Pages

Thursday, July 5, 2007

நீங்கள் கேட்டவை 12



வணக்கம் வந்தனம் சுஸ்வாகதம், welcome to நீங்கள் கேட்டவை 12. வழக்கம் போலவே தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு பாராட்டுக்களையும், ஊக்குவிப்பையும் அள்ளி வழங்கும் உங்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு உடனேயே நிகழ்ச்சிக்குப்
போகலாம். ;-))

இன்றைய நிகழ்ச்சியிலும் வழக்கம் போல பழைய, இடைக்கால, புதிய பாடல்களை பல்வேறு ரசனை கொண்ட நம்ம நண்பர்கள் கேட்டிருக்கின்றார்கள். அந்தவகையில்

நாலு மணி நேர ஜேசுதாஸ் எஸ்.பி.பியின் இசை மழையில் நனைந்து ஜலதோஷம் பிடிக்கமுன்னேயே வந்து பாட்டுக் கேட்டிருக்கின்றார் இந்தவார தமிழ்மண நட்சத்திரம்
சர்வேசன். "சொல்லத் துடிக்குது மனசு" படத்திலிருந்து கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "பூவே செம்பூவே". இசைய வைத்தவர் இளையராஜா.

பாடலைக் கேட்க

சர்வேசன் கேட்ட பூவே செம்பூவே பாட்டைக் கேட்டதும் குரல் தவிர்த்த இந்தப் பாடலின் இசைக்கோலத்தைக் கேட்கவேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது, அதை உங்களோடும்ம் பகிர்ந்து கொள்கின்றேன், இது இப்போது தான் இணைக்கப்படுகின்றது. கேட்டு அனுபவியுங்கள் இந்த இசை ராஜாங்கத்தை.

Get this widget | Share | Track details



சர்வே புயல் சர்வேசன் போல இசைக்கு ஒரு புயல் நம்ம ஏ.ஆர்.ரகுமான். அவரோடு இயக்குனர் விக்ரமன் இணைந்து விக்ரம் நடித்த "புதிய மன்னர்கள்" படத்திலிருந்து மனோ, சித்ரா பாடும் "ஒண்ணு ரெண்டு மூணடா" என்ற ஆண்களை வெருட்டும் பாடலை விரும்பிக்கேட்டிருக்கின்றார் பாலைவன தேசத்திலிருந்து ஜெஸிலா.




அத்தி பூத்தது போல எப்பவாது ஒருக்கால் தனக்கு ஆசை வந்தா மட்டும் பவ்யமாகப் பாட்டுக் கேட்கிற எங்கட வெற்றி அண்ணை , "அந்தரங்கம்" படத்திலை இருந்து ஜி.தேவராஜன் இசையில் நடித்துக் கொண்டே பாட வல்ல கமலஹாசன் பாடியிருக்கிறார். சோக்கான பாட்டெல்லோ?




சிங்கப்பூர் சீமையில் கட்டுமானமே கதியென்று இருக்கும் நம்ம நண்பர்
வடுவூர் குமார், "அகத்தியர்" படத்தில் இருந்து வயலின் மேதை குன்னக்குடி வைத்யநாதன் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடுகின்றார்.




இந்து மகேஷ் அண்ணரின் பழைய பாடல் தெரிவுகள் எப்பவுமே சோடை போகாது. அதை நிரூபிக்க "பாதை தெரியுது பார்" திரைப்படத்தில் P.B.ஸ்ரீனிவாஸ், S.ஜானகி பாடிய "தென்னங்கீற்றுச் சோலையிலே" கேட்டுப் பாருங்கள், புரியும்.
பாடலிசை: M.B ஸ்ரீனிவாசன்.




இறுதித் தேர்வை, இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்துப் பதிவுகளிலேயே சிலாகித்த ராதா ஸ்ரீராம் விரும்பும் "பெற்றால் தான் பிள்ளையா" திரையில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் மலரும் "சக்கரக்கட்டி ராஜாத்தி" என்ற பாடலை T.M செளந்தரராஜன் பாடுகின்றார். இணைந்து பி.சுசீலா பாடுகின்றார்.

Get this widget | Share | Track details


சரி நண்பர்களே, இன்றைய பாடல் தேர்வுகள் எப்படியிருந்தன என்பது குறித்தும், புதிய பாடல்களை அறிவிக்கவும் இந்தப் பதிவின் பின்னூட்டலைப் பயன்படுத்துங்கள். ;-)))

33 comments:

  1. பூவே செம்பூவே முழுசா வரலியே? என் கணினிப் பிழையோ?

