Pages

Monday, July 28, 2008

"நல்லவனுக்கு நல்லவன்" படத்துக்காக இசையமைக்காத பாடல்

"தர்மாத்முடு" என்னும் தெலுங்குத் திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தமிழில் மீண்டும் எடுக்கலாம் என்று தீர்மானித்தபோது அது தமிழுக்குச் சரிப்படாது என்று தான் முதலில் பலர் அபிப்பிராயப்பட்டார்கள். பின்னர் கதையில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து ரஜினிகாந்த்தை வைத்தே நாயகனாக்கி இப்படத்தை எடுத்தார்கள்.

"உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே" என்ற பாடலினை இயக்குனர் வி.சி.குகநாதன் தன் படமொன்றுக்கு வைரமுத்து பாடலை எழுத இளையராஜா இசையில் உருவாக்கியிருந்தார். ஆனால் அந்தக் குறித்த படத்தில் பயன்படுத்த முடியவில்லை. ஜேசுதாசின் பாடல்களை விரும்பி ரசிக்கும் ஏ.வி.எம்.சரவணன் இப்பாடலைப் பயன்படுத்தும் நோ அப்ஜெக்க்ஷன் ரிப்போர்ட்டை வி.சி.குகநாதனிடம் இருந்து பெற்றுப் பயன்படுத்தினார். கூடவே இப்பாடலின் மெட்டை வைத்தே இன்னொரு சிறு சோகப் பாடலும் அமைக்கப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்தை வைத்து இதுவரை எடுத்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் இது என்று மேலே சொன்ன செய்திகளோடு தனது "ஏ.வி.எம் 60 - சினிமா" என்ற தனது நூலில் குறிப்பிட்டிருக்கின்றார் தயாரிப்பாளர் சரவணன்.

கடந்த ரேடியோஸ்புதிரில் நான் தந்த உபகுறிப்புக்களின் விளக்கம் இதுதான்.
இந்தப் படத்தின் ஒரு பாதி இன்னொரு நடிகரின் படமொன்றின் தலைப்பு என்று கூறியிருந்தேன். அந்தப் படம் நல்லவன், நாயகனாக நடித்தவர் விஜய்காந்த். இந்த இரு படங்களின் இயக்குனருமே எஸ்.பி.முத்துராமன் தான்.

இப்பாடலினை கே.ஜே.ஜேசுதாசோடு இணைந்து பாடகி மஞ்சுளா தமிழில் அவ்வளவு பிரபலமாகாத கன்னடத்துப் பாடகி.

இப்படத்தில் நடித்த வாரிசு நடிகர் கார்த்திக்.

"உன்னைத் தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன்" சந்தோஷ மெட்டு."என்னைத் தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய்" சோக மெட்டு12 comments:

 1. அயித்தானுக்கு பிடிச்ச பாட்டிற்கு பின்னாடி இம்புட்டு விசயம் இருக்கா?

  விவரங்களுக்கு நன்னி.

  யேசுதாஸ் பாட்டை கேக்கக்கொடுத்ததற்காக பிரபாவுக்கு ஓஓஓஓஓஓஓஓ

  :)))))))))))))))))))))

  ReplyDelete
 2. பாடல்களுக்கு நன்றி தல.

  ReplyDelete
 3. நான் புதிருக்கு இந்தவாரம் கட்டடிச்சதும் நல்லதுதான் போலயே... நேரா விடைக்கு வந்துட்டேன்..ஹப்பாடா

  ReplyDelete
 4. இத்தனை நாள் சுனந்தா என்று நினைத்திருந்தேன். அதனாலதான் சுனந்தா என்ற பெயரில் எந்த நடிகை இருந்தாங்கள் என்று ஒரே குழப்பம்.

  ReplyDelete
 5. செம கலக்கலான பாட்டு தலைவர் படத்துல!

  அவுட்டோர் ஷுட் கூட ரொம்ப எளிமையான அதே சமயத்தில இப்பவும் கூட ரசிக்க நினைக்க வைக்கிற இடங்களாக (ஆறு,ஷ்ட்ரஸ்,கள்ளுக்கடை....!) இருக்கும்!

  ReplyDelete
 6. புதுகைத்தென்றல்

  உங்க அயித்தானையும் கேட்க சொல்லுங்க.

