
போன வாரம் பாலைவன தேசத்துப் பதிவர் "பாசமலர்" வந்து ஐந்து விதமான ரசனைகளை அழகாகக் கொடுத்திருந்தார். தொடர்ந்தும் நீங்கள் இந்தத் தொடருக்கான ஆக்கங்களை அனுப்பி வைப்பது உண்மையில் இந்த முயற்சிக்கான வெற்றியாகவே கொள்கின்றேன். அரங்கேறாத உங்கள் படைப்புக்களையும் தொடர்ந்தும் நீங்கள் அனுப்பிவைக்கலாம்.அடுத்த சில நாட்களில் பயண அலுவல்கள் இருப்பதால் இந்த வாரம் சீக்கிரமாகவே இப்பதிவைத் தருகின்றேன்.

சரி இந்த வாரம் அரங்கேறும் சிறப்புப் பதிவர் யாரென்று பார்ப்போம்.
கடந்த 2007 ஆம் ஆண்டு இலங்கை வாழ் பதிவர்கள் பலரை வலைப்பதிவுலகம் வசீகரித்து உள்வாங்கிக் கொண்டது. அப்படி வந்த ஒரு பதிவர் தான் எங்கள் அன்புக்குரிய எம்.ரிஷான் ஷெரிப். தன்னுடைய ஒவ்வொரு படைப்புக்கும் தனித்தனியான வலைத்தளம் வைத்து, சிறுகதை, கவிதை, உலக நடப்புக்கள், சிந்திக்கச் சில படங்கள், எண்ணச் சிதறல்கள் என்று வகை வகையான விருந்து படைக்கின்றார். எல்லாமே விலத்தி வைக்கமுடியாத சிறப்பான தொகுப்புக்கள். இவரின் வலைப்பதிவுகளைப் பார்வையிட
எம்.ரிஷான் ஷெரிப்
ரிஷான் பாடல்களை அனுப்பி வைத்தபோது முழுதும் படித்து வியந்து போனேன். சாதாரணமாக எல்லோரும் கேட்காத, ஆனால் விலக்கி வைக்க முடியாத தெரிவுகள் இவை. காதலை ஐந்து முத்தான பாடல்கள் ஒவ்வொன்றுமே மயிலிறகாய் வரும் மெல்லிசை கலந்து வருகின்றன. தெரிந்தோ தெரியாமலோ இவர் எடுத்த ஐந்துமே ஐந்து வேறுபட்ட இசையமைப்பாளர்கள். இந்தப் பாடல்களுக்கு இவர் கொடுக்கும் விளக்கமே ஒரு காதல் கடிதத்தைப் படித்த ரசனையை ஏற்படுத்துகின்றது. தொடர்ந்து ரிஷான் சொல்வதைக் கேளுங்கள். பாடல்களை அனுபவியுங்கள்.
நண்பர் கானாபிரபா கேட்டுக்கொண்டதற்கிணங்க ஏராளமான பாடல்கள் விருப்பத்திற்குரிய பாடல்களாக இருந்தும் 5 பாடல்களை மட்டும் இங்கு தருகிறேன்.'காதல் மாதம்' என்பதால் எல்லாப்பாடல்களுமே காதல் பாடல்களாக இருக்கின்றன. (ரிஷான் இப்பதிவை அனுப்பியது பெப்ரவரி காதலர் தின வாரத்தில்) மற்றப் படி வேறெதுவும் விஷேசமில்லை... :)
1. ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்...
படம் : இதயத் தாமரை.
பாடியவர்கள் : எஸ்.பி.பி, சித்ரா.
இசை : சங்கர் கணேஷ்
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்..
கள்ளூரும் காலை வேளையில்...(2)
பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா........
பூவுக்கொரு பூஜை செய்ய பிறந்தவன் நானில்லயா...
இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா?
தாமரைக்குள் வீடுகட்டி தந்தவள் நானில்லயா ?
ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது
உன் மூச்சில் அல்லவா என்முச்சும் உள்ளது...
ஒன்றானது.......
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்..
கள்ளூரும் காலைவேளையில்
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
யாருக்கு யார் உறவு யாரரிவாரோ......
என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ..
பொன் மகள் மூச்சுவிட்டால் பூமலராதோ....
பூமகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ...
கல்லூரி வாழ்க்கையில் காதல் ஏன் வந்தது....
ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது
இயல்பானது.......
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்..
கள்ளூரும் காலை வேளையில்...
மிக அழகிய காதல் பாடல்.
மழைத்தூறல் விழும் அல்லது இதமான மஞ்சள் வெயிலடிக்கும் மாலை வேளைகளிலும்,
யாருமற்ற நள்ளிரவிலும் மெல்லிசையாய் இப்பாடலைக் கேட்க மிக மகிழ்வாய் உணர்வேன்.
எஸ்.பி.பி கம்பீரக்குரல் காதலுக்காய்க் குழைகிறது இங்கு.
சித்ராவும் உணர்ந்து பாடி பாடலை அழகாக்கியிருக்கிறார்.
இசையும் அருமை.அதிகளவு ஆர்ப்பாட்டமில்லை.
