Pages

Thursday, May 22, 2008

றேடியோஸ்பதியின் சிறப்பு நேயர் ஷைலஜா


கடந்த வாரம் சர்வே மன்னரின் பதிவு வந்தாலும் வந்தது அதன் புண்ணியத்தில் சர்வேசர் ஒரு வாக்கெடுப்புப் பதிவும், ஜி.ரா ஒரு சுசிலா - ஜானகி கதம்பமாலைப் பதிவும் இட்டு விட்டார்கள். ஆக ஒன்று மூன்றாகியது ;-)

சரி, இந்த வாரம் வலம் வரும் சிறப்பு நேயர் யாரென்று பார்ப்போம். இந்த வார சிறப்பு நேயர் ஒரு வானொலிப் படைப்பாளியும் கூட. அதனாலோ என்னவோ சற்று வத்தியாசமாகத் தன் தேர்வுகளைப் பாடி, அப்பாடல்களைச் சிலாகித்து ஒலி வழி தந்திருக்கின்றார். அவர் தான் கர்நாடகாவில் இருந்து சைலஜா.


எண்ணிய முடிதல் வேண்டும் என்பது இவரின் தனித்துவமான வலைத் தளமாகும். கூடவே கண்ணன் பாட்டு, தமிழ்ச் சங்கம் போன்ற கூட்டு வலைப்பதிவுகளிலும் எழுதி வருகின்றார். வலைப்பதிவில் கவிதை, கட்டுரை என்று படைத்து வரும் இவர் தன் குரலில் திரையிசைப்பாடல்களையும் பாடி நேயர் விருப்பம் போன்ற பகுதிகளுக்கு அளித்து வருகின்றார்.தமிழின் சிறப்பைத் தன் பதிவுகளில் இட்டு வரும் இவரின் படைப்பு ஒரு எட்டு பார்த்து விட்டுத் தான் வாருங்களேன்.

தொடந்து சைலஜா படைக்கும் குரல் வழிச் சிலாகிப்பும் முத்தான பாட்டிசையும் கேட்போம்.

"அத்திக்காய் பாடலுக்கு" (படம்: பலே பாண்டியா) இத்திக்காய் ஷைலஜாவிடமிருந்து சிறு விளக்கம்.கண்ணதாசனின்
கற்பனை வளம் தமிழின் அழகு ஆளுமை எல்லாம் இப்பாடலில் தெரியவருகிறது...

இரண்டு தம்பதிகள் நிலவை நோக்கிப்பாடுவதான பாடலிது

முதல் ஜோடி சொல்வது ஆண்...முதல் வரி நிலாவுக்கு

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணீலவே

அத்திக்காய் ஆலங்காய் போல தன் வெண்ணிலாமுகக்காதலி கோபத்தில் சிவந்திருக்கிறாள்
என்றும் அர்த்தம் கொள்ளலாம்

அந்த திசை நோக்கி ஒளிவீசு நிலவே (ஏனெனில்
இந்தப்பெண்ணுக்கு நீ என்னைப்பார்ப்பதாய் லேசாய் பொறாமை!)

ஆல் போல பலகாலமாய் வானில்வாழும் வெண்ணிலவே (இப்படியும் சொல்லலாம்)

2ஆம் வரி தன்னருகில் நிற்பவளுக்கு

இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
இந்த திசையில் கடிந்துகொள்ளாதே பெண்ணே என் உயிரே நீதானே?


பெண்---

கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்

இந்தப்பெண் உனீது ஆசைகொண்ட காதல்கொண்ட பாவை இப்போது கோபமாக
இருக்கிறாள்(பாகற்காய் கசப்பினை கோபமாகக்கொள்ளலாம்)

அங்கே

காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய்
அங்கே திட்டு அவரைத் திட்டு மங்கையான எந்தன் மன்னனை(கோ) திட்டு

ஆண்..
மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காய் ஆகுமோ
மாதுளம்பழம் வெளியே காய்போல முரடாக இருக்கும்(உள்ளே பழம் முத்துக்களாய்)
பெண்ணே(மாது) உன் உள்ளம் காய் ஆனாலும் என் உள்ளம் காய் ஆகுமோ?
இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
இரவு காய் ஆனது உறவு காய் ஆனது அதற்கு ஏங்கும் இந்த ஏழையை நீ திட்டு


இரவுக்காக உறவுக்காக ஏங்குகின்ற இந்த ஏழைக்காக
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்
நீயும் திட்டு தினமும் திட்டு(எல்லாம்) நேர்ல நிற்கிற இவளால்
நீயும் ஒளிவீசு நிதமும் ஒளிவீசு நேரில் நிற்கும் இவள் மீது ஒளிவீசு
பெண்-
-உறவும் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ
கோபத்துல உறவு இப்போ காய் மாதிரி இருந்தாலும் என் பருவம் கனிந்ததல்லவா
அதுஇவரைக்கடிந்துகொள்ள அனுமதிக்குமா?


என்னை நீ காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ?
என்னை நீ திட்டாதே நீயும் என்மாதிரி பெணல்லவா?
(நிலா சூரியனிடமிருந்து ஒளி பெறுவதுபோல் பெண் தன் கணவனின் மதிப்பினால்
ஒளிவீசுகிறாள் எனும் உள் அர்த்தம்!)
ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஏல வாசனைப்போல எங்கள் மனசு வாழ நீ ஒளிவீசு
(இதில்
இன்னொரு பொருள் இருக்கலாம் யாராவது விளக்குங்க)
ஜாதிக்காய் கெட்டது போல் தனிமை இனபம்கனியக்காய்
ஜாதிகளை ஒழித்ததுபோல் எங்களிடையே உள்ள பிரசசினைதீர்த்து தனிமையின் இனபம் கனிய
ஒளிவீசு


(ஜாதிக்காய் கெட்டாலும் மணம்வீசும் அந்த மணம் போல தனிமையில் இன்பம்
மணக்கட்டும் என இருக்கலாம்)


இரண்டாவது ஜோடி
ஆண்
சொன்னதெல்லாம் விளங்காயோ தூது வழங்காய் வெண்ணீலா
இவ்ளொ நேரம் சொன்னதெல்லாம் புரிஞ்சுதா போய் அவகிட்ட தூது சொல்லிவிளக்கு
சொன்னதெல்லாம் விளாங்காய் மாதிரி மேல் ஓடு கடினமானாலும் உள்ளே
கனிவானதுதான் (தூதுவழங்காய் ஏதோ மருத்துவ செடி?)


உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைத்தாயோ
உள்ளம் என்ன காரமான மிள்காயா அதான் ஒவ்வொருபேச்சும் உரைப்பா?(காரமா)

உள்ளம் எல்லாம் இளகாதா உன் ஒவ்வொரு பேச்சும் உரைநடைமாதீரி இருக்கிறதே(ஐஸ் ஐஸ்!)
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே நீ சிரித்தாயே
பெண் சிரிப்பு பிளந்த வெள்ளரி நிலவும் அப்படியாம்(இது எனக்கு சரியாய் புரியல)
கோதையெனைக்காயாதே கொற்றவரங்காய் வெண்ணீலா
கோதை என்னைதிட்டாதே கொற்றவர் (என் மன்னர்)அங்கே அவரைத்திட்டு வெண்ணிலா


கோதை என்மேல ஒளிவீசாதே நீ மெலிந்து கொத்தவரங்காய் ஆன வெண்ணீலா(கிண்டல்)


இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா
எங்க இருவரையும் திட்டாதே போய் தனிமையில் போய் ஏங்கிக்கொள்
இருவர் மேலயும் ஒளிவீசவேண்டாம் தனிமையிலே போய் ஒளிவீசிக்கொள்


(அதாவது ஜோடிகள் சமாதானம் ஆகிவிட்டார்கள் நிலாவுக்கு டாட்டா
சொல்லிவிட்டார்கள்

சைலஜாவின் குரலில் பாடல் அறிமுகம்

பாடலைக் கேட்க
-------------------------------

"ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி" (படம்: மகாநதி)
வாலியின் அற்புதப்பாடல் இது
பிறந்து வளர்ந்த ஊர் என்பதால் இந்தப்பாடல் என்னை கேட்கும் போதெல்லாம் அங்கு கொண்டு செல்லும். எளிமையான அர்த்தம் கொண்ட அழகான பாடல்!


சைலஜாவின் குரலில் பாடல் அறிமுகம்

பாடலைக் கேட்க


-------------------------------

"அலைபாயுதே கண்ணா" அலைபாயுதே படத்தில் வரும் இந்தப்பாடல் எனது 3வது தேர்வு. கனடாராகத்தில் அமைந்த பாடல் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் எழுதியது
ஒரு பெண்ணின் மனநிலையை இதைவிட அருமையாய் சொல்லவும் முடியுமோ?


தனித்த மனத்தில் உருக்கி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்த வா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா!
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழல் எனக்களித்தவா!
கதறி மனமுருகி நான் அழைக்கவா
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ? இது முறையோ?
இது தருமம் தானோ?


என்னும்போது கண்ணன் ஓடி வந்துவிடக்கூடாதோ என்று இருக்கிறது.
இந்தப்பாடல் பெண்களுக்குப்பெரும்பாலும் ஆண்களுக்கும் பிடித்திருக்கும்!!


சைலஜாவின் குரலில் பாடல் அறிமுகம்

பாடலைக் கேட்க


------------------------------------
"பொய் சொல்லக் கூடாது காதலி" ரன் படத்தின் இந்தப்பாடல் ஹரிஹரனின் குரலில் கேட்டிருக்கீங்களா?
வார்த்தைகளை அனுபவிச்சி பாடி இருப்பார். பொய்சொன்னாலும் நீயே என் காதலி என்கிற அளவுக்கு உயர்ந்த காதல்! கண்மூடி தேடினால் காதலி கனவில் தித்திக்கிறாளாம்! ஆஹா பாடல் எழுதியவரைப் பாராட்டுவதா பாடியவரையா இசை அமைத்தவைரையா?
ஒன்றும் வேண்டாம் இப்போ அமைதியா கண்மூடி இந்தப்பாட்டைக் கேட்கலாமா?!

சைலஜாவின் குரலில் பாடல் அறிமுகம்

பாடலைக் கேட்க


------------------------------

"உருகுதே மருகுதே"பாடல் வெய்யில் படத்திலிருந்து
இதற்கு உருகாத மருகாத மனமும் இருக்குமா?
படம் வெய்யில் ஆனால் பாடல் மழை ஆமா கானமழை!

சைலஜாவின் குரலில் பாடல் அறிமுகம்

பாடலைக் கேட்க

56 comments:

  1. இத்திக்காய் ஷைலஜாவிடமிருந்து சிறு விளக்கம்.//

    இது சிறு விளக்கமா!!!!! :))))

    பாடல் தெரிவுகள் சூப்பர்.

    ReplyDelete
  2. பாட்டுகளெல்லாம் இனிமையானவை. சைலஜா அக்காவுக்கு அற்புதமான குரல்வளம்.... :)

    ReplyDelete
  3. ஆஹா ஷைலஜா அக்கா,
    இன்னிக்கு நீங்களா?
    ரேடியோஸ்பதியில் புதுமைப் புரட்சி ஒண்ணு செஞ்சுட்டீங்களே (வழமையா சமையல்ல செய்வீங்கன்னு யாரோ சொல்றது காதுல விழுது :P )

    எப்படிங்க ஸ்ரேயா கோஷலைப் புடிச்சு உங்க பாடலுக்கான அறிமுகங்கள வாசிக்கக் கொடுத்தீங்க?
    ரொம்ப அழகா,அட்சர சுத்தமான,இனிமையான குரல்பா.. :)

    அப்புறம் என்னோட தேர்வுகள் கடைசியிலிருந்து ஒண்ணு வரைதான். (5 - 1 ஏன்னா... வயசு அப்படி :P )

    உருகுதே மருகுதே பாட்டுல பாருங்க..
    உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவான்னு உருகிப் பாடற ஷ்ரேயாவின் குரல் மை.பா.மாதிரி எவ்வளவு இனிமையா இருக்கு?

    பொய் சொல்லக் கூடாது காதலின்னு காதலோடு பாடற ஹரிஹரன் குரல் மை.பா. மாதிரி எவ்வளவு கனமா,அழகா இருக்கு பார்த்தீங்களா?

    அப்புறம் அலைபாயுதே பாட்டு டீவியில போகும்போது ஓடிப்போய்ப் பார்ப்பேன்.
    அதுல பார்த்தீங்கன்னா,ஷாலினி மை.பா. தட்டை ஏந்தி,எல்லோருக்கும் கொடுத்துக்கிட்டே பாடுவாங்க..கவனிச்சீங்களா? :P
    பாட்டைப் போல அதுவும் அழகுதானே?

    அப்புறம் மகாநதி ஷோபனா பாட்டு ரொம்ப அருமை.ஸ்ரீரங்கத்து தேவதையொண்ணு கர்நாடகம் போனதை சந்தடிசாக்குல சொல்லிட்டீங்களே.. :)

    அடடா..அத்திக்காய் காய் காய்..பாட்டுக்கு இப்படியொரு விளக்கம் இருக்கிறது எனக்கு இன்னிக்குத்தான் தெரியும்பா.
    ரொம்ப அழகா வரிகளை விளக்கியிருக்கீங்க.

    ரொம்ப அழகான தெரிவுகள்.. :)
    வாழ்த்துக்கள்பா...!

    (சீக்கிரமே ஏ.ஆர்.ரஹ்மானை மீட் பண்ணுங்க..புதுப்படத்துல பாட சான்ஸ் நிச்சயம்...)

    ஷைலஜா அக்கா குரல்பதிவோட தெரிவுகளைத் தந்தமைக்கு நன்றி நண்பர் கானாபிரபா :)

    ReplyDelete
  4. தெரிவு செய்த அனைத்துப்பாடல்களும் அருமை.

    குறிப்பாக

    அலைபாயுதே கண்ணா எனக்கு மிகவும் பிடித்தப் பாடல்.

    நன்றி.

    ReplyDelete
  5. Super song selections.

    Shylaja akka voice is so sweet.

