Pages

Monday, May 5, 2008

றேடியோஸ்புதிர் 5 - இந்தப் பாட்டு எந்தப் பாட்டு?

கொஞ்ச நாள் இடைவெளிக்குப் பின் மீண்டும் ஒரு பாட்டுப் புதிரோடு வந்திருக்கின்றேன். இங்கே ஒரு பாடலின் இடையே வரும் இசைத் துண்டைத் தருகின்றேன். இது எந்தப் பாட்டு என்று கண்டு பிடியுங்களேன்.

இதோ சில உதவிக்குறிப்புக்கள்.
இப்பாடலைப் பாடியவர்கள் ஆணும் பெண்ணுமாக ஜோடிப் பாடல் பாடியிருக்கின்றார்கள். ஆண் பாடகர், பாடகர் என்பதை விட பின்னணிக் குரல் மூலம் அதிகம் பேசப்படுகின்றார்.
இப்படத்தின் தயாரிப்பாளர் சக கதாநாயகன் முன்னர் பல படங்களின் விநியோகஸ்தராக, தயாரிப்பாளராக மற்றும் சிறு சிறு வேடங்களில் நடிப்பு என்று பல அவதாரம் எடுத்தவர். இப்படம் எடுத்து முடித்துப் பின்னணி இசை சேர்க்கும் போது இசைஞானியே அசந்து போய் மேலதிகமாக ஒரு பாட்டை அமைத்துக் கொடுத்தாராம். இந்தப் படம் ஒரு மெகா ஹிட் படமாக அமைந்தது.

இங்கே தரும் பாடலைப் பாடுவது படத்தின் முன்னணிக் கதாநாயகன் கிடையாது. அறிமுக நடிகர் ஒருவரும், இரண்டாவது நாயகியும் பாடியிருக்கின்றார்கள். கண்டு பிடியுங்களேன்.

பி.கு: இந்தப் பதிவு புதுத் தமிழ்மணத்தில் சோதனையோட்டம் ;-)

24 comments:

  1. பாரிஜாதப் பூவே - அந்த
    தேவலோகத் தேனே!

    ReplyDelete
  2. ஓவியா

    உங்கள் கண்டுபிடிப்பு சரி, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. பாதக் கொலுசு பாட்டு பாடி வரும் - திருமதி பழனிச்சாமி...
    டெம்போ அதிகமாக இருப்பதால் இன்னும் குழப்பமாகத் தான் உள்ளது..

    ReplyDelete
  4. தமிழ்ப்பிரியன்

    உங்கள் விடை தவறு, மீண்டும் முயற்சிக்கலாம்

    ReplyDelete
  5. நாயகன் - நான் சிரித்தால் தீபாவளி

    ReplyDelete
  6. இளா

    உங்கள் கணிப்பும் தவறு, நான் தந்திருக்கும் உதவிக்குறிப்புக்களே கண்டுபிடிக்கப் போதுமானவை.

    ReplyDelete
  7. பாரிஜாதப் பூவே..
    பாடியது- சுரேந்தர் மற்றும் சித்ரா.
    படம் - என் ராசாவின் மனசிலே

    ReplyDelete
  8. இளா

    இந்த முறை வெற்றிக்கனி ;-)

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. ஒரு அவசரத்துல பாட்ட மேலோட்டாமாக் கேட்டும்முதல்பின்னூட்டம் இட்டது. அப்புறம் உங்க "க்ளூ" வெச்சு கண்டுபுடிக்க முடியாதுங்க. அது ரொம்ப கஷ்டம். இந்த மாதிரி போட்டிகள் நிறைய எதிர்பார்க்கிறேங்க.

    ReplyDelete
  10. என் ராசாவின் மனசிலே படத்திலிருந்து பாரிஜாதப்பூவே என்ற பாடல் இது. பாடியவர் நடிகர் மோகனுக்குக் குரல் கொடுக்கும் எஸ்.என்.சுரேந்தர். தயாரிப்பாளர், கதாநாயகர், இயக்குநர் ராஜ்கிரண்.

    பாட்டில் வரும் நடிகர் வால்டர் வெற்றிவேல் படத்தில் சத்யராஜின் வாய்பேச முடியாதத் தம்பியாக நடித்தவர். பெயர் நினைவில்லை.

    ReplyDelete
  11. கைப்ஸ் கலக்கீட்டீங்க

    வாழ்த்துக்கள் கைப்புள்ள ;-)

    ReplyDelete
  12. Paarijaatha poove song from "En Raasaavin Manasila"

    ReplyDelete
  13. ''பாரிஜாதப் பூவே
    அந்த தேவலோக தேனே''

    ***

    கானா பிரபா... என் அலுவலக கணினியில் youtube வசதியில்லை; அதனால், நீங்கள் கொடுத்த உதவிக்குறிப்புக்கள் துணைகொண்டு ஒரு யூகத்தில் சொல்கிறேன்..

    //இப்பாடலைப் பாடியவர்கள் ஆணும் பெண்ணுமாக ஜோடிப் பாடல் பாடியிருக்கின்றார்கள். ஆண் பாடகர், பாடகர் என்பதை விட பின்னணிக் குரல் மூலம் அதிகம் பேசப்படுகின்றார்.//

    பின்னணிக்குரல் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது மோகனுக்குப் பல படங்களில் குரல் கொடுத்த S.N. சுரேந்தர் தான்.