இப்பாடல்காட்சி படமாக்கப்பட்டிருக்கும் விதமும் அழகு.
சில பாடல்கள் கேட்க இதமாயிருக்கும்.ஆனால் காட்சிப்பதிவின் போது வீணடித்திருப்பார்கள் (உதாரணம் வசீகரா பாடல்).
இங்கு அப்படியில்லை.
இளமைக்கால ரேவதி மற்றும் கார்த்திக் காதல் ஜோடி மிகப்பொருத்தம்.
பின்புலக் காட்சிகளும் ஒளிப்பதிவு இடம்பெற்றுள்ள இடங்களும் பேரழகு.
2.மாலையில் யாரோ மனதோடு பேச...
படம் : சத்ரியன்
பாடியவர் : சுவர்ணலதா
இசை: இளையராஜா
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே ஓ.....மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ.....மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது
வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாடலை
ஒருநாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசை காதலை
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது (மாலையில் யாரோ)
கரை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப்பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப்பார்க்க
அடடா நானும் மீனைப்போல கடலில் பாயக்கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது (மாலையில் யாரோ)
எனக்கு மிகப்பிடித்த பாடல்.
அழகான மெல்லிசை சுவர்ணலதாவின் மிக அழகிய குரலோடு ஒன்றி பாடலை மிக அழகாக்கியிருக்கிறது.
சுவர்ணலதாவைத்தவிர வேறு யாராலும் இப்பாடலை இவ்வளவு சிறப்பாகப் பாட முடியாது என எண்ணவைக்கும் அளவுக்கு மிக நன்றாகப் பாடியிருக்கிறார்.(இப்படி எண்ணத்தோன்றிய இவரது அடுத்த பாடல் -எவனோ ஒருவன் வாசிக்கிறான்- அலை பாயுதே).
இப்பொழுதெல்லாம் தமிழ்சினிமாவில் இவரை குத்துப்பாடல்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வது வேதனையைத் தருகிறது.
3.உடையாத வெண்ணிலா...
படம் : ப்ரியம்
பாடியவர்கள் : ஹரிஹரன்,சித்ரா.
இசை: வித்யாசாகர்
உடையாத வெண்ணிலா
உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெளி
நனையாத பூவனம்
உதிர்கின்ற ஓருமுடி
களைகின்ற சிறுநகம்
சிருங்கார சீண்டல்கள்
சில்லென்ற ஊடல்கள்
ப்ரியம் ப்ரியம்
(உடையாத)
அந்தி மஞ்சள் மாலை
ஆளிலாத சாலை
தலைக்கு மேலே போகும்
சாயங்கால மேகம்
முத்தம் வைத்த பின்னும்
காய்ந்திடாத ஈரம்
எச்சில் வைத்த பின்னும்
மிச்சமுள்ள பானம்
கன்னம் என்னும் பூவில்
கைகள் செய்த காயம்
ப்ரியம் ப்ரியம் (4)
(உடையாத)
கண்கள் செய்யும் ஜாடை
கழுத்தில் கோர்த்த வேர்வை
அள்ளிச்செல்லும் கூந்தல்
ஆடை தூக்கும் காற்று
மொட்டு விட்ட பாகம்
தொட்டு பார்த்த சிநேகம்
முகத்தின் மீது ஆடை
மோதிச்சென்ற மோகம்
இரண்டு பெயரை ஒன்றாய்
எழுதிப்பார்க்கும் இன்பம்
ப்ரியம் ப்ரியம் (4)
(உடையாத)
இதுவும் இன்னொரு அழகிய காதல்பாடல்.
ஒவ்வொரு வரியாய் உள்வாங்கிக் காட்சிகளைக் கற்பனை செய்து பாருங்கள்.
மிக அற்புதமாக உணர்வீர்கள்.
சக்ஸபோன் இசைக்கருவி பாடல்முழுதும் இழையோடுகிறது.
பாட்டின் அழகியவரிகளோடு பாடலை உணர்ந்து பாடியிருக்கிறார்கள்.
4. விழிகளின் அருகினில் வானம்...
படம் : அழகிய தீயே
பாடியவர் : ரமேஷ் விநாயகம்.
இசை : ரமேஷ் விநாயகம்
விழிகளின் அருகினில் வானம்!
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!
இது ஐந்து புலங்களின் ஏக்கம்!
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!
ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!
இது அதிசய அனுபவம்... ஓ.... யா!
பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!
பூ போன்ற கன்னி தேன்,
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்!
அது ஏன் என்று யோசித்தேன்!
அட நான் எங்கு சுவாசித்தேன்?
காதோடு மெளனங்கள்,
இசை வார்க்கின்ற நேரங்கள்,
பசி நீர் தூக்கம் இல்லாமல்,
உயிர் வாழ்கின்ற மாயங்கள்!
அலைகடலாய் இருந்த மனம்,
துளி துளியாய் சிதறியதே!
ஐம்புலனும், என் மனமும்,
எனக்கெதிராய் செயல்படுதே!
விழி காண முடியாத மாற்றம்!
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்!
