Pages

Sunday, February 9, 2014

திரையிசையில் நூறு திருமணப்பாடல்கள்

இன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வலையுலகம் கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக எனக்களித்த நண்பர்களில் பெருமைக்குரிய நண்பராக என்னோடு வாரத்தில் ஒரு நாளேனும் தொடர்பில் உள்ளவர்களில் தல கோபி முக்கியமானவர். அவரை நான் தல என்பேன் அவர் என்னை தல என்பார், என்னிடம் அவர் நட்புப் பாராட்ட முக்கிய காரணமே இசைஞானி இளையராஜா தான். இசைஞானி இளையராஜாவின் தீவிர பக்தர்களில் ஒருவர். இது நாள் வரை ராஜா குறித்து எந்த ஊடகங்களில் வந்தாலும் அவற்றை இவர் படிக்காது விடமாட்டார், கூடவே அவற்றை அனுப்பியும் மகிழ்வார். ஒருமுறை இவரின் சகோதரியிடம் பேசும் போது சொன்னார், "கோபி அண்ணன் ராஜாவின் பாடல்களைக் கொடுத்துக் கேட்கச் சொல்வார். கொஞ்சம் அசமந்தமாக இருந்தால் போச்சு அண்ணனுக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்து விடும்" என்றார். அவ்வளவுக்கு ராஜாவின் பாடல்களைத் தீவிரமாக நேசிக்கும் வெறியர். இது நாள் வரை நானும் கோபியும் சந்திக்கவில்லை ஆனால் பால்யகாலம் தொட்டே கூடிவரும் நட்பாகவே உணர வைக்கும் அன்பு நண்பரின் திருமண வாழ்வும் இசைஞானியின் பாடல்கள் போலே இனிதாய் அமைய ஆண்டவனை இறைஞ்சுகிறேன்.

ட்விட்டர் வழியாக அறிமுகமானோரில் சகோதர பாசத்தோடு பழகுபவர்களில் @RenugaRain என்ற அன்புச் சகோதரி நேற்றுத் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். அபிராமி அன்னையின் மீது அளவற்ற பக்தி கொண்ட இந்தச் சகோதரி, எனக்கு ஒரு தங்கை இல்லாத குறையைப் பல தடவை உணர வைத்தவர்.  எங்கள் நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை ஒரு குழந்தை போலக் கேட்டுக் கேட்டு நம் சகோதரத் தமிழர்கள் மீது வெகு கரிசனையோடு இயங்குபவர் என்பதில் எனக்குப் பல தடவை பெருமைக்குரிய தங்கையாக நினைக்க வைத்தவர். என் தங்கை @RenugaRain மணவாழ்வு பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகிறேன்.
 
இணையம் என்பது மாயலோகம் என்றாலும் என்னைப் பொறுத்தவரை ஆர்ப்பாட்டமின்றி மூடிய திரைகளுக்குள் தமது நட்பையும் நேசத்தையும் கொடுக்கும் உறவுகளை அளித்ததில் பெருமை கொள்கிறேன். 

இந்த வேளையில் இவர்களுக்காக நான் முன்கூட்டியே அனுப்பி வைத்த திருமணப் பரிசாக நூறு பாடல்களின் பட்டியலை மட்டும் பகிர்கின்றேன். எதிர்காலத்தில் சக நண்பர்கள் பலருக்கு இவை உதவியாக இருக்கும். இந்தப் பாடல்களில் சில நேரடியாகத் திருமணத்தை மையப்படுத்திய பாடல்களாக இல்லாவிட்டாலும் திருமணச் சூழலுக்குப் பொருந்தும் வகையில் அமைந்திருக்கின்றன.
 
 முதலில் இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்கள்.
 
