
வழக்கமா நீங்க இளையராஜாவின் பாடல்களை வைத்தே அதிகம் புதிர் போடுவதால் உபகுறிப்புக்களின் வேலை மிச்சமாகுது" என்று என் தன்மானத்தைச் சீண்டிய ஜீ.ராவின் கூற்றை மாற்ற இந்த வாரம் ஒரு பழைய பாட்டு ஆனால் கேட்டால் இன்றும் இனிக்கும் பாட்டைப் பற்றிய புதிர்.
கவிஞர் கண்ணதாசன் ஒரு படத்துக்காக அற்புதமான பாட்டை எழுதிவிட்டார். அவர் எழுதிக் கொடுத்த முதல் அடிகளிலேயே இயக்குனரும், இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் மனதைப் பறிகொடுத்தார்கள். கிட்டத்தட்ட எட்டு விதமான மெட்டுக்களைப் போட்டும் திருப்தி வரவில்லை. தான் போட்ட எட்டு டியூன்களையும் ஒவ்வொன்றாகப் பாடிக் கொண்டிருந்தார் எம்.எஸ்.வி. அங்கே அப்போது கவிஞரும் இருந்தார்.
நடுவில் அனைவருக்கும் காபி வந்தது. காபியைக் கொடுத்த பையன் விஸ்வநாதனிடம், "அண்ணே அந்த மூணாவது ட்யூனையும், ஏழாவது ட்யூனையும் மிக்ஸ் பண்ணிப் பாருங்க" என்று இயல்பாகச் சொன்னான். அவன் சொன்னது கவிஞரின் காதிலும் விழுந்தது.
"போடா...டேய்...போடா...இது என்ன காபி மிக்ஸ் பண்ற மாதிரி நினைச்சியா...போ...உன் வேலையைப் பார்" என்று விரட்டினார் கவிஞர்.
அடுத்து விஸ்வநாதன் இன்னொரு ட்யூனை வாசித்தும், பாடியும் காட்டினார். "ஒருமனதாக அந்த ட்யூனை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். எம்.எஸ்.வி அமைதியாக அந்த காபி கொண்டு வந்த பையனைப் பார்த்தார். கடைசியாக எம்.எஸ்.வி பாடி அனைவரும் ஏற்றுக் கொண்ட அந்த ட்யூன் காபி பையன் சொன்னது போல் மூன்றாவது ட்யூனையும் ஏழாவது ட்யூனையும் கலந்தது தான். அதுவே பின்னாளில் பாடலாகவும் உருவெடுத்தது. அந்தப் பாடல் எது என்பது தான் கேள்வியே.
உங்கள் விடையை இலகுவாக்க சில உபகுறிப்புக்கள்
1. இந்தப் பாடல் வரும் படத்தின் தலைப்பின் ஒரு பாதி ஒரு பிரபல தமிழ் நடிகர் தானே எழுதிய சுயசரிதை நூலின் தலைப்பின் ஒரு பகுதியாகவும் இருக்கின்றது.
2. இது ஒரு ஜோடிப் பாடல்.
மேலும் இந்தப் புதிரில் சற்று வித்தியாசமாக, கீழே பத்துப் பாடல்களைக் கொடுக்கின்றேன், அதில் ஏதாவது ஒன்று தான் இந்தப் பாடல், ஒருவர் ஒரேயொரு பாட்டை மட்டுமே தெரிவு செய்யலாம்.
1.முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
2. பொட்டு வைத்த முகமோ கட்டிவைத்த குழலோ?
3. பூ மாலையில் ஓர் மல்லிகை
4. அமைதியான நதியினிலே ஓடம்
5. கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
6. மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்
7. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
8. இனியவளே என்று பாடி வந்தேன்
9. நாலு பக்கம் வேடருண்டு
10. நினைவாலே சிலை செய்து
மீ த பர்ஸ்ட்டூ :))
ReplyDeleteஎன்ன லீடர் இது? ( நன்றி சத்யம்!)
