Pages

Saturday, March 31, 2007

இது குழந்தை பாடும் தாலாட்டு


இன்றைய ஒலித்தொகுப்பு பகுதியிலே நான் தரவிருப்பது, T.ராஜேந்தர் குறித்த (சீரியசான) பார்வை, மற்றும் அவரின் இசையில் மலர்ந்த ஒரு தலை ராக திரைப்படப் பாடலான "இது குழந்தை பாடும் தாலாட்டு"

கவிஞர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், இயக்குனர், என்று பல பரிமணங்களைக் கொண்ட இவர் "கிளிஞ்சல்கள்" திரைப்படத்துக்காக தங்க இசைத்தட்டுப் பெற்ற முதற் தமிழ் இசையமைப்பாளரும் கூட.

இது குழந்தை பாடும் தாலாட்டு, ராஜேந்தர் கவி புனைந்து இசையமைக்க எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருந்தார். இப்பாடலின் தன் நாயகி மீது ஒருதலைக் காதல் கொண்ட நாயகனின் மனவுணர்வுகள் அழகாகச் சித்தரிக்கப்படுகின்றன.
"வெறும் காற்றில் உளி கொண்டு சிலையை நான் வடிக்கின்றேன்", வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கின்றேன்" என்று இவ்வரிகள் நடைமுறைச் சாத்தியமில்லா உதாரணங்களாக இவன் காதலுக்கு ஒப்புவமை ஆக்கப்படுகின்றன.

இனி என் பேச்சை கேளுங்கள்.

14 comments:

  1. அருமையான தெரிவு இந்தப் பாடல்!

    ReplyDelete
  2. வணக்கம் சிபி

    என்னைக் கவர்ந்த பாடல்களில் ஒன்று, டி.ஆர் தன் திறமை எந்த எல்லையோடு நிற்கவேண்டும் என்று ய்ணர்ந்து செயற்பட்ட ஆரம்பகாலப் பாடல் முத்துக்களில் ஒன்று.

    ReplyDelete
  3. சில பாடல்கள் இறந்தகாலத்திற்குள் எம்மை அழைத்துச் செல்பவை. கேட்ட அந்த நாட்கள், அந்த இடங்கள்,மனிதர்களை நினைவுபடுத்துபவை. இந்தப் பாடல் என்னை மீண்டும் எனது பாடசாலைக்கு அழைத்துச்சென்றது. நன்றி பிரபா.

    ReplyDelete
  4. வணக்கம் தமிழ்நதி

    தமிழ்த்திரையிசைப் பாடல்களில் காலம் கடந்து நிற்கும் அருமையான பாடல்களில் இதுவுமொன்று இல்லையா? வருகைக்கு நன்றிகள்

    ReplyDelete
  5. SPB இதைப் பாடிய விதமும் பாடலுக்கு
    மெருகூட்டியது

    சரியான நேரத்தில் வந்த சரியான படம் இது.

    ReplyDelete
  6. இவர் இயக்கிய படங்களில் முதலும் கடைசியுமாய் பிடித்த படம் ஒரு தலை ராகம் தான். இந்த படத்தின் நடித்த வில்லன் ரவீந்தர் குருவி கதை சொல்லும் சந்திர சேகர். , ஒரு நடுத்தர குள்ள நடிகர்(பெயர் மறந்து விட்டது)மறக்க முடியாதவர்கள் ...பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  7. // கார்திக்வேலு said...

    சரியான நேரத்தில் வந்த சரியான படம் இது. //


    வணக்கம் கார்திக்

    சரியாகச் சொன்னீர்கள் எண்பதுகளில் டி.ராஜேந்தர், ராபட் ராஜசேகரன் என்று ஒரு பக்கம், மற்றப்பக்கம் பாக்கியராஜ், பாரதிராஜா என்று நல்ல சினிமாக்கள் முளைத்த நேரமது.

    ReplyDelete
  8. வணக்கம் சின்னக்குட்டி

    ஒரு தலை ராகத்தில் வரும் காதல் கதை சொல்லும் பாங்கு ஞாபகம் இருக்குமென்று நினைக்கிறேன்.
    "ஒரு ரோஜாவை வண்டு காதலிச்சுதாம்" என்று ஆரம்பிக்கும் அது.

    ReplyDelete
  9. பிரபா!
    நல்ல தேர்வு!
    இப்போ சில கோமாளித்தனம் ;இவர் வசம் இருந்தாலும் அன்று அவர் ஒரு சாதனையாளர். தமிழ் ரசனையைத் திருப்பிப் போட்டவர். அழகான முகங்கள் தான் நடிக்கலாம் எனும் விதியைத் தகர்த்தவர்.

    ReplyDelete
  10. யோகன் அண்ணா

    தன்னுடைய சக்திக்கும் எல்லைக்கும் மீறிய விஷயங்களில் மூக்கை நுளைக்கும் போது கலைஞன் தன் சுயத்தை இழந்துவிடுகின்றான் என்பதற்கு ராஜேந்தரும் ஒரு சான்று.

    ReplyDelete
  11. பாடல் பிடித்திருந்தது. இப்பிடி நல்ல பாடல்களை காதுக்கு விருந்தாக தாருங்கள்.

    ReplyDelete
  12. நீங்க அவர் காதல் தோல்வி அடைந்ததா சொல்லுறீங்க, ஆனா அண்மையில சின்ன குட்டியர் இணைச்சிருந்த அசத்த போவது யாரு எண்ட இணைப்பிலை தான் காதலில் வெண்டதா தானே சொல்லி இருக்கார் :)

    ReplyDelete
  13. நல்ல பாடல் இது. தந்ததிற்கு நன்றி,பிரபா.

    ReplyDelete
  14. சோமி, விஜே, செல்லி

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

    சோமி

    நல்லபாடல்களுக்குப் பின்னால் சுவையான விஷயமும் இருந்தால் அதை முடிந்தவரை ஆவணப்படுத்தும் எண்ணத்தின் செயற்பாடு தான் இது.

    விஜே

    அவரின் முதற்காதல் தோல்வியின் வெளிப்பாடு தான் ஆரம்பகாலப் படங்கள். பின்னர் தான் சிம்புவின் தாய் உஷா கிடைத்தார்.

    ReplyDelete