Pages

Thursday, June 28, 2007

நீங்கள் கேட்டவை 11


வழக்கம் போல் நீங்கள் கேட்டவை 11 பதிவில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இன்றைய பதிவிலும் உங்களில் பலர் வித்தியாசமான ரசனைகளோடு இனிய பாடல்களைக் கேட்டிருக்கின்றார்கள்.


பெப்சி உமா பாணியில் இந்த நிகழ்ச்சியின் தாரக மந்திரமான "கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க", இந்த வாட்டி உங்க பாட்டு கிடைக்காவிட்டாலும் அடுத்த பதிவில் உங்க விருப்பம் நிறைவேறும் எனவே தொடர்ந்து முயற்சி பண்ணுங்கன்னு சொல்லி வச்சு இன்றைய
நீங்கள் கேட்டவை பாடல்களைப் பார்ப்போம் ;-))


1. முதலாவது பாடலை சுதர்சன் கோபால் விரும்பிக் கேட்டிருக்கின்றார். பாடல் இடம்பெற்ற படம் "நண்டு". இளையராஜாவின் இசையில் மலேசியா வாசுதேவன் " அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா" என்ற அருமையான இந்தப் பாடலைப் பாடியிருக்கின்றார். இதே பாடலும் சர்வே புயல் சர்வேசனும் முன்னர் விரும்பிக் கேட்டிருக்கின்றார்.
2. அடுத்த பாடலான "சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா" என்ற இனிய பாடலை மதி கந்தசாமி விரும்பிக் கேட்கின்றார். பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம், சந்தியா பாடியிருக்கின்றார்கள். இசை: கீரவாணி என்ற மரகதமணி3. சினேகிதனின் விருப்பமாக "உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்" திரைக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுவர்ணலதா, இளையராஜா இசையில் "என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட" என்ற பாடல் வருகின்றது.
அடுத்து ஜி.ராகவன் விரும்பிக்கேட்ட இரு பாடல்கள் இடம்பெறுகின்றன

4. "கொஞ்சம் நேரம் என்னை மறந்தேன்" என்ற பாடலை ரி.எம்.செளந்தரராஜன் , எஸ். ஜானகி பாட எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருக்கின்றார். பாடல் இடம்பெற்ற திரைப்படம் "சிரித்து வாழ வேண்டும்"5. " இது மாலை நேரத்து மயக்கம்" என்ற "தரிசனம்" திரைப்பாடலை, ரி.எம்.செளந்தரராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் சூலமங்களம் ராஜலஷ்மி இசையில் பாடுகின்றார்கள்.


24 comments:

 1. hi
  sangitha swarangal.. arumai..arumai

  ReplyDelete
 2. கானா அண்ணா,
  நன்றி நன்றி நன்றி நன்றி நன்றிகள் பல ..
  என் அடுத்த விருப்பமாக ஆத்மா படத்திலிருந்து k.j.ஜேசுதாஸ் மற்றும் s.ஜானகி பாடிய "கண்ணாலே காதல் கவிதை" என்ற பாடல்...

  ReplyDelete
 3. //Nakkeeran said...
  hi
  sangitha swarangal.. arumai..arumai //

  வணக்கம் நக்கீரன்

  பாடலா அது, சுகமான தாலாட்டல்லவா....
  பாட்டும் சரி படமாக்கப்பட்ட விதமும் சரி எத்தனை முறைக்கும் அலுக்காது.

  ReplyDelete
 4. வணக்கம் கானா பிரபா

  மிக அருமையான பாடல்கள்

  நான் உங்கள் ரெடியோஸ்பதி பதிவை தவறாமல் பார்கிறன் / கேட்கிறேன்

  ஒரு உதவி
  உங்கள் பதிவில் வரும் பாடல்களை என் கணிணிக்கு தரவிரக்கி கொள்ள முடியுமா எனில் எவ்வாறு

  நன்றி

  ReplyDelete
 5. வணக்கம் ராஜராஜன்

  பாடல்களை itune மூலம் தரவிறக்கம் செய்யலாம். அதாவது ipod வைத்திருந்தால் சாத்தியமாக்கலாம். நான் முயன்று பார்க்கவில்லை, ஆனால் இந்த பிளேயர் கொடுக்கின்றது.

  தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தாருங்கள்.

  ReplyDelete
 6. பதினோராவது நீங்கள் கேட்டவையும் வழமைபோல் இனிமை!

  என்னிடம் பாடல் கேட்டிருந்தீர்கள், எனக்குப்பிடித்ததாகவும், அதே சமயம் றேடியோஸ்பதியின் தரத்திற்கேற்றவாறும்,தேடிக்கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 7. நன்றி நன்றி. ஒன்றுக்கு இரண்டாக பரிசு. :)

  கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்...ஒரு அழகான மோகம் ததும்பும் பாடல். அதில் ஷ்ஹாஆஆஆ என்று ஜானகி பாடுகையில் மிகச் சிறப்பாக இருக்கும்.

