இன்றைய நீங்கள் கேட்டவை 18 பதிவில் நான்கு முத்தான பாடல்கள் இடம்பெறுகின்றன.
முதலில் சர்வேசனின் விருப்பமாக மலரும் "காதோடு தான் நான் பாடுவேன்" பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாட, வி.குமாரின் இசையில் "வெள்ளி விழா" திரைக்காக ஒலிக்கின்றது.
தொடர்ந்து ஒலிக்கும் பாடல் கீர்த்திகாவின் விருப்பமாக டி.எம்.செளந்தரராஜன் பாடும் "நதியினில் வெள்ளம்" என்ற பாடல் "தேனும் பாலும்" திரைக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இடம்பெறுகின்றது.
அடுத்து வரும் இரண்டு பாடல்களுக்கும் இசை வழங்கியிருப்பவர் இசைஞானி இளையராஜா
அவற்றில் முதலில் வரும் "ஆனந்த ராகம்" என்ற பாடலை உமாரமணன் பாட சுதர்சன் கோபால் விரும்பிக் கேட்டிருக்கின்றார். பாடல் இடம் பெற்ற திரைப்படம் "பன்னீர் புஷ்பங்கள்".
நிறைவாக நெல்லைக் கிறுக்கன் தேர்வில் "இளமைக் காலங்கள்" திரைக்காக "பாட வந்ததோர் கானம்" என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா ஆகியோர் பாடக் கேட்கலாம்.
Powered by eSnips.com |
ஆஹா. தன்யனானேன்.
ReplyDeleteகேளுங்கள் தரப்படும்னு டக்கு டக்குனு கொடுக்கரீங்களே.
அமக்களம்!
நன்னி!
"ஆனந்த ராகம் கேட்கும் காலம்"
ReplyDeleteஅடேங்கப்பா, அமக்களம் அமக்களம்.
புல்லரிக்குது போங்க :)
வாரே..வா...
ReplyDeleteகேட்டதும் கொடுத்த பிரபா அண்ணாத்தே,நீவி வாழ்க...வாழ்க..
தனது முதல் படமான சிவாவை இந்தியில் ரீமேக் செய்ய நினைத்த ராம்கோபால் வர்மா,சென்ற வருடம் மோஹித்,நிஷா நடிப்பில் சிவா-2006ஐ எடுத்துத் தொலைத்தார்.அதற்கு இசைஞானி தான் இசையமைத்திருந்தார்.
எண்பதுகளில் தான் இசையமைத்து வந்த சில ஹிட் பாடல்களை கொடுத்திருந்தார்.அப்படி வந்த பாட்டுகளில் ஆனந்த ராகம் கேட்கும் காலமும் ஒண்ணு.
இந்தப் பாடல் இப்போது இந்தியிலும் ஹிட்டாக்கும்.
கானா பிரபா ....ஒரே முறை உன் தரிசனம் கார்த்திக் சரண்யா நடித்த பாட்டு படம் பேர் என் ஜீவன் பாடுது.எனக்காக...
ReplyDeleteமங்கைக்காக முத்துக்குளிக்க வாரீகளா போடுங்க...அனுபவி ராஜா அனுபவி படத்திலிருந்து
எல்லாமே அருமையான பாடல்கள்.
ReplyDeleteகாதோடுதான் நான் பேசுவேன்...ஆகா...ஈசுவரியின் குரலும் பாடும் திறனும்..ஆகாகா
நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு...இரண்டுக்கும் இடையில் இறைவனின் சிரிப்பு...இது தேனும் பாலும் படமா! இதில்தானே மஞ்சளும் தந்தாள் மயக்கம் தந்தாள் மங்கல மங்கை மீனாட்சி பாடல். இதே படத்தைக் கொஞ்சமே கொஞ்சம் மாற்றி கற்பூரதீபம் என்று பின்னால் எடுத்தார்கள்.
ஆனந்த ராகம் கேட்கும் காலம்...கானாவின் பதிவில்தான். அதைச் சொல்ல வேண்டுமா?
பாட வந்ததோர் கானம்..ஆகா...இளமைத் துள்ளல் நிறைந்த பாடல். கேட்கக் கேட்கச் சுகம். அதிலும் மூடிவைத்த பூந்தோப்பு என்று பாடல் போகும் பொழுது சொர்க்கத்தின் உச்சி நமக்குத் தெரியும். நன்றி. நன்றி.
// சுதர்சன்.கோபால் said...
ReplyDeleteஎண்பதுகளில் தான் இசையமைத்து வந்த சில ஹிட் பாடல்களை கொடுத்திருந்தார்.அப்படி வந்த பாட்டுகளில் ஆனந்த ராகம் கேட்கும் காலமும் ஒண்ணு.
இந்தப் பாடல் இப்போது இந்தியிலும் ஹிட்டாக்கும். //
ஓமப்பொடியாரே....தொடுப்புக்கு நன்றி. எல்லாப் பாட்டையும் கேட்டேன். ஆனந்தராகம் பாடல் மட்டுமே சுகசுகமாய் ரசிக்க முடிகிறது. மற்ற பாடல்கள் எல்லாம்...சரி சொல்லக் கூடாது. அதிலும் ஷபத் என்ற பாடலை இளையராஜா பாடும் பொழுதும் ஜோஷ் மே என்று ஏசுதாஸ் பாடும் பொழுதும் கதவில்லாத கூண்டுக்குள் மாட்டிக்கொண்டது போன்ற உணர்வு. இளையராஜாவைக் குறை சொல்வதாக நினைக்க வேண்டும். நானும் இளையராஜாவின் பாடல்களுக்கு விசிறிதான். மனதில் பட்டதைச் சொன்னேன்.
இன்னொன்று. ஆனந்த ராகத்ட்தில் ஷ்ரேயா கோஷல் சிறப்பாகச் செய்திருக்கிறார். கூடப் பாடியவர் ரூப் குமார் ரத்தோடு...ம்ம்ம்...ஒன்றும் சொல்வதற்கில்லை.
ரொம்ப நன்றி தல... உங்க மூலம இந்தப் பாட்ட நான் ரொம்ப நாள் கழிச்சு கேக்குறேன்...
ReplyDeleteசர்வேசரே
ReplyDeleteநீங்கள் கேட்டு நாம் பாடலைக் கொடுக்கும் அனுபவம் இருக்கிறதே, அப்பப்பா அதை விட மகிழ்ச்சி வேறுண்டோ?
தல சுதர்சன் கோபால்
பாட்டுக்களுக்கு மேலதிகப் பூச்சாக நீங்கள் கொடுக்கும் துணுக்குகள் ஒவ்வொன்றுமே அபாரம். மிக்க நன்றி
முத்துலெட்சுமி
நீங்க கேட்ட இரண்டு பாட்டும் அடுத்த வாரம் நிச்சயம் வரும்.
தல
ReplyDeleteநான் என்னத்த சொல்ல...அதான் எல்லோரும் சொல்லிட்டாங்கலே....அருமை...அருமை ;-)))
ராகவன், நெல்லைக்கிறுக்கன், தல கோபி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் ;-))