    ReplyDelete
  6. ஓ..ஷைல்ஸ் அக்காவா இன்னிக்கி!
    இருங்க வாரேன்! ஒவ்வொரு பாட்டா அடிச்சி ஆட வேண்டியது தான்! :-)

    ReplyDelete
  7. பாடல் தெரிவு சூப்பருங்க.. கானாபிரபா ஷைலஜா பேர் படிச்சதும் நம்ம தலயோட தங்கையை பேட்டி எடுத்து போட்டிருக்கீங்கன்னு நினைச்சுட்டேன். நல்ல குரல் வளம் ஷைலஜாவிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. நல்ல தெரிவுகள் ஷைலஜா. அத்திக்காய் பாடல்பற்றி திரு.சம்பத்குமாரும் பி.பி.சியின்பாட்டொன்று கேட்டேன் நிகழ்ச்சியின்போது விளக்கியிருந்தார். வெயில் பட பாடலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் ஷைலஜா! இருங்க முழுக்கப் படிச்சிட்டு கேட்டுட்டு திரும்ப வரேன்! :)

    ReplyDelete
  10. ஷைலஜா, உங்க குரலைப் பாடி இப்பதான் கேட்கிறேன். தேன் சொட்டுதே! :) ரொம்ப இனிமை. அருமையான பாடல்களா தெரிவு செய்திருக்கீங்க. அத்திக்காய் பாட்டு விளக்கம் நன்று. எனக்கும் பிடித்த பாடல்(கள்). ரிஷானுக்கு 5-1 ன்னா, எனக்கு 1-5 தான் :) காரணம் மட்டும் அதே! :)

    தூதுவளைதான் மருந்து. வேற மாதிரி கேள்விப்பட்டதில்லை.

    //பெண் சிரிப்பு பிளந்த வெள்ளரி நிலவும் அப்படியாம்(இது எனக்கு சரியாய் புரியல) //

    நிலவும் பளிச்சுன்னு வெள்ளையா இருக்கே. அதுக்காக சொல்லியிருக்கலாம். ஆனா என்னைக் கண்டுக்காதீங்க. எனக்கு ஒண்ண்ண்ணுமே தெரியாது :)

    மீண்டும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. ரிஷானின் பின்னூட்டம் மைபா போல இனிப்பு!!!! கருத்து சொன்ன மங்களூர் சிவா புதுகைதென்றல் தமிழ்ப்ரியன் கோவை ரவி கோகுலன் மஞ்சூர்ராசா
    அனைவர்க்கும் மிக்க நன்றி. என் செல்லத்தம்பி ரவியே வருக! மேலான விமர்சனம் தருக!!!!!

    ReplyDelete
  12. //வலைப்பதிவில் கவிதை, கட்டுரை என்று படைத்து வரும் இவர் தன் குரலில் திரையிசைப்பாடல்களையும் பாடி நேயர் விருப்பம் போன்ற பகுதிகளுக்கு அளித்து வருகின்றார்//

    காபி அண்ணாச்சி எங்க ஷைல்ஸ் அக்கா பற்றிச் சொன்னது Tip of the Iceberg தான்! :-)

    ஷைலஜா, ஆனந்த விகடனில் பரிசு பெற்ற கதைகளை எழுதி உள்ளாங்க!
    தமிழ் சிஃபியில் தனியாக ஒரு ஒலிப்பந்தல், கவிப்பந்தலே நடத்துறாங்க!
    முத்தமிழ், நம்பிக்கை குழுமத்துல கலக்குவாங்க!
    மக்கள் தொலைக்காட்சி மற்றும் இன்னும் பல நிகழ்ச்சிகளில் விவாதம்/கருத்தாய்வில் கலந்துப்பாங்க!

    இதை எல்லாம் எப்படி உங்க இன்ட்ரோவில் சொல்லாமப் போகலாம் அண்ணாச்சி?
    அட்லீஸ்ட் நண்பர்களுக்கு எல்லாம் அல்வா கொடுப்பாங்க! சாரி மைசூர் பாக்கு கொடுப்பாங்க! அதை மறக்காமச் சொல்லணும்-ல!

    காபி அண்ணாச்சிக்கு கண்டனமோ கண்டனங்கள்! இருங்க சர்வேசனைக் கூட்டியாரேன்! அப்ப தான் சரி படுவீங்க! :-))

    ReplyDelete
  13. ஷைல்ஸ் அக்கா இந்த முறை நான் பெங்களூர் போன போது, பதிவர் சந்திப்பில் அத்திக்காய் காய் காய் பாட்டை எனக்குன்னே பாடிக் காட்டினாங்க! அவங்க மோஸ்ட் ஃபேவரிட் பாடல்! எனக்கும் தான்!

    //ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்

    ஏல வாசனைப்போல எங்கள் மனசு வாழ நீ ஒளிவீசு (இதில்
    இன்னொரு பொருள் இருக்கலாம் யாராவது விளக்குங்க)//

    இதுல ரெண்டு சுவை இருக்கு!
    மொதல்ல ஏலக்காய்!

    பொதுவா கனி தான் மணம் வீசும்! காய் அவ்வளவா வீசாது! பலாக்காய்க்கு வாசம் இல்ல! ஆனா காய் கனிஞ்சா ஊருக்கே வாசம் வீசும்!
    ஆனாப் பாருங்க! ஏலக்காய் அப்படி அல்ல! காய் தான்! ஆனால் அதன் மணமே தனி!

    அது போலத் தான் காதலர் மனசும்! என்ன தான் காதலர் மனசு காயா இருந்தாலும் பழுத்து இருந்தாலும் ஏலக்காய் போலக் காதல் வாசம் வீசிக்கிட்டே தான் இருக்கும் :-)
    ஏலக்காயைப் பொடிக்கப் பொடிக்க வாசம் இன்னும் வீசும்!
    காதலில் காய் விடக் காய் விட (ஊடல்),பாசம் இன்னும் வீசும்! :-)

    ரெண்டாவது வாழக்காய்

    வாழக்காய் குலை தள்ளும் போது பாத்து இருக்கீங்களா?
    ஒரே ஒரு முறை தான் குலை தள்ளும்! அது போலத் தான் காதல் உள்ளமும்!
    ஆழ்ந்த காதல் ஒரு முறை தான் குலை தள்ளும்! உள்ளத்தைப் பறி கொடுக்கும்! ஒருவருக்குக் கொடுத்தது கொடுத்தது தான்! :-)
    அதான் எங்கள் உள்ளம் வாழக்காய்-ன்னு சொல்லறான் காதலன்! :-))

    ReplyDelete
  14. வாழைக்காய் குலை தள்ளுவது பற்றி இன்னோரு தகவல்!

    27வது இலை தோன்றிய பிறகு தான் மரம் குலை தள்ளும். அதுக்கப்புறம் 28வது இலை ஒன்னு வரும்! அது
    முழுமையாக இல்லாமல் குலையை மறைத்தவாறு கீழ் நோக்கி இருக்கும்!

    மத்த இலைகள் மேல் நோக்கி நமக்கு அமைந்தாலும் தான் ஈன்ற
    குலையைப் பாதுகாக்க அந்த 28வது இலை! அதை வெட்ட மாட்டாங்க! அட என்னா தான் சொல்லுங்க வாழை மரம் வாழை மரம் தாங்க!
    ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னா எங்கூரு வாழைப்பந்தல் கிராமம்! ஹிஹி :-))))

    ஷைல்ஸ், நீங்க எதிர்பார்த்த வெளக்கஞ் சரியா?

