
ஊடகவியலாளர் டி.அருள் எழிலன் அவர்கள், சிலவாரங்கள் முன் ஆனந்த விகடன் சஞ்சிகையில் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நூற்றாண்டு நினைவாக சிறப்புத் தொகுப்பை அளித்திருந்தார். ஆண்டு முடிவதற்குள் எம்.ஆர்.ராதா குறித்த வானொலிப்படைப்பை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக வழங்க வேண்டும் என்று நினைத்திருந்த எனக்கு அந்த ஆக்கம் பேருதவியாக அமைந்தது. அருள் எழிலன் அனுமதியுடன் அந்தப் பிரதியினை வானொலிக்குப் பொருத்தமான அம்சங்களுடன் இணைத்து "நடிகவேள் எம்.ஆர்.ராதா நினைவில்" என்ற ஒலிச்சித்திரமாக ஆக்கியிருக்கின்றேன். 45 நிமிடம் வரை ஓடும் படைப்பு இது.
இப்படையலில் "ரத்தக்கண்ணீர்" திரையில் வந்த புகழ்பெற்ற வசனங்களுடன், புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை, பொன்னார் மேனியனே, குற்றம் புரிந்தவன், மற்றும் நீயே உனக்கு என்றும் நிகரானவன் போன்ற எம்.ஆர்.ராதா தோன்றி நடித்த பாடல்களும் இடம்பெறுகின்றன.
பிரதியினை அளித்த அருள் எழிலனுக்கு மிக்க நன்றிகள்.
பதிவில் இடம்பெறும் படம் உதவி: மலேசிய ஆஸ்ரோ வானவில் இணையம்
To Download (Right-click, Save Target As/Save Link As)
http://www.radio.kanapraba.com/MRRadha.mp3
M.R ராதாவின் நடிப்புலக முதல் வாயில்கள் அரிச்சந்திரன், நல்லதங்காள், கிருஷ்ணலீலா என்பது எனக்கு புதியய தகவல்களாயிருந்தது.
ReplyDeleteநல்ல பதிவு, பிரபா
கடந்த ஞாயிறு SBS தமிழ் வானொலியில் ராதா ரவியின் பேட்டியையும் போட்டார்கள்.
வணக்கம் பிரபா ..நன்றிகள் பதிவுக்கு ...இன்னும் கேட்கவில்லை நன்றாக இருக்கும் என்று நிச்சயம் நம்புகிறேன்
ReplyDeleteஅருமை அருமை. எம்.ஆர்.ராதா....நடிகவேள்...எனக்கும் மிகவும் பிடித்த நடிகர். அவருடைய நடிப்பும் பாட்டும் பேச்சும் அருமையோ அருமை. நல்லதொரு பதிவிட்டிருக்கின்றீர்கள். நன்றி. நன்றி.
ReplyDeleteசெல்லியக்கா
ReplyDeleteஇது கடந்த புதன்கிழமை எமது வானொலியில் இடம்பெற்றது. எம்.ஆர்.ராதாவின் நையாண்டித்தனமான நடிப்பு எல்லோருக்கும் பிடித்தது இல்லையா.
தரவிறக்க வசதி தந்தால் வசதியாக இருக்கும் கானா. நீஙகள் கொடுக்கும் தொகுப்புகள் எல்லாமே மீண்டும், மீண்டும் கேட்க்கும் வண்ணமாக இருக்கிறது. விதிக்குட்படாது என்றால் வேண்டாம், இல்லை என்றால் கொடுக்கலாமே....
ReplyDeleteவணக்கம் பனிமலர்
ReplyDeleteமிக்க நன்றி தங்கள் வருகைக்கு. இது என் தனிப்பட்ட தயாரிப்பு என்பதால் தாராளமாகத் தரவிறக்கம் செய்யலாம். கீழ் காணும் லிங்கை புது பிரவுசரில் கொப்பி பண்ணினால் டவுண்லோட் ஆப்ஷன் வரும். முடிகிறதா என்று உறுதிப்படுத்தவும்.
http://www.radio.kanapraba.com/MRRadha.mp3
வணக்கம் சின்னக்குட்டியர்
ReplyDeleteநேரம் கிடைக்கும் போது கேட்டுப் பாருங்கள்.