  மாலை நேரத்து மயக்கம் மிகச் சிறப்பான பாடல். சூலமங்கலம் ராஜலட்சுமி அவர்கள் இசையில் வந்த பாடல். ஒரு மென்மையான பாடலை எல்.ஆர்.ஈசுவரி மிக அழகாகப் பாடியிருப்பார். கண்டிப்பாக அனைவரும் கேட்க வேண்டிய பாடல்.

  ReplyDelete
 8. சங்கீத சுரங்கள் பாடல்...ஆகா...அழகிய கவிதை. பார்க்கவும் கேட்கவும்.

  அள்ளித்தந்த பூமியும் அருமையான பாடல். மலேசியா வாசுதேவன் அருமையாகப் பாடியிருப்பார்.

  என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி...நல்ல பாடல்.

  ReplyDelete
 9. வணக்கம் சினேகிதன்

  உங்க பாட்டு வரும், நன்றிகள்

  ReplyDelete
 10. //வெயிலான் said...
  பதினோராவது நீங்கள் கேட்டவையும் வழமைபோல் இனிமை!//

  வணக்கம் வெயிலான்

  தொடர்ந்த ஊக்குவிப்பிற்கு என் மேலான நன்றிகள்,

  ReplyDelete
 11. வணக்கம் ராகவன்

  சங்கீதம் மீது அதீத காதல் கொண்ட உங்களுக்கு றேடியோஸ்பதியின் அன்புப் பரிசு என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

  தொடர்ந்தும் இப்படியான நல்ல தெரிவுகளைக் கேளுங்கள்.

  ReplyDelete
 12. பாடல் அனைத்தும் அருமை!! நன்றி!!

  ReplyDelete
 13. பாடலை தரவிரக்கம் பண்ண முடியுமா?
  முடியும் வழி இங்கே!!

  ReplyDelete
 14. அள்ளித்தந்த வானம்...
  அப்படியே அள்ளுது.

  ReplyDelete
 15. குட்டிப்பிசாசு மற்றும் வடுவூர் குமார்

  தங்கள் வருகைக்கும் மேலதிக இணைப்புக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 16. எனக்கு பிடிச்ச பாட்டும் போடுவீகளா? எங்கனப் போயி கேட்குறது?

  ReplyDelete
 17. நீங்கள் இங்கின கேட்கலாம் ;-)

  ReplyDelete
 18. 'புதிய மன்னர்கள்' படத்தில் வரும் 'ஒண்ணுரெண்டு' என்ற பாடல். எனக்கு கோட்டுமேல நிண்ணுக்கிட்டு பாடல் கேட்கலாம் முடியாத நிலை, அதனால தயவுசெஞ்சி தரவிரக்க முடியுறா மாதிரி ஒரு வழி பண்ணுங்க. நன்றி.

  ReplyDelete
 19. சரி

  ஏதாவது வழி பண்ணி அனுப்பிடுறேன்.

  ReplyDelete
 20. பாடல்களுக்கு நன்றிகள்...
  அடுத்து அன்பே சங்கீதாவில் இருந்து சின்னப்புறா ஒன்று...

  ReplyDelete
 21. கா.பி,
  நான் பல வலைத்தளங்களிலும் தேடிக் கண்டுபிடிக்க முடியாத பாடலொன்றை உங்களிடம் கேட்கப் போகிறேன். இப் பாடல் உங்களிடம் இருக்கும் என்று நம்புகிறேன். உங்களிடம் இருந்தால், தயவுசெய்து அப் பாடலை எனக்காகத் தரமுடியுமா?

  பாடல் : ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்...

  [மிச்ச பாடல் வரிகள் தெரியாது]

  பாடியவர் : கமலஹாசன்

  இசை மெல்லிசை மன்னர் என நினைக்கிறேன். சரியாகத் தெரியாது.
  பாடல் இடம்பெற்ற திரைப்படமும் எதுவென்று தெரியாது.

  ReplyDelete
 22. சுதர்சன் கோபால், சர்வேசன், வெற்றி

  வருகைக்கு நன்றிகள். நீங்கள் கேட்ட பாட்டுக்கள் இரண்டும் என்னிடம் சி.டியில் உயர்தர ரகத்தில் இருக்கின்றன. அடுத்த பதிவில் வரும் ரும் ம்... ;-)

  ReplyDelete
 23. கானா பிரபா,

  ரெண்டு விருப்பம் இங்க இருக்கு.

  http://surveysan.blogspot.com/2007/07/4.html

  1) பூவே செம்பூவே
  2) எண்ணத்தில் ஏதோ சில்லென்றது

  ReplyDelete