Pages

Tuesday, October 6, 2020

எஸ்பிபி ❤️பாடகன் சங்கதி பாகம் 6 ஆயிரம் நிலாவைக் கொண்டு வந்த புலவர் புலமைப்பித்தனுக்கு அகவை 85“ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா”

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை முதன் முதலில் நிலவில் தூக்கிக் கொண்டு போய் உட்கார வைத்த அந்தப் பாடலாசிரியர் புலமைபித்தன் அவர்களுக்கு இன்று அகவை 85.

தனது ஆரம்ப காலப் பாடல்களில் ஒன்றான அடிமைப் பெண் படத்தில் இடம் பிடித்த அந்தப் பாடல் தொடங்கி ஓராயிரம் நிலாக்களாய் ஆகி விட்டார் நம் பாட்டுத் தலைவன் எஸ்பிபி.

அதோடு முதன் முதலில் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளராகத் தனது இன்னொரு பரிமாணத்தைக் காட்டிய போது "துடிக்கும் கரங்கள்" படத்தில் தன் நண்பர் கங்கை அமரனுக்கும், புலமைப் பித்தனுக்குமாகப் பாடல்களைக் கொடுத்தார் இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இது தன்னிச்சையாக நிகழ்ந்ததா என்பதைப் புலமைப் பித்தன் வழி கேட்டுக் கொள்ள ஆசை.

பாடலாசிரியர் புலமைப்பித்தன் எழுதிய பாடல்கள் குறித்து முன்பு நான் எழுதிய சிலாகிப்புகள்

"புஞ்சை உண்டு நஞ்சை உண்டு"

பொதுவுடமைக் கருத்துகளைத் திரையிசைப் பாடல்களில் காட்சியோடு ஒட்டிக் கொடுக்கும் முறைமை தமிழ் சினிமா வரலாற்றில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தாண்டி நீண்ட வரலாறு கொண்டது.
இங்கே புலவர் புலமைப் பித்தன் அந்தக் காரியத்தை எடுத்து "புஞ்சை உண்டு" பாடலில் எவ்வளவு அழகாக, இயல்பான மொழி நடைக்குள் அடக்குகிறார் பாருங்கள். இந்தக் காட்சிக்கு “மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால்” போன்ற சிவப்புச் சிந்தனையின் உக்கிரம் நிறைந்த வரிகளைக் காட்டியிருந்தால் இங்கே அது பொருந்தாது அந்நியப்பட்டிருக்கும்.

“வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டிவைத்து கொடுத்தது”

எனும் போது காட்சியில் மார் தட்டும் அந்த ஏழைத் தொழிலாளி போலவே பாமரருக்கும் சென்று சேரக் கூடிய வரிகளோடே பயணப்படுகிறது இந்தப் பாடல்.
ஒரு கடவுள் மறுப்பாளராக இயங்கும் புலவர் புலமைப்பித்தன் சமுதாய சீர்திருத்தம் காண
இங்கே இறைவனை வேண்டவில்லை, போரடச் சொல்கிறார். தன்னுடைய வாழ்வின் இலட்சியத்தோடு பொருந்தக் கூடிய ஒரு படைப்பை ஆக்கச் சொல்லிக் கேட்பது ஒரு படைப்பாளிக்கு எவ்வளவு மகத்தான கெளரவம். அதைச் சிரமேற்கொண்டு எழுதித் தந்த புலவர் புலமைப்பித்தன் வரிகள் காலத்தைத் தாண்டி நிற்கும்.

மேலும்

https://www.facebook.com/kana.praba/posts/10214488948082819

"சாதி மல்லிப் பூச்சரமே"

புலவர் புலமைப் பித்தனுக்கு யாருக்குமே கிட்டாத இன்னொரு சிறப்பு வாய்ப்பும் கிட்டியிருக்கிறது.

அது என்னவெனில் தன்னுடைய மூத்த குருவாகப் போற்றி வைத்திருக்கும் மகாகவி சுப்ரமணிய பாரதியாராகவும், அவர் வழியில் தமிழ் வழியாகச் சமூகப் போராளியாக விளங்கிய பாரதிதாசனாகவும் தன்னை உருவெடுத்துப் பாடல் எழுதியிருக்கிறார்.

பாரதி என்ற படத்தில் மு.மேத்தா "மயில் போல பொண்ணு ஒண்ணு" என்று எழுத, இன்னொரு பாட்டு புலமைப் பித்தனுக்குக் கிடைத்த வகையில் ஒரு மகா கவிஞனின் படத்தில் இப்படி இருவேறு பாடலாசியர்களைப் பாட்டெழுத வைத்தது புதுமை.