    ReplyDelete
  15. ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி = சூப்பர் பாடல்...என்னடா ஷைலு சொல்லாம விடுவாங்களோ-ன்னு பார்த்தேன்!

    மக்களே
    நம்ம ஷைலஜாவுக்கு இன்னொரு புனைப்பெயர் திருவரங்கப்ரியா


    பாடகி ஷோபனாவை, மகாநதி ஷோபானாவாக ஆக்கிய பாட்டு! SPB magical voice! அருமையான வாலி வரிகள். சொந்த ஊர்ஸ் பாசத்துல அப்படியே தமிழை ஊற்றித் தந்திருக்கிறார்!
    இசையில் இளையராஜாவும் பின்னி இருப்பார். அதுவும் வீணை பிட் ஒன்னு வரும்!
    கோவில் தூண்களை அப்படியே பாஸ்ட் மோஷனில் காட்டுவார்கள்! அப்போது ஒலிக்கும் வீணையை, கொஞ்சம் நிறுத்தி, இன்னொரு முறை கேட்டுப் பாருங்கள்!

    அலைபாயுதே கண்ணா = ரகுமான் போட்ட பீட்டு, கர்நாடிக் பாட்டை அப்பிடேயே தூக்கிச் சாப்டுரிச்சி! :-)
    எனக்கும் ரகுமான் பிட்டு, பீட்டு தான் பிடிக்கும்! டிரம்ஸ் கலக்கலா இருக்கும்! ஊத்துக்காடு நெனச்சி கூடப் பாத்திருக்க மாட்டாரு! தன் பாட்டுக்கு டிரம்ஸ் அடிப்பாய்ங்க-ன்னு! :-))

    //இந்தப்பாடல் பெண்களுக்குப் பெரும்பாலும் ஆண்களுக்கும் பிடித்திருக்கும்!!//

    கதறி மனமுருகி நான் அழைக்கவோ = இது பிடிக்கும்!

    இதர மாதருடன் நீ களிக்கவோ = இது தான் கொஞ்சம் பிடிக்காது! ஹா ஹா ஹா!

    பொய் சொல்லக் கூடாது காதலி = சூப்பர் பாட்டு! ஹரிஹரன்-னா சும்மாவா? வித்யாசாகர்...வேர் ஆர் யூ?

    பொய் ஒன்றே ஒப்பித்தால் ஐயைய்யோ தப்பித்தால்
    கண்மூடித் தேடத் தான்
    கனவெங்கும் தித்திப்பாய்

    இத அப்படியே ஆபீசில் மாத்திப் பாடுவேன்! பொய் சொல்லக் கூடாது dash dash!ன்னு :-))))

    உருகுதே மருகுதே = ஸ்ரேயா கோஷலா? சங்கர் மகாதேவனா? யார் இதுல கலக்கி இருப்பாங்க? சொல்லுங்க சொல்லுங்க!

    ஷைல்ஸ் - றேடியோஸ்பதியில் ஒலிப்பந்தல் அருமை அருமை!
    நன்றி - ஃப்ரம் மாதவிப்பந்தல் ஃபரம் வாழைப்பந்தல் :-)

    ReplyDelete
  16. அறிமுகத்துடனான பாடல்கள் தேர்வு அசத்தல்:)))

    எனக்கு ரொம்பபிடிச்ச ஸ்ரீ ரங்க ரங்க நாதன்

    இருக்கேஏஏஏ :)))

    ReplyDelete
  17. உருகுதே மருகுதே பாடல் தேர்வுக்கும் நன்றி!
    நன்றி
    நன்றி

    ஸ்ரேயா கோஷல் நற்பனி(ணி) மன்றத்தின் சார்பாக.....:)

    ReplyDelete
  18. Puthiya Muyarchi!

    Padalkal een piditathu enpathai unarchipurvama Ungal Kural Molam velipaduthiyatharku Nandri.

    Iniya kural.

    Nandri

    -Karthikeyan

    ReplyDelete
  19. //ஷைலஜா, ஆனந்த விகடனில் பரிசு பெற்ற கதைகளை எழுதி உள்ளாங்க!
    தமிழ் சிஃபியில் தனியாக ஒரு ஒலிப்பந்தல், கவிப்பந்தலே நடத்துறாங்க!
    முத்தமிழ், நம்பிக்கை குழுமத்துல கலக்குவாங்க!
    மக்கள் தொலைக்காட்சி மற்றும் இன்னும் பல நிகழ்ச்சிகளில் விவாதம்/கருத்தாய்வில் கலந்துப்பாங்க!//

    திருவரங்கப்ரியா பத்தி தெரியாத செய்திகளைத் தெரிய வச்சு, வழக்கம் போலக் கலக்கியிருக்கும் கண்ணபிரான் வாழ்க!

    ReplyDelete
  20. 22, 2008 11:03 PM
    கவிநயா said...
    ஷைலஜா, உங்க குரலைப் பாடி இப்பதான் கேட்கிறேன். தேன் சொட்டுதே! :) ரொம்ப இனிமை. அருமையான பாடல்களா தெரிவு செய்திருக்கீங்க. அத்திக்காய் பாட்டு விளக்கம் நன்று. எனக்கும் பிடித்த பாடல்(கள்). ரிஷானுக்கு 5-1 ன்னா, எனக்கு 1-5 தான் :) காரணம் மட்டும் அதே! :)>


    நன்றிகவிநயா!

    தூதுவளைதான் மருந்து. வேற மாதிரி கேள்விப்பட்டதில்லை.

    //பெண் சிரிப்பு பிளந்த வெள்ளரி நிலவும் அப்படியாம்(இது எனக்கு சரியாய் புரியல) //

    >>>>>>>>வெள்ளரி பிளந்தால் சின்னசின்ன விதைகளோடு அழகாயிருக்கும் அதை சொல்லி இருக்கலாம் யார்கண்டார்கள் கவிப்பார்வையே அலாதி இல்லையா கவிநயா?:) நிலவைபெண்ணோடு ஒப்பிடுகிறார்கள் அது பொதுவாய் அதன் -ஒளி =வெண்மை அதை பெண்ணின் சிரிப்புக்காய் இருக்கலாம் என தோன்றியது>>>>>>>.


    //
    நிலவும் பளிச்சுனு வெள்ளையா இருக்கே. அதுக்காக சொல்லியிருக்கலாம். ஆனா என்னைக் கண்டுக்காதீங்க. எனக்கு ஒண்ண்ண்ணுமே தெரியாது :)

    மீண்டும் வாழ்த்துக்கள்//


    நாட்டிய தாரகை, கவிதாயினி இப்படியா சொல்வது?:) உங்களுக்கு என்னல்லாம் தெரியும்னு எனக்குத்தெரியும் கவிநயா என்னும் அடக்கத்தின் மறு உருவமே! நன்றிம்மா கருத்துக்கு!

    ReplyDelete
  21. Karthikeyan said...
    Puthiya Muyarchi!

    Padalkal een piditathu enpathai unarchipurvama Ungal Kural Molam velipaduthiyatharku Nandri.