ReplyDeleteஇன்னும் உங்க காலத்துலேயே இருக்கீங்க! சரி போட்டின்னு வந்தாச்சு இருங்க நானும் தொபுக்கடீர்ன்னு குதிக்கிறேன் :)))
ReplyDeleteஇது ராஜ பாட்டை அல்ல------சிவகுமார்.
ReplyDeleteராஜ பார்ட் ரங்கதுரை........மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்...இது பாடல்:)
படம்: ராஜபார்ட் ரங்கதுரை
ReplyDeleteபாடல்: மதனமாளிகையில் ...
அதேபோல் தலைப்பு அமைந்த சுயசரிதை: இது ராஜபாட்டை அல்ல
எழுதியவர்: சிவக்குமார்
சரியா? :)
என். சொக்கன்
பைதிவே, சூப்பர் டைட்டில் கானா பிரபா :)
ReplyDelete- என். சொக்கன்
மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்!
ReplyDeleteபடம்: ராஜபார்ட் ரங்கதுரை
அம்மா சொன்னது :)
புடிச்சிட்டோம்ல!
ReplyDeleteராஜபார்ட் ரங்கதுரை
மதன மாளிகையில் மந்திர
நிஜமா நல்லவரே நிஜமா பின்னீட்டீங்
ReplyDeleteசொக்கன்
வழக்கம் போல் உங்களை சிக்கவைக்கவே முடியல :(
கருத்துக்கும் நன்றி ;-)))
ஓவியா
சரியான கணிப்பு
//"ஒருமனதாக அந்த ட்யூனை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.//
ReplyDeleteபடம்: ராஜ்பார்ட் ரங்கதுரை
பாடல் :6. மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்.
சிக்கவைக்கிறது முக்கியமில்லை கானா பிரபா, நான் இணையத்தில மிகவும் விரும்பிப் பங்குபெறும் பகுதிகளில் ஒண்ணு, உங்க புதிர்கள். பதில் சொல்றதுகூட ரெண்டாம் பட்சம்தான், எதுவா இருக்கும், அதுவா இருக்குமோ-ன்னு சில நிமிஷம் (சந்தோஷமா) பதறித் துடிக்கவைக்கறீங்க பாருங்க, அந்த அனுபவம் போதுமே! :)
ReplyDeleteGreat Job, Keep Going!
இந்த வரிசையில, நாங்களும் சில புதிர்களை அனுப்பலாமா?
- என். சொக்கன்
வாங்க சொக்கன்
ReplyDeleteஇப்படியான போட்டிகளே வேலைப்பழுவோடும் அலைச்சலோடும் இருக்கும் போது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக செய்யும் வேலைகள். அதைக் கொடுப்பதில் எனக்கும் ஆனந்தமே.
புதிர் அனுப்பலாமான்னா கேட்டீங்க? கரும்பு தின்னக் கூலியே? என் தனிமடலான kanapraba@gmail.com இற்கு அனுப்புங்கள், முக்கியமா பாடல், பின்னணி இசை, இசையமைப்பாளர், கவிஞர், பாடகர் என்ற வகைக்குள் அடங்குமாறு அமையுங்கள். உங்களின் உதவிக்கு முன் கூட்டிய நன்றிகள்.
ஆயில்ஸ்
ReplyDeleteஇருங்க என் கையை கிள்ளிப் பார்த்துட்டு சொல்றேன். ஆகா நீங்களே தான் ;)
கார்த்திக்
சரியான கணிப்பு, வாழ்த்துக்கள்.
மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் from Rajapaart Rangathurai
ReplyDeleteஜேகே
ReplyDeleteசரியான கணிப்பு
pottu vaiththa mugamoo
ReplyDeletefor email follow up
ReplyDelete4. அமைதியான நதியினிலே ஓடம்
ReplyDeleteதல
ReplyDeleteபொட்டு வைத்த முகமோ தப்பு, அந்தப் படப்பெயரை ஞாபகப்படுத்தும் சுயசரிதை ஏதும் வரலியே?
