Pages

Tuesday, July 1, 2008

றேடியோஸ்பதியின் புதுத் தொடர்கள் - அறிமுகம்


ஒரு சின்ன இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் றேடியோஸ்பதியில் தொடர்கள் ஆரம்பிக்கின்றன. அந்த வகையில் இந்தப் பதிவு ஆரம்பிக்க இருக்கும் புதுத் தொடர்களுக்கான அறிமுகமாக இருக்கின்றது. சரி இனி வரப்போகும் தொடர்கள் குறித்த அறிமுகத்தைத் தருகின்றேன்.


வண்ண வண்ண சொல்லெடுத்து


வாராந்தம் ஒரு குறிப்பிட்ட சொல் வழங்கப்படும். அந்தச் சொல்லியில் வரும் ஏதாவது ஒன்று உங்களைக் கவர்ந்திருந்தால் அந்தப் பாடல் குறித்த சிறு விளக்கத்தோடு நீங்கள் பின்னூட்டப் பெட்டியிலோ அல்லது kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கலாம். உதாரணமாக தென்றல் என்ற சொல் வழங்கப்பட்டால் அந்த சொல்லை பாடலின் முதல் வரிகளாகக் கொண்ட பாட்டைத் தேர்ந்தெடுத்து, பாடல் குறித்த உங்கள் சிலாகிப்புடன் அனுப்பவேண்டும். இது இரு வாரத்துக்கு ஒருமுறை இடம்பெற இருக்கின்றது. எனவே முதலில் தென்றல் என்ற அடியில் வரும் பாடலையும் உங்கள் விளக்கத்தையும் வரும் யூலை 14 ஆம் திகதிக்கு முன் அனுப்பி வையுங்கள்.


இசையும் கதையும்


ஒரு சிறுகதை ஒன்றை நீங்களே எழுதி, அந்தச் சிறுகதைக்குப் பொருத்தமான பாடல்கள் நான்கிற்கு மேற்படாமல் பொருத்தமான இடங்களில் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். மாதாந்தம் ஒவ்வொரு படைப்பாளியின் இசையும் கதையும் வானொலிப்படைப்பாக அமையவிருக்கின்றது. இந்தப் படைப்புக்கு சிறப்பான குரல் வடிவம் கொடுத்துத் தயாரிக்க இருப்பவர் நமது சக வலைப்பதிவர் கதிர் சயந்தன் அவர்கள். ஆக்கங்களை என்ற kanapraba@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கலாம்.

சிறப்பு நேயர் தொடர் - பாகம் 2

ஏற்கனவே ஆரம்பித்து இருபது பதிவர்கள் வரை பங்களித்த இந்த வாராந்தத் தொடர் மீண்டும் ஆரம்பிக்கின்றது. ஏற்கனவே பங்கு கொண்டவர்களை விடுத்து புதிய பதிவர்கள் மட்டுமல்ல பதிவுகளை வாசிக்கும் வாசகர்களும் இந்தத் தொடரில் பங்கேற்கலாம். உங்கள் மனம் கவர்ந்த ஐந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவை குறித்த விளக்கங்களோடு kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்களேன்.

ஸ்யப்பா தொடர்களை அறிவித்து மூச்சு முட்டுகிறது. தொடர்ந்து இசை மழையில் உங்களை நனைவிக்கின்றேன். இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடிய புதிய தலைமுறைப்பாடகர்கள் சிலரின் பாடல்கள் இதோ.


ஹரிஷ் ராகவேந்திரா
வித்யாசாகரின் இசையில் "அரசியல்" திரைக்காக "வாசகி வாசகி" என்ற பாடலை முதலில் பாடியவர். ஆனால் ராஜாவின் இசையில் பாரதி படத்திற்காக "நிற்பதுவே நடப்பதுவே" பாடலைப் பாடிப் பெரும் புகழ் பெற்றார். ஹரிஷ் ராகவேந்திராவின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தது இங்கே நான் தரும் "சொல்ல மறந்த கதை" திரையில் இருந்து " குண்டு மல்லி குண்டு மல்லி" என்ற இனியதோர் பாடல். அவருடன் இணைந்து பாடுகின்றார் ஷ்ரேயா கோசல்.


