Pages

Wednesday, September 19, 2007

நீங்கள் கேட்டவை 20


நீங்கள் கேட்டவை 20 பதிவில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்த வாரமும் நிறையப் பதிவர்கள் தங்களுடைய விருப்பப் பாடலுக்காகக் காத்திருக்கின்றார்கள். அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் இதோ உங்களுக்காக

முதலாவதாக நம்ம வலைப்பதிவின் கொ.ப.செ கோபி விரும்பிக் கேட்ட பாடல் "தளபதி" திரைக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" இசை: நம்ம இளையராஜா

தொடர்ந்து பதிவர் முத்துலெட்சுமி விரும்பிக் கேட்டிருக்கும் "என் ஜீவன் பாடுது" திரைப்படப் பாடலான "ஒரே முறை உன் தரிசனம் பாடலை இளையராஜா இசையில் எஸ்.ஜானகி பாடுகின்றார்.

வடுவூர் குமார், ஜெயச்சந்திரன், எஸ்.பி.சைலஜா பாடும் "தவிக்குது தயங்குது ஒரு மனது" பாடலை "நதியைத் தேடி வந்த கடல்" படத்திலிருந்து கேட்டிருக்கின்றார். இசையமைப்பாளர் யாரென்று சொல்ல மாட்டேன் ;))

நீண்ட நாட்களாக இந்தப் பாடல் வருமா? என்று ஓட்டுப் போட்ட பொதுஜனம் போலக் காத்திருக்கும் ஜி.ராகவனுக்காக "சந்திப்பு" திரையில் இருந்து எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வாணி ஜெயராம் பாடும் "ராத்திரி நிலாவில்" என்ற பாடல் தமிழ் வலை உலகில் முதலாவதாக (;-))) இடம்பெறுகின்றது.

நிறைவாக ஒரு நிறைவான ஈழத்துப்பாடலை ஈழத்துச் சகோதரன் ஒருவர் கேட்டிருக்கின்றார். "நெய்தல்" என்ற ஒலிப்பேழையில் இருந்து ஜி.சாந்தன் பாடும் "வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்" என்ற பாடல் காற்றில் மிதக்கின்றது.

பிற்குறிப்பு:
இந்த நீங்கள் கேட்டவை பதிவை வலையேற்றிய பின் நம்ம கொ.ப.செ.கோபியிடமிருந்து ஒரு கண்டன மடல் தனிப்பட வந்தது. அதில் அவர் கேட்ட பாடல் தளபதியில் வரும் "அடி ராக்கம்மா கையத் தட்டு" பாடலே என்றும், "சுந்தரி கண்ணால்" ஒரு சேதி பாடலைக் கேட்கும் மனநிலையில் தான் இல்லையெனவும், காரணம் தனக்கு இன்னும் ஜோடி கிடைக்கவில்லையென்றும் வருத்தத்தோடு தெரிவித்தார் ;)
கொ.ப.செயின் கோபத்துக்கு ஆளாகாமல் இதோ அவர் கேட்ட "ராக்கம்மா கையத் தட்டு" பாடல். அத்துடன் அவரின் வேண்டுதல் நிறைவேறவும் பிரார்த்திப்போம் ;-)))


பாடல்களைக் கேட்டவண்ணம் நீங்களும் உங்கள் விருப்பப் பாடல்களை அறியத் தாருங்கள்.
Powered by eSnips.com

11 comments:

  1. நன்றி கானாபிரபா
    அந்த "வெள்ளி நிலா" பாட்டு முதல்முறையாக கேட்கிறேன்.
    ஜி.சாந்தன் பாடுவது TMS மாதிரி இருக்கு.

    ReplyDelete
  2. வணக்கம் பிரபா
    வெள்ளி நிலா பாடலை நீண்ட நாட்களின் பின்னர் காதுக்குள் மட்டும் கேட்டேன்( காரணம் புரியும் என நினைக்கின்றேன்).
    மிகவும் தரமான பாடல்களை நல்ல தொழில்நுட்பத்தில் தருகின்றீர்கள் வாழ்த்துக்கள்.
    எப்போ ஊருக்கு வாறீர்கள்.

    ReplyDelete
  3. வாங்க வடுவூர் குமார்

    ஜி.சாந்தன் நம்ம ஊரில் புகழ்பெற்ற பாடகர், இவர் சீர்காழி கோவிந்தராஜன், செளந்தரராஜன் பாடல்களையும் அதே பாங்கில் பாடும் வல்லமை கொண்டவர்.

    ReplyDelete
  4. ஆகா! பாடல் தந்த வள்ளல் பிரபா வாழ்க. :) எவ்ளோ நாளாச்சு இந்தப் பாட்டக் கேட்டு. அப்படியே இந்தப் பாட்டை மெயில்ல அனுப்பினா நல்லாயிருக்கும். இது எம்பதுகள்ள வந்த வழக்கமான டிஸ்கோ பாட்டு. ஸ்ரீதேவி பாடுவாங்க படத்துல.

