Pages

Wednesday, January 26, 2011

பத்மபூஷண் எஸ்.பி.பாலசுப்ரமணியம்

44 ஆண்டுகளாகப் இசையுலகில் மங்காது பாடும் நிலா பாலுவுக்கு இன்று இன்னொரு மணி மகுடம். 2010 ஆம் ஆண்டுக்கான பத்மபூஷண் விருது கிட்டிய செய்தி தற்போது வந்திருக்கின்றது. 1966 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று முக்கிய மொழிகளிலும் ஏனைய இந்திய மொழிகளிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி அன்றும் இன்றும் ரசிகர்களது உள்ளத்தில் நிரந்தர சிம்மாசனத்தில் இருப்பவர். பாடகர் என்பதைத் தவிர நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என்ற பன்முகம் கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்குக் கிட்டிய விருதுகளின் பட்டியலை வாசிக்கவே ஒரு நாள் போதுமா? எனவே தேசிய விருது என்ற வகையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பெற்றுக் கொண்ட விருதுகளையும் குறித்த பாடல்களையும் பத்மபூஷண் விருதுக்கான சிறப்புப் படையலாக வழங்கி அவரை வாழ்த்துகின்றேன்.


1979 ஆம் ஆண்டில் கே.வி.மகாதேவன் இசையில் சங்கராபரணம் தெலுங்குத் திரைப்படத்திற்காக விருது பெற்ற பாடல் "ஓம்கார நாதானு"



1981 ஆம் ஆண்டில் லஷ்மிகாந்த் பியாரிலால் இசையில் ஏக் துஜே கேலியே ஹிந்தித்திரைபடத்திற்காக விருது பெற்ற பாடல் "தேரே மேரே"



1983 ஆம் ஆண்டில் இசைஞானி இளையராஜா இசையில் சாகர சங்கமம் தெலுங்குத்திரைப்படத்திற்காக விருது பெற்ற பாடல் "வேதம்"



1988 ஆம் ஆண்டில் இசைஞானி இளையராஜா இசையில் ருத்ரவீணா தெலுங்குத் திரைப்படத்திற்காக விருது பெற்ற பாடல் "செப்பாலனி உண்டி"



1995 ஆம் ஆண்டில் ஹம்சலேகா இசையில் சங்கீத சாகர ஞானயோகி பஞ்சாட்சர கவி என்ற கன்னடத்திரைப்படத்திற்காக விருது பெற்ற பாடல் "குமண்டு குமண்டு"

Get this widget | Track details | eSnips Social DNA


1997 ஆம் ஆண்டில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் மின்சாரக்கனவு தமிழ்த்திரைப்படத்துக்காக விருதைப் பெற்ற "தங்கத்தாமரை மகளே"



வரலாற்றுச் சிறப்புமிக்க சிட்னி ஒபரா ஹவுசில் பாடிய நிலா பாலு


இசையமைப்பாளர் பாலசுப்ரமணியம் இசையில் எனக்குப் பிடித்த பாடல் சிகரம் படத்தில் இருந்து "இதோ இதோ என் பல்லவி"



எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு பத்மபூஷண் கிட்டிய செய்தியை உடன் பகிர்ந்த நண்பர் சொக்கனுக்கும் தேசிய விருதுப்பட்டியலுக்கு உதவிய விக்கிபீடியாவுக்கும் நன்றி

32 comments:

  1. பத்மபூஷண் விருது பெற்ற S.P பாலசுப்ரமணியம் அவர்களுக்கு அவர் மேலும் பல விருதுகள் பெற றேடியோஸ்பதியின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
  2. பத்மபூஷண் விருதுக்கு பெருமை சேர்ந்திருக்கிறது!
    பதிவு மிக அருமை .இசையை வான் அலைகளில் அள்ளி வழங்கும் தங்களுக்கு நன்றிகள்!

