Pages

Thursday, November 1, 2007

றேடியோஸ்புதிர் 3 - வெண்ணிலா பாட்டுக்கு ஆடிய சார்லி

வழக்கமாக றேடியோஸ்பதியில் இருவாரங்களுக்கு ஒருமுறை பாட்டுப் புதிர் கொடுப்பேன். அடுத்த வாரம் தீபாவளி வாரமாக இருப்பதால் முன் கூட்டியே ஒரு போட்டிப் பதிவு. பதில்களோடு வாருங்கள். நாளை இதே நேரம் உங்கள் பதில்கள் திறந்து விடப்பட்டுச் சரியான முடிவும் அறிவிக்கப்படும்.

சரி இனிப் போட்டிக்குச் சொல்வோம்.

இங்கே தரப்படும் பாட்டுக்குப் படத்தில் ஆடுபவர் 80 களில் நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவுக்கு வந்தவர். கேள்வி இது தான், இப்பாடலுக்கு ஆடும் அந்த நகைச்சுவை நடிகர் யார்?

இப்படி நேற்று ஒரு புதிரை உங்களிடம் வைத்தேன். பெருவாரியான வலையுலக அன்பர்கள் சரியான விடையைக் கொடுத்திருக்கின்றார்கள். அவர் வேறு யாருமல்ல, நகைச்சுவை நடிகர் சார்லி தான்.

சரியான விடையை 13 பேர் சொல்லியிருக்கின்றீர்கள்.
இந்தப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. சார்லி புகைப்படம் நன்றி: திரைப்படம்.காம்

பாடல் இடம்பெற்ற திரைப்படம் " நியாயத் தராசு". பலர் இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும், இப்படத்தில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் உண்டு என்பதையும் சொல்லி வைக்கிறேன். இப்படத்துக்கு வசனம் மற்றும் திரைக்கதை கலைஞர் மு.கருணாநிதி. வழக்கமாக எஸ்.ஏ சந்திரசேகரனின் அதிக படங்களுக்குத் தான் அன்றைய காலகட்டத்தில் கலைஞரின் பங்களிப்பு இருந்தது. ஆனால் இப்படத்தை இயக்கியவர் இயக்குனர் ராஜேஷ்வர்.

நடிகர் சார்லி, பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் இயக்குனர் கே.பாலசந்தர் அறிமுகத்தில் வந்தவர். தொடர்ந்து திரையுலகம் இவரை நல்ல முறையில் பயன்படுத்தியிருக்கலாம் என நான் நினைப்பதுண்டு. அதே போல் "நியாயத் தராசு" வந்த போதும் சார்லி பெரிய அளவில் பேசப்படும் நடிகர் அல்ல. இவருக்கு எப்படி இந்த நல்ல பாட்டுக்கு தனி ஆட்டம் போடக் கிடைத்ததுண்டு? இயக்குனர் ராஜேஷ்வர் எப்படி இவரைத் தேர்ந்தெடுத்திருப்பார் என்பது இன்னும் எனக்குள் இருக்கும் ஆச்சரியம்.

சார்லியை விருதுப் பட இயக்குனர் ஜெயபாரதி "நண்பா நண்பா" என்ற திரைப்படத்தில் நல்ல பாத்திரம் கொடுத்து நடிக்க வைத்ததாக முன்னர் படித்திருந்தேன். ஆனால் அப்படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

வெகுகாலம் முன்னர் ஆனந்த விகடனில் சார்லியின் தனி நடிப்பு ஒன்று தியேட்டர் டிக்கட் கவுண்டரில் நிற்கும் கியூவில் இருக்கும் ஒரு பாத்திரமாக நடித்த அந்தப் பிரதி வெளியானபோதும் அவரின் நகைச்சுவை உணர்வு குறித்து எனக்கு வியப்பிருந்தது.

பின்னூட்டம் வாயிலாக இப்படம் குறித்தும், பாடல் குறித்தும் நண்பர் பாரதீய நவீன இளவரசன் சொல்வதைக் கேளுங்கள்.

CHARLIE was that comeday actor who impressed with good dance in that film...NYAYA THARASU. I really wonder why Charlie did not get an oppurtunity to dance after that.

The film failed to click in box office despite a very good naration and the splendid performance of Radha coming in the fag end of her Tamil film career.