கார்த்திக்

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஸ்ரார் படத்தில் வரும் "நேந்துக்கிட்டேன் நேந்துக்கிட்டேன்" பாடல் தான் இவரின் முதல் அடி. ஆனால் முகவரி கொடுத்த பாடலோ அழகி திரைப்படத்தில் பவதாரணியோடு இவர் பாடிய "ஒளியிலே தெரிவது தேவதையா"


ஸ்ரீராம் பார்த்தசாரதி

நல்ல குரல் வளம் மிக்க இந்த இளம் பாடகருக்கு மற்றையவர்கள் போல் வாய்ப்பு அதிகம் கிட்டுவதில்லை. கிடைத்தால் போதும் "பிதாமகன்" படத்தில் வரும் "இளங்காத்து வீசுதே" பாடலே சான்று.

29 comments:

  1. Nice blog. Thats all.

    ReplyDelete
  2. தென்றல்

    தென்றல் வந்து என்னைத் தொடும்.
    ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்.

    இந்த்ப்பாடல் கானக்கந்தர்வனின் குரலில் என்னை மிக மிக கவர்ந்த பாடல்.

    தூரல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும்.

    போன்ற பாடல் வரிகள்

    நிஜமாகவே தென்றல் வந்து என்னைத் தொட்டு, தாலாட்டியது போன்றிருக்கும்.

    ReplyDelete
  3. மீ த பர்ஸ்டுங்கோ

    ReplyDelete
  4. தல

    அறிமுகம் எல்லாம் அமர்களம்..;))

    ஸ்ரீராம் பார்த்தசாரதி - எனக்கு மிகவும் பிடித்த குரல் பிடித்த பாடலும் கூட.

    ஜேசுதாஸ் குரலின் சாயல் இவரிடம் இருக்கும் :)

    ReplyDelete
  5. ஹய்ய் சூப்பரூ!

    இப்ப போய்ட்டு பெரிய லிஸ்ட்டு எடுத்திட்டு வர்றேன் :))

    ReplyDelete
  6. //உதாரணமாக தென்றல் என்ற சொல் வழங்கப்பட்டால் அந்த சொல்லை பாடலின் முதல் வரிகளாகக் கொண்ட பாட்டைத் தேர்ந்தெடுத்து, பாடல் குறித்த உங்கள் சிலாகிப்புடன் அனுப்பவேண்டும்//

    அதுவும் அதைத் தென்றல் என்ற பெயர் உள்ளவர்கள் தான் அனுப்ப வேண்டும்.
    எ.கா. புதுகைத் தென்றல்! :-)

    ReplyDelete
  7. இசையும் கதையும் சூப்பர் ஐடியா! காபி அண்ணாச்சி கலக்குங்க!

    சிறப்பு நேயர் பதவிக்கு ரீப்பீட்டே எல்லாம் கெடையாதா? எனக்கு இன்னோரு ஆட்டம் வேணும் அண்ணாச்சி! ஆமா! சொல்லிப்புட்டேன்!

    குண்டு மல்லி குண்டு மல்லி = Harish+Shreya=sema kalakkal!
    Sriram Parthasarathy very talented! dunno why romba chance illa!
    ஸ்ரீராமின்
    கேளாமல் கையிலே சைந்தவி கூட சூப்பரா இருக்கும்!
    சுட்டும் விழிச் சுடரே இன்னும் சூப்பர்

    ReplyDelete
  8. உள்ளேன் ஐயா!

    தென்றல் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது, நமது இசைஞானியின், தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ என்ற பாடல் தான்.

    என்னைப் பொறுத்தவரை, ராசாவின், மிகச்சிறந்த டாப்-10 பாடல்களில் இதையும் ஒன்றாகச் சேர்க்க வேண்டும்.

    முதலில் வரும், தந்தனன தானனனான தானனானனா தனனனான்னு, ராசாவின் ஹம்மிங் ஒரு தூண்டில் வீச்சு என்றால், அதனைத் தொடர்ந்து வரும் ஜானுவின் "நெலையா இல்லாம, நினைவில் வரும் நெறங்களே"ங்கர வரிகளை என்னான்னுய்யா சொல்றது? நம்மை இழுத்துக் கட்டிப் போடும் வலையா?.