    டக்குன்னு பாடலை பதிந்ததர்க்கு நன்றி!

    "கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா" என்ற பாடலை கணக்குல சேத்துக்கங்க :)

    ReplyDelete
  2. அசத்திபுட்டீங்க!! பாடல்கள் அம்புட்டும் சூப்பரு!

    ReplyDelete
  3. சர்வேசா

    வீடு போய் சரிபார்க்கிறேன்

    ReplyDelete
  4. "பாதை தெரியுது பார்" என்ற திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை என கேள்விப்பட்டிருக்கிறேன்
    "தென்னங்கீற்றுச் சோலையிலே" என்ற பாடலைத் தவிர மற்ற பாடல்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை

    ReplyDelete
  5. \\\ SurveySan said...
    பூவே செம்பூவே முழுசா வரலியே? என் கணினிப் பிழையோ?\\\

    ரிப்பீட்டேய்....சூப்பர் பாடல்கள் ரொம்ப நன்றி தலைவா :))

    ReplyDelete
  6. தலைவா

    உங்க கணினிப் பிழையே தான் ;-)

    பாட்டு சும்மா முழுசாவே அதிருதில்லே

    ReplyDelete
  7. மிக்க நன்றி பிரபா. அந்த பாடலை கேட்க முடிகிறது தரவிறக்குவது எப்படி? ஐடியூன் மூலமென்றால் என்ன?

    ReplyDelete
  8. வணக்கம் ஜெஸிலா

    இந்த பிளேயரின் மூலப்பக்கம் சென்று ஒரு கணக்கை ஆரம்பித்தால் உள்ளே நுளைந்து ஐ பொட் உபயோகிக்கும் ஐ டியூன் மென்பொருள் மூலம் தரவிறக்கம் செய்யலாம்.

    ReplyDelete
  9. நன்றி பிரபா. அப்புறம் எனக்கு பூவே செம்பூவே பாதிதான் வருது ?

    ReplyDelete
  10. என்னவோ தெரியலை எனக்கு மட்டும் இந்தப் பாட்டு முழுமையா ஒலிக்குது, சரி நான் மீண்டும் ஒலியேற்றுகின்றேன்.

    ReplyDelete
  11. //குட்டிபிசாசு said...
    அசத்திபுட்டீங்க!! பாடல்கள் அம்புட்டும் சூப்பரு! //

    //கோபிநாத் said...
    ரிப்பீட்டேய்....சூப்பர் பாடல்கள் ரொம்ப நன்றி தலைவா :)) //

    வாங்க குட்டிப்பிசாசு மற்றும் தல கோபி

    மீண்டும் பூவே செம்பூவே பாட்டை ஒலியேற்றியிருக்கின்றேன்.

    கூடவே இப்போது விசேட இணைப்பாக அப்பாடலின் இசையை மட்டும் கொடுத்திருக்கின்றேன். அனுபவியுங்க ராஜாக்களே ;-))

    ReplyDelete
  12. நன்றி கானா பிரபா
    என் மனுக்கு அனுப்பிவிடுகிறேன்.

    ReplyDelete
  13. அன்பு பிரபா!

    பாடல் முழுமையாக வரவில்லை.

    "சிட்டுக்குருவி பாடுது தன்
    பெட்டைத் துணையைத் தேடுது!" என்று இரண்டு வரிகளைமட்டும் பாடிவிட்டு சிறீனிவாஸ் ஓய்வெடுத்துக் கொள்கிறார்.

    என்னாச்சுது?

    கொஞ்சம் கவனியுங்கள்.

    அன்புடன்
    இந்துமகேஷ்.

    ReplyDelete
  14. பிரபா, 'மனதில் உறுதி வேண்டும்' படத்திலிருந்து 'கண்ணின் மணியே' பாடல் தர இயலுமா?

    நன்றி.

    ReplyDelete
  15. பிரபா பாடல்கள் முழுமையாக கேட்கவில்லையே. ஏற்றுமதியில் பிரச்ச்னை போல.