Actually, this is a remake of the malayalam hit PANCHAGNI directed by Hariharan, starring Geetha in the lead and Mohanlal playing the second fiddle.

One more song in NYAYA THARASU that lingers in my mind even today is 'Vaanam arugil oru vaanam, tharaiyil vantha maegam thalai thuvatti pOgum....' in the sweet voice of by KJJesudoss and the melody is composed by none other than our Shankar Ganesh.

அக்னி நட்சத்திரம் படத்தில் நம்ம இளையராஜா "ராஜா ராஜாதி ராஜனெங்க ராஜா" என்று பாடி சூப்பர் ஹிட் ஆக்கினாலும் ஆக்கினார். அவரைத் தொடர்ந்து அன்றைய காலப்பகுதியில் இசையமைப்பாளர்களாக இருந்தவர்கள் ஆளுக்கு ஆள் அதே மாதிரியான ஒரு டஜன் பாடல்களைக் கொடுத்து விட்டார்கள். அதில் ஒன்று தான் இங்கே நான் ஒலி வடிவில் தந்திருக்கும் மனோ பாடி, சங்கர் கணேஷ் இசையமைத்த " வெண்ணிலா! என்னோடு வந்து ஆட வா" என்ற பாடல்.

39 comments:

 1. படம்: நியாயத்தராசு, நடிகர் சார்லி.
  சரியா?

  ReplyDelete
 2. பெத்தராயுடு

  சரியான விடை தான் சொல்லியிருக்கீங்க, வாழ்த்துக்கள் ;)

  இன்னும் பலர் முயற்சி செய்யட்டும். உங்கள் பின்னூட்டலோடு முடிவு நாளை வரும்.

  ReplyDelete
 3. சின்னிஜெயந்த் என்ரு நினைக்கிறேன். சரியா???

  ReplyDelete
 4. குட்டிப்பிசாசு நண்பரே

  சின்னி ஜெயந்த் என்பது தவறு

  ReplyDelete
 5. தல அந்த நடிகர் சார்ளி ;))

  ReplyDelete
 6. வணக்கம் பிரபா !
  இப்பாடலுக்கு ஆடியவர் சார்லி . அது மட்டுமல்ல இப்பாடல் Michael Jackson இன் ஒரு பாடலின் தழுவல்

  ReplyDelete
 7. வினையூக்கி சரியா சொல்லியிருக்கீங்க வாழ்த்துக்கள்


  கொ.ப.செ கோபி இந்த வாட்டி பிட் அடிச்சு பாஸ் பண்ணீட்டிங்க, சரி சரி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. பகீரதன் உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  //அது மட்டுமல்ல இப்பாடல் Michael Jackson இன் ஒரு பாடலின் தழுவல்//

  சங்கர் கணேசுக்கு கை அடிக்கடி அரிக்கும், நம்ம தேவா சார் போல ;)

  ReplyDelete
 9. //
  //அது மட்டுமல்ல இப்பாடல் Michael Jackson இன் ஒரு பாடலின் தழுவல்/////
  BINGO!! :-)

  ReplyDelete
 10. பிரகாஷ் கலக்கிட்டீங்க

  CVR பின்னீட்டிங்க

  ReplyDelete
 11. ?பாடலை இணையத்தில் தேடினால் எவ்வளவு தூரம் வெற்றி கிடைக்கும் என்று தெரியாது, காரணம் இது என் சொந்த சேமிப்பில் இருக்கும் பாடல்.


  ethu romba OVER !!! "irruputhu kai alavu " thozha

  ReplyDelete
 12. //"irruputhu kai alavu " thozha//

  ;-)) இருப்பது கையளவு தான் தோழர், ஆனா இந்தப் பாட்டு இணையத்தில் இருக்குமானு செக் பண்ணினேன், எனக்கும் தோல்வி கிடைத்தது. இருப்பினும் தன்னடக்கத்துடன் பாட்டு போட்டுட்டேன்.

  ReplyDelete
 13. film : niyaya thrasu
  actor: charlie

  ReplyDelete
 14. தற்போது வந்த பெயர் குறிப்பிட விரும்பாத அன்பர், நீங்கள் சரியாகக் கணித்திருக்கின்றீர்கள், நன்றி.

  ReplyDelete
 15. CHARLIE was that comeday actor who impressed with good dance in that film...NYAYA THARASU. I really wonder why Charlie did not get an oppurtunity to dance after that.

