Pages

Wednesday, March 7, 2007

முதல் வணக்கம்

என் மனங்கவர்ந்த பாடல்கள், நான் கண்ட ஒலிப்பேட்டிகள், வானொலிப் படையல்களின் அணிவகுப்புக்கான இல்லம் இது.

நேசம் கலந்த நட்புடன்
-கானா.பிரபா-

21 comments:

  1. வாழ்த்துகள் பிரபா!

    அருமையான முயற்சி.

    -மதி

    ReplyDelete
  2. அப்ப ஒவ்வொரு கிழமையும் இரண்டு மூன்று பதிவுகள் வருமெண்டுறீங்கள்? :O))

    நல்ல தொகுப்பாய் அமையப்போகிறது.

    ReplyDelete
  3. பிரபா!

    நேசமுடன் வரவேற்கின்றேன்.
    வாழ்த்துகின்றேன்.

    அப்பாடா! மடத்துவாசல் பிள்ளையார் கருணைகூட்டிற்றார்.:))

    ReplyDelete
  4. உங்களின் இந்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள், பிரபா

    ReplyDelete
  5. alagana banner prabanna!!teletubbies land a??

    apo ungada radio nigalchikalum varuma inga?

    ReplyDelete
  6. மதி, மலைநாடான், ஷ்ரேயா, செல்லி, சினேகிதி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.

    தனியே இது வானொலிப்படைப்பாக இல்லாது நான் ரசித்தபாடல்கள் அவற்றின் பின்னணியில் உள்ள கதை போன்றவற்றோடு வரும்.

    ReplyDelete
  7. நல்ல முயற்சி பிரபா. வாழ்த்துக்கள். அப்ப உங்கள் முற்றத்து மல்லிகையை இனி இங்கே கேட்கலாமா?

    ReplyDelete
  8. உற்சாகப்படுத்தலுக்கு நன்றி அண்ணா, பொதுவான ஒலிப்பக்கமாக எல்லாம் வரும் ;-)

    ReplyDelete
  9. சரி.. விரைவில் நாங்களும் புளொக்கில ஒரு ரிவி தொடங்கிட வேண்டியது தான்.
    ரிவிஸ்பதி.. பெயர் நல்லாயிருக்கோ..

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் பிரபா..

    ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறோம்

    ReplyDelete
  11. கொழுவி,

    நல்லாயிருக்கும் தொடங்குங்கோ ;-)

    றேடியோஸ்பதி என்ற பெயரை நான் வைக்கக் காரணம், யாழ்ப்பாணத்தில் பிரபலமான ஒலிப்பதிவுகூடத்துக்கு இதே பெயர் தான் இருந்தது.

    ReplyDelete
  12. //மங்கை said...
    வாழ்த்துக்கள் பிரபா..

    ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறோம்//

    மிக்க நன்றிகள் மங்கை

    ReplyDelete
  13. வாழ்த்துகள் பிரபா.. வெகு நாட்களாக உங்களிடம் எதிர்பார்த்த றேடியோ பதிவு வந்ததையிட்டு மிக்க சந்தோசம்.

    ReplyDelete
  14. மிக்க நன்றிகள் சின்னக்குட்டியர்

    ReplyDelete
  15. பிரபா!!
    அப்போ இனிப் பாட்டுக் கேட்கலாம். என்கிறீர்கள்.
    நல்ல பாட்டாப் போடுங்கோ; சங்கீதம் கொஞ்சம் போடுங்க!

    ReplyDelete
  16. யோகன் அண்ணா

    முடிந்த வரை தங்களின் ஆசையைப் பூர்த்திசெய்கின்றேன்

    ReplyDelete
  17. அந்த பஸ் கண்டக்டர் பதிவுக்குப்பிறகு ஒலிப்பதிவுக்கு தனியே
    ஏன் வலைப்பதிவு ஆரம்பிக்கக் கூடாது என்று யோசனை சொல்லலாம் என்று இருந்தேன்.

    பணிச்சுமைக்கு இடையே பதிவுகளில் செலவிடும் நேரமும் உழைப்பும்
    பாரட்டத்தக்கது

    ReplyDelete
  18. மிக்க நன்றி கார்திக், நேர அவகாசம் பொறுத்து இப்பதிவும் அடிக்கடி வரும் ;-)

    ReplyDelete
  19. என்ன றேடியோஸ்பதி என்று பெயர் வைத்திருக்கிறீர்களே என்று பார்த்தேன், இப் பெயரை உங்கள் பதிவிற்கு வைத்ததன் காரணத்தினை நீங்கள் கொடுத்த விளக்கத்தின் மூலம் அறிந்து கொண்டேன், நன்றிகள். றேடியோஸ்பதி என்பதன் அர்த்தம் என்ன? காரணப் பெயரா அல்லது வேறு ஏதாவது, சாத்திரத்தின் நிமித்தம்... ற வரியில் பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் அந்த நிறுவனத்திற்கு வைத்துக் கொண்ட பெயரா?

    ReplyDelete
  20. வாழ்த்துகள் அண்ணே !!!
    //தனியே இது வானொலிப்படைப்பாக இல்லாது நான் ரசித்தபாடல்கள் அவற்றின் பின்னணியில் உள்ள கதை போன்றவற்றோடு வரும்.//

    இனி அடிக்கடி இசையும் கதையும்
    கேக்கலாம்

    ReplyDelete
  21. //Haran said...
    ற வரியில் பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் அந்த நிறுவனத்திற்கு வைத்துக் கொண்ட பெயரா?

    ஹரன்

    அவை ஏன் றேடியோஸ்பதி எண்டு வச்சவை எனத்தெரியாது, புதுமையாக இருக்கும். பதி என்றால் இல்லம் எண்டும் அர்த்தம் தானே.

    //Thillakan said...

    இனி அடிக்கடி இசையும் கதையும்
    கேக்கலாம்//

    தம்பி திலகன், பிரபா அண்ணையோட ஒரு சேட்டை உங்களுக்கு ;-)

    ReplyDelete