Pages

Sunday, October 14, 2007

றேடியோஸ்புதிர் 1 - பாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்டு என்ன?


கடந்த யூலை மாதம் பாடகி சித்ரா, மது பாலகிருஷ்ணன், நிஷாத் ஆகியோர் சிட்னி வந்து இனியதொரு இசை விருந்தை அளித்திருந்தார்கள். பாடகி சித்ராவே நிகழ்ச்சித் தொகுப்பைச் செய்து வழங்கிய நிகழ்வு என்பதால் பாடல்களுக்குப் பின்னால் ஒளிந்திருந்த பல சுவையான சம்பவங்களையும் கோடிட்டுக் காட்டிக் கொண்டே போனது இன்னும் சுவையாக இருந்தது. சொல்லப்போனால் இப்படியான இசை நிகழ்ச்சிகளில் நான் அதிகம் ரசிப்பது, பாடகர்கள் தாம் அடைந்த அனுபவங்களைச் சொல்லிப் பாடுவது தான். சித்ராவின் இசை நிகழ்ச்சி குறித்துக் குறிப்பெடுத்துக் கொண்டாலும் நேர காலம் கனிந்து வராததால் அந்த நிகழ்ச்சி குறித்த பதிவை நான் தரவில்லை. அவ்வப்போது அவற்றை நான் தொடரும் பதிவுகளில் பகிர்வேன்.ஆனாலும் அந்த நிகழ்ச்சியில் சித்ரா சொன்ன ஒரு சம்பவத்தை இங்கே கேள்வியாக வைக்கின்றேன். பார்ப்போம் எத்தனை பேர் சரியாகச் சொல்கின்றீர்கள் என்று.

இளையராஜா இசைமைத்த ஒரு படம். பாட்டுக்கு மெட்டுப் போட்டாயிற்று. சித்ராவிற்கும் பாடிக் காட்டியாயிற்று. வாத்தியக்காரர்களை ஒருங்கிணைத்து எப்படியான இசைக் கோர்வை பாட்டில் வரவேண்டும் என்று இளையராஜா எதிர்பார்த்ததையும் வாத்தியக்காரர்களுக்குச் சொல்லியாயிற்று. சரி, இனிப் பாடல் ஒலிப்பதிவுக்கு முன் ஒத்திகை ஆரம்பமாயிற்று.

குறித்த பாடலின் இடையில் வரும் ஆர்மோனிய வாத்திய வாசிப்பை ஆர்மோனியக்காரர் வாசிக்கின்றார். ஆனால் ராஜா மனதில் எதிர்பார்த்தது ஏனோ அதில் மிஸ்ஸிங். மீண்டும் மீண்டும் இளையராஜா, குறித்த வாத்தியக்காரரை அந்த இசையை வாசிக்கச் சொல்லிக் கேட்கின்றார். ம்ஹீம், ராஜா எதிர்பார்த்த அந்தச் சங்கதி வரவேயில்லை.
இளையராஜா ஆர்மோனியத்தை வாங்கிக் கொள்கின்றார். நேராக ஒலிப்பதிவு ஆரம்பம். சித்ரா பாடுகின்றார். மற்றைய வாத்தியங்கள் சங்கமிக்க, இளையராஜாவே நேரடியாக ஆர்மோனியத்தை வாசிக்க, அவர் எதிர்பார்த்த அந்தச் சங்கதியே ராஜாவின் வாசிப்பில் பாடலாக ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது. இந்தப் பாட்டினை அணு அணுவாக ரசிப்பவர்களுக்கு உண்மையில் ராஜா வேண்டிக் கேட்ட அந்த அற்புத ஆர்மோனிய வாசிப்பின் தாற்பர்யம் புரியும். வளைந்து நெளிந்து குழைந்து என்னமாய் பிரவாகிக்கின்றது இந்த இசை.

அந்த ஆர்மோனிய இசையின் ஒலித்துண்டத்தைக் கீழே இணைத்திருக்கின்றேன்.
கேட்டு விட்டுச் சொல்லுங்களேன், பாடகி சித்ரா சொன்ன அந்தப் பாடல் எதுவாக இருக்குமென்று.

28 comments:

 1. தல...

  படம் - மவுனராகம்

  பாடல் வரி - வான்மேகம் பூப்பு பூப்வாய் தூவும்..

  இடம் - ரேவதி மழையில் நனைத்து கொண்டு ஆடும் பாடல்

  ReplyDelete
 2. தல

  பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ;-))

  ReplyDelete
 3. பாடல் : ஆத்தாடி அம்மடி தேன் மொட்டுதான்
  கூத்தாடும் தூரல்கள் நீர்விட்டு தான்
  (அதுமாதிரி ஏதோ வரும்)

  படம் : இதயத்தை திருடாதே!!

  awesome harmonium piece!
  எனக்கு மிகவும் பிடித்த இசை இது!! :-)

  ReplyDelete
 4. சிவிஆர்

  பின்னீட்டீங்க ;-)

  உங்க பதிலை 10 மணி நேரம் கழிச்சு வெளியிடறேன். இன்னும் நம்ம பசங்க ட்ரை பண்ணட்டுமே.

  ReplyDelete
 5. அண்ணா திடீர் என்று இப்படி ஒரு கேள்வியை கேட்டு விட்டிர்களே. பாட்டு மட்டும் கேட்ப்போம். படத்தின் பெயர் தான் நினைவில் இருப்பது இல்லை. இருந்தாலும் சொல்லி விடுகின்றேன். சரியாக இருந்தால் சிட்னிக்கு என்னை ஆழையுங்கள்.