  The film failed to click in box office despite a very good naration and the splendid performance of Radha coming in the fag end of her Tamil film career.

  Actually, this is a remake of the malayalam hit PANCHAGNI directed by Hariharan, starring Geetha in the lead and Mohanlal playing the second fiddle.

  One more song in NYAYA THARASU that lingers in my mind even today is 'Vaanam arugil oru vaanam, tharaiyil vantha maegam thalai thuvatti pOgum....' in the sweet voice of by KJJesudoss and the melody is composed by none other than our Shankar Ganesh.

  Gana Praba, thanks for the post.

  ReplyDelete
 16. பாரதீய நவீன இளவரசரே

  சரியான பதிலைத் தந்ததோடு சுவையான பல குறிப்புக்களையும் தந்திருக்கின்றீர்கள். நீங்கள் குறிப்பிட்ட அந்த இரண்டாவது பாடலும் எனக்கு எப்போதும் பிடித்த பாடல்கள் பட்டியலில் இருக்கின்றது. அந்தப் பாட்டுக்கு தமிழக அரசின் சிறந்த பாடகர் விருது கிடைத்ததாக அறிகின்றேன். அந்தப் பாட்டையும் ஒரு தடவை பதிவாகத் தருகின்றேன்.

  உங்கள் பின்னூட்டம் நாளை வெளியிடப்படும்.

  ReplyDelete
 17. 'janagaraj'nnu nyapagam, padam paer 'niyaayath tharaasu'!

  N Chokkan,
  Bangalore

  ReplyDelete
 18. அண்ணே... பதிலலெனக்கு தெரியவில்லை. நாளைக்கு வந்து ப்அதில் பார்த்துக்கொள்கிறேன். ;-)

  ReplyDelete
 19. வணக்கம் N Chokkan

  படம் பெயர் சரியா சொல்லியிருக்கீங்க, நடிகர் பெயர் தவறு, உங்கள் பின்னூட்டம் நாளை வெளியிடப்படும், நன்றி

  //.:: மை ஃபிரண்ட் ::. said...
  அண்ணே... பதிலலெனக்கு தெரியவில்லை. நாளைக்கு வந்து ப்அதில் பார்த்துக்கொள்கிறேன். ;-)//

  வாங்க தங்கச்சி

  யாராவது அண்ணன்காரங்களிட்டை கேட்டுப் பாருங்களேன், இல்லேன்னா நாளை வரை காத்திருங்க ;)

  ReplyDelete
 20. Just Guessing, Is it Charlie? ;)

  ReplyDelete
 21. ஐயோ கண்ணுக்குள் இந்தப்பாடல் நிற்கின்றது ஆனால் யார் ஆடியது என்று மறந்துவிட்டேன். கவுண்டமணி என நினைக்கின்றேன். எதற்க்கும் நாளை வரை பொறுத்திருக்கிறேன். எனக்காக பூங்கதவே தாழ் திறவாய் என்ற பாடலை ஒளிபரப்புங்கள்.

  ReplyDelete
 22. N Chokkan இரண்டாவது முறை சரியாச் சொல்லியிருக்கீங்க, வாழ்த்துக்கள்.

  வந்தியத் தேவன்

  இந்தப் பாட்டுக்கு கவுண்டமணியை ஆட வைத்து ஏன் கஷ்டபடவைப்பான்? நீங்கள் கேட்ட பாட்டு விரைவில் வரும்.

  ReplyDelete
 23. ஒரு மலையாளப்படத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமான நியாயத்தராசின் முழுச்சுமையினையும் சுமக்க வேண்டிய பொறுப்பு ராதாவிடமும் நிழல்கள் ரவியிடமும் வந்தது.

  இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களும் நன்றாக இருக்கும்.கே.ராஜேஷ்வரின் இயக்கத்தில் வந்த இந்தப் படத்துக்கு மட்டுமல்ல அவரது அடுத்த படமான இதயத்தாமரைக்கும்(இதற்கு ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம்) சங்கர்-கணேஷ் தான் இசையமைத்தது.

  நியாயத்தராசில் எல்லாப் பாடல்களும் நல்லா இருக்கும்.கே.ஜே.யேசுதாஸ் குரலில் வந்த "வானம் அருகில் உருவாகும்" பாடலும் நல்லா இருக்கும்...

