தொண்ணூறுகளில் தமிழ்த்திரையிசையை இப்போது திரும்பிப்பார்க்கும் போதும் ஒரு கலவையான உணர்வு தான் தோன்றும். எண்பதுகளிலே தனிக்காட்டு ராஜாவாக இசைஞானி இளையராஜா இருந்தபோது வானொலிப்பெட்டிகளுக்கு மட்டுமே அதிகம் நெருக்கமான இசை தொண்ணூறுகளிலே அள்ளிவீசப்பட்ட தொலைக்காட்சி சானல்களால் இன்னும் நெருக்கமாக வந்து சேர்ந்தது. ஆனால் திரையிசையில் ஏ.ஆர்.ரஹ்மானின் வரவு என்ற ஒரு புதிய அத்தியாயம் நிகழ்த்தப்பட்டது மட்டுமே முக்கியமான மைல்கல்லாக நினைவில் நிறுத்தவேண்டியிருக்கிறது. எண்பதுகளிலே பட்ஜெட் இசையமைப்பாளர்கள் என்றிருந்த சங்கர் கணேஷ், சந்திரபோஸ், எஸ்.ஏ.ராஜ்குமார் என்ற வட்டம் சிறிதாக ஆதித்யன் போன்றோரின் வரவு நிகழ்த்தப்பட்டாலும் அதையும் தாண்டி சின்ன பட்ஜெட் படங்களின் பெரு விருப்புக்குரிய தேர்வாக அமைந்தது தேவாவின் வருகை.
புதுவசந்தம் படத்தின் பெருவெற்றியைத் தக்க வைக்கமுடியாமல் தொடந்து "பெரும்புள்ளி" போன்ற படங்களின் தோல்வியோடு வில்லனாக நடிக்க ஆசைப்பட்டுத் தயாரிப்பாளராகி ஒட்டாண்டியாகிய எஸ்.ஏ.ராஜ்குமார் ஒருபக்கம், அமரன் என்ற முதல் படத்தில் கவனிக்க வைத்தாலும் அதே படத்தின் தோல்வியும் தொடந்து துறைமுகம் போன்ற படங்களும் ஆதித்யனை அடுத்த நிலை இசையமைப்பாளாராக அதிகம் உருவாக்கவில்லை.
"வைகாசி பொறந்தாச்சு" படத்தின் பெருவெற்றியோடு அளவுகணக்கில்லாமல் படங்களை ஒப்புக்கொண்டு அதில் வெற்றியின் சதவிகிதத்தையும் கூட்டிக் கொண்டு முன்னணிக்கு வந்தார் தேவா. பாடல்களைக் காப்பியடிப்பவர் என்ற பரவலான விமர்சனம் தேவா மீது. ஆனாலும் இன்றைக்கு ஹாரிஸ் ஜெயராஜையே பத்துவருஷமாக மன்னிக்கும் தமிழ் இசை ரசிகர் உலகம் பரவலாக அள்ளிப்போட்ட தேவாவைக் கருணையோடு பார்த்தது. ராஜா காலத்தில் கேட்ட மெட்டும், ஆர்ப்பாட்டமில்லாத இசைக்கோர்வையும் மட்டும் போதும், கூடவே கவிஞர் காளிதாசன் போன்ற கவிஞர்களையும் வைத்துக் கொண்டு நிதானமாகக் களத்தில் தன் ஆட்டத்தைக் காட்டினார் தேவா.
