Pages

Monday, June 2, 2008

ராகதேவன் இளையராஜா - வருஷம் 65

யூன் 2 , 1943 இல் பண்ணைப்புரத்தில் தோன்றியது இந்த இசைக்குயில். பின்னர் தமிழ்த் திரையிசையை மட்டுமல்ல தென்னிந்திய திரையிசையும் கவர்ந்து கொண்டார் இந்த ராஜா. வட நாட்டில் வர்த்தக ரீதியான கவனத்தைப் பெறாவிட்டாலும் அந்தப் பிராந்திய மேதைகளாலும் போற்றப்பட்டவர் இந்த இசைஞானி. ஒருகாலத்தில் தமிழ் காதுகளுக்குள் ஹிந்தி ஓசை தான் ஆக்கிரமித்தபோது இந்தத் தலையெழுத்தையே மாற்றியவர் நம்ம "தல". திரையுலகிற்கு வந்து கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் தென்னிந்தியாவின் பிராந்திய மொழிகளில் தனிக்காட்டு ராஜாவாக இருந்த சாதனையாளர் இவர்.

ரஹ்மான் என்ற புயல் தொண்ணூறுகளில் அடித்தபோது, இற்றைக்கு பதினைந்து வருடங்களுக்கு முந்திய விகடனில் ஹாய் மதன் பகுதியில் வாசகர் ஒருவர் கேள்வி கேட்கிறார் இப்படி.
"இளையராஜாவின் இடத்தை ரஹ்மான் பிடித்து விட்டாரா?"
அதற்கு மதன் சொல்கிறார் இப்படி
"ராஜாவின் சிம்மாசனத்தில் ராஜா ஒருவரே தனிக்காட்டு ராஜாவாக இருந்தவர், இனி ராஜா கூட இந்த சிம்மாசனத்துக்கு மீண்டும் வரமுடியாது".
அதைத் தானே இன்றைய திரையுலக இசை உலகம் காட்டுகின்றது. ஆளாளுக்கு ஒவ்வொரு ஹிட் பட்ங்கள் கொடுத்து அவ்வப்போது தன்னை நிலை நிறுத்தும் கூட்டாட்சி தானே இன்றைய காலத்தில் இருக்கின்றது. (புகைப்படங்கள் உதவி: ராசா ரசிகன் "தல" கோபி)

"ராஜா ராஜா தான்,
நேற்று இல்லே நாளை இல்லே
நீ எப்பவுமே ராஜா"

"உன் புகழ் இன்னும் பல யுகங்கள் நிலைக்கவேண்டும்
ராகதேவனே உனக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்"


இசைஞானி இளையராஜாவின் குரலில் முத்தான மூன்று தனிப்பாடல்கள்


"பாட்டாலே பக்தி சொன்னான், பாட்டாலே புத்தி சொன்னான்" (படம்: கரகாட்டக்காரன்)



"என்னை ஒருவன் பாடச் சொன்னான், அவன் சொன்னது போல் நான் பாடுகின்றேன் (படம்: கும்பக்கரை தங்கய்யா)



"ராஜா ராஜாதி ராஜனெங்கள் ராஜா, நேற்று இல்லே நாளை இல்லே எப்பவுமே ராஜா" (படம்: அக்னி நட்சத்திரம்"


இசைஞானி இளையராஜாவின் குரலில் முத்தான மூன்று ஜோடிப்பாடல்கள்


"தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல" (படம்: அவதாரம்)



"நான் தேடும் செவ்வந்திப் பூவிது, ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது" (படம்: தர்மபத்தினி)



"ஒரு ஜீவன் அழைத்தது, ஒரு ஜீவன் துடித்தது" (படம்: கீதாஞ்சலி)


15 comments:

  1. //ராஜாவின் சிம்மாசனத்தில் ராஜா ஒருவரே தனிக்காட்டு ராஜாவாக இருந்தவர், இனி ராஜா கூட இந்த சிம்மாசனத்துக்கு மீண்டும் வரமுடியாது//

    சரியான கணிப்புத்தான் :)

    ராஜாவின் குரலில் பாடல்கள் அனைத்துமே சூப்பர் :))

    நிறைய நாட்கள் கேட்டாலும் கூட இன்னும் கேட்க தூண்டும் பாடல்கள்தான் :)

    ReplyDelete
  2. நல்ல பதிவு கானாப்ரபா....இசைஞானி என்ற பெயருக்கு ஏற்றவர் அதான் இப்படி ஒரு இசைமழை! ரசித்தேன்.

    ReplyDelete
  3. //ஆயில்யன் said...
    நிறைய நாட்கள் கேட்டாலும் கூட இன்னும் கேட்க தூண்டும் பாடல்கள்தான் :)//

    வருகைக்கு நன்றி ஆயில்யன்

    ReplyDelete
  4. மேஸ்ட்ரோவின் பி.நாளை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி கானாபிரபா.. எனது வாழ்த்தையும் சொல்லிவிடுவீங்களா? :)

    //"ராஜாவின் சிம்மாசனத்தில் ராஜா ஒருவரே தனிக்காட்டு ராஜாவாக இருந்தவர், இனி ராஜா கூட இந்த சிம்மாசனத்துக்கு மீண்டும் வரமுடியாது".//

    மிக யதார்த்தமான வரிகள்..!

    கும்பக்கரை தங்கய்யாவா..?! - இன்று தான் கேள்விப்படுகிறேன் படத்தையும் பாடலையும். நல்ல பாட்டு.

    பதிவை scroll பண்ணிக்கொண்டே வரும்போது ஜெனனி.. ஜெனனியைக் கட்டாயம் எதிர்பார்த்தேன். காணவில்லையே..!?