  நீங்க என்ன கேட்டீங்க??? ஓ..அதுவா???

  இந்தப் பாட்டுக்கு நடனம் ஆடினவர் சார்லி அண்ணாச்சீ...

  ReplyDelete
 24. ஓமப்பொடியாரே

  அடி தூள் கிளப்பீட்டீங்க, ஒரு பதிவுத் தூண்டில் போட்டு நிறைய விஷயங்களை உங்களிடமிருந்து எடுத்துவிட்டேன். நீங்கள் குறிப்பிட்டது போல் தொடர்ந்து இந்த இயக்குனரும் சங்கர் கணேஷும் இணைந்து மிக நல்ல பாட்டுக்களைக் கொடுத்திருக்கின்றார்கள். உங்களுக்கு சரியான பதில் தான் சொல்ல வரும்னு வேற நான் சொல்லணுமா ;)

  பின்னூட்டம் மாலை வெளியிடப்படும்.

  ReplyDelete
 25. இன்னும் இரு மணி நேரத்தில் சரியான பதிலோடு பதிவு புதுப்பிக்கப்படும், அதற்கு முன் யாராவது பதிலளிக்க விரும்பினால் ஓடி வாங்கோ

  ReplyDelete
 26. கூகில் என்றால் சும்மாவா??
  பதில் : சார்லி.

  ReplyDelete
 27. கூகிளானைச் சரணடைந்து தங்கை சினேகிதி சரியான விடையுடன் வந்திட்டா ;) வாழ்த்துக்கள்

  ReplyDelete
 28. google உதவி செய்யாது என்று சொல்லி 5 நிமிடத்தில பதில் சொன்னான் நான். படத்தின்ர பெயர் கண்டுபிடிக்கத்தான் நேரம் எடுத்தது.

  ReplyDelete
 29. சார்லின்னு நெனக்கிறன். தப்பான்னு சீக்கிரம் சொல்லிருங்க‌

  ReplyDelete
 30. சின்ன அம்மணி, உங்க பதில் சரி வாழ்த்துக்கள் ;)

  ReplyDelete
 31. வணக்கம் சீனு

  ஜனகராஜ் தப்பு

  ReplyDelete
 32. என்னை பொருத்தவரை சங்கர்-கணேஷ் இசை அமைத்த மிகச்சிறந்த படங்களில் "நியாய தராசு" க்கு முக்கிய இடமுண்டு. சங்கர்-கணேஷ் 1300 படங்களுக்கு மேல் இசைவடிவம் கொடுத்து இருக்கிறார்களாம். சங்கர்-கணேஷ் பற்றியும் ஒரு பதிவு போடலாமே? என் எண்ணம் சரிஎன்றால், சீகிரமே எதிர்ப்பார்க்கிறோம்.

  ReplyDelete
 33. வணக்கம் இசைப்பித்தன்

  கண்டிப்பாக சங்கர் கணேஷ் தொகுப்புப் பாடல்களைப் பின்னர் தருகின்றேன். தங்கள் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 34. கானா ப்ரபா... நீங்கள் தேர்வு செய்த இந்தப்பாடலும் நல்ல பாடல்தான். தவிர, சார்லி பற்றி ஒரு பதிவு போடலாம்.

  இன்றைய காமெடி நடிகர்களில் குணச்சித்திரத்தை சரியாக வெளிப்படுத்தத் தெரிந்த ஒரே நகைச்சுவை நடிகர் அவர்தான். வடிவேலுவிற்கு குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் 'தேவர் மகன்' படத்திற்குப் பிறகு வாய்ப்புக் கிடைத்ததாகத் தெரியவில்லை. சார்லியோ, பல படங்களில், மிகத் திறமையாக நடித்திருக்கிறார் (உம் - வெற்றிக்கொடி கட்டு).

  நியாயத் தராசு படம் தோல்வியானதாலேயோ என்னமோ, சார்லியின் நடனம் அதிகம் பேர் அறிந்திராத விஷயமாகப் போய்விட்டது.

  ReplyDelete
 35. வணக்கம் பாரதீய நவீன இளவரசரே


  வெற்றிக்கொடி கட்டு உட்பட சார்லியின் தனித்துவமான நடிப்பில் வந்த படைப்புக்களோடு நிச்சயமாக இப்படியான ஒரு பதிவு தர முயல்கின்றேன்.

  ReplyDelete