இன்றைக்கு கானா பாடல்கள் என்றால் தேவா என்ற நிலைக்குக் காரணமான "காதல் கோட்டை"க்கு முன்பே பாமர ரசிகர்கள் இதயங்களுக்குள் எளிமையான தேவாவின் மெட்டு நுளைந்துகொண்டது. இன்னொரு காரணம் இசைஞானி இளையராஜா அதுவரை கொடுத்து வந்த இசையின் போக்கில் வந்த மாற்றம், கூடவே ஏ.ஆர்.ரஹ்மானின் மேற்கத்தேய வாத்தியக் கோர்ப்பு மற்றும் தமிழ்ச்சூழலுக்கு அந்நியப்பட்ட இசையை உள்வாங்கத் தமிழ் ரசிகர்கள் எடுத்துக் கொண்ட காலம். இவற்றை எல்லாம் விட உடனேயே ஒரு பட்ஜெட் படம், எங்கோ கேட்ட பாடல் மாதிரி ஈசியாக நுளையக்கூடிய மெட்டுத் தேடிய தயாரிப்பாளர்களின் நோக்கம் எல்லாம் தேவாவால் நிறைவேறியது.
இன்றைக்கும் எமது கிராமங்களில் தேவாவின் தொண்ணூறுகள் தான் வானொலிப்பெட்டிகளால் ஆராதிக்கப்படுகின்றன. அந்த வகையில் தேனிசைத் தென்றல் கொடுத்த பாடல்களிலே என் மனசுக்கு நெருக்கமான பாடல்களில் சிலதை இங்கே பகிர்கின்றேன்.
தேனிசைத் தென்றல் தேவா என்ற பட்டத்தை மெல்லிசை மன்னர் கொடுத்த ராசி வைகாசி பொறந்தாச்சு படத்தோடு ஆரம்பித்தது. படத்தில் ஏகப்பட்ட துண்டு துண்டான பாடல்களோடு "சின்னப்பொண்ணுதான் வெக்கப்படுது அம்மா அம்மாடி" பாடல் சென்னை வானொலியில் தேசிய கீதங்களில் ஒன்றானது அப்போது
கருப்பு வெள்ளை என்றொரு படம், விஜயா வாஹினி என்ற பெரும் தயாரிப்பு நிறுவனத்தால் எடுக்கப்பட்டது. தொண்ணூறுகளில் கொழும்பில் தனியார் வானொலி எஃப் எம் 99 என்று மெட்டவிழும் நேரம் அடிக்கடி ஒலிபரப்பிப் புண்ணியம் தேடிக்கொண்டது. இப்போது கேட்டாலும் இனிய சுகம். எஸ்.பி.பி, சித்ரா குரல்களில்
நடிகர் சிவக்குமாரின் 150 வது படம் என நினைக்கிறேன் "வாட்ச்மேன் வடிவேலு" என்ற தோல்விப்படம். படத்திலே பாடல்கள் தேவாவின் கைவண்ணத்தில் வெகு சிறப்பு. "சம்மதம் தந்துட்டேன் நில்லு" என்ற இசைஞானியின் பாடலில் கொள்ளை இன்பம் கொண்டு அதே மெட்டில் "கன்னத்தில் கன்னம்" வைத்தவர். இதே படத்தில் வரும் சந்திரனும் சூரியனும் பாடல் தித்திப்பு ஆனால் அதை வயதான பாட்டன், பாட்டி பேரப்பிள்ளையை நோக்கிப் பாடவைத்து மொக்கை ஆக்கினார் இயக்குனர்.
பி.வாசுவின் கதையை கே.எஸ்.ரவிக்குமார் படமாக்கிய "புருஷ லட்சணம்" டூப்ளிகேட் பிரபுவாக ஜெயராமும் குஷ்புவும் ஜோடி கட்டிய அந்தப் படத்தில் வரும் "செம்பட்டுப் பூவே" பாடல் தேவாவை #WhyDevaIsGod என்று ட்விட்ட வைக்கும்.