 
1. மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கல நாளிலே - டிசெம்பர் பூக்கள்
2. நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு நன்றி சொல்வேனே - மாமியார் வீடு
3. என்னைத் தொடர்ந்தது கையில் விழுந்தது நந்தவனமா - மாமியார் வீடு
4. காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி
5. நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் (ஆண்) - பணக்காரன்
6. நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் (பெண்) - பணக்காரன்
7. சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் - மீண்டும் கோகிலா
8. குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள் - எங்க முதலாளி
9. எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா - கலைஞன்
10. மருமகளே மருமகளே எங்க வீட்டு - எங்க முதலாளி
11. தலையைக் குனியும் தாமரையே - ஒரு ஓடை நதியாகிறது
12. வந்தாள் மகாலட்சுமியே - உயர்ந்த உள்ளம்
13. உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே - நல்லவனுக்கு நல்லவன்
14. ஓ வெண்ணிலாவே வா ஓடி வா - ஆனந்தக் கும்மி
15. ஒரு நாளும் உனை மறவாத - எஜமான்
16. நன்றி சொல்லவே உனக்கு - உடன்பிறப்பு
17. கஸ்தூரி மானே கல்யாணத்தேனே - புதுமைப் பெண்
18. கல்யாணச் சேலை - அம்பிகை நேரில் வந்தாள்
19.தேவதை போலொரு பெண் இங்கு வந்தது - கோபுர வாசலிலே
20. மணமகளே - தேவர் மகன்
21. சீவிச் சினுக்கெடுத்து - வெற்றிவிழா
22. வைகாசி மாசத்துல பந்தலொன்னு போட்டு  - நினைவுச் சின்னம்
23.மாடத்துல கன்னி மாடத்துல - வீரா
24. கல்யாண தேனிலா - மெளனம் சம்மதம்
25. மணமாலையும் மஞ்சளும் சூடி - வாத்தியார் வீட்டுப் பிள்ளை
26. பாதக் கொலுசு பாட்டு பாடி வரும் - திருமதி பழனிச்சாமி
27. ராசாத்தி மனசுல இந்த ராசாவின் - செண்பகமே செண்பகமே
28. சோலை இளங்குயிலே அழகா - அண்ணனுக்கு ஜே
29. வான் மேகங்களே - புதிய வார்ப்புகள்
30. குயிலே குயிலே - ஆண்பாவம்
31. புதுமாப்பிளைக்கு - அபூர்வ சகோதர்கள்
32. கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி - வண்ண வண்ணப் பூக்கள்
33. சொக்கனுக்கு வாய்த்த சுந்தரியே - காவல் கீதம்
34. ஆகாய வெண்ணிலாவே - அரங்கேற்றவேளை
35. வீட்டுக்கு விளக்கு - பொறந்த வீடா புகுந்த வீடா
36. நீ பாதி நான் பாதி கண்ணே - கேளடி கண்மணி
37. வந்ததே குங்குமம் - கிழக்கு வாசல்
38. சின்னச் சின்ன வண்ணக்குயில் - மெளனராகம்
39. மங்கலத்துக் குங்குமப்பொட்டு - சாமிப்போட்ட முடிச்சு
40. பொன்னெடுத்து வாரேன் வாரேன் - சாமி போட்ட முடிச்சு
41. சொந்தம் வந்தது வந்தது - புதுப்பாட்டு
42. வந்தாள் வந்தாள் -ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி 
43. நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன்
44. முத்துமணி மாலை - சின்னக்கவுண்டர்
45. அந்த வானத்தைப் போல - சின்னகவுண்டர்
46. பூமாலையே தோள் சேரவா - பகல் நிலவு
47. தை மாதம் கல்யாணம் - தம்பிக்கு ஒரு பாட்டு
48. கொடுத்து வச்சது - பொன் விலங்கு
49. செம்மீனே செம்மீனே - செவ்வந்தி
50. நம்ம மனசு போல அமைஞ்சு போச்சு - தெம்மாங்கு பாட்டுக்காரன்
51. வானம் இடி இடிக்க - உன்ன நெனச்சேன் பாட்டுப்படிச்சேன்
52. சாமி கிட்ட சொல்லி வச்சு- ஆவாரம் பூ
53. தாலாட்டும் பூங்காற்று - கோபுர வாசலிலே
54. சக்கரக்கட்டிக்கு - மெல்ல திறந்தது கதவு
55. சீர் கொண்டு வா - நான் பாடும் பாடல்
56. மணியே மணிக்குயிலே - நாடோடி தென்றல்
57. வாரணம் ஆயிரம் - கேளடி கண்மணி
58. சீதா கல்யாண - சிப்பிக்குள் முத்து
59. சந்தக் கவிகள் பாடிடும் - மெட்டி
60. மெட்டி ஒலி காற்றோடு - மெட்டி
61. ஆயிரம் தாமரை மொட்டுக்களே - அலைகள் ஓய்வதில்லை
62. மாங்குயிலே பூங்குயிலே
63. இரு கண்கள் போதாது - தர்மா
64. இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே - வைதேகி காத்திருந்தாள்
65. பாக்கு வெத்தல போட்டேன் பத்தல - மை டியர் மார்த்தாண்டன்