    Iniya kural>>>>>>>>>







    thanks kaarthikeyan!

    ReplyDelete
  22. கண்ணபிரான் ரவிசங்கரின் அருமையான பின்னூட்ட விமர்சனத்திற்கு வீட்ல டிபன் வேலை முடிச்சி வந்து என் பதிலை இடுகிறேன்!

    ReplyDelete
  23. உங்களுக்கு நல்ல குரல் வளம் அக்கா...

    ReplyDelete
  24. தேர்வு செய்த பாடல்கள் அருமை!

    அவற்றை விடவும் ஷைலஜா அக்கா அவர்களின் குரல் வழி அறிமுகம் மிகவும் அருமை!

    ReplyDelete
  25. உருகுதே மருகுதே ஒரு மாதிரி உருகுகிற பாடல் எனக்கு னெக்கும் ரொம்பப்பிடிக்கும் அலைபாயுதே கண்ணாவும் பிடித்த பாடல் இந்தப்பாடலை கேட்டாலோ அல்லது பார்த்தாலோ கூடப்படித்த பெண்களையும்(இந்தப்பாடல் பாடப்படாத பள்ளிக்கூட விழாக்கள் அரிது அப்படித்தானே பிரபா அண்ணன்) சில பல நிகழ்வுகளும் நினைவில் வந்து போகும்...

    ReplyDelete
  26. நல்ல தெரிவுகள்.

    பொய் சொல்லக் கூடாது பாட்டை நானும், VSKம், ஷைலஜாவின் விருப்பத்திற்காக பாடியுள்ளது இங்கே :)
    http://neyarviruppam.blogspot.com/2007/02/3.html

    (எல்லாம் ஒரு வெளம்பரம்தேன்)

    ReplyDelete
  27. நல்ல்லதொரு பாடகியின் சிறந்த பாடல்களை இட்டு வளமை ஆக்கியிருக்கிறீர்கள்!

    பொய் சொல்லக்கூடாது கண்மணி .... நானும் பாடி இருக்கிறேன்!

    சர்வேசன் சொன்னதுபோல, 'எல்லாம் ஒரு விளம்பரந்தேன்!'

    அடுத்த முறை எங்களைக் கூப்பிட மாட்டீங்களா என்ன?!!!!:))))

    ReplyDelete
  28. ஆயில்யன். said...
    அறிமுகத்துடனான பாடல்கள் தேர்வு அசத்தல்:)))

    எனக்கு ரொம்பபிடிச்ச ஸ்ரீ ரங்க ரங்க நாதன்

    இருக்கேஏஏஏ :>>>>வாங்க ஆயில்யன்! உங்களுக்கும் பிடிக்குமா இந்தபாட்டு? அரங்கனைப்பற்றி என்ன பாடினாலும் யார்பாடினாலும் இனிக்கத்தான் செய்கிறது இல்லையா? நன்றி கருத்துக்கு.

    ReplyDelete
  29. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //வலைப்பதிவில் கவிதை, கட்டுரை என்று படைத்து வரும் இவர் தன் குரலில் திரையிசைப்பாடல்களையும் பாடி நேயர் விருப்பம் போன்ற பகுதிகளுக்கு அளித்து வருகின்றார்//

    காபி அண்ணாச்சி எங்க ஷைல்ஸ் அக்கா பற்றிச் சொன்னது Tip of the Iceberg தான்! :-)

    ஷைலஜா, ஆனந்த விகடனில் பரிசு பெற்ற கதைகளை எழுதி உள்ளாங்க!
    தமிழ் சிஃபியில் தனியாக ஒரு ஒலிப்பந்தல், கவிப்பந்தலே நடத்துறாங்க!
    முத்தமிழ், நம்பிக்கை குழுமத்துல கலக்குவாங்க!
    மக்கள் தொலைக்காட்சி மற்றும் இன்னும் பல நிகழ்ச்சிகளில் விவாதம்/கருத்தாய்வில் கலந்துப்பாங்க!
    //.
    ரவீஈஈஈஈ! என்ன இது உங்க பாசத்துக்கு எல்லையே இல்லையா?:) ச்சும்மாசமையற்கட்டுல தேங்கா சேவை செய்யும் நேரம்போக அங்க இங்க
    தமிழ்ச்சேவைன்னு ஏதோ செஞ்சிட்டு இருக்கேன்... என்னைபோய் இப்படிஉயரத்துல உக்காரவைக்காதீங்க அதுக்கெல்லாம் அருகதையே இல்ல எனக்கு. மைசூர்பாக் சொன்னிங்களே அது ஓகே:):)

    ReplyDelete
  30. தமிழன்... said...
    உங்களுக்கு நல்ல குரல் வளம் அக்கா...

    May 23, 2008 12:30 PM
    நாமக்கல் சிபி said...
    தேர்வு செய்த பாடல்கள் அருமை!

    அவற்றை விடவும் ஷைலஜா அக்கா அவர்களின் குரல் வழி அறிமுகம் மிகவும் அருமை!

    May 23, 2008




    >>>>மிக்க நன்றி தமிழன் நாமக்கல் சிபி! அப்படியெல்லாம் பிரமாதமாய் பாடவராது.
    ஆனாலும் தமிழ்போல இசைமீதும் ஆர்வம்! அதனால் இரண்டையும் படுத்துவது வழக்கம்!!

    ReplyDelete
  31. தமிழன்... said...
    உருகுதே மருகுதே ஒரு மாதிரி உருகுகிற பாடல் எனக்கு னெக்கும் ரொம்பப்பிடிக்கும் அலைபாயுதே கண்ணாவும் பிடித்த பாடல் இந்தப்பாடலை கேட்டாலோ அல்லது பார்த்தாலோ கூடப்படித்த பெண்களையும்(இந்தப்பாடல் பாடப்படாத பள்ளிக்கூட விழாக்கள் அரிது அப்படித்தானே பிரபா அண்ணன்) சில பல நிகழ்வுகளும் நினைவில் வந்து போகும்
    //ஆமாம் தமிழன்.. ஏதோ ஒரு பாட்டுஎன்காதில் கேட்கும், கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும் என்றும் ஒருபாட்டு இருக்கே!! இசைக்குமட்டுமே இந்த வல்லமை உண்டு!!

    ReplyDelete
  32. தமிழன்... said...
    உருகுதே மருகுதே ஒரு மாதிரி உருகுகிற பாடல் எனக்கு னெக்கும் ரொம்பப்பிடிக்கும் அலைபாயுதே கண்ணாவும் பிடித்த பாடல் இந்தப்பாடலை கேட்டாலோ அல்லது பார்த்தாலோ கூடப்படித்த பெண்களையும்(இந்தப்பாடல் பாடப்படாத பள்ளிக்கூட விழாக்கள் அரிது அப்படித்தானே பிரபா அண்ணன்) சில பல நிகழ்வுகளும் நினைவில் வந்து போகும்
    //ஆமாம் தமிழன்.. ஏதோ ஒரு பாட்டுஎன்காதில் கேட்கும், கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும் என்றும் ஒருபாட்டு இருக்கே!! இசைக்குமட்டுமே இந்த வல்லமை உண்டு!!

