திரையிசையில் வாத்திய விற்பன்னராக ஐம்பது ஆண்டுகளைக் கடந்தவர் வித்யாசாகர். இசையமைப்பாளர் என்ற ரீதியில் துணை இசையை “சின்னப்பூவே மெல்லப் பேசு” தொட்டு அவர் தொடங்கியிருந்தார். பறவைகள் பலவிதம் கூட இவரே பின்னணி இசை.
ராபர்ட் - ராஜசேகரன் இரட்டையரில் ராஜசேகரன் முன்பே நிழல்கள் படத்திலும் நாயகனாக நடித்த வகையில் பின்னாளில் தானே ஒரு படத்தை இயக்கி நடித்தார். அந்தப் படம் தான் “பூமனம்”. ஏவிஎம் ராஜன் - புஷ்பலதா தம்பதியர் மகள் மகாலட்சுமி ஜோடி.
இந்தப் படத்துக்கு முழுமையாக இசை வழங்கியவர் வித்யாசாகர்.
சில நேரம் ஏதேதோ நடக்கும்
https://youtu.be/hFN4IYW3fQM?si=GSwwyUj5RoTgJHpU
என்று P.B.ஶ்ரீனிவாஸ் ஐயும் உள்வாங்கி அமைந்த பூமனம் பாடல்களில்
“என் அன்பே”
https://youtu.be/4QEAtji8N-4?si=vJamDrFFmuLz7SeK
பாடல் அற்புதமானது.
பாடகர் தினேஷ் மற்றும் சித் ரா பாடிய பாடல் பின்னாளில் பக் பக் பக் மாடப்புறாவில் ஒரு பகுதியாகப் பயன்பட்டது.
கங்கை அமரன் பிற இசையமைப்பாளருக்குப் பாடிய வகையில் ஒரு பட்டியல் கொடுக்கலாம்.
வித்யாசாகர் கூட விட்டு வைக்கவில்லை.
பேரெடுக்கணும்
https://youtu.be/hIE6HyPUEB8?si=sF2MVWAybHYXHXes
என்ற பாடலை ஜனகராஜுக்காகக் குரல் கொடுத்தார் கங்கை.
வித்யாசாகர் பின்னாளில் அதிகம் உள்வாங்காத பாடகர் மலேசியா வாசுதேவன் இந்தப் படத்தில் சித்ராவோடு பாடிய
பாட்டுக் கொடுத்தது யாரோ
https://youtu.be/wQyAG0EEOXk?si=rpUoiEyShN_aUs4Z
அற்புதமானதொரு பாட்டு. இசையமைப்பில் இளையராஜா முத்திரை இருக்கும்.
இதே போலவே மலரே மெளனமா பாடல் வித்யாசாகருக்கு ஒரு பெரும் அடையாளத்தைத் தேடித்தந்தாலும் அந்தப் பாடல் முன்னர் தெலுங்கில் கொடுக்கப்பட்ட போது அவ்வளவு தூரம் எடுபடவில்லை.
அண்மையில் மறைந்த தமிழழகன் இயக்கிய “நிலாப் பெண்ணே” படமும் வித்யாசாகருக்கு ஆரம்பத்தில் கிடைத்த அற்புதமான வாய்ப்பு.
வித்யாசாகரின் கடினச் சாவு விசிறிகள்
“பச்சைக்கிளிகள்”
https://youtu.be/Q7gg50iQr1s?si=3nrJngnRLvFl8vXn
பாடலில் சித்ராவோடு கங்கை அமரன் அதகளப்படுத்தி இருப்பார்.
C.S.ஜெயராமன் குரலில் “ராத்திரி” என்ற பாடலை மலேசியா வாசுதேவன் பாடியிருக்கிறார்.
நிலா பெண்ணே பாடல்களில் கொஞ்சம் புதுமை இருக்கும்.
படத்தில் எட்டுப் பாடல்கள் என்றாலும் பெரிய கவனத்தை ஈர்க்கவில்லை.
மேலும் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய “சீதா” படத்தோடு ஆத்தா நான் பாசாயிட்டேன், மாதங்கள் ஏழு படங்களுக்கும் தமிழில் இசை கொடுத்தாலும் பெரிய கவனத்தை ஈர்க்கவில்லை. தெலுங்குத் திரையுலகம் தான் அவரை வாரி அணைத்துக் கொண்டது.
வித்யாசாகர் - அர்ஜூன் கூட்டணியில் ஒரு பெரும் இசைப் பாய்ச்சலை நிகழ்த்தினார். அதுவரை தனக்கான ஒரு அடையாளத்தையும் அவர் நிறுவவில்லை எனலாம்.
அதன் பின்னர் நிகழ்ந்தது வித்யாசாகரம் தான்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்ள்
இசையமைப்பாளர் வித்யாசாகர் ❤️
கானா பிரபா
02.03.2026


