சலசலவென ஓடும்
குளிரோடையின் சங்கீதமே
சிலுசிலுவென வீசும்
பனிவாடையின் சந்தோஷமே
உன் மடிதான் என் சொர்க்கம்
அடி வீணே ஏன் துக்கம்….
https://youtu.be/q5kJLrJA8dg?si=oZUjJPIFtRFwXPTQ
ஒரு தேர்ந்த இயக்குநருக்கு உண்டான சர்வ லட்சணங்களில் ஒன்று, நல்ல இசை ரசனை. அதனால் தான் ஶ்ரீதர், கே.பாலசந்தர், பாரதிராஜா, ஆர்.சுந்தரராஜன் தொட்டு திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜும் முக்கிய இடம் பெறுகிறார். அடிப்படையில் அவர் தன்
உதவி இயக்குநர் பணியில் இருந்த
ஆரம்ப காலம் தொட்டு நல்ல பாடல் வரிகளை வாங்குவதிலும் சமர்த்தர்.
பின்னர் பல பாடலாசிரியர்களை உள்வாங்கியும் தன் படங்களில் பாடல்களை எடுத்திருக்கிறார்.
இதனால் தான் வாலி கூட ஒருமுறை
“சினிமாவுக்குப் பாட்டெழுதும் இலக்கணம் தெரியாதவரை அழைத்து வந்து எதுக்கு கஷ்டப்படுறே” என்று பாக்யராஜிடம் பொய்க் கோபம் கொண்டதை ஒருமுறை சுட்டியிருந்தார்.
“கொண்டைச் சேவல் கூவும் நேரம்”
https://youtu.be/MozGC-URVWs?si=CfHPAGLo7nKq5VeO
பாடலின் மெட்டு, திருப்பதிக்குக் காரில் போகும் போது உதயமானதும் சங்கர் - கணேஷிடம் சொல்லி எங்க சின்ன ராசா படப் பாடலாக்கியதையும் பாக்யராஜ் குறிப்பிட்டிருக்கிறார். பின்னர் அந்த மெட்டு ஹிந்திக்குப் போய் அதிரி புதிரி ஹிட் பாடலானதும்
வரலாறு.
இங்கே தான் பாக்யராஜின் இன்னொரு முகம் வெளிப்படுகிறது. இசையமைப்பாளராகவும் தன்னை அடையாளப்படுத்தி, வெளியார் படங்கள் கூட இசையமைத்த பாக்யராஜிடம் இருக்கும் திறன் இந்த மெட்டுக் கட்டுவது.
MSV காலத்து இசை விற்பன்னர் தாஸ் டேனியலை இசைக் கோவைக்கு உதவ வைத்திருந்தார்.
“பொண்ணு பாக்கப் போறேன்” படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால்,
அந்தப் படத்தின் என்னவென்றால்
படத்தின் கதை மற்றும் இசை கே.பாக்யராஜ். திரைக்கதை, வசனம் அவரின் உதவியாளர் வி.சேகர். இயக்கம் என்.முருகேஷ்.
கிராமத்தை அச்சுறுத்தும் புலியைப் பிடிக்க வரும் சிறப்புத் தோற்றத்தில் பிரபு நடிக்க, நாயகனாக நடித்தவர் அவரின் பெரியப்பா மகன் மனோ, நாயகி சீதா.
பின்னாளில் பிரபு மகன் விக்ரம் பிரபுவுக்கு கும்கி போல, விலங்குகளோடு பிரபு நடித்ததில் இதுவும் இன்னொன்று எலி மை ஃப்ரெண்ட் என்ற ஆங்கிலப் படமும்.
“நா உப்பு விக்கப் போனா மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுது”
https://youtu.be/4tPkyvZODq4?si=hFN8gz_9-vxL09jD
என்ற கலக்கலான பாட்டு உண்டு.
பாக்யராஜ் இசையமைத்த சோகப் பாடல்களில் மிகவும் பிடித்தமானது
சலசலவென ஓடும்
குளிரோடையின் சங்கீதமே
அந்தக் காலத்து ரெக்கோர்டிங் சென்டர் காரர்களிடம் இந்தப் பாடலெல்லாம் பல ஆயிரம் பதிவு பண்ணிய வரலாறெல்லாம் இருக்கும்.
இதே பாங்கில் சம காலத்தில் வெளியான “ஆராரோ ஆரிரரோ” படத்தில்
“ஒரு மூணாம்பிறை பாரு மேற்குப் பக்கமா”
https://youtu.be/TRV4CJJF0xU?si=TLnuVjHJTYdTF4B0
என்றொரு அற்புத விளைச்சல் உண்டு.
இரண்டுமே வாலி எழுதியது, இரண்டுக்கும் இசை பாக்யராஜ் தான்.
இந்த இரு பாடல்களிலும் பாடலாசிரியருக்கும், இசையமைப்பாளருக்குமான ஒத்திசைவின் மேன்மையைப் பார்க்கலாம்.
உன் மடிதான் என் சொர்க்கம்
அடி வீணே ஏன் துக்கம்
சலசலவென ஓடும்
குளிரோடையின் சங்கீதமே
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
திரைக்கதை மன்னர் கே.பாக்யராஜ் ❤️
கானா பிரபா

