    ReplyDelete
  31. கான பிரபா,

    நன்றி.

    உங்கள் புதிர் பற்றி (ஹெட் போனில் "அந்தி மழை" பாட்டு) யோசித்துக்கொண்டிருக்கும் போது அப்படியே ஒரு கவிதை " "அந்தி மழை" பற்றி (வெளிலும் மழை ) ஒரு பதிவு
    எழுதி தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன். படிக்கலாம்.

    "நான் ,ராஜா, அந்தி மழை மற்றும் ஒரு வானவில் ".அந்தி மழை பாட்டு கேட்டுக்கொண்டு ரசிக்கலாம். இல்லாமலும் ரசிக்கலாம்.

    ReplyDelete
  32. ரவிசங்கர்

    உங்கள் பதிவை நிச்சயம் படிப்பேன், மிக்க நன்றி தொடர்ந்து வாருங்கள்

    தமிழன் கறுப்பி

    பின்னீட்டிங்கப்பா ;-)

    ReplyDelete
  33. படம் அரண்மனைகிளி தானே...
    தற்போது, பிண்ணனி இசைத்தொகுப்பை சரியாக
    கேட்க முடியவில்லை.

    ராசாவே ...உன்னை விட மாட்டேன் என்று
    ராஜ்கிரண் & இளையராஜா கூட்டணியில்
    வந்த படமல்லவா

    ReplyDelete
  34. (அரண்மனை கிளி) ராசாவே உன்னை விட// இந்தப் பாடலை கேட்டுக் கொண்டே இருக்கலாம், அற்புதமான பாடல்.

    ReplyDelete
  35. palace parrot!!

    correcta prabha

    raaja voda veedu "aranmanai"
    raaja voda first film "... kili"

    ada ada enna porutham

    ReplyDelete
  36. அரண்மனைக்கிளி ?

    ReplyDelete
  37. கலைக்கோவன், மணி, தங்கக்கம்பி, சுரேஷ், கார்த்திக்

    கலக்கீட்டீங்கோ ;‍)

    சுரேஷ்

    வித்தியாசமான ஒற்றுமை இல்லையா

    ReplyDelete
  38. என் ராசாவின் மனசில, ராஜ்கிரண்

    ReplyDelete
  39. அரண்மனைக்கிளி. போன பதில் தப்பு

    ReplyDelete
  40. சின்ன அம்மணி, சரியான கணிப்பு ;)

    ReplyDelete
  41. 2. (இளைய) ராசாவே உன்னை விடமாட்டேன் ;-)

    ReplyDelete
  42. பாலராஜன் கீதா

    பாட்டாவே படிச்சீட்டிங்களா ;)
    இரண்டுமே ஒரே படம் தான்

    ReplyDelete
  43. போட்டியில் கொலைவெறியோடு பங்குகொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி

    சரியான பதில்: அரண்மனைக்கிளி
    ‍அந்த நடிகர் ‍ ராஜ்கிரண்


    இப்படத்தின் பின்னணி இசைத்தொகுப்பு நாளை வெளியாகும்.

    ReplyDelete
  44. \\\\கானா பிரபா said...
    போட்டியில் கொலைவெறியோடு பங்குகொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி

    சரியான பதில்: அரண்மனைக்கிளி
    ‍அந்த நடிகர் ‍ ராஜ்கிரண்


    இப்படத்தின் பின்னணி இசைத்தொகுப்பு நாளை வெளியாகும்.
    \\

    நன்றி தல ;))

    ReplyDelete
  45. தங்கக் கம்பி,

    >>> "அரன்மனைக்கிளி".இப்படத்தில் சில பாடல்கள் ஒரேமாதிரியாக இருந்ததால் தெவிட்டும் விதமாக இருந்தது எனக்கு.

    ஒரேமாதிரியா? பாடல்கள் அத்தனையும் வெவ்வேறுவிதம்ங்க, ராஜாவின் பன்முகத்தன்மையை ‘அசால்ட்’டாக நிரூபிக்கும் தொகுப்புகளில் இதுவும் ஒன்று - தயவுசெஞ்சு இன்னொருவாட்டி கேட்டுப் பாருங்க!

    - என். சொக்கன்,
    பெங்களூர்.

    ReplyDelete
  46. சொக்கன் சொன்னது போல அரண்மனைக்கிளி படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றுமே தனி ரகம். ஆனால் ராசாவே உன்னை விட மாட்டேன், வான்மதியே போன்ற பாடல்களின் காட்சிக்கான தேர்வு அதாவது காதல் வயப்படும் பெண்ணின் பாடல் என்ற வகையிலேயே ஒத்திருக்கின்றது.

    ReplyDelete
  47. >>>> ராசாவே உன்னை விட மாட்டேன், வான்மதியே போன்ற பாடல்களின் காட்சிக்கான தேர்வு அதாவது காதல் வயப்படும் பெண்ணின் பாடல் என்ற வகையிலேயே ஒத்திருக்கின்றது

    உண்மைதான். ஆனால் ஜானகியம்மா குரல்ல என்ன ஒரு வித்தியாசம்!

    ’வான் மதியே’ பாடல் ஒரு பணக்காரப் பெண்ணின் ஏக்கம், கதாநாயகன் அதை மறுக்கிறானோ, மறுத்துவிடுவானோ என்கிற தவிப்பு, ஆற்றாமை, ஆனால் ‘ராசாவே’ ஏழைப் பெண்ணின் முதல் காதல், சிலிர்ப்பு, ’நானும் இனிமேல் எல்லோரையும்போல் கௌரவமாக வாழப்போகிறேன்’ என்கிற பெருமித உணர்வு ... அத்தனையையும் குரல்லயே கொண்டுவந்திருப்பாங்க!

    அதெல்லாம் ஒரு காலம் போங்க!

    - என். சொக்கன்,
    பெங்களூர்.

    ReplyDelete
  48. சொக்கன்

    போனது போனது தான், அதை இரைமீட்டிப் பார்ப்பது தான் சுகம் இல்லையா? ஆனாலும் அந்தக் காலகட்டத்தில் இருந்த வெரைட்டி எந்தக் காலத்திலும் வராது போல :(

    ReplyDelete