    இந்தப் படத்துல ஆனந்தம் விளையாடும் வீடுன்னு ஒரு பாட்டு உண்டு. நல்லாருக்கும். படம் பாத்துட்டு ஸ்கூட்டர்ல குடும்பத்துல எல்லாரும் திரும்பி வர்ரோம். நாங்கள்ளாம் பொடிசுங்க. மதுரை விஜயலட்சுமி தேட்டர்ல இருந்து டி.ஆர்.ஓ காலனிக்குப் போகனும். வழியில மாரியம்மன் கோயில் பக்கத்துல போலீஸ் கிரவுண்ட் இருக்கு. அதப் பாத்ததும் ஒடனே பாடுனேன். ஆனந்தம் விளையாடும் வீடு மெட்டுலயே...

    போலீஸ்கள் விளையாடும் கிரவுண்டு
    இது போலீஸ்கள் விளையாடும் கிரவுண்டு
    நான்கு சுவர் கொண்டு உருவான கிரவுண்ட்

    ஆனந்தம் விளையாடும் வீடு
    இது ஆனந்தம் விளையாடும் வீடு
    நான்கு அன்பில்கள் ஒன்றான கூடு

    அந்த அளவுக்கு...அந்த வயசுலயே மனசுல நின்ன பாட்டு.

    இதே படத்துல வர்ர "நான் வாங்கி வந்தேன்டி நாலு மொழம் பூவு" பாட்டையும் மாடி வீட்டு ஏழை படத்துல வரும் "அன்பு எனும் நல்ல தேன் கலந்து" பாட்டையும் அடுத்தடுத்த நேயர் விருப்பங்களுக்காகக் கேட்டுக்கிறேன்.

    ReplyDelete
  5. //வந்தியத்தேவன் said...
    வணக்கம் பிரபா
    வெள்ளி நிலா பாடலை நீண்ட நாட்களின் பின்னர் காதுக்குள் மட்டும் கேட்டேன்//

    வணக்கம் வந்தியத் தேவன்

    நெடு நாளைக்குப் பின் நீங்கள் இந்தப் பாடலைக் கேட்க வகை செய்ததையிட்டு எனக்கும் மிக்க மகிழ்ச்சி. நீங்களும் ஏதாவது பாடல் கேட்கலாமே?

    ஊருக்கு வரும் நாளை நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன் ;-(

    ReplyDelete
  6. வாங்க ராகவன்

    சந்திப்பு மற்றும் மிருதங்கச் சக்கரவர்த்தி இணைந்த சீ.டியை 7 வருஷம் முன் வாங்கி வைத்திருந்தேன். இப்போது கைகொடுத்திருக்கின்றது. இப்படத்தில் இருந்து நீங்கள் கேட்ட மற்றைய பாட்டும் வரும். மாடி வீட்டு ஏழை பாட்டும் கைவசம் இருக்கின்றது.

    ReplyDelete
  7. பதவி கொடுத்த தலைவருக்கு என் நன்றிகள் ;)))

    ஒன்னுக்கு ரெண்டு ராஜா பாட்டு...ரொம்ப நன்றி தல ;)))

    ராக்கம்மா பாட்டை வச்சி ஒரு பதிவே போடலாம்....அந்த அளவுக்கு அதுல சில விஷயம் இருக்கு.....ராஜா..ராஜா தான் ;))

    ReplyDelete
  8. கோபி கேட்டப்பாட்டுக்கு தவறாக போட்டதும் நல்லதா போச்சு ...சுந்தரி பாட்டு சூப்பரானதாச்சே... என்னோட பாட்டை போட்டதுக்கும் நன்றி..அடுத்த பாட்டு எனக்கு படம் பேரு தெரியாது ... மன்னிக்கனும்

    காதலெனும் வடிவம் கண்டேன் கற்பனையில் இன்பம் கண்டேன் " அப்படிங்கற பழய பாட்டு.

    ReplyDelete
  9. வணக்கம் முத்துலெட்சுமி

    உண்மைதான் அவர் கேட்டதும் கேட்காததும் இனிமையான பாடல்கள். உங்கள் அடுத்த தேர்வு விரைவில் வரும்.

    ReplyDelete
  10. என் விருப்பம் - சலங்கை ஒலியிலிருந்து "வான் போலே வண்ணம் கொண்டு"

    ReplyDelete
  11. //சந்தனமுல்லை said...
    என் விருப்பம் - சலங்கை ஒலியிலிருந்து "வான் போலே வண்ணம் கொண்டு"//

    வாங்க சந்தனமுல்லை

    உங்க பாட்டு நிச்சயம்

    ReplyDelete