ஒரு மெளன புயல் வீசுதே!
அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ.... யா!
பூவில் என்ன புத்தம் புது வாசம்!
தென்றல் கூட சங்கீதமாய் வீசும்!
ஏதோ வந்து பன்னீர் மழை தூவும்!
யாரோ என்று எந்தன் மனம் தேடும்!
கேட்காத ஓசைகள்,
இதழ் தாண்டாத வார்த்தைகள்,
இமை ஆடாத பார்வைகள்,
இவை நான் கொண்ட மாற்றங்கள்!
சொல் என்னும் ஓர் நெஞ்சம்!
இனி நில் என ஓர் நெஞ்சம்!
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்,
ஒரு போர்க்காலம் ஆரம்பம்!
இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா?
உரைத்திடவா? மறைத்திடவா?
ரகசியமாய் தவித்திடவா?
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
இதில் மீள வழி உள்ளதே,
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யா!
விழிகளின் அருகினில் வானம்!
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!
இது ஐந்து புலங்களின் ஏக்கம்!
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!
ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!
இது அதிசய அனுபவம்... ஓ.... யா!
பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!
என்னை எப்பொழுதும் தன்னிலை மறக்கச் செய்யும் பாடல் என்றால் இதுதான்.
ரமேஷ்விநாயகத்தின் மென்மையான குரல் பாடலை மேலும் அழகூட்டுகிறது.இப்பாடலைப்பாட ஒரு பிரபல பாடகர் வராத காரணத்தால் இப்பாடலை இவர் பாடநேர்ந்த்தாகக் கேள்விப்படுகிறேன்.ஆனாலும் சிறப்பாகப் பாடியிருக்கிறார்.இவரது இசையும் மிக ரம்மியம்.
அடுத்து வரிகள்..
இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா?
உரைத்திடவா? மறைத்திடவா?
ரகசியமாய் தவித்திடவா?
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
இதில் மீள வழி உள்ளதே,
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யா!
காதல் கொண்ட ஒரு இளைஞனின் அத்தனை மன உணர்வுகளையும் மிக அழகாகச் சிலவரிகளில் எடுத்துரைக்கிறது வரிகள்.வரிகளுக்குச் சொந்தக்காரர் யாரெனத் தெரியவில்லை.அவருக்கும் ஒரு கை குலுக்கல்.
அத்துடன் பாடல் காட்சிகளில் நடித்திருக்கும் பிரசன்னா,புதுமுகம் நவ்யா நாயருக்கும்.
5.சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா...?
படம் : அழகன்
பாடியவர்கள் : எஸ்.பி.பி,சந்தியா
இசை: மரகதமணி
சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா, என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு, அங்கே இரவா,
இல்லே பகலா, எனக்கும் மயக்கம்
நெஞ்சில் என்னவோ நெனச்சேன்,
நானும் தான் நினைத்தேன்
ஞாபகம் வரல,
யோசிச்சா தெரியும்,
யோசனை வரல
தூங்கினா விளங்கும்,
தூக்கம்தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு.
என்னென்ன இடங்கள்,
தொட்டால் ஸ்வரங்கள் துள்ளும் சுகங்கள்
கொஞ்சம் நீ சொல்லி தா
சொர்கத்தில் இருந்து யாரோ எழுதும்
காதல்கடிதம் இன்றுதான் வந்தது
சொர்கம் வெண்ணிலே திறக்க
நாயகன் ஒருவன், நாயகி ஒருத்தி
தேன்மழை பொழிய, பூவுடல் நனைய
காமனின் சபையில் காதலின் சுவையில்
பாடிடும் கவிதை சுகம்தான்
காதலன்,காதலி காதலில் மூழ்கித் தனிமையில் கிடந்து தவிக்கும் அத்தனை ஏக்கங்களையும் அழகாய்ச் சொல்லுகிறது பாடல்.பாடல்காட்சி முழுவதும் காதலன் (மம்மூட்டி),காதலி (பானுப்ரியா) விடியும்வரை தொலைபேசியில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கேற்ற மாதிரி பாடலும் ஒருவரின் கேள்விக்கு மற்றவரின் பதிலாய் அமைகிறது.இரவு விடிவதும் அழகாய் தொலைக்காட்சி,ஜன்னல்,காலைத் தேனீரெனக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
எனது பாடல்களெல்லாம் இடைக்காலப்பாடல்களாக அமைந்ததற்கு மிக முக்கிய காரணங்கள் அழகிய தமிழில் அமைந்த பாடல்வரிகள்,இரைச்சலில்லாத இசை மற்றும் வார்த்தைகளை விழுங்கிப் பாடாமல் தெளிவாகப் பாடும் பாடகர்களின் குரல்கள்.என்வேதான் எனக்கிவை என்றும் பிடித்த பாடல்கள்.
இப்பாடல்களை ரேடியோஸ்பதி ரசிகர்களோடு பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கிய நண்பர் கானாபிரபாவுக்கும்,பொறுமையாய் எனது பாடல்களைக் கேட்ட உங்களுக்கும் எனது இனிய நன்றிகள்.