    சிம்ஃபனி, தீருவாசகம், மலையாள குருவெல்லாம் இதற்கு அடுத்த லெவல் தான்னு அடிச்சு சொல்ற இசைக் கலவை.

    இசை ஞானி என்ன விட்டா யாருமில்லைன்னு ஆணித்தரமா சொல்றமாதிரியான பாட்டு.

    சிம்ப்ளீ சூப்பர்ப்!

    ஆனா, அடிக்கடி இந்த மாதிரியெல்லாம் பாட்ட போடாதது பெரிய கொறை.

    பி.கு: ஜானுவைத் தவிர வேறு யார் பாடியிருந்தாலும் இந்த பாட்டு எடுபட்டிருக்காது! :)

    ReplyDelete
  9. தினுசு தினுசா சிந்திக்கிறிங்கள்.. :)

    முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்..!!

    இசையும் கதையும் எப்பிடியிருக்கும் என்பதை அறிந்துகொள்ள ஆவலாயுள்ளேன் விரைவில் ஒலியேற்றுவீங்களா..?.

    ReplyDelete
  10. புதுப்பொலிவுடன் வரவிருக்கும் றேடியோஸ்பதிக்கு வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  11. lotto

    நீங்க நல்லவரா கெட்டவரா ;(

    புதுகைத் தென்றல்

    உங்களுக்கு முன்னே லொட்டோ வந்திட்டார். தென்றல் பாடல் அருமை, தொகுப்பில் நிச்சயம் வரும்.

    தல கோபி

    தென்றல் பாட்டொன்று நாலு வரி எழுதி அனுப்புங்களேன்.

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்...
    'குண்டுமல்லி குண்டுமல்லி' அற்புதமான பாடல்..இசையும்,குரலும் குழைந்தோடுகையில்,ஒளி ஓவியரின் படப்பதிவும் குளுமையாக இருக்கும்.
    'தென்றல்' சொல்லைக் கேட்டவுடன் வருவது ,'தென்றல் வந்து தீண்டும்போது'....
    இன்ன பிற தென்றலின் வகை,வகையான வருடல்கள்..
    தென்றல் வந்து என்னைத் தொடும்..* தென்றலைக் கண்டு கொள்ள மானே.. கண்களும் தேவை இல்லை.. *தென்றல் காற்றே..தென்றல் காற்றே..சேதி ஒண்ணு..* தென்றல் என்னை முத்தமிட்டது..தென்றல்தான் திங்கள்தான் நாளும்..

    சிறப்பு நேயர் வாரத்தில் பங்கெடுக்கும் முகமாக எப்பொழுது பாடல் கேட்பினும் குறித்துக் கொள்ளுகிறேன்..ஆனால் எண்ணிக்கை ஐந்தென்பதால், குறைக்க முடியாமல் தவித்து விடுகிறேன்,,இருப்பினும் பட்டியலை விரைவில் அனுப்புகிறேன்...
    //சிறப்பு நேயர் பதவிக்கு ரீப்பீட்டே எல்லாம் கெடையாதா? எனக்கு இன்னோரு ஆட்டம் வேணும் அண்ணாச்சி! ஆமா! சொல்லிப்புட்டேன்//
    அண்ணாச்சி.. அழுகுனி ஆட்டம் எல்லாம் கிடையாது...சொல்லிப்புட்டேன்..ஆமா...
    //சைந்தவி கூட சூப்பரா இருக்கும்!// ஆமா..ரிப்பீட்டேய்ய்

    ReplyDelete
  13. புதுப்பொலிவுடன் வரவிருக்கும் றேடியோஸ்பதிக்கு வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  14. 1. Thendrale Thendrale mellavee veesu from Kadhal Desam (Two male voices-Love-Sad )

    Comments: i was studying in college when this movie was released so i get malarum neniyugal when i listern to this song. i like the starting note of piano. The piano music will be there in between the song. one of the favourite night time melodies

    2. Thendral ennai mutham ittadhu from Oru Odai Nadiyagirathu (Duet-Love)

    Comments: First of all I like the pair Suma ranganathan with Raghuvaran. The lyrics are very different. I like the voice of the male singer. I get refreshed whenever i listern to this song.

    3. Kalai thendral padi varum from Uyarndha Ullam (Solo-Female Nature)

    Comments: i like the lyrics about the nature and the voice. Eraville natchathram irruthathey engee.. pani thuligali pullvelil viluthatho angee..