Song: Amaithiyana nathiyinilE Odam
ReplyDeleteMovie: Aandavan Kattalai
Super star had written Idhu Aandavan Kattalai.. ;-)
Singers: TMS & P Susheela
p/s: E-Kalappai makkar pannuthu!
ஜீவ்ஸ் அண்ணாச்சி மற்றும் மைபிரண்ட்
ReplyDeleteநீங்க ரெண்டுபேர் சொன்ன பாட்டுக்களும் ஒன்றே ஆனால் அது தவறு. சூப்பர் ஸ்டார் அந்தப் பெயரில் புத்தகம் எழுதினாரா? என்ன கொடும மைபிரண்டு ;(
அய்யா முடியலைய்யா
ReplyDeleteபிரபா ,பாட்டு இனியவளே என்று பாடி வந்தேன் பாட்டு. ஓகேயா.
ReplyDeleteபடம்னு பார்த்தா 'நான் ஏன் பிறந்தேன்'
எம்ஜீயார் ஒரு தொடரா எழுதினார் விகடனில். ஆனாஅ அது பாதியில் நின்றதாக நினைவு.
//கானா பிரபா said...
ReplyDeleteவாங்க சொக்கன்
இப்படியான போட்டிகளே வேலைப்பழுவோடும் அலைச்சலோடும் இருக்கும் போது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக செய்யும் வேலைகள். அதைக் கொடுப்பதில் எனக்கும் ஆனந்தமே.
புதிர் அனுப்பலாமான்னா கேட்டீங்க? கரும்பு தின்னக் கூலியே? என் தனிமடலான kanapraba@gmail.com இற்கு அனுப்புங்கள், முக்கியமா பாடல், பின்னணி இசை, இசையமைப்பாளர், கவிஞர், பாடகர் என்ற வகைக்குள் அடங்குமாறு அமையுங்கள். உங்களின் உதவிக்கு முன் கூட்டிய நன்றிகள்.
///
சொக்கன் சார் அந்த மெயில்ல அப்படியே Cc போட்டு kadagam80 அட் ஜிமெயில்.காம் க்கு அனுப்பி வையுங்க எனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்! :))))))
// சூப்பர் ஸ்டார் அந்தப் பெயரில் புத்தகம் எழுதினாரா? என்ன கொடும மைபிரண்டு ;(//
ReplyDeleteமைஃப்ரெண்டு நீங்க சொன்னதும் கரீக்ட்தான் பட் கானா அண்ணாவுக்கு அந்தளவுக்கு புரிபடாது விடுங்க!விடுங்க!
//கானா பிரபா said...
ReplyDeleteஆயில்ஸ்
இருங்க என் கையை கிள்ளிப் பார்த்துட்டு சொல்றேன். ஆகா நீங்களே தான் ;)
/
மெதுவா கிள்ளுங்க எனக்கு வலிக்குது!
(கிள்ளுறது என் கையிப்பா!
வல்லியம்மா
ReplyDeleteஉங்க பதில் தவறு, இங்கே கொடுத்த உபகுறிப்பு எம்.ஜி.ஆர் சுயசரிதை இல்லை. அத்தோடு அந்த நூலின் ஒரு சின்ன பகுதி தான் இப்படத்தின் தலைப்பு
6. மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்
ReplyDeleteவணக்கம் பிரபா....
ReplyDeleteஇது அருண்மொழி,
எனது கணிப்பில்
பாடல் - மதன மாளிகையில்
படம் - ராஜபாட் ரங்கதுரை
நூலின் பெயர் - இது ராஜபாட்டை அல்ல
எழுதியவர் - சிவகுமார்
இந்தப் ப் அடத்தில் வரும் அம்மம்மா என்னை மிகவும் கவர்ந்த பாடல்
மது
ReplyDeleteசரியான கணிப்பு
அருண்மொழிவர்மன்
நீங்கள் சொன்ன பதில் சரியானதே.
அண்ணன் பத்து பாடல்களும் நல்ல பாடல்தானே...
