Pages

Sunday, December 16, 2007

நீங்கள் கேட்டவை 24


நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் நீங்கள் கேட்ட பாடல்களோடு மலரும் நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியில் நான் சந்திக்கின்றேன். இனி மாதம் ஒரு பதிவாதல் உங்கள் விருப்பப் பாடல்களோடு கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கின்றேன். இயன்றவரை இணையத்தில் அதிகம் புழங்காத பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்கள் விருப்பப் பாடல்களை நீங்கள் அறியத்தந்தால் அவை முன்னுரிமை கொடுத்து இடம்பெறும் என்று சொல்லிக் கொண்டு இன்றைய பதிவில் இடம்பெறும் பாடல்களைப் பார்ப்போம்.

முதலில் புதுகைத் தென்றல் என்ற தமிழ்மணத்தின் புதுவரவுப் பதிவர் விரும்பிக் கேட்டிருக்கும் "செவ்வந்தி பூக்களில் செயத வீடு" பாடல் மெல்லப் பேசுங்கள் திரைப்படத்திற்காக தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன் குரலில் ஒலிக்கின்றது. இசை: கங்கை அமரனின் சகோதரர், யுவனின் அப்பா

வலையுலக இசை ரசிகர் ஜி.ராகவனின் விருப்பமாக வரும் அடுத்த தேர்வு இளையராஜா சகோதரர் கங்கை அமரன் இசையில் மலர்களே மலருங்கள் திரைக்காக "இசைக்கவோ நான் கல்யாண ராகம்" என்ற இனிய பாடல் ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி குரல்களில் ஒலிக்கின்றது.

புது வரவு இலங்கைப் பதிவர் ரிஷான் ஷெரிப் கேட்டிருக்கும் பாடல் கெளரி மனோகரி திரைக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் "பார்த்த பார்வையில் என்னுள்ளம் என்ன பள்ளமானது" என்னும் பாடல். இசையை அமைத்தவர் இனியவன் என்னும் அறிமுக இசையமைப்பாளர். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வந்த இப்படத்தை வி.சி.டியில் எடுப்பதே கடினம். நடிகர்கள் உட்பட பெரும்பாலான தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு அறிமுகம் இப்படம். இலங்கை எப்.எம் வானொலிகளில் அப்போது அடிக்கடி வந்த பாட்டு இது.


அடுத்து நம்ம பெருமைக்குரிய கொ.ப.செ கோபி விருப்பமாக மலையாள காலாபாணி, தமிழில் சிறைச்சாலை ஆன திரையில் இருந்து ராஜா சார் இசையில் எம்.ஜி.சிறீகுமார், சித்ரா பாடும் "சுட்டும் சுடர் விழி பார்வையிலே தூண்டில் இடும் தேவி" என்னும் இனிய கீதம்.

உங்களுக்கெல்லாம் போட்டாச்சு. என் விருப்பத்தையும் சொல்லி விட வேண்டாமா?
ஒரு கைதியின் டைரி திரையில் இருந்து விஜய் என்ற பெயரில் பாடிய இப்போதைய உன்னிமேனனும், உமாரமணனும் கூவும் " பொன் மானே கோபம் ஏனோ" பாட்டைக் கேட்டுக் கிறங்கி நீங்களும் பாட்டுக் கேட்க வாருங்கள் ;-)
Powered by eSnips.com

30 comments:

 1. மீண்டும் நீங்கள் கேட்டவை. :) மகிழ்ச்சி மகிழ்ச்சி. அதுவும் நல்ல பாடல்களோடு.

  திருவெம்பாவையோடு உமா ரமணன் தொடங்கும் செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு பாடல் தேன் தேன். ஆகா.

  இசைக்கவோ நம் கல்யாண ராகம்...ஆகா...ஜெயச்சந்திரனும் ஜானகியும் மிக அழகாகக் குரலால் செதுக்கிய ஒலிச்சிற்பம்.

  பார்த்த பார்வையில் பாடலை இப்பொழுதுதான் கேட்கிறேன். கௌரி மனோகரி படம் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா சரியா நினைவில்லை.