    4.Sollamal Thottum cellum Thendral from Dheena (Solo-Male Love Feelings)

    Comments: i like hariharan's voice.

    i cant take part in இசையும் கதையும் as
    i dont know to write stories. but will rea

    ReplyDelete
  15. தென்றலே தென்றலே மெல்ல நீ பேசு (காதல் தேசம்)

    ரஹ்மான் இசையில் எந்த பாடலை விட.. எந்த பாடலை எடுக்க. எல்லாமே ஒவ்வொரு தினுசா வித்தியாசமாய் கலக்கும். அவைகளில் பல பாடல்கள் சுஜாதா பாடியதாலேயே ஹிட் ஆனதும் இருக்கு. சரி அதை விடுங்க. இப்போ இந்த பாடலை கவனிப்போம். ரஹ்மான் - உன்னி கிருஷ்ணன் கூட்டணியில் உருவான முதல் பாடலே (என்னவளே அடி என்னவளே) பல அவார்ட்ஸ்களை அள்ளி குவித்தது. அதற்கு பிறகு இவங்க இரண்டு பேரின் கூட்டணியிலேயே ரொம்ப ரொம்ப அழகாக உருவான பாடல் என்றால் அது இதுதான்! இதுதான்! இதுதான்! கதாநாயகி தபு தூங்குவதுக்கு கதாநாயகர்கள் மாறி மாறி தாலாட்டு பாடுவது போல் அமைந்த பாடல். தபு மட்டும் இல்ல. தூக்கம் வராமல் கஷ்டப்படும் யாரா இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் போதும். தூக்க மாத்திரையே தேவை இல்லை. கண்டிப்பாக உங்கள் கண்களை தூக்கம் தழுவும். வயலின் வாசிச்சு மழை வந்ததோ என்னவோ.. ஆனால் இந்த பாடல் கேட்டால் கண்டிப்பாக டென்ஷன் எல்லாம் பறந்து போய் நன்றாக தூக்கம் வரும். பிரபாண்ணா, உங்களுக்குதான் சொல்றேன். இப்பவே கேளுங்க. :-)))

    பாடலின் முதல் பாகத்தை உன்னிகிருஷ்ணன் இப்படியும்:

    "இரவில் காயும் முழு நிலா எனக்கு மட்டும் சுடும் நிலா
    வாராயோ எனை நீ சேராயோ
    தூங்க வைக்கும் நிலவே தூக்கம் இன்றி நீ ஏன் வாடினாயோ"


    இரண்டாம் பாகத்தை மனோ இப்படியும்:

    "மலரின் காதல் பனிக்கு தெரியும் என் மனதின் காதல் தெரியுமா??
    சொல்ல வார்த்தை கோடி தான் உனை நேரில் கண்டால் மௌனம் ஏன்
    தூங்க வைக்க பாடினேன் நான் தூக்கம் இன்றி வாடினேன்"


    என்றும் பாடியிருப்பார். ஆஹா.. என்ன ஒரு அழகான வரிகள்! பாடல் முழுக்க வரும் பியானோ இசை. அதுக்கும் போடலாம் ஒரு சபாஷ். :-)

    ReplyDelete
  16. ஓ தென்றலே என் தோளில் சாயவா (என்றென்றும் காதல்)

    எப்போதும் கேட்கும் வரிசையில் இருக்கும் ஒரு பாடல் இது. இசை, குரல், வரிகள்.. மூன்றுமே அருமை.
    மனோஜ் பட்நாயக் இசையமைப்பாளர். இவர் தமிழில் மிக குறைவான இசைகள் கொடுத்திருந்தாலும், பல முத்துக்களை கொடுத்திருக்கிறார். பாடியவர் SP பாலா (இவரை பற்றி தனியா சொல்ல வேண்டுமா என்ன?)