    ReplyDelete
  16. வணக்கம் நண்பர்களே

    நீங்கள் கேட்டவை நிகழ்ச்சிக்கு எதிரான சர்வதேச சதி என்று நம்பப்படுகின்றது, விரைவில் பாடல்களுக்கான தீர்வு எட்டப்படும் ;-(

    ReplyDelete
  17. என்னுடைய அடுத்த விருப்பம்
    இந்த சைகிளில் கால் வைத்தாலே "அந்த நாள் முதல்" சிவாஜி பாடுவாரே அதைத்தான் முனுமுனுக்கும் அது முடிந்த உடன் இந்த பாடல் தான்
    மீண்டும் கோகிலாவில் இருந்து "ஹே! ஹே! ஒராயிரம்" வாயில் வரும். முடிந்தால் இந்த பாடலை ஒலிபரப்பவும்.
    நன்றி

    ReplyDelete
  18. //இந்த சைகிளில் கால் வைத்தாலே "அந்த நாள் முதல்" சிவாஜி பாடுவாரே அதைத்தான் //

    mememememmeme...

    Tthanks for the reminder Kumar.

    Adv. thanks Prabha! :)

    -Mathy

    ReplyDelete
  19. கா.பி,
    என் விருப்பப் பாடலைத் தந்தமைக்கு மிக்க நன்றிகள்.

    /* அத்தி பூத்தது போல எப்பவாது ஒருக்கால் தனக்கு ஆசை வந்தா மட்டும் பவ்யமாகப் பாட்டுக் கேட்கிற எங்கட வெற்றி அண்ணை */

    அது சரி -:)) பிரபா, இணையங்களில் தேடியும் பிடிக்க முடியாத பாட்டுக்கள் கனக்க இருக்கு. உங்களிட்டைக் கேக்க வேணும். நான் அடிக்கடி வந்து கேட்டால் மற்ற இரசிகர்களுக்கு வாய்ப்பில்லாமல் போய்விடும் என்பதால்தான் கொஞ்சம் இடைவெளி விட்டுக் கேக்கிறனான்.-:))
    எதற்கும் அடுத்த கிழமை என்ரை மற்றைய விருப்பப் பாடலோடு வாறேன்.

    சோக்கான : இந்தச் சொல்லைக் கன காலத்துக்குப் பிறகு கேக்கிறேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  20. ஸ்ரீசரண்

    பாதை தெரியுது பார் ல் இருந்து மாசில் வீணையும் பாடலை முன் தூள் தளத்தில் கேட்டேன். இந்த இரண்டையும் தவிர நானும் வேறு பாடல்களைக் கேட்கவில்லை.

    ReplyDelete
  21. //வடுவூர் குமார்

    //இந்த சைகிளில் கால் வைத்தாலே "அந்த நாள் முதல்" சிவாஜி பாடுவாரே அதைத்தான் //

    mememememmeme...

    Tthanks for the reminder Kumar//

    நீங்கள் உங்கட காலத்துப் பாட்டுக் கேட்கிறீங்க , விரைவில் அதிரும்...

    ReplyDelete
  22. அம்பிகாபதில இருந்து 'சிந்தனை செய் மனமே'

    லிட்டில் ஜோன்ல இருந்து 'லைலா', 'பைலாரே' - ஒரு படப்பாடலாகப் போட்டாலும் டபிள் ஓக்கே. ;)

    ஆஹா ல இருந்து 'முதன் முதலில்'

    உழவன் படத்தில 'தனனா தன்னான'ன்னு வர்ர ஒரு பாட்டு இருக்கில்ல. ஹரிஹரன்னு நினைக்கிறேன். அதைப் போட முடியுமா?

    பிற மொழிப்பாடல்கள், ஹிந்தி வீடியோ ஆல்பம் இருந்தெல்லாம் பாட்டுக் கேக்கலாமா?

    பட்டியல் இத்தோட முடிச்சுக்கிறேன்.

    -மதி

    ReplyDelete
  23. வணக்கம் வெற்றி

    பாடல்களை சீடியில் சேகரிப்பது என் பொழுதுபோக்குகளில் ஒன்று, ஆனால் வலையில் ஏற்றும் போது அதன் தரம் சிலவேளை குன்றிவிடுவதுண்டு. பெரும்பாலான நீங்கள் கேட்டவை என் இசைத்தட்டுக்களில் இருந்தே எடுக்கப்பட்டவை.

