Pages

Tuesday, August 7, 2012

தமிழ்த்திரையிசையில் "கெளரவ"ப்பாடகர்கள்

தமிழ்த் திரையிசைப்பாடல்களில் வாத்திய இசையோடு கூட்டுக் குரல்களும் வரிகளை உச்சரிக்காது ஆலாபனை செய்யும் வண்ணம் பல பாடல்கள் தொன்று தொட்டு வந்திருக்கின்றன. இன்னும் விசேஷமாக பிரபல பாடகர்களை இந்த இடைக் குரலுக்குப் பயன்படுத்தியது எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்துப் பாணி. எம்.எஸ்.விஸ்வநாதன், எல்.ஆர்.ஈஸ்வரி போன்றோரின் பாடல்கள் சில உதாரணமாக விளங்கி நிற்கின்றன. உதாரணமாக பாலிருக்கும் பழமிருக்கும் பாடலை P.சுசீலா பாட, பின்னாலே "ம்ஹும்" என்று மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்பாடல் முழுக்கக் குரல் கொடுத்திருப்பார்.
இன்னும் சொல்லப்போனால் எண்பதுகளில் பிரபல பாடகியாக விளங்கிய எஸ்.பி.சைலஜாவின் அறிமுகமே இப்படியான ஒரு இடைக்குரலாக "மழை தருமோ என் மேகம்" என்ற பாடல் மூலமே ஆரம்பித்தது. இசைஞானி இளையாராஜாவின் இசையில் மலர்ந்த பல பாடல்கள் தான் இவ்வாறான பிரபல பாடகர்களின் இடைக்குரல்களோடு அதிகம் காதுக்கு எட்டுகின்றன. பின்னாளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களில் கோரஸ் பாடியவர்கள் முன்னணிப் பாடகர்களாகவும், அதே குரல்கள் இடைக்குரல்களாகவும் பாடல்களில் விளங்கியிருக்கக் காணலாம்.

இவ்வாறு அமைந்த ஐந்து பாடல்களை கடந்த றேடியோஸ்புதிரில் கொடுத்திருந்தேன். அவற்றோடு இன்னும் சேர்த்து இங்கே பகிரும் இந்த பிரபல பாடகர்களின் கெளரவ இடைக்குரல்களோடு அமையும் பாடல்களைக் கேட்டு ரசியுங்கள்.
இதே பாங்கில் வந்த பாடல்கள் உங்களுக்கும் தெரிந்தால் பின்னூட்டத்தில் அறியத்தாருங்கள்.

பாடல் ஒன்று : மெளனமேன் மெளனமே திரைப்படம்: என் ஜீவன் பாடுது இடைக்குரல்: சித்ரா, முன்னணிக் குரல் மனோ: இசை: இசைஞானி இளையராஜா 0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பாடல் இரண்டு : நாரினில் பூத்தொடுத்து மாலை ஆக்கினேன் திரைப்படம்: இரண்டில் ஒன்று இடைக்குரல்: சித்ரா இசையமைத்துப் பாடுகின்றார் இசைஞானி இளையராஜா 0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பாடல் மூன்று: அதோ மேக ஊர்வலம் திரைப்படம்: ஈரமான ரோஜாவே இடைக்குரல்: சுனந்தா முன்னணிக்குரல்: மனோ இசை: இசைஞானி இளையராஜா 0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பாடல் நான்கு : தீர்த்தக்கரை தனிலே திரைப்படம்: தைப்பொங்கல் இடைக்குரல் ஜென்சி முன்னணிக்குரல்: கே.ஜே.ஜேசுதாஸ் பாடல் இசை: இசைஞானி இளையராஜா. இதே பாடலை ஜென்ஸி முழுமையாகப் பாடும் இன்னொரு வடிவமும் உண்டு 0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பாடல் ஐந்து : மழை தருமோ என் மேகம் திரைப்படம்: மனிதரில் இத்தனை நிறங்களா இடைக்குரல்: சைலஜா முன்னணிக்குரல் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசை: ஷியாம் 0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பாடல் ஆறு: சின்னப்புறா ஒன்று திரைப்படம்: அன்பே சங்கீதா இடைக்குரல்: எஸ்.பி.சைலஜா முன்னணிக்குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசை: இசைஞானி இளையராஜா 0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 பாடல்: வானுயர்ந்த சோலையிலே திரைப்படம்: இதயக்கோவில் இடைக்குரல்: எஸ்.ஜானகி முன்னணிக்குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசை: இசைஞானி இளையராஜா

20 comments:

pudugaithendral said...

உக்காந்து யோசிக்கணும் பாஸ்.

கோபிநாத் said...

