வாரந்தம் உங்கள் ரசனைக்குரிய பாடல்களின் அணிவகுப்பாக மலரும் நீங்கள் கேட்டவையின் 15 படையலில் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த வாரமும் வழக்கம் போல மாறுபட்ட இரசனை கொண்ட பாடல்களின் தொகுப்பாக இடம்பெறுகின்றது. அந்த வகையில் இன்றைய நீங்கள் கேட்டவை 15 தொகுப்பில் இடம்பெறும் பாடல்களையும் கேட்ட நண்பர்களையும் பார்ப்போம்.
முதலாவதாக கிடேசன் பார்க் நாயகன் கோபிநாத் தன்னுடைய ஆருயிர் சகோதரி முத்துலட்சுமி அக்காவுக்காக "ஜானி" படத்திலிருந்து எஸ்.ஜானகி பாடும் "காற்றில் எந்தன் கீதம்" என்ற பாடலைக் கேட்கின்றார். வலையுலக வரலாற்றில் ஒரு நேயருக்காக இன்னொரு நேயர் பாடல் கேட்பது இதுவே முதல் முறை (பிளீஸ் யாராவது எழுதி வைக்கவும் ;-))
அடுத்ததாக நக்கீரன் விரும்பிக் கேட்டிருக்கும் பாடலைப் பாடுகின்றார்கள், மலேசியா வாசுதேன், எஸ்.ஜானகி பாடும் "கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசை" என்ற பாடலை "என் ஜீவன் பாடுது" திரைக்காகக் கேட்டிருக்கின்றார். எனக்கும் ரொம்பப் பிடித்த பாட்டு இது, என் சீடி இசைத்தட்டு தேயத் தேய இந்தப் பாட்டைக் கேட்டிருக்கின்றேன்.
சர்வேசன் விருப்பமாக "வட்டத்துக்குள் சதுரம்" திரைப்படத்திற்காக "இதோ இதோ என் நெஞ்சிலே" பாடலை, பி.எஸ்.சசிரேகா, எஸ்.ஜானகி ஆகியோர் பாடுகின்றார்கள்.
அடுத்ததாக இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் சகோதரம் மழை ஷ்ரேயா, "மீரா" படப்பாடலான "ஓ பட்டர்பிளை" பாடலை எஸ்.பி பாலசுப்ரமணியம் குரலில் கேட்டிருக்கின்றார். கூடவே பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி ;-)
நிறைவாக ஜெஸிலாவின் தேர்வில் " கண்ணின் மணியே கண்ணின் மணியே" பாடல் சித்ராவின் குரலில் "மனதில் உறுதி வேண்டும்" திரைக்காக இடம்பெறுகின்றது.
இன்றைய நிகழ்ச்சியின் அனைத்துப் பாடல்களுக்கும் இசை வழங்கியிருப்பவர், இசைஞானி இளையராஜா.
Powered by eSnips.com |
இந்த முறையும் பாடல்கள் அருமையாக இருக்கின்றது.
ReplyDeleteஇந்த பாடல் இருக்கா?
இளையராஜாவின் மாஸ்டர் பீஸ்.பல நாட்களாக இது எந்த படம் என்று தெரியாமல் முழித்து இன்று தான் கண்டுபிடித்தேன்.
படம்: அச்சானி,பாடியது: ஜானகி
மாதா உன் கோவிலில்...
இவர் இதை பாடியபோது உணர்ச்சி மிகுதியில் அழுதுவிட்டாராம்.
கேட்டுப்பாருங்கள்.
இந்த கட்டிவச்சுக்கோ பாட்டு என் திருமண வட்டில் உள்ள பாட்டு.
ReplyDeleteஞாபகம் இழுக்க வைத்துவிட்டது.
Paattai innum kekkala.
ReplyDeleteNanri nanri nanri! :)
yaaru mujik andha padaththukku? rasadhaana?
andha padaththula vera nalla paattu irundhaa, adhayum listil sethukkavum :)
மீண்டுமொரு அருமையான நேயர் விருப்பம். எஸ்.ஜானகி அம்மா, காற்றில் உங்கள் கீதம் காணத ஒன்றைத் தேடுதே! எப்படி மறக்க முடியும் இந்தப் பாட்டை. உங்கள் குரலை. இதை இசையரசியோடு நீங்கள் நடத்திய இசைக்கச்சேரியில் நேரில் கேட்கும் வாய்ப்பு கிடைத்ததே...ஆகா!