    வணக்கம் மதி

    நீங்க கேட்ட அனைத்துப் பாட்டும் இனிமை. நீங்க கேட்ட பாட்டு ஹரிகரன் அனுராதா சிறீராம் பாடிய "உ உதட்டோர செவப்பே" என்றும் பாடலா, அதில் தான் நீங்கள் குறிப்பிட்ட சந்தம் இருக்கு. அந்தப் பாடல் பாஞ்சாலங்குறிச்சி படத்தில் வந்தது. உழவன் அல்ல. ஒரு ஒற்றுமை இரண்டிலும் பிரபு தான் நாயகன்.

    ஏற்கனவே ஏக் துஜே கேலியே ஒரு படப்பாட்டு ஒருத்தர் கேட்டிருக்கிறார். அதுக்கு பிறகு உங்கள் ஒருபடப்பாட்டு வரும். பிறமொழியும் கேட்கலாம்.

    இசையைக்கு மொழியில்லை ;-)

    யாராச்சும் இந்த நீங்கள் கேட்டவை பதிவில் வந்த பாட்டுக்கள் ஒழுங்கா வேலைசெய்யுதா என்று கேட்டு சொல்லுங்களேன், வேலையிடத்தில் இருப்பதால் சோதிக்கமுடியவில்லை.

    ReplyDelete
  24. இது ரமணண் ஸ்ரைல்!

    ReplyDelete
  25. ரமணன் ஸ்ரைலோ, என்ன விளங்கேல்லை எனக்கு:-(

    பாட்டுகள் ஒழுங்கா வருகுதோ எண்டு செக் பண்ணிச் சொல்லமாட்டியளே?

    ReplyDelete
  26. பாடல்கள் முழுவதுமாக வரவில்லை.. இப்போதும்.

    ReplyDelete
  27. மிக்க நன்றி வடுவூர் குமார்

    இன்னும் இரு மணி நேரத்தில் வேறு பிளேயரில் பாடல்களைத் தருகின்றேன்.

    ReplyDelete
  28. பூவே செம்பூவே, தென்னங்கீற்றுச் சோலையிலே, சக்கரக்கட்டி ஆகிய பாடலகளை மீள ஏற்றியிருக்கின்றேன், சரி பார்த்துச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  29. தலைவா வணக்கம்

    "தளபதி" படத்தல...ஜானகி அம்மா பாடிய ஒரு மிக அருமையான பாடல் இருக்கு..."சின்ன தாய் அவள்" அந்த பாடலை போடுங்கள் தலைவா.

    அதான் video கிடைத்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

    ReplyDelete
  30. பிரபா அண்ணா நானும் வெகு நாட்களாக K.J.ஜேசுதாஸ் பாடிய பாடல்களில் ஒன்றான "உன்னைக்கண்ட கண்களுக்கு எப்படித்தான் தூக்கம் வரும்??" என்ற பாடலை தேடி வருகிறேன் உங்களால் அப்பாடலை எனக்காக பதிவேற்ற முடியுமா?? முன்பு ஒருமுறையும் உங்களிடம் கேட்டிருந்தேன் இப்பொழுது மறுபடியும் கேட்கிறேன்....

    ReplyDelete
  31. வாங்க கோபி

    நீங்க கேட்ட பாட்டை வீடியோவிலும் தர முயற்சிக்க்கின்றேன்.


    வணக்கம் ஆதவன்

    உங்கள் விருப்பப் பாடலை இன்னும் நான் மறக்கவில்லை, இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றேன். வந்ததும் நிச்சயம் தருவேன்.

    ReplyDelete
  32. நல்ல தேர்வு.அண்ணே என்னோட மூணு பாடல்கள் இன்னும் பாக்கியிருக்கு.
    1)மெல்லப் பேசுங்கள்- செவ்வந்திப் பூக்களில் சிறு வீடு
    2)அன்பே சங்கீதா - சின்னப் புறா ஒன்று
    3)நீங்கள் கேட்டவை - அடியே மனம் நில்லுன்னா

    இந்த வரிசையில இன்னுமொரு பாடலும் சேர்ந்துகிட்டது.
    படம்-குங்குமம்
    பாடல்- சின்னஞ்சிறிய வண்ணப்பறவை

    ReplyDelete
  33. வாங்க சுதர்சன்

    அடுத்த பதிவில்"செவ்வந்திப் பூக்களில்" நல்ல ஒலித்தரத்தோடு "உலக வலைப்பதிவுகளில் முதற் தடவையாக" வர இருக்கின்றது.

    தொடர்ந்து உங்க அடுத்த தேர்வுகள் வரும்.

    ReplyDelete