    ReplyDelete
  33. kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    ஷைல்ஸ் அக்கா இந்த முறை நான் பெங்களூர் போன போது, பதிவர் சந்திப்பில் அத்திக்காய் காய் காய் பாட்டை எனக்குன்னே பாடிக் காட்டினாங்க! அவங்க மோஸ்ட் ஃபேவரிட் பாடல்! எனக்கும் தான்!
    >>>>>>தமிழ் வித்தியாசமாய் அழகு [பெறும் பாடல்கள் எல்லாமே பிடிக்கிறது!



    //ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்

    ஏல வாசனைப்போல எங்கள் மனசு வாழ நீ ஒளிவீசு (இதில்
    இன்னொரு பொருள் இருக்கலாம் யாராவது விளக்குங்க)//

    இதுல ரெண்டு சுவை இருக்கு!
    மொதல்ல ஏலக்காய்!

    பொதுவா கனி தான் மணம் வீசும்! காய் அவ்வளவா வீசாது! பலாக்காய்க்கு வாசம் இல்ல! ஆனா காய் கனிஞ்சா ஊருக்கே வாசம் வீசும்!
    ஆனாப் பாருங்க! ஏலக்காய் அப்படி அல்ல! காய் தான்! ஆனால் அதன் மணமே தனி!

    அது போலத் தான் காதலர் மனசும்! என்ன தான் காதலர் மனசு காயா இருந்தாலும் பழுத்து இருந்தாலும் ஏலக்காய் போலக் காதல் வாசம் வீசிக்கிட்டே தான் இருக்கும் :-)
    ஏலக்காயைப் பொடிக்கப் பொடிக்க வாசம் இன்னும் வீசும்!
    காதலில் காய் விடக் காய் விட (ஊடல்),பாசம் இன்னும் வீசும்! :-)

    ரெண்டாவது வாழக்காய்

    வாழக்காய் குலை தள்ளும் போது பாத்து இருக்கீங்களா?
    ஒரே ஒரு முறை தான் குலை தள்ளும்! அது போலத் தான் காதல் உள்ளமும்!
    ஆழ்ந்த காதல் ஒரு முறை தான் குலை தள்ளும்! உள்ளத்தைப் பறி கொடுக்கும்! ஒருவருக்குக் கொடுத்தது கொடுத்தது தான்! :-)
    அதான் எங்கள் உள்ளம் வாழக்காய்-ன்னு சொல்லறான் காதலன்! :-))>>>>>
    ஏலக்காயைப்பொடிக்கபொடிக்க வாசம்வீசும் அதன் தோலி கூட மணக்கும்...
    அதைக்காதலோடு இணைத்து...ம்ம்ம்ம் கலக்கல் ரவி!!
    வாழைக்குலையை காதல்மனசோடு ஒப்பிட்டது அருமை!!!இதுக்குத்தான் ரவியை இங்கே விமர்சனம் செய்ய அழைச்சது!! இல்லேன்னா எனக்கெங்கே இவ்வளவு விவரம் தெரியப்போகிறது? நன்றி ரவி.

    May 23, 2008 1:36 AM

    ReplyDelete
  34. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    வாழைக்காய் குலை தள்ளுவது பற்றி இன்னோரு தகவல்!

    27வது இலை தோன்றிய பிறகு தான் மரம் குலை தள்ளும். அதுக்கப்புறம் 28வது இலை ஒன்னு வரும்! அது
    முழுமையாக இல்லாமல் குலையை மறைத்தவாறு கீழ் நோக்கி இருக்கும்!

    மத்த இலைகள் மேல் நோக்கி நமக்கு அமைந்தாலும் தான் ஈன்ற
    குலையைப் பாதுகாக்க அந்த 28வது இலை! அதை வெட்ட மாட்டாங்க! அட என்னா தான் சொல்லுங்க வாழை மரம் வாழை மரம் தாங்க!
    ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னா எங்கூரு வாழைப்பந்தல் கிராமம்! ஹிஹி :-))))

    ஷைல்ஸ், நீங்க எதிர்பார்த்த வெளக்கஞ் சரியா?
    >.....சரி சரி வாழைப்பந்தல்காரரு சொன்னா சரி இல்லாம போய்டுமா?:) அமக்களமான பின்னூட்டம் போங்க!

    ReplyDelete
  35. ஆகா...இந்த வாரம் எங்க மை.பா அக்காவா ;)))) கலக்கல் தான் ;))

    ஷைலஜா அக்காவை பத்தி சொல்ல ஒன்னுமே இல்ல....அதான் ரிஷானும், தல கே.ஆர்.எஸ்ம் மொத்தத்தையும் சொல்லிட்டாங்க...அதனால அவுங்க சொன்னதுக்கு எல்லாம் ஒரு ரீப்பிட்டே ;))

    \\இதை எல்லாம் எப்படி உங்க இன்ட்ரோவில் சொல்லாமப் போகலாம் அண்ணாச்சி?
    அட்லீஸ்ட் நண்பர்களுக்கு எல்லாம் அல்வா கொடுப்பாங்க! சாரி மைசூர் பாக்கு கொடுப்பாங்க! அதை மறக்காமச் சொல்லணும்-ல!\\\

    கே.ஆர்.எஸ் தல....சரியாக சொன்னிங்க..வலையுலகத்தில் ஷைலஜா என்று சொன்னா கூட சரியாக தெரியாது...ஆனா மை.பா ஷைலஜான்னு சொன்னா தான் தெரியும்..அப்படி பட்ட மை.பாவை மறந்த எங்கள் தல கானாவுக்கு ஷைலஜா அக்காவின் தம்பிகளின் சார்ப்பாக என்னோட கண்டணங்கள் ;))

    ReplyDelete
  36. 1. அத்திக்காய் பாடலுக்கு

    இந்த பாடல் எல்லாம் உண்மையாக நான் இந்த அளவுக்கு கவனமாக எல்லாம் கேட்டது இல்லை...ஒவ்வொரு வரிக்கு நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கங்களும் பாடலை கேட்க தூண்டுகிறது ;))

    2. ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி

    எனக்கு பிடித்த பாடல்...அழகாக எடுத்திருப்பாங்க...ராஜாவின் இசையும் அருமையாக இருக்கும் ;)

    3. அலைபாயுதே கண்ணா

    சூப்பர் பாட்டு...நிறைய முறை அதுவும் காலை வேலையில் இந்த பாட்டை கேட்கவே அழகாக இருக்கும் ;)

    4. பொய் சொல்லக் கூடாது காதலி

    அதிகம் கேட்கவில்லை என்றாலும்...ரசிக்கும் படியான பாடல் ;)

    5. உருகுதே மருகுதே

    அருமையான பாடல்....குரல்களும் இசையும் அட்டகாசமாக இருக்கும் ;)

    \இவர் தன் குரலில் திரையிசைப்பாடல்களையும் பாடி நேயர் விருப்பம் போன்ற பகுதிகளுக்கு அளித்து வருகின்றார்\\

    ம்ம்ம்...நானும் கேட்டு இருக்கிறேன்..முருகனருள் பதிவுகளில்.