ReplyDeleteidhu bongaattam.
ReplyDeletehistory geography ellaam vacchchu potti vekkaradhu aniyaayam.
vayasaana partygalukkuthaan vidai therium ;)
எனக்கு பிடிச்சபாட்டு இரண்டு மூணு இருக்கிறதால நான் விடையை சொல்லலை...
ReplyDeleteகட்டாயம் பதில் சொல்லணுமா அண்ணன்...:)
ReplyDeleteமுடியலைங்கிறத எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு...
ReplyDelete// SurveySan said...
ReplyDeleteidhu bongaattam.
history geography ellaam vacchchu potti vekkaradhu aniyaayam.//
தல
அதுக்கு தானே 10 பாட்டு கொடுத்து எடுக்கச் சொன்னேன் ;)
//SurveySan said...
ReplyDeleteidhu bongaattam.
history geography ellaam vacchchu potti vekkaradhu aniyaayam.
vayasaana partygalukkuthaan vidai therium ;)//
இது போங்காட்டம்
புவியியல் வரலாறு எல்லாம் வைச்சு போட்டி வைக்கிறது அநியாயம்!
வயசான கானா மாதிரி பார்ட்டீகளுக்கு மட்டும்தான் இதுக்கு விடை தெரியும்!
இப்படியும் நாங்க ரீப்பிட்டேய்ய்ய் போடுவேம்ப்பு!
இப்போ சரியான பதில் சொல்றேன். பிடிச்சுக்கோங்க..
ReplyDeleteபாடல்: மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்
படம்: ராஜாப்பாட் ரங்கதுரை
அந்த சுயசரிதை எழுதிய நடிகர்: சிவக்குமார்
புத்தகம்: ராஜப்பாட்டை
இந்த பாடலை பாடியவர்கள்: TMS, P சுசீலா
இது எப்படி இருக்கு? ;-)
பிரபா,பத்துப் பாட்டுப் போட்டுப் பொறுக்கி கொள்ளுங்கோ எண்டு விட்டபடியால் கடைசியா பொறுக்கி எடுத்துப் பாக்கிறன்.எனக்குப் பிடிச்ச பாட்டு...2-3 இருக்கு.ஒண்டுதான் சொல்ல வேணும்.ம்ம்ம்...
ReplyDelete"மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்...."
தமிழன்
ReplyDeleteநாலு தரம் வந்தாலும் விடை சொல்லத்தான் வேண்டுமப்பு ;-)
ஆயில்யன்
அடுத்தமுறை ரோபோவில் இருந்து போடுறேன் சார் ;)
தங்கக்கம்பி
உங்கள் கணிப்பு தவறானது :(
கொஞ்சம் தாமதமாயிருச்சு பிரபா...
ReplyDeleteசிவகுமார் எழுதிய சுயசரிதை "இது ராஜபாட்டை அல்ல"
நீங்கள் குறிப்பிடும் பாடல் "மதன மாளிகையில் மந்திர மாலைகளால்" பாடல்.
அந்தப் பாடலை முதலில் நாடகப்பாணியில் டி.எம்.எஸ் தொடங்குவார். மூனாவது வரியில் கதாநாயகியோட கற்பனைக்குப் போயி மெல்லிசையாயிரும். அருமையா இருக்கும்.
இந்தப் பாட்டு இடம் பெற்ற படம் ராஜபார்ட் ரங்கதுரை
நீங்க குடுத்திருக்கும் பத்துப் பாட்டுகளுமே கலக்கல். பிரமாதமான பாட்டுகள்.
ReplyDeleteசரியான கணிப்பு ராகவன்
ReplyDeleteஅந்த முத்தான பாடல்கள் திங்கள் மாலை வெளிவரும்.
படம்: ராஜபார்ட் ரங்கதுரை
ReplyDeleteபாடல்: மதனமாளிகையில் ...
சரியான பதில் அளித்தவர்களுக்கும், போட்டியில் பங்கெடுத்தவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி ;)