ReplyDeleteகட்டி வெச்சுக்கோ இந்த அன்பு மனச...ஆமா ஆமா. இந்தப் பாட்டையுந்தான். அருமையான பாட்டு.
அடுத்து சர்வேசனின் தேர்வு. எப்படிய்யா இந்தப் பாட்டப் பிடிச்சீங்க. எனக்குத் தெரிஞ்சு தமிழில் உண்மையிலேயே வீணடிக்கப்பட்ட திறமையான பாடகி பி.எஸ்.சசிரேகா. மெல்லிசை மன்னரின் அறிமுகம். இளையராஜாவின் இசையிலும் நல்ல பாட்டுகள். இதோ இதோ நெஞ்சிலே பாடல், மேளம் கொட்ட நேரம் வரும் பூங்குயிலே, விழியில் விழுந்து இதயம் நுழைந்து, தென்றல் என்னை முத்தமிட்டது, செவ்வானமே பொன்மேகமே...இப்பிடி எல்லாமே நல்ல பாட்டுகள். ஆனாலும் ஏனோ வாய்ப்புகள் குறைவு. ராத்திரி நேரத்துப் பூஜையில் பாட்டை மறக்க முடியுமா? வரகுச் சம்பா மொளைக்கலே ஹோ, சின்னக் கண்ணன் தோட்டத்துப் பூவாக இன்னும் நிறையவே இருக்கின்றன. வாணி ஜெயராமோடு போட்டி போட்டுப் பாடிய கேள்வியின் நாயகனே பாட்டையும் மறக்க முடியுமா?
இதோ இதோ என் நெஞ்சிலே பாட்டில் உடன் பாடியவர் எஸ்.ஜானகி. ஷைலஜா அல்ல. ஷைலஜாவின் முதற்பாட்டு சோலைக்குயிலே என்ற பாட்டு. பொண்ணு ஊருக்குப் புதுசு என்ற படத்திலிருந்து.
G Ragavan,
ReplyDeleteexcellent comment :)
who is the MD for
idho idho en nenjile?
\அடுத்ததாக இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் சகோதரம் மழை ஷ்ரேயா, "மீரா" படப்பாடலான "ஓ பட்டர்பிளை" பாடலை எஸ்.பி பாலசுப்ரமணியம் குரலில் கேட்டிருக்கின்றார். கூடவே பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி ;-)\\
ReplyDeleteசூப்பர் பாடல்.....இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஷ்ரேயா ;-)))
// SurveySan said...
ReplyDeleteG Ragavan,
excellent comment :) //
நன்றி சர்வேசன் :)
// who is the MD for
idho idho en nenjile? //
வட்டத்துக்குள் சதுரம் திரைப்படத்திற்கு இசை இளையராஜா. மிகவும் அருமையான பாடல்.
இங்கே ஒரு நேயர் விருப்பம். பிரபா, லட்சுமி திரைப்படத்தில் இடம் பெற்ற மேளம் கொட்ட நேரம் வரும் பாடல்...எனக்காக. :)
\\சகோதரி முத்துலட்சுமி அக்காவுக்காக "ஜானி" படத்திலிருந்து எஸ்.ஜானகி பாடும் "காற்றில் எந்தன் கீதம்" என்ற பாடலைக் கேட்கின்றார். வலையுலக வரலாற்றில் ஒரு நேயருக்காக இன்னொரு நேயர் பாடல் கேட்பது இதுவே முதல் முறை (பிளீஸ் யாராவது எழுதி வைக்கவும் ;-))\\
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி தலைவா....மிக்க நன்றி ;-)))
அக்காவுக்கு சின்ன பரிசாக இந்த பாடல் ;)
\\கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசை" \\
அட்டகாசமான பாடல்...