 
பிற இசையமைப்பாளர்கள் இசையில் மலர்ந்தவை
 
66. அழகிய கல்யாணப் பூமாலை தான் விழுந்த்து என் தோளில் தான் - சின்ன மணிக்குயிலே
67. திருமண மலர்கள் தருவாயா - பூவெல்லாம் கேட்டுப்பார்
68. நூறாண்டு காலம் வாழ்க - பேசும் தெய்வம்
69. மணமகளே மருமகளே வா வா - சாரதா
70. யாரோ யாரோடி உன்னோட புருஷன் - அலைபாயுதே
71. தாழம்பூ தனை முடித்து - தேவராகம்
72. சேலை கட்டும் பூவுக்கொரு வாசமுண்டு - கொடி பறக்குது
73. என்ன விலை அழகே - காதலர் தினம்
74. எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று - கேப்டன் மகள்
75. விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் - கிரீடம்
76.  சின்னப்பொண்ணுதான் வெக்கப்படுது - வைகாசி பொறந்தாச்சு
77.  கும்மியடி பெண்ணே - செல்லமே
78.  சாதிமல்லிப்பூச்சரமே - அழகன்
79. இந்த அழகு தீபம் - திறமை
80. குத்துவிளக்காக - கூலிக்காரன்
81. பாசமலரே - நீதிபதி
82. மரகத வல்லிக்கு - அன்புள்ள அப்பா
83. இந்த மல்லிகைப்பூ - கூட்டுப்புழுக்கள்
84. ஜானகி தேவி - சம்சாரம் அது மின்சாரம்
85. அம்மன் கோயில் தேரழகு - சொந்தம் 16
86. ஒரு பாதி கனவு - தாண்டவம்
87. ரகசியமாய் - டும் டும் டும்
89 தவம் இன்றி கிடைத்த - அன்பு
90. இரு மனம் சேர்ந்து - எங்கே எனது கவிதை
91. இதுதானா - சாமி
92. ராஜயோகம் கூடி வந்து - காதலுடன்
93. கல்யாண வானில் போகும் - ஆனந்தம்
94. ரோஜாப்பூ மாலையிலே - வானத்தைப் போல
95. வைத்த கண் - போஸ்
96. கொஞ்சிக் கொஞ்சிப் பேசி வரும் தமிழ் போலே - வேதம்
97. சூடித் தந்த சுடர்க்கொடியே - ஆனந்தம் 
98. என்னவோ என்னவோ என் வசம் நானில்லை - ப்ரியமானவளே
99. மல்லிகை முல்லைப் பூப்பந்தல் - அன்பே ஆருயிரே
100. வசந்தத்தில் ஓர் நாள் - மூன்று தெய்வங்கள்
 
போனஸ் பாடல்கள்
1. தூது செல்வதாரடி - சிங்காரவேலன்
2. வைதேகி ராமன் - பகல் நிலவு
3. வாராய் என் தோழி - பாசமலர்
4. ஆனந்தம் பொங்கிட - சிறைப்பறவை
 

17 comments:

  1. அருமை, அருமை. பாடல்களின் வரிசையை பார்க்கும்போது திருமண கேசட் பார்க்கும் ஞாபகம் வருகிறது. அருமை.




    @jimmuboy

    ReplyDelete
  2. @RenugaRain என்ற அன்புச் சகோதரிக்கும், நண்பர் கோபிநாத் அவர்களுக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு!
    உங்கள் திருமண பாடல்கள் 100 பகிர்வு அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மணமக்களுக்கு இறைவன் அனைத்து வரங்களையும் தர வாழ்த்துகிறேன்.வாழ்த்துவதில் இது ஒரு புதுமுயற்சி... :)

    ReplyDelete
  4. திருமண பந்தத்தில் இணைந்தவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இன்னும் பல அழகான பாடல்கள் உண்டு