  நன்றி நிஜமா நல்லவரே

  முத்துலெட்சுமி

  ரொம்பத்தான் ஆறுதல்பட்டுக்காதீங்க, அடுத்தவாரமும் பரீட்சை இருக்கே ;-)

  தஞ்சாவூர்க்காரரே

  இருந்தாலும் என்ன சரியான விடையைக் கணிச்சு சொல்லிட்டீங்களே.


  ஆயில்யன்

  உங்க தல நடிச்ச படங்களில் எனக்குப் பிடிச்ச படங்களில் இதுவும் ஒன்று.

  ReplyDelete
 7. பிரபா புதிரை நீங்க போட்டதும் ரெண்டு படங்க மனசுல வந்தது. ஒன்னு போக்கிரி ராஜா, இன்னோன்னு நல்லவனுக்கு நல்லவன்.

  அதுலயும் போக்கிரி இருக்கு. விஜயோட படம். அதுவும் எஸ்.பி.முத்துராமன் படம். அதுவும் தெலுங்குல சுட்டாளுன்னாரு ஜாக்கிரதா-ன்னு வந்த படத்தோட ரீமேக்தான். அதுவும் மொதல்ல ரஜினிக்குப் பிடிக்காத படம். பிறகு ஒத்துக்கிட்டாரு.

  ஆனா அதுல பாடுன பாடகிகள் ரெண்டு பேரு. ஒருத்தர் இசையரசி பி.சுசீலா. இன்னொருத்தர் ஜானகியம்மா. இவங்க ரெண்டு பேருமே ரொம்பப் பிரபலம். அங்க அவுட்டு. அதுவும் இல்லாம அதுல வாரிசு நடிகரோட அப்பா நடிச்சிருந்தாரு. அதாவது முத்துராமன். திரும்பவும் அவுட்டு. அப்புறம் அதுக்கு இசை மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். கானா பிரபா பதிவுன்னா இளையராஜாவாத்தான் இருக்கும்னும் இருக்கும்ல. ;-) ஆகையால ரெண்டாவது விடையத் தேர்ந்தெடுத்தாச்சு. :)

  ReplyDelete
 8. தல கலக்கிட்டிங்க ;))

  ReplyDelete
 9. வாங்க ராகவன்

  இனிமேல் மற்ற இசையமைப்பாளர்களையும் கவனிக்கணும் என்ற உங்க நுண்ணரசியல் கவனித்தேன் ;-).

  உண்மையில் ரஜினியை விட படத்தின் தயாரிப்பில் ஈடுபட்டவர்களுக்குத் தான் அதிகம் பிடிக்காமல் இருந்ததாம். ஆரம்பத்தில் நானும் புதிரில் ரஜினியை தவறாக இணைத்திருந்தேன். திருலோகச்சந்தர் சிபாரிசில் தான் இதை மொழி மாற்ற இருந்தார்களாம். இதே கதை ஹிட்லர் உமாநாத் படமாக முன்னர் தெலுங்குக்கு முன்னரே தமிழில் வந்ததாகவும் சொல்லியிருக்கிறார் சரவணன். ஹிட்லர் உமாநாத் நான் பார்க்கலை.


  தல கோபி

  நன்றி, ஆனா எக்சாமுக்கு வரலியே ;-)

  ReplyDelete
 10. // திருலோகச்சந்தர் சிபாரிசில் தான் இதை மொழி மாற்ற இருந்தார்களாம். இதே கதை ஹிட்லர் உமாநாத் படமாக முன்னர் தெலுங்குக்கு முன்னரே தமிழில் வந்ததாகவும் சொல்லியிருக்கிறார் சரவணன். ஹிட்லர் உமாநாத் நான் பார்க்கலை.//

  ஹிட்லர் உமாநாத் படம் திருலோகச்சந்தர் இயக்குனதுதான். இதே கதைதான். கொஞ்சம் வித்யாசமா இருக்கும். அதாவது கதாநாயகன் அப்பாவியாய் இருப்பாரு.சிவாஜி கே.ஆர்.விஜயா நடிச்ச படம். படமும் ஓரளவுக்கு ஓடுன படந்தான். ஆனா கடி. அதுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை.

  அந்தப் படத்துல இருந்து ஒரு கலக்கலான சுருளிராஜான் காமெடிப் பாட்டு இங்க.

  http://www.youtube.com/watch?v=AG0oQSU5M9E

  ReplyDelete
 11. வணக்கம் ராகவன்

  மேலதிக செய்தியோடு யூடியுப் இணைப்பைக் கொடுத்ததற்கும் நன்றி

  ReplyDelete