மேலும்

https://www.facebook.com/kana.praba/posts/10209351098799798

"ஓ வசந்த ராஜா"

இந்த மாதிரியான ஒரு அரசர் காலத்து பண்பாட்டு இசை நடைக்குப் பெரும்பாலும் புலவர் புலமைப்பித்தனையே ராஜா நாடியிருக்கிறார். மான் கண்டேன் நான் கண்டேன் (ராஜரிஷி), “மந்திரம் இது (ஆவாரம் பூ), சங்கத்தில் பாடாத கவிதை (ஆட்டோ ராஜா), ராத்திரியில் பூத்திருக்கும் (தங்க மகன்) என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தப் பாடல்களோடு ஒற்றுமை பொருந்தியதாக “ஓ வசந்தராஜா”வும் விளங்குகின்றது.

மேலும்

https://www.facebook.com/kana.praba/posts/10220245360749538

"சந்தனம் பூச மஞ்சள் நிலாவில்"

https://www.facebook.com/kana.praba/posts/10221273933183206

பாடலாசிரியர் புலவர் புலமைப்பித்தன் அவர்களது வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது பாடல்கள் சிலவற்றை இங்கே தொகுத்துத் தருகின்றேன்.

 1. புஞ்சை உண்டு நஞ்சை உண்டு - உன்னால் முடியும் தம்பி (இளையராஜா)

 2. உன்னால் முடியும் தம்பி - உன்னால் முடியும் தம்பி (இளையராஜா)

 3. அக்கம் பக்கம் பாரடா - உன்னால் முடியும் தம்பி (இளையராஜா)

 4. சாதி மல்லிப் பூச்சரமே - அழகன் (மரகதமணி)

 5. சங்கீத ஸ்வரங்கள் - அழகன் (மரகதமணி)

 6. மழையும் நீயே - அழகன் (மரகதமணி)

 7. நெஞ்சமடி நெஞ்சம் - அழகன் (மரகதமணி)

 8. பாடும் போது நான் தென்றல் காற்று - நேற்று இன்று நாளை (எம்.எஸ்.விஸ்வநாதன்)

 9. உச்சி வகுந்தெடுத்து - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (இளையராஜா)

 10. அழகிய விழிகளில் - டார்லிங் டார்லிங் டார்லிங் (சங்கர் கணேஷ்)

 11. காமதேவன் ஆலயம் - இது நம்ம ஆளு (பாக்யராஜ்)

 12. அம்மாடி இதுதான் காதலா - இது நம்ம ஆளு (பாக்யராஜ்)

 13. ராத்திரியில் பூத்திருக்கும் - தங்க மகன் (இளையராஜா)

 14. இரண்டும் ஒன்றோடு - பணக்காரன் (இளையராஜா)

 15. கண்மணியே பேசு - காக்கிச் சட்டை (இளையராஜா)

 16. இரு விழியின் வழியே - சிவா (இளையராஜா)

 17. அட மாப்பிள்ளை - சிவா (இளையராஜா)

 18. அட கண்ணாத்தா - சிவா (இளையராஜா)

 19. அடி வான்மதி - சிவா (இளையராஜா)

 20. ஓ வசந்த ராஜா - நீங்கள் கேட்டவை (இளையராஜா)

 21. விழியிலே - நூறாவது நாள் (இளையராஜா)

 22. வெண்மேகம் விண்ணில் - நான் சிவப்பு மனிதன் (இளையராஜா)

 23. ரோஜாப்பூ - பன்னீர் நதிகள் (சங்கர் - கணேஷ்)

 24. ஆலங்கட்டி மாமழையாம் - எழுதாத சட்டங்கள் (இளையராஜா)

 25. காதல் கிளியே - காதல் கிளிகள் (கே.வி.மகாதேவன்)

 26. ஒரு பிருந்தாவனம் - சட்டம் ஒரு விளையாட்டு (எம்.எஸ்.விஸ்வநாதன்)

 27. சுகம் தரும் நிலா - சட்டம் ஒரு விளையாட்டு (எம்.எஸ்.விஸ்வநாதன்)

 28. பூங்குயில் ரெண்டு - வீட்ல விசேஷங்க (இளையராஜா)

 29. மேகம் முந்தானை - துடிக்கும் கரங்கள் (எஸ்.பி.பாலசுப்ரமணியம்)

 30. அடடா இதுதான் - துடிக்கும் கரங்கள் (எஸ்.பி.பாலசுப்ரமணியம்)

 31. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாவில் - துடிக்கும் கரங்கள் (எஸ்.பி.பாலசுப்ரமணியம்)


கானா பிரபா

1 comments:

Unknown said...

சிறப்பான பதிவு.
புலவர் புலமைப்பித்தன் ஐயா அவர்களை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.
விளம்பர வெளிச்சம் படாத பிறைசூடன் முத்துலிங்கம் போன்றவர்கள் பற்றியும் எழுதுமாறு வேண்டுகிறேன். நல்ல இசை என்றால் அது இளையராஜாவாகத்தான் இருக்கும் என்ற ஊகம் போல் நல்லவரிகள் என்றால் அவை கண்ணதாசன் வாலி வைரமுத்துவாகத் தான் இருக்கும் எனும் பொதுக்கருத்தை முடந்தவரையேனும் மாற்றவேண்டிய தேவை உள்ளது. நன்றி.