    புதிய முறையை அறிமுகப்படுத்தி ரசிக்கும் படியான 5 பாடல்களை கொடுத்த ஷைலஜா அக்காவிறக்கு நன்றிகள் ;))

    தல கானாவுக்கும் என்னோட நன்றி ;)

    ReplyDelete
  37. கோபிநாத் said...
    ஆகா...இந்த வாரம் எங்க மை.பா அக்காவா ;)))) கலக்கல் தான் ;))

    ஷைலஜா அக்காவை பத்தி சொல்ல ஒன்னுமே இல்ல....அதான் ரிஷானும், தல கே.ஆர்.எஸ்ம் மொத்தத்தையும் சொல்லிட்டாங்க...அதனால அவுங்க சொன்னதுக்கு எல்லாம் ஒரு ரீப்பிட்டே ;))

    \\இதை எல்லாம் எப்படி உங்க இன்ட்ரோவில் சொல்லாமப் போகலாம் அண்ணாச்சி?
    அட்லீஸ்ட் நண்பர்களுக்கு எல்லாம் அல்வா கொடுப்பாங்க! சாரி மைசூர் பாக்கு கொடுப்பாங்க! அதை மறக்காமச் சொல்லணும்-ல!\\\

    கே.ஆர்.எஸ் தல....சரியாக சொன்னிங்க..வலையுலகத்தில் ஷைலஜா என்று சொன்னா கூட சரியாக தெரியாது...ஆனா மை.பா ஷைலஜான்னு சொன்னா தான் தெரியும்..அப்படி பட்ட மை.பாவை மறந்த எங்கள் தல கானாவுக்கு ஷைலஜா அக்காவின் தம்பிகளின் சார்ப்பாக என்னோட கண்டணங்கள் ;))

    May 23, 2008 6:44 PM >>>>>>>

    கோபிநாத்! இப்படி எல்லாரும் ஒரு மைபாவுக்காக கானாப்ரபாக்கு கண்டனம் தெரிவிக்கறது சரியே இல்ல

    :):) வருகைக்கு நன்றி கோபிநாத்

    ReplyDelete
  38. புதிய முறையை அறிமுகப்படுத்தி ரசிக்கும் படியான 5 பாடல்களை கொடுத்த ஷைலஜா அக்காவிறக்கு நன்றிகள் ;))

    தல கானாவுக்கும் என்னோட நன்றி>>>>>>>>

    என்னும் கோபிநாத்திற்கு மிக்க நன்றி.....வாய்ப்புதந்த கானாப்ரபாவுக்கு இங்கே மீண்டும்நானும் நன்றி சொல்லிக்கறேன்

    ReplyDelete
  39. VSK said...
    நல்ல்லதொரு பாடகியின் சிறந்த பாடல்களை இட்டு வளமை ஆக்கியிருக்கிறீர்கள்!

    பொய் சொல்லக்கூடாது கண்மணி .... நானும் பாடி இருக்கிறேன்!

    சர்வேசன் சொன்னதுபோல, 'எல்லாம் ஒரு விளம்பரந்தேன்!'

    அடுத்த முறை எங்களைக் கூப்பிட மாட்டீங்களா என்ன?!!!!:))))

    May 23, 2008


    >>.....>.....நன்றி டாக்டர்..அந்தப்பாடலை நீங்க சர்வ்ஸ் 2பேரும் பாடினதை மறப்பேனாஎன்ன?:)

    ReplyDelete
  40. SurveySan said...
    நல்ல தெரிவுகள்.

    பொய் சொல்லக் கூடாது பாட்டை நானும், VSKம், ஷைலஜாவின் விருப்பத்திற்காக பாடியுள்ளது இங்கே :)
    http://neyarviruppam.blogspot.com/2007/02/3.html

    (எல்லாம் ஒரு வெளம்பரம்தேன்)

    May 23, 2008 12:46 PM >>>>>சர்வ்ஸ்ஸ்ஸ்ஸு...நீங்க பாட்டுக்கு பாட்டுணு ஒண்ணு ஆரம்பிச்சி எங்களுக்கு பாட வாய்ப்பு தந்தீங்க விருப்பப்பாடலையும் பாடவச்சீங்க!!! நன்றி தாங்க்ஸ் தன்யவாத்ஜீ!!

    ReplyDelete
  41. ஷைலஜாவிற்கு வாழ்த்துகள். இந்த வார நேயர் ஆயிட்டீங்களே. :)

    நேத்தே எல்லாப் பாட்டுகளையும் அந்தப் பாட்டுகளுக்கு உங்க விளக்கங்களையும் கேட்டேன். வழக்கமா எல்லாரும் எழுதுவோம். நீங்கப் பேசிப் பாடிக் கொடுத்துட்டீங்க.

    எல்லாப் பாட்டுகளும் எனக்குப் பிடிக்கும். அத்திக்காய் பாட்டு ஒரு பாடம். தமிழை எப்படியெல்லாம் சிறப்பாப் பயன்படுத்தலாம்னு ஒரு எடுத்துக்காட்டு. அதுல ஒரு சிறிய திருத்தம்...சாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் வாழக்காய். சாதிக்காய் கெட்டது போல் அல்ல.

    அப்படியே சரியா ஒங்க ஊர் பாட்டும் கண்ணன் பாட்டும் கேட்டுட்டீங்க ;)

    பொய் சொல்லக் கூடாது பாட்டு முந்தி கேட்டதில்லை. இப்பக் கேக்குறேன். உருகுதே மருகுதே அருமையான பாட்டு. ஜி.வி.பிரகாஷ் சிறப்பாகவே இசையமைக்கிறார். மீடியாக்கர் வாரிசு இசை மாதிரி இல்லாம சிறப்பாக முயற்சிக்கிறார். பாராட்டி ஊக்குவிக்கப்பட வேண்டிய இசையமைப்பாளர் அவர்.

    ReplyDelete
  42. Nice selection of songs.
    Hats off to the new trial,it worked good.
    Sailaja's voice is nice.
    All the songs are great to hear.Hariharan and shobana are outstanding.
    Best Wishes,
    Kannan Viswagandhi
    http://www.growing-self.blogspot.com

    ReplyDelete
  43. அடடா, எல்லா பாடல்களும் சரியான தேர்வு. உருகுதே! பாடல் என் தம்பியின் பேவரட்.
    :))

    ReplyDelete
  44. அலை பாயுதே! என்ன பீட்? பொதுவா ஊத்துக்காடு பாடல்களை தில்லானாவுக்கு பயன்படுத்திக்குவாங்க நாட்டிய மக்கள்.

    ஏன்னா அவரோட வரிகள் ரொம்ப பொருத்தமா சரம் சரமா வந்து விழும். (இதெல்லாம் என் தங்கமணி சொன்ன தகவல், ஹிஹி)

    பேசாம ஊத்துக்காடு பாடல்கள் எல்லாத்தையுமே இப்படி டிரம்ஸ் போட்டு வாசிக்கலாம்.