தேவாவுக்குப் பெருவாழ்வு கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் சுரேஷ்கிருஷ்ணா, அண்ணாமலை, பாட்ஷா ஆகிய ரஜினி படங்களில் ஜெயித்த இந்தக் கூட்டணி மற்றப்படங்களில் வெற்றிக்கோட்டை எட்டவில்லை. ஆனாலும் என்ன "ரோஜாவைக் கிள்ளாதே" படத்தில் வரும் இந்தப் பாட்டைக் கேட்டுப்பாருங்கள் சொக்கிப்போவீர்கள். "நீ ஒரு பட்டம் நானொரு பட்டம் சந்தர்ப்பத்தால் சந்தித்தோம்"
மிகக்குறுகிய காலத்திலேயே அதாவது இரண்டு வருஷங்களுக்குள் அரைச்செஞ்சரி போட்ட தேவாவுக்கு 50 வது படம் கஸ்தூரிராஜாவின் சோலையம்மா வெளிவந்த ஆண்டு 1992. இளையராஜாவத் துதிபாடி கங்கை அமரன் பாடும் பாடலை விசுவாசமாகப் போட்டு வைத்தார். கூடவே "தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு" தேவாவுக்கே உரிய தனித்துவம்
Pages
▼
Saturday, April 21, 2012
Friday, April 13, 2012
"நானும் பாடுவேன்" போட்டி முடிவுகள்
வணக்கம், வந்தனம், வெல்கம் மக்கள்ஸ்
கடந்த சில வாரங்களாக றேடியோஸ்பதி வழியாக நடாத்தியிருந்த "நானும் பாடுவேன்" போட்டி இன்றோடு ஒரு நிறைவை நாடுகின்றது. இதுவரை காலமும் இந்தப் போட்டிக்கு ஒத்துழைப்பு நல்கிய உங்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதோடு இந்தப் போட்டியில் ஆர்வத்தோடு பங்கெடுத்துக்கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்களை அளிக்கின்றோம்.
போட்டி என்றால் கண்டிப்பாக முடிவு வரவேண்டும். ஆனால் இந்தப் போட்டியிலே வெற்றியாளரோடு, பங்கெடுத்துக் கொண்ட ஒவ்வொருவரின் திறமையும் தனித்துவமானது. அந்த வகையில் நீங்கள் எல்லோருமே தனித்துவமானவர்கள்.
போட்டி நடத்துவதிலே ஒரு சில சிரமங்கள் இருந்தன. அவற்றில் முக்கியமாக தகுந்த வாக்குப் பெட்டியை அளிப்பதில் இருந்து, வாக்குகளை முறையாகப் பெற்றுக் கொள்வதிலும் சவால்கள் இருந்தன. ஆனால் தொழில்நுட்பத்தோடு போட்டி போடவேண்டிய வேலை அது. கூடவே நீண்ட கால இடைவெளியும் இந்தப் போட்டியின் வாக்கெடுப்புக்காகக் கொள்ளப்பட்டது. இப்படியான குறைகளைக் களைந்து எதிர்வரும் காலங்களிலே சிறப்பான போட்டிகளை உங்கள் ஒத்துழைப்போடு தரவேண்டும் என்ற முனைப்பு இருக்கின்றது. எனவே குறைகளைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.
கூடவே போட்டிப் பரிசிலும் ஒரு மாற்றம். முதல் பரிசு மட்டுமே உண்டு என்று அறிவித்திருந்தேன். இப்போது மேலதிகமாக இரண்டாவது பரிசையும் வெற்றி பெற்றவர்களுக்கு அளிக்கிறேன்.