    அருமையான மெலோடி பாடல். காலை, மாலை, இரவு என்று காலம் நேரம் பார்க்காமல் கேட்கலாம். அதிலும்

    "கிளிகள் காணும் நேரத்தில் மீனாட்சி ஞாபகம்
    ஆ.. ஆ.. கிளிகள் காணும் நேரத்தில் மீனாட்சி ஞாபகம்
    இரவில் நானும் பார்க்கின்றேன் நினைவில் வாட்டும் பூமுகம்
    தாய்மையின் சாயலில் உன்னிடம் பார்க்கிறேன்"

    இந்த வரிகளும், பாடும் விதமும் எப்போதுமே எனக்கு பிடித்த ஒன்று. :-)

    இப்படிக்கு,

    ஒரு அப்பாவி பொண்ணு


    (பிரபாண்ணா, வேற பேர்ல இந்த பாடல் கொடுத்திருக்கேன். இப்போ உங்க ப்ராமிஸை காப்பாற்ற நீங்க கண்டிப்பா வலை ஏற்றணும்.)

    ReplyDelete
  17. நானும் போட்டிக்கு ரெடிதான்.ஆசையாய்தான் இருக்கு.நேரம்தான்.....பார்க்கலாம்.

    ReplyDelete
  18. அப்ப இணையத்துல இன்னொரு இலங்கைவானொலின்னு சொல்லுங்கோ, கலக்கல் அண்ணன்!
    நீங்கள் தென்றல் என்று சொன்ன உடன எனக்கு இன்னொரு பாட்டு நினைவுக்கு வந்தது...
    அந்தப்பாடலும் ஊர்பாடல்களில் என் மனதை கவர்ந்த பாடல், பாடலின் இடையில் வருகிற சில வரிகள் மட்டும்...
    "நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை - நான்
    நீண்ட நேரம் காத்திருந்தேன் பதில் தரவில்லை..."
    என்ன பாட்டெண்டு சொல்லுங்கோ பாப்பம்...

    ReplyDelete
  19. நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை - நான்
    நீண்ட நேரம் காத்திருந்தேன் பதில் தரவில்லை...//

    தென்னங் கீற்றில் தென்றல் வந்து மோதும் என்
    தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்
    கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும் - அவள்
    கையில் கூட ஆயுதங்கள் ஏறும்...

    இந்தப் பாட்டை கடைசியா கேட்டு ஒரு பத்து பன்னிரண்டு வருசம். இருக்கும்.. ஆனாலும் ஒவ்வொரு வரியும் நினைவில் நிற்கின்றது. இணையத்தில் தேடி கேட்கவேணும். நன்றி தமிழன் நினைவு படுத்தியதற்கு

    ReplyDelete
  20. ஆயில்ஸ்

    லிஸ்டோட வாங்க

    தல கே.ஆர்.எஸ்

    புது ஆளுங்களுக்கு முன்னுரிமை கொடுப்போம், அடுத்து மீண்டும் வருவோம் ;-)

    சர்வேசன்

    நான் எதிர்பார்த்ததைச் சிறப்பாகச் செய்திருக்கின்றீர்கள். உங்கள் உள்குத்தை ஜி.ரா இன்னும் பார்க்கல ;-)

    கோகுலன்

    நீங்களும் இசையும் கதையும் அனுப்பலாமே?

    வெயிலான்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  21. தமிழ்பறவை

    நீங்க சொன்ன பாட்டுக்களில் ஓன்ரை எடுத்து சர்வேசன் சொன்னது மாதிரி விளக்கம் ஒன்றையும் கொடுங்களேன். சிறப்பு நேயர் பதிவுக்கும் ஆக்கத்தை எதிர்பார்க்கின்றேன்.

    ஞானராஜா

    சிறப்பான விளக்கத்தோடு வந்ததற்கு நன்றி

    ஏம்மா மைபிரண்ட்

    ஏன் இந்தக் கொல வெறி ;-) ஆனாலும் சிறப்பான விளக்கங்களோடு இருந்ததால் இரண்டும் வரும் ;-)

    ReplyDelete
  22. ஹேமா

    நேரம் ஒதுக்கி உங்கள் பதிவை அனுப்ப வேண்டுகிறேன்

    தமிழன்

    மறக்கக் கூடிய பாடலா அது.

    சயந்தன்

    வாங்கோ ;)

    ReplyDelete
  23. கடவுள் அமைத்து வைத்த மேடை என்ற படத்தில் இளையராஜாவும் , பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களும் இணைந்து பாடிய ஜோடிப் பாடல்.

    தென்றலே நீ பேசு ....
    உன் கண்களால் நீ பேசு.. என்ற பாடல்

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்....