    ReplyDelete
  45. //உள்ளத்தைப் பறி கொடுக்கும்! ஒருவருக்குக் கொடுத்தது கொடுத்தது தான்! :-)
    அதான் எங்கள் உள்ளம் வாழக்காய்-ன்னு சொல்லறான் காதலன்!
    //

    அடடே கேஆரெஸ் அண்ணே பின்னிட்டீங்க போங்க. எல்லாம் சொந்த அனுபவமோ? :p

    ReplyDelete
  46. வாழைக்காய் வெச்சு பஜ்ஜி போடலாம். சீக்ரம் பொண்ணு பாக்க வரேன், சூடா வாழைகாய் பஜ்ஜி போட்டு வை அம்மணி!னு சொல்லி இருக்கலாம் இல்ல. என்ன நான் சொல்றது? :p

    ReplyDelete
  47. ஷைலஜாவிற்கு வாழ்த்துகள். இந்த வார நேயர் ஆயிட்டீங்களே. :)>>>
    ஆமாம் ராகவன்! கானாப்ரபாகிட்ட இதுக்கு ஒருமாசம் முன்னாடியே அப்ளிகேஷன் போட்ருந்தேன்!!

    //நேத்தே எல்லாப் பாட்டுகளையும் அந்தப் பாட்டுகளுக்கு உங்க விளக்கங்களையும் கேட்டேன். வழக்கமா எல்லாரும் எழுதுவோம். நீங்கப் பேசிப் பாடிக் கொடுத்துட்டீங்க//

    >>>>அது 2ம்தான் சுமாரா தெரியும் அதான்:):)

    எல்லாப் பாட்டுகளும் எனக்குப் பிடிக்கும். அத்திக்காய் பாட்டு ஒரு பாடம். தமிழை எப்படியெல்லாம் சிறப்பாப் பயன்படுத்தலாம்னு ஒரு எடுத்துக்காட்டு. அதுல ஒரு சிறிய திருத்தம்...சாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் வாழக்காய். சாதிக்காய் கெட்டது போல் அல்ல.

    >>>>அப்படியா? உங்க நண்பர் கே ஆர் எஸ் இதுக்கு பதில் சொல்லணும்!

    அப்படியே சரியா ஒங்க ஊர் பாட்டும் கண்ணன் பாட்டும் கேட்டுட்டீங்க ;)

    >>>>பின்ன அரங்கனின்றி முழுமைஅடையுமோ இந்த இசைஅரங்கம்?:)

    பொய் சொல்லக் கூடாது பாட்டு முந்தி கேட்டதில்லை. இப்பக் கேக்குறேன். உருகுதே மருகுதே அருமையான பாட்டு. ஜி.வி.பிரகாஷ் சிறப்பாகவே இசையமைக்கிறார். மீடியாக்கர் வாரிசு இசை மாதிரி இல்லாம சிறப்பாக முயற்சிக்கிறார். பாராட்டி ஊக்குவிக்கப்பட வேண்டிய இசையமைப்பாளர் அவர்.>>>

    நன்றி ராக்ஸ்! வருகைக்கும் கருத்துக்கும்!
    அன்புடன்
    ஷைலஜா

    ReplyDelete
  48. kannan said...
    Nice selection of songs.
    Hats off to the new trial,it worked good.
    Sailaja's voice is nice.
    All the songs are great to hear.Hariharan and shobana are outstanding.
    Best Wishes,
    Kannan Viswagandhi
    http://www.growing-self.blogspot.com
    >>>> நன்றி கண்ணன்! புதுமுயற்சி எடுக்க முதலில் தயக்கமும் பயமுமாகவே இருந்தது கானாப்ரபாதான் ஊக்குவித்தார். நன்றி வருகைக்கும் உங்களின் கருத்துக்கும்!

    ஷைலஜா

    ReplyDelete
  49. ambi said...
    அடடா, எல்லா பாடல்களும் சரியான தேர்வு. உருகுதே! பாடல் என் தம்பியின் பேவரட்.
    :))
    >..வாங்க அம்பி....உங்க (என்)தம்பிக்கு உருகுதே பிடிக்குமா?:) அடுத்த சந்திப்புல கண்சுக்கு அந்தப்பாட்டுதான்!

    ReplyDelete
  50. ambi said...
    வாழைக்காய் வெச்சு பஜ்ஜி போடலாம். சீக்ரம் பொண்ணு பாக்க வரேன், சூடா வாழைகாய் பஜ்ஜி போட்டு வை அம்மணி!னு சொல்லி இருக்கலாம் இல்ல. என்ன நான் சொல்றது? :p

    May 25, 2008 6:11 PM
    கேசரி இன்னும் நான் செஞ்சிதரலைதான் அதுக்காக பஜ்ஜியை இங்க இழுத்தா எனக்கு புரியாம போய்டுமா அம்பி? :)

    ReplyDelete
  51. கவிநயா said...
    //ஷைலஜா, ஆனந்த விகடனில் பரிசு பெற்ற கதைகளை எழுதி உள்ளாங்க!
    தமிழ் சிஃபியில் தனியாக ஒரு ஒலிப்பந்தல், கவிப்பந்தலே நடத்துறாங்க!
    !//

    திருவரங்கப்ரியா பத்தி தெரியாத செய்திகளைத் தெரிய வச்சு, வழக்கம் போலக் கலக்கியிருக்கும் கண்ணபிரான் வாழ்க!

    May 23, 2008>......கவிநயா என்ன நீங்களும் இப்படி வாழ்க கோஷம் போட்றீங்க?:) ரவி ச்சும்மா அன்பினால் பாசத்தினால் ஏதாவது சொல்வார். அதுக்குப்போயி....:)

    ReplyDelete
  52. //ரவி ச்சும்மா அன்பினால் பாசத்தினால் ஏதாவது சொல்வார். அதுக்குப்போயி....:)//

    அட! அப்ப எங்களுக்கெல்லாம் அந்த ..பூ, .சம், எல்லாம் இல்லையாக்கும்! போங்க, உங்க பேச்சு டூ, கா!

    ReplyDelete
  53. கவிநயா said...
    //ரவி ச்சும்மா அன்பினால் பாசத்தினால் ஏதாவது சொல்வார். அதுக்குப்போயி....:)//

    அட! அப்ப எங்களுக்கெல்லாம் அந்த ..பூ, .சம், எல்லாம் இல்லையாக்கும்! போங்க, உங்க பேச்சு டூ, கா!

    May 26, 2>>>>>>>>>>:):):):):) என்ன பூ, என்ன சம்? காய்? கேஆரெஸ்ஸ்ஸ்ஸூ வந்து விளக்குங்கப்பா ப்ளீஸ்ஸூ!

    ReplyDelete
  54. //ஷைலஜா, ஆனந்த விகடனில் பரிசு பெற்ற கதைகளை எழுதி உள்ளாங்க!
    தமிழ் சிஃபியில் தனியாக ஒரு ஒலிப்பந்தல், கவிப்பந்தலே நடத்துறாங்க!
    !//
    அது மட்டுமா KRS அண்ணா! பொதிகையில் வரும் இவருடய சித்தர்கள் பற்றிய நிகழ்ச்சி மிகவும் அருமையான பல நல்ல தகவல்களை தரும் ஒரு நல்ல நிகழ்ச்சி! இவர் மிகச்சிறந்த ஓவியரும் கூட,இவருடய தஞ்சை ஓவியங்கள் காண்பவர் நெஞ்சை பரிகொடுக்க வைக்கும்!

    By,
    Thambi

    ReplyDelete
  55. மிக்க நன்றி ஷங்கர்

    ReplyDelete