வணக்கம் ராகவன்
கேட்டுக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள்
கானா, இந்த தொடுப்பு MP3 கோப்பாக சேமிக்கமுடியவில்லை, பதிலாக மிடையா பிலேயரில் அதன் தொகுப்பாக மட்டுமே சேமிக்க முடிகின்றது. கையடக்க கருவியில் எடுத்து போகும் பொருட்டு சேமிக்க நினைத்தேன். வேறு ஏது வழி இருப்பின் தெருவிக்கவும்.
ReplyDeleteவணக்கம் பனிமலர்
ReplyDeleteஇப்போது Download option ஐ தளத்திலேயே கொடுத்திருக்கின்றேன். இது வேலை செய்யும் என்று நினைக்கின்றேன்.
உதவிக்கு மிக்க நன்றி கானா, தொடுப்பு கைகொடுத்தது.........
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteபதிவுக்கு நன்றிகள்
அருமையான தொகுப்பு ஆனால் தரவிறக்கத்தான் முடியவில்லை
நன்றி
வணக்கம் மாயா
ReplyDeleteநான் கொடுத்த லிங்கின் மூலம் பிரச்சனையின்றித் தரவிறக்கம் செய்யலாம். மீண்டும் முயலுங்கள் ;-)
பிரபா!
ReplyDeleteவில்லன் நடிகர்கள் என்றாலே என் இளமையில் பயம்,கண்ணைப் பொத்திக் கொண்டு விடுவேன். ஆனால் எம்.ஆர்.ராதாவானால் அவர் நடிப்பை விரலிடுக்கால் பார்ப்பேன்.
அப்படி வித்தியாசமான வில்லனாக என்னைக் கவர்ந்தவர்.
என் வயதோர் எம்ஜீஆர்,சிவாஜி எனத் தேடிப் பார்த்தபோது, அதில் எம்.ஆர்.ராதா இருந்தால் விரும்பிப்பார்த்தேன்.
அவர் குரலின் ஏற்றஇறக்கம் மிகரசிக்கக் கூடியது.
இவர் பற்றி சாருநிவேதிகா தன் கோணல் பக்கத்தில் அழகான ஆய்வு செய்துள்ளார்.
இருவர் உள்ளத்தில் நல்லவராக நடித்து'புத்திசிகாமணி' பாட்டுக்கு நடித்தார்.
பாலே பாண்டியா...'நீயே உனக்கு ' அதில் சுரப்பிரயோகங்களுக்கு அமர்க்களமாக நடித்துள்ளார்.எனக்கு மிகப் பிடித்த பாட்டில் ஒன்று.
'சித்தியில்' இவர் நடிப்பு பிரமாதம்.
குமுதம் ..மறக்க முடியாத படம்.
இந்த மெட்ராஸ் ராஜகோபால் ராதாக் கிருஸ்ணன் எனும் எம்.ஆர்.ராதா வை..
தமிழ்த் திரையுலகம் மறக்க முடியாது.
அருமையான தொகுப்பு.
பாராட்டுக்கள்.
வணக்கம் யோகன் அண்ணா
ReplyDeleteஎம்.ஆர்.ராதா 8 வயதில் வீட்டை விட்டு ஓடியவர் பேசும் நளினப் பேச்சு படித்தவரைப் போன்று அவரைக் காட்டும். அந்தக் கால நாடகத்தமிழில் இருந்து விலகிய தனித்துவமானவர். கேட்டுக்கருத்தளித்தமைக்கு நன்றிகள்.
http://nhm.in/printedbook/674/M.R.%20Radhayanam
ReplyDeleteஅருமையான புத்தகம். வாய்ப்பு கிடைத்தால் படித்துப் பாருங்கள்
பரிந்துரைக்கு நன்றி நண்பரே, எம்.ஆர் ராதாவின் வாழ்வைப் படிப்பதே சுவாரஸ்யமும், படிப்பினையும் தான்
ReplyDeleteஅருமையான தொகுப்பு நண்பரே.. நன்றிகள்
ReplyDeleteஅருமையான தொகுப்பு நண்பரே.. நன்றிகள்
ReplyDeleteM.R.ராதாவின் வாழ்க்கையில் எனக்கு நிறைய புதுத் தகவல்கள்.
ReplyDeleteகடைசியாக வரும் அவருடைய பாடல் மறக்க முடியாதது. நந்தனாரில் அக்கா கணவன் வேடமும் எனக்குப் பிடித்தது. பலேபாண்டியாவும், பாகப் பிரிவினையும் பிடித்த படங்கள்.