    # கொட்டுக்களி கொட்டு நாயனம் கேட்குது - சின்னவர்
    # என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி
    # ஓர் தங்கக் கொலுசு நான் தந்த பரிசு வேறென்ன வேண்டும் கண்மணி
    # நூறாண்டுக்கு ஒருமுறை பூக்கின்ற பூவல்லவா - தாயின் மணிக்கொடி
    # முத்துநகையே முழு நிலவே - சாமுண்டி
    # எனதுயிரே எனதுயிரே எனக்கெனவே நீ கிடைத்தாய்
    # அழகான மஞ்சள்புறா அதன் கூட மாடப் புறா
    # கல்யாணத் தேனிலா காய்ச்சாத பால்நிலா
    # என் வாழ்விலே வரும் அன்பே வா
    # என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா? - உன்னை நினைத்து
    # வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
    # ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
    # மலைக்காற்று வந்து தமிழ் பேசுதே
    # அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே
    # எனக்கென ஏற்கெனவே பிறந்தவள் இவளோ
    # ஆகாயத் தாமரை அருகில் வந்ததே
    # இந்த மாமனோட மனசு மல்லிகைப் பூ போல பொன்னானது
    # மல்லியே சின்ன முல்லையே எந்தன் மரிக் கொழுந்தே
    # உன்னைச் சரணடைந்தேன் மன்னவா மன்னவா

    .... இன்னும் நிறைய உண்டு....

    ReplyDelete
    Replies
    1. மேலதிக பாடல்களுக்கு நன்றி ரிஷான் 100க்குள் அடக்கிக் கொண்டேன் இயன்றவரை திருமணச் சூழலோடு பொருத்திய பாடல்களைச் சேஎத்தேன். இந்த மாமனோட சோகம் என்பதால் விலக்கிவிட்டேன்

      Delete
  5. வருகைக்குகும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதி அரசு

    ReplyDelete
  6. மிக்க நன்றி பாலா ;-)

    ReplyDelete
  7. Excellent Collection ; Just I am looking for this type of collection to preset in the form of CD . Thanks a lot

    ReplyDelete
  8. அருமையான பட்டியல். அன்பை பகிர இப்படியும் ஒரு வழி உண்டு என உணர வைத்தது, புதுமை.

    ReplyDelete
  9. Good work.

    Some songs, like Kasthuri Maane, I am reading of after a long time.

    As a child, used to hate that song because it was an oft repeated song from one of two VHS cassettes that had Tamil film songs. Back in those days.:-)... we had two VHS cassettes and that used to be played all the time because getting Tamil films was so rare for us in Canada. Only one Tamil store (Siva's Trading?) versus the hundreds available today...


    -Kajan

    ReplyDelete
  10. அருமையானதொரு personalised பரிசு.கோபிநாத்துக்கும் அவர் மனைவிக்கும், ரேணுகா ரெயினுக்கும் அவர் கணவருக்கும் மனமார்ந்த மண வாழ்த்துக்களை உங்களுடன் சேர்ந்து நானும் சொல்லிக் கொள்கிறேன்.

    இசையும் பாடலும் நம் பண்பாட்டோடு இணைந்த ஒன்று. குழந்தை பிறந்து தாலாட்டில் இருந்து ஆரம்பிக்கிறது ஒரு குழந்தைக்கு இசையின் தொடர்பு.இன்னும் சொல்லப் போனால் வயிற்றில் இருக்கும்போதே சீமந்தம்/வளைகாப்பில் இருந்து குழந்தை இசையைக் கேட்டு வருகிறது.

    நல்லதொரு பதிவு, வருங்காலத்தில் பலருக்கும் உதவும் :-)

    amas32

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி KK மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அன்பர்

    ReplyDelete
  12. amas அம்மா நன்றி ;-)

    மிக்க நன்றி கஜன், அந்தக் காலத்தில் நானும் கஸ்தூரி மானே கேட்டுக் கேட்டு..

    ReplyDelete
  13. இதயவீணை திரைப் படத்தில் வரும் ' இன்று போல என்றும் வாழ்க ' என்கிற பாடலை என் சார்பாக வாழ்த்துகளுடன் அளிக்கிறேன் .

    ReplyDelete
  14. அன்புச் சகோதரிக்கும், நண்பர் கோபிநாத் அவர்களுக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்..

    ReplyDelete