  படம்- மவுன ராகம்

  பாடல்-வான் மேகம் பூப்பு பூப்வாய் துவும்.

  ReplyDelete
 6. தம்பி தாசன்

  ஏற்கனவே இந்தப் பதிலை நம்ம தல கோபி சொல்லி வாங்கிக் கட்டியிருக்கிறார். இப்ப நீங்களுமா? அநியாயத்துக்கு அப்பாவியா இருக்கிறியள்.

  சொறி, நீங்கள் சிட்னி வர இயலாது என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

  ReplyDelete
 7. aathaady ammaady then mottu thaan...
  koothaada thooralgal neer vittu thaan...
  urugudey..marugudey....
  kuzhandai manamum, kurumbu thanamum inimaiyim...
  kodiyilae arumbudhan,
  kuliril mazhayil nanaiyum pozhudhu....


  -----> The song is from Manirathnam's "Idayaththai Thirudaathae"...

  Girija's dance... chitra's voice..

  ReplyDelete
 8. 'Aathaadi amaadi then mottu thaan' from Idhayathai Thirudathey.

  ReplyDelete
 9. அநானி அன்பர், மற்றும் முத்துவேல்

  நீங்கள் இருவரும் சொன்ன பாட்டு மிகச் சரி. உங்கள் பின்னூட்டம் பின்னர் வெளியிடப்படும்.

  மற்றைய நண்பர்கள் இன்னும் முயற்சி செய்யலாம்

  ReplyDelete
 10. உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான், அம்மன் கோவில் கிழக்காலே படப்பாடலா.

  ReplyDelete
 11. பனிமலர்

  அந்தப் பாட்டிலும் அற்புதமான ஆர்மோனிய இசை இருக்கும். ஆனா அதில்லை இது.

  ReplyDelete
 12. AAthaadi ammaadi then mottudhan from idhayathai thirudadhe?

  ReplyDelete
 13. சர்வேசரே

  நீங்கள் சொன்ன பதில் கரெக்டு ;-)

  ReplyDelete
 14. aaahaaa.. superuu.

  parisu undaa? :)

  ReplyDelete
 15. மர்மம் தாங்கல, என்ன தான் பாடல் அது சடுதியில் சொல்லவும்

  ReplyDelete
 16. பனிமலர்

  காத்திருங்க, முழுப்பாடலையுமே இன்னும் 4 மணி நேரத்துக்குள் தந்துவிடுகின்றேன் ;)

  ReplyDelete
 17. "Rojappoo Aaadi vanthathu" From Agni Natchathram?

  N Chokkan

  ReplyDelete
 18. வாங்க என்.சொக்கன்

  ரோஜாப்பூ ஆடி வந்தது பாட்டு சித்ரா பாடவில்லை. ஜானகி பாடியிருந்தாங்க. விடை தவறு. ஆனால் ஏதோ ஒரு ஒற்றுமை இருக்கு ;-)

  ReplyDelete
 19. //SurveySan said...
  aaahaaa.. superuu.

  parisu undaa? :)//

  ஒண்ணுக்கு ரெண்டா பாட்டுப் பரிசு உண்டு ;-)

  ReplyDelete
 20. இதயத்தை திருடாதே - ஆத்தாடி யம்மாடி தேன் மொட்டுதான். சரிதானே?

  ReplyDelete
 21. பெத்தராயுடு

  உங்க விடை சரி, பின்னூட்டம் விரைவில் வரும் ;-)

  ReplyDelete
 22. நன்றி. உங்க குறிப்புதான் உதவியது :)

  ReplyDelete
 23. ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான் கூத்தாட தூறல்கள் நீர் விட்டுதான்

  விடை சரியா

  ReplyDelete
 24. பாடல் -- ஓ ஹோ மேகம் வந்தது
  படம் -- மவுனராகம்

  ReplyDelete
 25. கானா பிரபா,

  அது ஆத்தாடி அம்மாடி பாடல்
  படம்: இதயத்தை திருடாதே

  நல்ல பதிவு. இது போல் மேலும் கண்டிப்பாக தொடரவும்.

  ஸ்ருசல்

  ReplyDelete
 26. தப்பு பண்ணீட்டீங்க சுந்தரி ;-)

  விடை தவறு, ஆனா ஒரு ஒற்றுமை இருக்கு

  ReplyDelete
 27. சரியான விடை: ஆத்தாடி அம்மாடி தேன்மொட்டு தான் (இதயத்தைத் திருடாதே), அல்லது ஜல்லந்த (கீதாஞ்சலி)

  சரியான விடையளித்த நண்பர்கள்: சி.வி.ஆர், அநாமோதய அன்பர், முத்துவேல், சர்வேசன், பெத்தராயுடு, சின்ன அம்மணி, ஸ்ரூசல்
  உங்களுக்கு றேடியோஸ்பதியின் வாழ்த்துக்கள் ;-))

  ReplyDelete
 28. //ஸ்ருசல் said...


  நல்ல பதிவு. இது போல் மேலும் கண்டிப்பாக தொடரவும்.//

  மிக்க நன்றி ஸ்ரூசல்

  நிச்சயமாக இப்படியான போட்டிகள் அடிக்கடி இனி வரும் ;-)

  ReplyDelete