அருமையான பகிர்வு தல...இந்த பாடலை எல்லாம் கேட்ட போது இதில் இப்படி எல்லாம் இடைக்குரல் இருக்கான்னு தெரியமாலே கேட்டுயிருக்கிறேன்..உங்க ஆராய்ச்சிக்கு மிக்க நன்றி ;))

அருமையான பாடல்களை தந்தமைக்கு மீண்டும் நன்றி ;)

நாடோடி இலக்கியன் said...

இந்த டைட்டில் பார்த்ததும் நினைவுக்கு வந்தது அதோ மேக ஊர்வலம் பாடலின் சுனந்தாவின் இடைக்குரல்தான்.

காதல்ரோஜாவே பாடலில் சுஜாதாவின் இடைக்குரல் இப்போதைக்கு நினைவுக்கு
வருகிறது.

கானா பிரபா said...

புதுகை பாஸ் குசும்பு ;)

கானா பிரபா said...

வாங்க தல கோபி கேட்டுக்கிட்டே இருங்க ;)

கானா பிரபா said...

நாடோடி இலக்கியன்

அதோ மேக ஊர்வலம் பாட்டில் சுனந்தாவின் குரல் வெகு அழகாகப் பயன்பட்டிருக்கு அவரின் தனிப்பாடல்களை விடவும்.

கோமதி அரசு said...

இதே பாங்கில் வந்த பாடல்கள் உங்களுக்கும் தெரிந்தால் பின்னூட்டத்தில் அறியத்தாருங்கள்.//

ஆலயமணியில் பொன்னை விரும்பும் பூமிலே என்னை விரும்பும் என்ற பாடலில், டி.எம். செளந்திரராஜனுடன் இடைக் குரலில் எல்.ஆர் ஈஸ்வரி அவர்கள் பாடுவார்கள் அது மிக நன்றாக இருக்கும்.

சாரதா படத்தில் தட்டு தடுமாறி நெஞ்சம் என்ற சீர்காழி கோவிந்தராஜன் பாடலுக்கு இடைக்குரல் எல்.ஆர். ஈஸ்வரி பாடி இருப்பார்கள்.

உயர்ந்த மனிதன் படத்தில் வெள்ளிக்கிண்ணம் தான் தங்க கைகளில் டி.எம்.எஸுடன் சுசிலா அவர்கள் இடைக்குரலில் பாடுவார்கள்.

பாவை விளக்கு படத்தில் சிதம்பரம் ஜெயராமன் பாடிய வண்ணத்தமிழ் பெண் ஒருத்தி என் அருகில் வந்தாள் பாடலில் எல். ஆர். ஈஸ்வரி இணைக் குரலில் பாடுவார்.


நிறைய பாடல் இருக்கிறது நினைவுக்கு வந்தவை இவை.

நீங்கள் அளித்த பாடல்கள் எல்லாம் கேட்டு மகிழ்ந்தேன்.

மலரின் நினைவுகள் said...

நாங்களும் லிஸ்ட் தருவோம்ல...!!

பாடல்: வானம் கீழே வந்தால் என்ன
திரைப்படம்: தூங்காதே தம்பி தூங்காதே
இடைக் குரல்: எஸ்.ஜானகி
முன்னணிக் குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா

பாடல்: விக்ரம் விக்ரம் நான் வெற்றி பெற்றவன்
திரைப்படம்: விக்ரம்
இடைக் குரல்: எஸ்.ஜானகி
முன்னணிக் குரல்: கமல்ஹாசன்
இசை: இளையராஜா

பாடல்: அந்திமழை பொழிகிறது
திரைப்படம்: ராஜபார்வை
இடைக் குரல்: கோபாலகிருஷ்ணன்
முன்னணிக் குரல்கள்: எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா

பாடல்: இது ஒரு நிலாக் காலம்
திரைப் படம்: டிக் டிக் டிக்
இடைக் குரல்: கோபாலகிருஷ்ணன்
முன்னணிக் குரல்: எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

பாடல்: விழிகள் மேடையாம் இமைகள்
திரைப் படம்: கிளிஞ்சல்கள்
இடைக் குரல்: Dr.கல்யான்
முன்னணிக் குரல்: எஸ்.ஜானகி
இசை: T.ராஜேந்தர்

blog-ல இந்த மாதிரி மியூசிக் file எப்படி இணைக்கிறதுன்னு சொல்லிக் கொடுத்தீங்கனா உங்களுக்கு நன்றியுள்ளவனா இருப்பேன்...

ராஜா said...

ஜானகி இது போன்று நிறைய இளையராஜாவின் இசையில் பாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன், ஆனால் சட்டென்று எதுவும் நினைவிற்கு வரவில்லை :)

கானா பிரபா said...