    ReplyDelete
  5. ராஜா ராஜா தான்,
    நேற்று இல்லே நாளை இல்லே
    நீ எப்பவுமே ராஜா"

    "உன் புகழ் இன்னும் பல யுகங்கள் நிலைக்கவேண்டும்
    ராகதேவனே உனக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்" //

    நானும் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  6. வருகைக்கும் பாடல்களை ரசித்தமைக்கும் நன்றிகள் ஷைலஜா

    ReplyDelete
  7. பாட்டும், பதிவும் அருமை.. ஆனால் தலயோட இரண்டு படங்கள் தான் மிகவும் அருமையா இருந்தது.. 'எப்பவும் ராஜா நான்'ன்னு சொல்லாம சொல்லுது.('தல'கோபிக்கு நன்றிகள்)...

    ReplyDelete
  8. கோகுலன்

    ஜனனி ஜனனி அதிகம் வலைப்பதிவுகளில் நடமாடும் பாடல் எனவே தவிர்த்துவிட்டேன். கும்பக்கரை தங்கய்யா, கங்கை அமரன் இயக்கத்தில் வந்தது.


    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நாயக்கர் மஹால். உங்க ஊருக்கு பக்கத்து ஊர் தானே நம்ம ராஜா.

    தமிழ்பறவை

    இந்த முறை எந்த சேதாரமும் இல்லாம உங்க பின்னூட்டம் வந்திடுச்சு ;) தல கோபி ஒரு நடமாடும் ராஜா ஆல்பம்.

    ReplyDelete
  9. மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)

    \\"ராஜாவின் சிம்மாசனத்தில் ராஜா ஒருவரே தனிக்காட்டு ராஜாவாக இருந்தவர், இனி ராஜா கூட இந்த சிம்மாசனத்துக்கு மீண்டும் வரமுடியாது". \\

    உண்மையிலும் உண்மை ;)

    ராஜாவின் இடத்தை அவர்களின் பிள்ளைகளாலும் கூட பிடிக்க முடியாது.

    \\"ராஜா ராஜா தான்,
    நேற்று இல்லே நாளை இல்லே
    நீ எப்பவுமே ராஜா" \\

    இப்பவும் எப்பவும் ராஜா...ராஜா தான் ;))
    பாடல்கள் ஒவ்வொன்றும் கலக்கல் தல....;)
    பதிவுக்கு மிக்க நன்றி ;)

    ReplyDelete
  10. தல

    இந்த பதிவை பாருங்கள் ;)

    உன் இசை மீது ஒரு காதல்
    http://ninaivellam.blogspot.com/2008/06/blog-post_02.html

    ;)

    ReplyDelete
  11. "தென்றல் வந்து தீண்டும்போது"gets me to a whole different world everytime i hear it!!
    Love it!!

    கும்பக்கரை தங்கையாவில் "தென்றல் காற்றே" பாட்டு எனக்கு மிகவும் பிடித்தமானது!!!
    பதிவுக்கு நன்றி அண்ணாச்சி!! :-)

    ReplyDelete
  12. மேலே போட்டிருக்க படங்கள் எல்லாம் நான் பார்த்ததே இல்லை.. என்ன ஒரு ஸ்டைல்...

    ReplyDelete
  13. //கோபிநாத் said...
    இப்பவும் எப்பவும் ராஜா...ராஜா தான் ;))
    பாடல்கள் ஒவ்வொன்றும் கலக்கல் தல....;)
    பதிவுக்கு மிக்க நன்றி ;)//

    நன்றி தல

    //CVR said...
    "தென்றல் வந்து தீண்டும்போது"gets me to a whole different world everytime i hear it!!
    Love it!!//

    காமிரா கவிஞரே

    ரொம்ப நாளைக்கு அப்புறம் தென்றலா வந்திருக்கீங்க வாங்க ;-)

    //கயல்விழி முத்துலெட்சுமி said...
    மேலே போட்டிருக்க படங்கள் எல்லாம் நான் பார்த்ததே இல்லை.. என்ன ஒரு ஸ்டைல்//

    எல்லாம் நம்ம தல கோபியின் கைங்கர்யம் தான் ;-)

    ReplyDelete
  14. என்ன தான் அவர் இசைத்துறையில் வானளவு சாதித்து இருந்தாலும், அவர் கால கட்ட ஆட்கள்.. குறிப்பாக அவருடன் இருந்த இசைக்க் கலைஞர்கள் சிலபேர் (வயலின் கலியாணம், வீணை பாச்சா , வயலின் ராஜா, வயலின் சுப்ரமணியம் ஏனைய பலர்) அவரின் செய்நன்றி மறந்த குணத்தை குறிப்பிட்டு காட்டுகிறார்கள்.. ( நான் சமீபத்தில் சந்தித்த பொது..) இதை எல்லாம் பார்க்கும் பொது இசைஞானிக்கும் ஒரு டார்க் சைடு (இருண்ட பக்கம்) இருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது..

    பின் குறிப்பு : நான் அவரிடம் பணியாற்றியவன்.. எனக்கு அவர் மேல் தனி மரியாதையும் மதிப்பும் உண்டு.. :))

    ReplyDelete
  15. வாங்க நண்பா

    இசைத்துறையில் அவர் ஒரு மகான், ஆனால் நீங்கள் குறிப்பிட்டவாறு வேறு சில சம்பவங்களிலும் இப்படி நடந்து கொள்வது சராசரி மனிதனின் சுபாவத்தைக் காட்டுகிறது. அவர் ஒரு சகாப்தம் என்பதால் அவரின் குறையைக் கூட ஏற்க கஷ்டமாயிருக்கு.

    ReplyDelete