    யாருடைய குரல் என்று இனம் பிரிக்க முடியாத அளவு இருவரது குரலும்
    ஒருமித்து ஒலிக்கும்..

    பாடலின் முதல் 77 விநாடிகள் இசையினால் மட்டுமே நிரம்பியிருக்கும்.

    கொதிக்கும் பாறையினிலும் இசையால் பூ மலரும் .... (இது எந்தப் பாட்டுன்னு தெரிதா :P)


    என்றும் அன்பகலா
    மரவண்டு

    ReplyDelete
  24. தென்றல் வந்து என்னத் தொடும்... ஆஹா சத்தமின்றி முத்தமிடும்..அழகான பாடல். K.J.ஜேசுதாஸின் மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று. இளையராஜாவின் இசையின் ஒரு தேன் சொட்டு.அந்தக் கால கட்டங்களில் நடிகர் மோகன் ஒரு கனவு நாயகன்.பாடல்களுக்கு அழகாக பாவம்-வாயசைவு கொடுக்கக் கூடிய அருமையான நடிகர்.அத்தனையும் சேர்ந்த அசத்தலான பாடல் இது. மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும், காலத்தால் எந்த வயதினரும் ரசிக்கக் கூடிய அருமையான வரிகளும் கூட.இரவின் தனிமைக்குத் துணை தரும் அமைதியான சுகமான ராகம். நடந்து போகிறாய் நீ.தென்றலா மலரா...வண்டுகள் உன் பின்னால் தொடர... வாசனை என்னை வருந்தி அழைக்கிறது.ஓ....சேலை கட்டிய பூஞ்சோலையோ நீ!!!

    ReplyDelete
  25. @ சயந்தன்...
    /
    இந்தப் பாட்டை கடைசியா கேட்டு ஒரு பத்து பன்னிரண்டு வருசம். இருக்கும்.. ஆனாலும் ஒவ்வொரு வரியும் நினைவில் நிற்கின்றது. இணையத்தில் தேடி கேட்கவேணும். நன்றி தமிழன் நினைவு படுத்தியதற்கு
    /

    @ கானா பிரபா...
    /
    தமிழன்

    மறக்கக் கூடிய பாடலா அது.
    /

    நன்றி சயந்தண்ணா...

    கானா அண்ணன்...

    ReplyDelete
  26. நண்பர் மரவண்டு மற்றும் ஹேமா

    இந்தத் தொடருக்கான எதிர்பார்ப்பு அறிந்து சிறபபான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள், பாடல்கள் அரங்கேறும்.

    இதுவரை தென்றல் என்ற அடியில் தொடங்கும் பாடல்களைத் தந்த அனைவருக்கும் நன்றி. புதிய சொல் அடுத்த பதிவில் கொடுக்கப்படும். தென்றல் என்ற பதத்திற்கான பாடல்கள் இத்தோடு ஏற்கப்பட்டு விட்டன.

    ReplyDelete
  27. எனக்கு நானே ஓ... போட்டுக்கொண்டேன்.நன்றி பிரபா.

    ReplyDelete
  28. ஸ்ரீ ராம் பார்த்தசாரதி.. 21 வயது வாலிபர்.. அவர் தந்தை..இளையராஜாவிடம் வீணை கலைஞராக பணி புரிந்தவர்..வீணை பாச்சா என்றால் பிரசித்தம்.. குறிப்பிட தக்க பாடல்கள்..வீணை துளிகளில்..(அந்தப்புரத்தில் ஒரு மகராணி.. அதில் ஆராரிரோ..என்று வரும் வீணை இசை..., மேலும், வான் மேகங்களே பாடலில் வரும் வீணை துளி பின்னணி இசை) இவரில் இசை ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கு.. அடியேனின் உறவினரும் கூட... :))

    கீ-வென்..

    ReplyDelete
  29. வாங்க கீ-வென்

    அவருக்குப் பின்னால் இப்படி ஒரு சமாச்சாரம் இருக்கா? இந்த இளவயதில் சிறப்பான பாடல்கள் அவருக்குக் கிடைத்திருக்கு. உங்க உறவினர் என்பதில் உங்களுக்கு நிச்சயம் பெருமையாக இருக்கும். நன்றி

    ReplyDelete