கோமதி அரசு

அருமையான பாடல் பகிர்வுகள், மிக்க நன்றி ;)

கானா பிரபா said...

வாங்க மலரின் நினைவுகள்

விடுபட்ட நல்ல பாடல்களைக்கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள். இதில் டி.வி.கோபாலகிருஷ்ணனைத் தவிர்த்தமைக்குக் காரணம் அவர் வாத்தியக்காரராக அறியப்பட்டதால்.

radiospathy@gmail.com இற்கு ஒரு மடல் இடுங்கள் ஒலிப்பகிர்வு பற்றிச் சொல்கிறேன்

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி ராஜா

வல்லிசிம்ஹன் said...

அருமையான பாடல்கள். அதற்கு வந்திருக்கும் பின்னூட்டங்கள் அதிலும் தங்கை கோமதி சொல்லி இருக்கும் படங்கள் இனிமை.
அதே போல குழந்தையும் தெய்வமும் படத்தில் சுசீலா பாட எம் எஸ் விஸ்வநாதன் இடைக்குரல் கொடுத்திருப்பார்.

பாவமன்னிப்பு படத்திலும் பாலிருக்கும் பாட்டில் ஹம்மிங் சூப்பராக இருக்கும்.

பாவைவிளக்கு படத்தில் ''வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்''பாட்டுக்கு எஸ்.ஜானகி இடைக்குரல் கொடுத்திருப்பார்.
இன்னும் எத்தனையோ. நினைவுக்கு வருகின்றன. கைவழி வரவில்லை:)நன்றி பிரபா.

கானா பிரபா said...

வல்லியம்மா

வருகைக்கும் மேலதிக பாடல்களைப் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி

ய‌சோத‌ர‌ன் said...

பிர‌பா, நீங்க‌ள் த‌ந்த‌ பாட‌ல்க‌ளை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தேன், அத்த‌னை ப‌ட‌ல்க‌ளும் TDK ஒலி நாடாவில் ப‌திய‌வைத்து உருகி உருகி கேட்ட‌ பாட‌ல்க‌ள், எங்க‌ளை எல்லாம் சிலிர்க்க, க‌த‌லிக்க‌, அழ‌ வைத்த‌ இந்த‌ பாட‌ல்க‌ள் இல்லாதிருந்திருந்தால் எங்க‌ள் பாலிய‌ம் எவ்வ‌ள‌வு வ‌ர‌ட்சியாக‌ இருந்திருக்கும்.....

இளைய‌ராஜ‌வின் பாட‌ல் என‌ நினைத்திருந்த‌ "மழை தருமோ என் மேகம் " இசை ஷியாம் என‌ குறிப்பிட்டிருந்தீர்க‌ள், மீண்டும் ஒரு முறை என‌து க‌ண‌க்கு பிளைத்திருக்கிற‌‌து,ப‌கிர்வுக்கு ந‌ன்றி பிர‌பா..

எம்.ரிஷான் ஷெரீப் said...

இந்த வரிசையில் இன்னுமொரு பாடலைச் சேர்க்கலாம்.

படம் - ப்ரியங்கா
பாடல் - வனக்குயிலே குயில் தரும் கவியே
முன்னணிக் குரல் - எஸ்.பி.பி
இடைக்குரல் - சித்ரா

பிரசன்னா கண்ணன் said...

பிரபா, இதோ என்னுடைய பங்கு.. :-)

படம் - புன்னகை மன்னன்
பாடல் - கவிதை கேளுங்கள்
முன்னணிக் குரல் - வாணி ஜெயராம்
இடைக்குரல் - ஜெயச்சந்திரன்

படம் - அந்தப்புரம் (மொழிமாற்று படம்)
பாடல் - அழகே உன் முகம் பாராமல்
முன்னணிக் குரல் - சித்ரா
இடைக்குரல் - இளையராஜா (Opening humming)

எம்.ரிஷான் ஷெரீப் said...


பாடல் : ஈரத் தாமரைப் பூவே
பாடியவர் : எஸ்.பி.பி
இடைக் குரல் : எஸ்.பி.ஷைலஜா

Unknown said...

கீதம்.. சங்கீதம்.. .........................சைலஜா +SPB (கொக்கரக்கோ)
இந்த கீதம்.. சங்கீதம்... பாடலின் இடையில் SP.ஷைலஜாவின் சிரிப்பும் ஓர் அழகான இனிமை

Unknown said...

கீதம்.. சங்கீதம்.. .........................சைலஜா +SPB (கொக்கரக்கோ)
இந்த கீதம்.. சங்கீதம்... பாடலின் இடையில் SP.ஷைலஜாவின் சிரிப்பும் ஓர் அழகான இனிமை