Pages

Thursday, August 7, 2008

இரண்டாந்திருவிழா - எந்நாளும் நல்லூரை வலம் வந்து

நல்லூர் விழாக் காலப் பதிவுகளில் இன்றைய படையலாக வருவது சிவயோக சுவாமிகளின் இரண்டு நற்சிந்தனைப் பாடல்களின் ஒலி வடிவமும், அவற்றின் எழுத்து வடிவமும். "எந்நாளும் நல்லூரை" என்ற பாடலைத் தாங்கிய இசைப் பேழை யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் சிவதொண்டன் நிலையத்தினரால் வெளியிடப்பட்டது. இப்பாடலை உருவாக்கியதோடு தகுந்த சங்கீத இலட்சணமும் கொடுத்தவர் சிவயோக சுவாமிகள். எளிமையான வரிகளில் வலிமையான பக்தியுணர்வைத் தூண்டும் இப்பாடல் நல்லூர் நாயகன் திருவிழாக் காலத்தில் உங்களுக்கும் அவன் பால் சித்தத்தைக் கொண்டு செல்ல உறுதுணையாக அமையும்.



Get this widget
Share
Track details


ராகம்: பிலஹரி
தாளம்: ரூபகம்

பல்லவி

எந்நாளும் நல்லூரை வலம் வந்து
வணங்கினால் இடர்கள் எல்லாம் போமே

அனுபல்லவி

அந்நாளில் ஆசான் அருந்தவஞ் செய்த இடம்
அது ஆதலாலே அதிசயம் மெத்தவுண்டு
(எந்நாளும் நல்லூரை வலம் வந்து
வணங்கினால் இடர்கள் எல்லாம் போமே)

சரணம்

வேதாந்தம் சித்தாந்தம் கற்றதனால் என்ன
வேடிக்கைக் கதைகள் பேசினால் என்ன
வீதியில் வந்தொருக்கால் விழுந்து கும்பிட்டால்
வில்லங்கம் எல்லாம் இல்லாமல் போமே
(எந்நாளும் நல்லூரை வலம் வந்து
வணங்கினால் இடர்கள் எல்லாம் போமே)

சத்தியம், பொறுமை, சாந்தம், அடக்கம்
நித்தியா நித்தியம் பெறினும் - நிபுண
பக்தி செய் உத்தமர் பரவும் நல்லூரில்
நித்தியம் வந்து பார்த்தால் முத்தி நிச்சயமே

(எந்நாளும் நல்லூரை வலம் வந்து
வணங்கினால் இடர்கள் எல்லாம் போமே)

0000000000000000000000000000000000000000000000000000000000000000

நன்றி:
பதிவில் இடம்பெற்ற "எந்நாளும் நல்லூரை", மற்றும் "நல்லூரான் திருவடியை" பாடல்களின் ஒலிப்பதிவைத் தந்துதவிய திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள்.
.

நல்லூர் முருகன் உள் ஆலயப் புகைப்படம்: http://www.tamilshots.com/

6 comments:

  1. விழாக்காலப் பதிவுகளில் சுற்றிச் சுற்றி வருகிறேன் காபி அண்ணாச்சி! :)

    //எந்நாளும் நல்லூரை வலம் வந்து//

    அன்று கூட நண்பர் ரிஷானிடம் சொல்லிக் கொண்டு இருந்தேன்!
    நல்லூர், திருக்கேதீச்சரம், கதிர்காமம் - மூன்றும் அடியேனுக்கு கண்குளிரக் காணும் நாள் எந்த நாளோ?

    ReplyDelete
  2. //வேதாந்தம் சித்தாந்தம் கற்றதனால் என்ன
    வேடிக்கைக் கதைகள் பேசினால் என்ன//

    ஒன்றுமில்லை! ஒன்றுமில்லை!

    கற்றாரை யான் வேண்டேன்
    கற்பனவும் இனி அமையும்! :)

    //வீதியில் வந்தொருக்கால் விழுந்து கும்பிட்டால்
    வில்லங்கம் எல்லாம் இல்லாமல் போமே//

    அருமை! அருமை!

    குற்றாலத்து அமர்ந்துறையும்
    கூத்தா உன் குரை கழற்கே
    கற்றாவின் மனம் போலே
    கசிந்துருக வேண்டுவனே!

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி புதுகைத் தென்றல்

    வாங்க கண்ணபிரானே

    உங்களுக்கும் எமக்கும் நல்லூரானைப் பார்க்கும் பாக்கியம் கிட்ட வேண்டும். ராகவனை அழைத்துப் போவதாகச் சொல்லியிருந்தேன், உங்களையும் பயணத்தில் சேர்க்கின்றேன்.

    ReplyDelete
  4. பிரபா,இளமைக் காலங்களைக் கண்ணுக்குள் கண்டு கலங்கி அழுகையாக வருது.இனி எப்போ அப்படி ஒரு காலம்.அளவெட்டி பத்மநாதன் அவர்களையும் ஒரு கணம் மனம் நினைவு கொள்கிறது.
    அவர்தானே 25 நாட்களும் நல்லூர் முருகனுக்கு நாதஸ்வரத்தால் தாலாட்டு வாசிப்பவர்.

    ReplyDelete
  5. வணக்கம் ஹேமா

    அளவெட்டி பத்மநாதனது நாதஸ்வர வாசிப்பின் உச்சத்தை போன ஆண்டு நல்லூர் பதிவுகளில் கூட யோகன் அண்ணாவோடு சிலாகித்திருந்தோம். மறக்க முடியுமா அந்த பசுமையான நினைவுகளை.

    ReplyDelete