  சுட்டும் விழிச்சுடர் பாட்டைப் பத்திச் சொல்ல வேண்டியதில்லை. பொன்மானே கோபம் ஏனோ...ஆகா...நல்ல பாட்டு. இன்னைக்கு ரெண்டாவது உமாரமணன் பாட்டு இது. :)

  ReplyDelete
 2. கடைசி இரண்டு பாட்டுக்கள் நான் ஏற்கெனவே விரும்பி கேட்கும் பாடல்கள்!!
  அதுவும் "பொன்மானே" பாடல் எனக்கு ரொம்ப பிடித்தமான பாடல்.
  பதிவிட்டதற்கு நன்றி! :-)

  ReplyDelete
 3. அருமையான தெரிவுகள். "பார்த்த பார்வையில் என்னுள்ளம் என்ன பள்ளமானது" - 90 களின் ஆரம்பத்தில் கொழும்பு இந்துக் கல்லூரியில் O/L படித்த நாட்களில் கேட்டவை.
  நன்றி.

  ReplyDelete
 4. DEAR BROTHR,FROM THE BEGINING OF NEENGAL KETTAVAI ,I HEARING ALL THE SONGS FROM YOUR RADIOSPATHI SITE ,YOUR WELL TRY IN RARE SONGS IS REALLY SUPERB,KEEP IT UP,

  ReplyDelete
 5. // G.Ragavan said...
  மீண்டும் நீங்கள் கேட்டவை. :) மகிழ்ச்சி மகிழ்ச்சி. அதுவும் நல்ல பாடல்களோடு.//

  வாங்க ராகவன்

  இசைக்கவோ பாட்டு ஒரு லட்டு. மற்றப்பாடல்களும் பூந்திலட்டு வகையறா.

  கெளரி மனோகரி பாட்டை ஈழத்து ரசிகர்கள் விரும்பிய அளவுக்கு பக்கத்து வீட்டுக்காரங்க விரும்பல என்று நினைக்கிறேன் ;)

  ReplyDelete
 6. //CVR said...
  கடைசி இரண்டு பாட்டுக்கள் நான் ஏற்கெனவே விரும்பி கேட்கும் பாடல்கள்!!
  அதுவும் "பொன்மானே" பாடல் எனக்கு ரொம்ப பிடித்தமான பாடல்.
  பதிவிட்டதற்கு நன்றி! :-)//

  வாங்க சிவிஆர்

  பொன்மானே பாட்டை நிறையப்பேர் ஜேசுதாஸ் பாடியதாகவே நினைச்சிருக்காங்க.

  சுட்டும் சுடர் விழி பாட்டும் இன்னொரு மலையாளப்பாடகர் சிறீகுமார் அருமையாகப் பாடியிருக்கும் பாடல்களில் ஒன்று.

  ReplyDelete
 7. அருமை! நன்றி!

  கேப் விடாம மாசத்துக்கு ஒண்ணு வந்தா சந்தோஷமே!
  பாடல்களுக்கு பஞ்சம்னா சொல்லுங்க, யோசிச்சு கேக்கறேன் :)

  டி.எம்.எஸ் ஸ்பெஷல் ஒண்ணு போடுங்க சாரே.

  ReplyDelete
 8. எனது விருப்பத்துக்குரிய பாடலை இங்கு தந்ததற்கு மிகவும் நன்றி கானா பிரபா.
  கேட்பதற்கரிதான அப்பாடல் அருமையான வரிகளுடனும்,நல்ல இசையுடனும் அமைந்தது.
  எந்த வெளி ஓசையும் கேட்காத ஒரு நள்ளிரவில் அமைதியாக,மெல்லிய ஓசையில் அப்பாடலைக்கேட்க வேண்டும்.