    //இப்படத்தின் தயாரிப்பாளர் சக கதாநாயகன் முன்னர் பல படங்களின் விநியோகஸ்தராக, தயாரிப்பாளராக மற்றும் சிறு சிறு வேடங்களில் நடிப்பு என்று பல அவதாரம் எடுத்தவர். //

    முன்னர் பல படங்களின் விநியோகஸ்தராக, தயாரிப்பாளராக இருந்து, இப்போது சிறு சிறு வேடங்களில் நடிக்கிறார் என்றவுடன் எனது நினைவுக்கு வந்த producer-turned actor ராஜ்கிரண்.

    //இப்படம் எடுத்து முடித்துப் பின்னணி இசை சேர்க்கும் போது இசைஞானியே அசந்து போய் மேலதிகமாக ஒரு பாட்டை அமைத்துக் கொடுத்தாராம்.//

    ராஜ் கிரணின் முதல் மூன்று படங்களான 'என் ராசாவின் மனசிலே', 'அரண்மனைக்கிளி' மற்றும் 'எல்லாமே என் ராசா' ஆகியவை வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே இசைஞானிதானே...

    //இந்தப் படம் ஒரு மெகா ஹிட் படமாக அமைந்தது.//

    என் ராசாவின் மனசிலே உண்மையில் ஒரு மெகா ஹிட் படம், இல்லையா?

    //இங்கே தரும் பாடலைப் பாடுவது படத்தின் முன்னணிக் கதாநாயகன் கிடையாது. அறிமுக நடிகர் ஒருவரும், இரண்டாவது நாயகியும் பாடியிருக்கின்றார்கள்//

    இந்தப் படத்தில், S.N.சுரேந்தர் - சித்ரா பாடிய ஒரு பாடலில் அறிமுக நாயகனும் இரண்டாம் கதாநாயகியும் தோன்றுகிறார்கள். So...

    "பாரிஜாதப் பூவே
    அந்த தேவலோக தேனே
    வசந்த ராகம் தேடி வந்ததோ
    மதன ராக பாட வந்ததோ...."

    இதுதானே அந்தப் பாடல் என்று நான் உங்களிடம் சொல்லத் தயாராகும் போது, நீங்கள் கொடுத்த ஒரு உதவித்தகவல் என்னைக் குழப்புகிறது "இப்படத்தின் தயாரிப்பாளர் சக கதாநாயகன்'' ராஜ் கிரண் தானே கதாநாயகன்... யார் சககதாநாயகன்?

    ReplyDelete
  14. ஜேகே மற்றும் பாரதிய நவீன இளவரசன்

    உங்கள் யூகம் சரியானது, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. பாடலைப்ப்பாடியவர் எஸ் என் சுரேந்தர். பாரிஜாதப்பூவே பாடல் என நினைக்கின்றேன்.

    ReplyDelete
  16. பாரிஜாத பூவே....
    ராஜ்கிரண் படம்...
    ராசவின்....???

    ReplyDelete
  17. பரணி, வந்தியத்தேவன்

    உங்கள் கண்டுபிடிப்பு சரியானது, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. தல

    வழக்கம் போல எதிர்கட்சியின் திட்டமிட்ட சதியினால் கேட்க முடிவில்லை ;(

    ReplyDelete
  19. பாரிஜாதப் பூவே அந்த தேவலோகத் தேனே!!

    ஆனா கண்டுபுடிக்கறதுக்குள்ள தாவூ தீந்துருச்சு :)))

    ReplyDelete
  20. தல

    படம் - என் ராசாவின் மனசுல

    பாடல் - பாரிஜாத பூவே..அந்த தேவலோக தேனே

    ReplyDelete
  21. பதில் சரி என்றால்...அந்த பாராட்டு திரு. கப்பியை சாரும் ;)

    ReplyDelete
  22. கப்பி ஏன் தாவு தீர்ந்தது, சுலபம் தானே, இந்த புடீங்க வாழ்த்தை

    தல கோபி

    ராஜா பாட்டையும் கப்பியிடம் காப்பிடித்தா சொல்லணும், உங்களுக்கு வாழ்த்து கிடையாது ;-)

    ReplyDelete
  23. \\கானா பிரபா said...
    கப்பி ஏன் தாவு தீர்ந்தது, சுலபம் தானே, இந்த புடீங்க வாழ்த்தை

    தல கோபி

    ராஜா பாட்டையும் கப்பியிடம் காப்பிடித்தா சொல்லணும், உங்களுக்கு வாழ்த்து கிடையாது ;-)
    \\

    தல

    இந்த பின்னூட்டதில் தானே உங்க வாழ்த்து இல்லை...ஆனால் உங்கள் மனதில் என்னை வாழ்தியது எனக்கு வந்து சேர்ந்துவிட்டது ;))

    நன்றியோ நன்றி ;)

    ReplyDelete
  24. பதிவைப் படிக்கும் பொழுதே பாடகர் யார்னு தெரிஞ்சு போச்சு. அடுத்து கொஞ்சம் படிச்சதும் படமும் பாட்டும் தெரிஞ்சு போச்சு. இசையைக் கேட்டதும் பாட்டு இதுதான் உறுதிபடுத்திக்கிட்டாச்சு. :)

    ReplyDelete