இதுவரை நீங்கள் எல்லோரும் அளித்த வாக்குகளின் பிரகாரம் போட்டியிலே வெற்றி பெற்றவர்கள்
பெண் பாடகர்கள்
முதல் பரிசு: நிலாக்காலம் எ நிலா ( மொத்த வாக்குகள் 370 )
பரிசுப் புத்தகம்: கவிப்பேரரசு வைரமுத்துவின் "இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்"
இரண்டாவது பரிசு: செளம்யா சுந்தரராஜன் ( மொத்த வாக்குகள் 264 )
பரிசுப் புத்தகம்: யானி ஒரு கனவின் கதை (சித்தார்த் ராமானுஜன்)
ஆண் பாடகர்கள்
முதல் பரிசு: ஜபார் அலி ( மொத்த வாக்குகள் 141 )
பரிசுப் புத்தகம்: கவிப்பேரரசு வைரமுத்துவின் "நேற்றுப் போட்ட கோலம்"
இரண்டாவது பரிசு : யோகேஷ் ( மொத்த வாக்குகள் 108)
பரிசுப்புத்தகம்: யானி ஒரு கனவின் கதை (சித்தார்த் ராமானுஜன்)
இரண்டு கட்ட வாக்கெடுப்பின் முழுமையான விபரங்கள் கீழே
Sunday, April 1, 2012
றேடியோஸ்பதியின் "நானும் பாடுவேன்" போடுங்கய்யா ஓட்டு
வாக்கெடுப்பு நிறைவடைந்தது
வணக்கம் மக்கள்ஸ்,கடந்த சிலவாரங்களாக றேடியோஸ்பதியின் "நானும் பாடுவேன்" என்னும் புதிய போட்டி குறித்த அறிவிப்புக்கள் வெளியாகியது நீங்கள் அறிந்ததே. நேற்று நள்ளிரவோடு முடிந்த இந்தப் போட்டியில் இதுவரை 11 போட்டியாளர்கள் பங்கெடுத்துச் சிறப்பித்துள்ளனர். இவர்களின் பாடல்களை கடந்த பதிவிலும் கொடுத்திருந்தோம். இதோ இந்த 11 போட்டியாளர்களில் உங்கள் மனம் கவர்ந்த பாடகரைத் தெரிவு செய்யும் நேரம் இது. இன்று முதல் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை கீழ்க்காணும் ஓட்டுப்பெட்டியில் உங்களுக்குப் பிடித்த பாடகரைத் தெரிவு செய்து ஓட்டுப் போடுங்கள் ஏப்ரல் 14 ஆம் திகதி அன்று உங்களால் தெரிவு செய்யப்பட்ட "நானும் பாடுவேன்" பாடகர் வரிசை வெளியிடப்பட்டு முதற் பரிசு பெறும் அதிஷ்டசாலியும் அறிவிக்கப்படுவார். உங்களுக்குப் பிடித்த ஆண் பாடகர், பெண் பாடகி தலா ஒருவருக்கு வாக்களிக்கவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடல்களைக் கேட்டவண்ணம் எங்கே ஆரம்பிக்கட்டும் உங்கள் வேலை :)மக்கள்ஸ் முன்னர் கொடுத்த ஓட்டுப்பெட்டியில் ஒருவருக்கு மட்டுமே ஓட்டு வசதி என்பதால் இப்போது தனித்தனியாகப் பிரித்துள்ளேன், போட்டி முடிவில் முன்னர் வந்த ஓட்டுக்களும் கவனத்தில் எடுக்கப்படும்
======================================================
பெண் போட்டியாளர்கள்
======================================================
செளம்யா சுந்தரராஜன் பாடும் "நினைத்து நினைத்துப் பார்த்தால்"
கவிதா கெஜானனன் பாடும் "ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்"
மாதினி பாடும் "இதுவரை இல்லாத"
நிலாக்காலம்' (எ) நிலா பாடும் "சின்னக் குயில் பாடும் பாட்டு"
பெண் போட்டியாளர்களுக்கு வாக்களிக்க
survey solutions
===================================================ஆண் போட்டியாளர்கள்=====================================================திருக்குமார் பாடும் "கண்ணே கலைமானே"ஜபார் அலி பாடும் "நிலவுப்பாட்டு நிலவுப்பாட்டு"
கார்த்திக் அருள் பாடும் "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை"
யோகேஷ் பாடும் "காதல் வைத்துக் காதல் வைத்துக் காத்திருந்தேன்"
பரத்வாஜ் பாடும் "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை"
கோபி பாடும் "துள்ளி எழுந்தது பாட்டு"
ராகவ் பாடும் "காலையில் தினமும் நான் கண்விழித்தாலே"
ஆண் போட்டியாளர்களுக்கு வாக்களிக்க
online polls