  ReplyDelete
 9. THIRU PRABAKAR AVARGALE,

  INI PULAKATHIL ILLATHA ARIYA PADALGALAI THERVU SEIYUM MUDIVUKKU
  ENATHU VALTHUKKAL.
  IDHO SILA PADALGAL:
  1. DEIVEEGA RAGANGAL - PAAVAI NEE MALIGAI (JAYACHANDRAN)
  2. NELLI KANI - VAYASU PONNU THANIYE NINNU SIRIPATHENNA

  OLI PARAPIRUKKU ADVANCE NANDRI.

  SRIKANTH

  ReplyDelete
 10. // Sabes said...
  90 களின் ஆரம்பத்தில் கொழும்பு இந்துக் கல்லூரியில் O/L படித்த நாட்களில் கேட்டவை.
  நன்றி.//

  வணக்கம் சபேஷ்

  நீங்களும் நானும் ஒரே வகுப்புக்கார போல இருக்கு. சமகாலத்தில் நானும் இப்பாடலே அதே வகுப்பில் படித்த காலத்தில் தான் கேட்டேன்.

  //thangavelu said...
  DEAR BROTHR,FROM THE BEGINING OF NEENGAL KETTAVAI ,I HEARING ALL THE SONGS FROM YOUR RADIOSPATHI SITE ,YOUR WELL TRY IN RARE SONGS IS REALLY SUPERB,KEEP IT UP,//

  மிக்க நன்றி சகோதரரே. உண்மையில் உங்களைப் போன்ற இசைரசிகர்களை இப்பதிவுகள் மூலம் பெற்றது பெருமைக்குரிய விடயம். முடிந்தால் உங்கள் தேர்வுப்பாடல்களையும் அறியத் தாருங்கள்.

  ReplyDelete
 11. // SurveySan said...
  அருமை! நன்றி!

  கேப் விடாம மாசத்துக்கு ஒண்ணு வந்தா சந்தோஷமே!
  பாடல்களுக்கு பஞ்சம்னா சொல்லுங்க, யோசிச்சு கேக்கறேன் :)//


  தல

  பாட்டுக்குப் பஞ்சமில்லை, ஆனால் இணையத்தில் அதிகம் உலாவாத பாடல்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம் என்றிருக்கின்றேன், உங்களிடமும் அப்படித் தெரிவிருந்தால் சொல்லுங்கள்.

  ReplyDelete
 12. தல பாட்டுக்கு நன்றி...இன்னும் எதுவும் கேட்கவில்லை...;(

  ReplyDelete
 13. //எம்.ரிஷான் ஷெரீப் said...
  எனது விருப்பத்துக்குரிய பாடலை இங்கு தந்ததற்கு மிகவும் நன்றி கானா பிரபா.
  //

  தொடர்ந்து இப்படியான விருப்பங்களை அறியத்தாருங்கள் ரிஷான்

  ReplyDelete
 14. நிச்சயமாக கானா பிரபா.
  எனது அடுத்த பாடலாக 'அமராவதி' திரைப்படத்திலிருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 'ஆஹா கனவே தானா...?' பாடல் முன்வைக்கப் படுகிறது.
  இயலுமா நண்பரே ?

  ReplyDelete
 15. நன்றி! அடுத்த நேயர் விருப்பத்தில் எனது விருப்பம் 'உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்', ஜானகி பாடியது 'அவளுக்கென்று ஒரு மனம்' படத்திற்காக..

  ReplyDelete
 16. சிறீகாந், ரிஷான், தங்க்ஸ்

  நீங்கள் கேட்ட பாடல்களை முயற்சி செய்து தருகின்றேன். சிறீகந்தின் பாடல் தெரிவைத்தான் நேரமெடுத்து தரவேண்டியிருக்கும்.

  கோபி தல, சீக்கிரமே கேளுங்கப்பா, சும்மா ஆணி புடுங்கிக்கிட்டு

  ReplyDelete
 17. பிரபா,

  மேலேயொருவர் சொன்னதுபோல் ரி.எம்.எஸ் இன் தொகுப்பொன்று (சில பாகங்களாவது) இடவேண்டுமென்பது என் அவா.
  தனக்கிருக்கும் ஆணவத்தையும் மீறி மிகவுயர்ந்த திறமையுடைய கலைஞர் அவர்.
  எனது விருப்பப் பாட்டாக 'நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனா?' பாடலை ஒலிபரப்பவும்.
  இன்னொரு பாடலும் தேவை.
  'அமுதைப் பொழியும் நிலவே, நீ அருகில் வராததேனோ?'

