
இன்றைய ஈழத்து முற்றம் பகுதியிலே, ஈழத்து எழுத்தாளர் தம்பு சிவாவின் (த.சிவசுப்பிரமணியம்) ஒலிப்பேட்டி அலங்கரிக்கின்றது. எழுத்தாளர் தம்பு சிவா ஈழத்தின் யாழ்ப்பாணக் குக்கிராமமான 1944 இல் இணுவிலில் பிறந்தவர். 1970, 1971 இல் வெளிவந்த கற்பகம் சஞ்சிகையில் சிறப்பாசிரியராக இருந்து இலக்கியப் பணியாற்றியவர். அத்தோடு தொழிற்சங்கவாதியாக அடையாளம் காட்டிக்கொண்ட இவர், இடதுசாரிக் கொள்கையில் தீவிர பற்றுடையவராக இருந்து வருகின்றார்.

"காலத்தால் மறையாத கற்பக இதழ் சிறுகதைகள்" தொகுப்பின் தொகுப்பாசிரியராவார். தற்பொழுது பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதிவருகின்றார். இவரது "சொந்தங்கள்" என்ற முதற் சிறுகதைத் தொகுதியும், "முற்போக்கு இலக்கியச் செம்மல்கள்" என்ற கட்டுரைத் தொகுதியும் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையால் வரும் யூன் மாதம் 17 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு பெண்கள் ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்திலே (58 தர்மராம வீதி, கொழும்பு 6) சிறப்பாக வெளியிடப்படவிருக்கின்றன. இதை வாசிக்கும் கொழும்பு வாழ் அன்பர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டால் சிறப்பாக இருக்கும்.
எந்தவிதமான முன்னேற்பாடுகளும், சமரசங்களும் இன்றி, எடுத்த முதல் அழைப்பிலேயே பேட்டிக்குச் சம்மதித்து அப்போதே இந்தப் பேட்டியினை அளித்து, முன் ஆயத்தம் எதுவுமின்றித் தன் இலக்கிய, சமூக சிந்தையை வெளிப்படுத்த முடியும் என்று காட்டிவிட்டார் இந்த எழுத்தாளர், என்பதே நான் பேட்டியெடுத்த பின் எனக்குள் ஏற்பட்ட அபிப்பிராயம்.
இந்த ஒலிப் பேட்டி இன்று புதன் கிழமை (13 யூன்) அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் "ஈழத்து முற்றம்" நிகழ்ச்சியில் இரவு 9.30 மணிக்கு இடம்பெறவிருக்கின்றது.
ஒலிப்பேட்டியைக் கேட்க
No comments:
Post a Comment