\\சர்வேசன் விருப்பமாக "வட்டத்துக்குள் சதுரம்" திரைப்படத்திற்காக "இதோ இதோ என் நெஞ்சிலே" பாடலை, பி.எஸ்.சசிரேகா, எஸ்.ஜானகி ஆகியோர் பாடுகின்றார்கள்.\\
சர்வேசன் அருமையான பாடல்....அருமையான குரல்கள் ;-)
\\ "ஓ பட்டர்பிளை" பாடலை எஸ்.பி பாலசுப்ரமணியம் குரலில் கேட்டிருக்கின்றார். கூடவே பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி ;-)\\
இதுவும் சூப்பர் பாட்டு தான்....ஆனா கொஞ்சம் சோகம் ;-(
பி.சி.ஸ்ரீராம் இயக்கிய முதல் படம். ராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் அட்டகாசமாக இருக்கும் ;-)
\\நிறைவாக ஜெஸிலாவின் தேர்வில் " கண்ணின் மணியே கண்ணின் மணியே" பாடல் சித்ராவின் குரலில் "மனதில் உறுதி வேண்டும்" திரைக்காக இடம்பெறுகின்றது.\\
வேகமான பாட்டு....கூடவே சேர்ந்து பாடினால் அந்த வேகம் நமக்கும் பற்றிகொள்ளும். காட்சி அமைப்புகளும் பாடலை போன்று வேகமாக இருக்கும்.
\ இன்றைய நிகழ்ச்சியின் அனைத்துப் பாடல்களுக்கும் இசை வழங்கியிருப்பவர், இசைஞானி இளையராஜா.\\
தூள் ;-)))
வணக்கம் வடுவூர் குமார்
ReplyDeleteமாதா உன் கோவிலில் கட்டாயம் வரும், கட்டிவச்சுக்கோ உங்கள் திருமண வீடியோவிலா? பொருத்தமான தேர்வு தான் ;-)
வணக்கம் சர்வேசன்
ReplyDeleteஉங்கள் கேள்விக்கான பதிலை ராகவனே அருமையாகச் சொல்லிவிட்டார், நன்றி
கோபி மகிழ்ச்சியா இருக்கு.நன்றி.
ReplyDeleteகானா பிரபா உங்கள் ரேடியோவுக்கு
வாழ்த்துக்கள்.நன்றி. கட்டிவச்சுக்கோ மற்றும்
இதோ இதொவும் என் மனதுக்கு பிடித்த பாடல்கள் :)
வணக்கம் ராகவன்
ReplyDeleteபின்னூட்டத்தில் சுவையான பதிவையே போட்டுவிட்டீர்கள். அருமை.
தாங்கள் சுட்டிக்காட்டிய திருத்தத்துக்கு நன்றி, நீங்கள் கேட்ட பாடலும் வரும் ;-)
எனக்கு முன்னால் இத்தனை பின்னூட்டங்களா? பரவாயில்லை.
ReplyDeleteநான் சொல்லவேண்டியதெல்லாம் எல்லோரும் சொல்லீட்டாங்க.
சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்று.
அது - நன்றி! பிரபா.
எனக்கு முன்னால் இத்தனை பின்னூட்டங்களா? பரவாயில்லை.
ReplyDeleteநான் சொல்லவேண்டியதெல்லாம் எல்லோரும் சொல்லீட்டாங்க.
சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்று.
அது - நன்றி! பிரபா அண்ணா..
கானா பிரபா
ReplyDeleteநன்றி.
மேலும் சில
1. அதிகாலை சுப வேளை உன் ஓலை..
2. பூவே இளைய பூவே சுகம் தரும்....
3. வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில்..
4. பூப்போலே உன் புன்னகையில்...
1. எந்தன் நென்சில் நீங்காத தென்றல் நீ தானா..
ReplyDelete2. உன்னிடம் மயங்குகிறேன்...
3. தூது செல்ல ஒரு தோழி இல்லை என..
இதோ இதோ என் ... பாடல் என் தோழியை நினைவுட்டியது.
கோடி நன்றிகள்..
கோபி மற்றும் முத்துலட்சுமி, அடிக்கடி றேடியோ கேளுங்க ;-) நன்றி
ReplyDeleteசினேகிதன், வெயிலான், நக்கீரன் வரவுக்கு நன்றிகள்,
ReplyDeleteஉங்கள் தெரிவுகள் வரும்
அற்புதமான பாடல்களின் அணிவகுப்பு.
ReplyDeleteநன்றி..நன்றி..நன்றி...
வட்டத்துக்குள் சதுரம் - மகிரிஷியின் நாவலை இயக்கியது எஸ்.பி.முத்துராமன்
வாங்க சுதர்சன்
ReplyDeleteவட்டத்துக்குள் சதுரம் அண்மையில் கே டீவியில் கூட வந்தது. எஸ்.பி முத்துராமன் முழு நேர ரஜனி இயக்குனராக வர முன் வந்த படங்களில் ஒன்று.