  பாடல்களை இடும்போது ஓர் அஞ்சல் அனுப்ப முடியுமா?

  [முக்கியமான ஆக்கள் வலையுலகில காணாமற் போயிருக்கிற நேரந்தான் இப்பிடிப் பாட்டுக்கள் கேட்க முடியும். இல்லாட்டி 'மலைநாடான், கானாபிரபா காலத்திலே' எண்டு கலந்துரையாடியவர்கள், அதற்கும் முற்பட்ட காலத்துக்குப்போய் என்ர பேரைப் பாவிச்சு இடுகையிடுவாங்கள்.]

  ReplyDelete
 18. வசந்தன்

  நீங்கள் கேட்ட பாட்டுக்கள் வரும், இணையத்தில் தலையாட்டிகள் இயங்குவதால் கொப்பி ரைட் பிரச்சனை காரணமாக தரவிறக்கல் பொதுவாக்கப்படவில்லை. ஏதாவது வழியில் அவற்றைத் தர முயல்கின்றேன்.

  பாட்டுக்கேட்கிறதுக்கு வயசு முக்கியமில்லை, என்னைப் பாருங்கோ ரகுமான் இசையமைக்க வந்தாப் பிறகு தானே நானே பிறந்தனான் ;-)

  ReplyDelete
 19. இன்னுமிரண்டு பாடல்கள் வேண்டும் கானா பிரபா.
  முடிந்தால் வீடியோஸ்பதியிலும் போடுங்கள் நண்பரே..!
  1.என்னதான் சுகமோ நெஞ்சிலே...
  மாப்பிள்ளை திரைப்படத்திற்காக எஸ்.பி.பி மற்றும் எஸ்.ஜானகி பாடியயது.
  2.மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு...
  எஸ்.பி.பி மற்றும் சித்ரா பாடியது.படம் பெயர் தெரியவில்லை.

  ReplyDelete
 20. மன்னிக்கவும்...மேலுள்ள தெரிவுகள் என்னுடையவை.பெயரிலி என வந்திருக்கிறது.தராமல் இருக்கவேண்டாம் நண்பரே..!

  ReplyDelete
 21. ரிஷான்

  தமிழ்ழ எனக்குப் பிடிக்காத வார்த்தை - மன்னிப்பு.

  பாட்டுக்கள் கட்டாயம் வரும், மெதுவா மெதுவா பாட்டு அண்ணா நகர் முதல் தெரு படத்தில் வந்தது.

  ReplyDelete
 22. நன்றிகள் கானாபிரபா.
  மன்னிக்கச் சொன்னது மேலுள்ள தெரிவில் என் பெயரிட மறந்தமைக்கு நண்பரே..!

  ReplyDelete
 23. கானா,
  கலக்குறிங்க தல, செவ்வந்தி பூக்களில் செய்த வீடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு பாடலை நான் இணையத்தில் தேடிப்பார்த்து கிடைக்கவே இல்லை. தற்செயலாகப்பார்த்தால் உங்க பதிவுல இருக்கு.வானொலியில் பாட்டைக்கேட்டுவிட்டு தறவிரக்கலாம்னு தேடினேன்.

  இணையத்தில் அவ்வளவாக இல்லாதப்பாடல்களைத்தான் ஒலிப்பரப்புவேன் எனும் கொள்கை குன்றாக நீங்க இருப்பதை அப்போது மறந்துவிட்டேன்!

  மற்றப்பாடல்களும் அருமை!

  ReplyDelete
 24. ரொம்ப நாளைக்கு அப்பரம் இந்த பாட்டெல்லம் கேட்டேன் சூப்பர் கலெக்ஷன்ங்க ப்ரபா........ரொம்ப நன்றி

  ReplyDelete
 25. // வவ்வால் said...
  கானா,
  கலக்குறிங்க தல, செவ்வந்தி பூக்களில் செய்த வீடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு பாடலை நான் இணையத்தில் தேடிப்பார்த்து கிடைக்கவே இல்லை.//

  வாங்க நண்பா

  வருகைக்கு நன்றி, இது போன்ற வேறுபாடல்களையும் தேடினால் சொல்லுங்கள்.

  //Radha Sriram said...
  ரொம்ப நாளைக்கு அப்பரம் இந்த பாட்டெல்லம் கேட்டேன் சூப்பர் கலெக்ஷன்ங்க ப்ரபா........ரொம்ப நன்றி//

  வணக்கம் Radha Sriram

  பாடல்களைக் கேட்டதோடு பின்னூட்டியமைக்கும் மிக்க நன்றிகள்

  ReplyDelete
 26. //பொன்மானே பாட்டை நிறையப்பேர் ஜேசுதாஸ் பாடியதாகவே நினைச்சிருக்காங்க. //

  99 சதவிகிதம் பேர் அப்படித்தான் நம்பியிருந்தார்களென்றால் மிகையாகாது (அடியேன் உட்பட). ரோஜாவிற்குப் பிறகுதான் உன்னிமேனன் மீது நமக்கெல்லாம் கவனம் வந்ததல்லவா.

  ஜாலி அப்ரஹாம் என்றொரு மற்றொரு மலையாளப் பாடகர், அவரது குரலும் கிட்டத்தட்ட ஜேசுதாஸின் குரல் போலவே இருந்ததாகக் கருதப்பட்டதாகவே எனக்கு நியாபகம். அவர் பாடிய "அடியேனைப் பாரம்மா, பிடிவாதம் ஏனம்மா, வணக்கத்துக்குறிய காதலியே, வணக்கத்துக்குறிய காதலியே" என்ற பாடலைக் கேட்க எனது விருப்பம். எங்கு தேடினாலும் கிடைக்கவில்ல... கிடைத்தால் கொஞ்சம் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.

  ReplyDelete
 27. ஆமாம்..நான் கூட அப்படித்தான் எண்ணியிருந்தேன்.உன்னிமேனன் குரலில் ஜேசுதாஸ் சாயல் இருக்கிறது.
  அதுபோலவே இப்பொழுதுள்ள பாடகர்களில் மதுபாலகிரிஷ்ணனின் குரலில் ஜேசுதாஸின் சாயலிருப்பதைக் கவனிக்கலாம் :)

  ReplyDelete
 28. வணக்கம் பாரதீய நவீன இளவரசே

  ஜாலி ஆப்ரகாமின் பாடல்கள் பல இனிமையானவை. ஒரு தொகுப்பே போடலாம். அடியேனைப் பாரம்மா பாட்டு கட்டாயம் வரும்.
  இன்னும் 2 வாரங்களில் உன்னிமேனனின் கச்சேரி இங்கு இருக்கு, அதைப் பற்றியும் சொல்வேன்


  ரிஷான்

  மது பாலகிருஷ்ணன் தனது மேடைப்பாடல்களில் அதிகம் ஜேசுதாசைச் சேர்த்துத் தான் கொடுத்தும் வருகின்றார்.

  ReplyDelete
 29. என் விருப்பப் பாடலை தந்தற்கு நன்றி நண்பரே.
  இந்தப் பாடலை கேட்ட போது நான் அடைந்த மகிழ்ச்சி வார்த்தைகளில் சொல்ல முடியாது.
  அடுத்தமுறை சொந்தம் படத்தில் யேசுதாஸ் பாடிய பாடல் ஒன்று வேண்டும்.

  சந்தோஷம் காணாத ஆளுண்டா?
  சங்கீதம்
  ஒரு துன்பம் வந்தால்- அதை இன்பம் என்று எண்ணி வாழ்ந்துவிட்டால்.

  ReplyDelete
 30. வாங்க புதுகைத்தென்றல்

  உங்க அடுத்த பாட்டும் சீக்கிரம் வரும்.

  ReplyDelete