    ReplyDelete
  3. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்மபூஷண் விருது அறிவித்த சில மணித்துளிகளில் அவரைப் பற்றிய பதிவு பாடல்களுடன்! உங்கள் வேகத்தை வியக்கிறேன்! வரவேற்கிறேன்!அருமை.

    ReplyDelete
  4. இந்திய அரசுக்கு இப்போதாவது இவருக்கு பத்மபூஷன் விருது தரத் தோன்றியதே! பாலு சார் குரல் வளத்திற்குக் கிடைத்த பரிசு இது. அவருக்கு வாழ்த்துகள். இந்தத் தகவலை முதலில் கொடுத்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  5. யோவ். எப்படி லிஸ்ட் மொதல்லையே உங்களுக்கு வந்திருச்சா? அறிவிச்சு 30 நிமிசத்துல பதிவு போடுறீங்க

    ReplyDelete
  6. பாடும் நிலாவிற்கு மேலும் ஒரு மகுடம்

    ReplyDelete
  7. சார் எதாவது சுட்டி இருக்கா? நான் பார்த்தவரை எதிலும் அவர் பெயர் இல்லை

    ReplyDelete
  8. வணக்கம் எல்.கே

    சற்று முன்னர் தான் தொலைக்காட்சியில் அறிவிப்பு வந்தது, இன்னும் இணைய செய்தி ஊடகங்களில் வரவில்லை

    ReplyDelete
  9. See the link of Press Information Bureau given below. Dr. SPB's name is there.

    http://www.pib.nic.in/newsite/erelease.aspx?relid=69364

    ReplyDelete
  10. கானா! சூடா ஒரு பதிவா?சூப்பர்.

    அவரோட “நந்தா நீ என் நிலா” (படம் நந்தா - என் நிலாஇசை வி.தக்‌ஷிணாமூர்த்தி) பாட்டும் சேர்த்திடுங்க. எனக்காக கானா.அது பாலுவின் இசை பயணத்தில் ஒரு பெரிய மைல் கல்.மயக்கும் குரல்.

    நன்றி.

    ReplyDelete
  11. Great news. Long live Dr. SPB!!!

    ReplyDelete
  12. //பத்மபூஷண் விருதுக்கு பெருமை சேர்ந்திருக்கிறது!

    வழி மொழிகிறேன்

    பாலு சார் பற்றி உடனடி பதிவுக்கு ஒரு ஸ்பெஷல் வணக்கம் தல!!!!

    ReplyDelete
  13. Post super fast,
    like SPB himself :)
    very few practice sessions

    Someone has updated wiki also very fast :)

    ReplyDelete
  14. //சார் எதாவது சுட்டி இருக்கா?//

    அரசின் சுற்றறிக்கை
    http://www.pib.nic.in/newsite/erelease.aspx?relid=69364

    ReplyDelete
  15. வருகைக்கு நன்றி நண்பர்களே

    ரவிஷங்கர்

    நந்தா என் நிலா பாட்டை இன்னொரு தொகுப்புக்காக வச்சிருக்கிறேன், விரைவில் தருகிறேன்

    ReplyDelete
  16. பகிர்வுக்கு நன்றி தல...பாடும் நிலாவிற்கு மேலும் ஒரு மகுடம் ;)

    ReplyDelete
  17. என் மனமார்ந்த வாழ்த்த்துக்கள் பாலூஜி

    ReplyDelete
  18. "பத்மபூஷன் விருது" வாழ்த்துக்கள்.

    சுடச்சுட பதிந்த பிரபாவுக்கும் வாழ்த்து.

    ReplyDelete
  19. சூடான பதிவிற்கும்
    சுவையான பாடலுக்கும்
    சூப்பர் Singer 'பாலு'விற்கும்
    வாழ்த்துக்களும் வணக்கங்களும்..

    ReplyDelete
  20. கானா,

    அபூர்வசகோதரர்களுக்கு தேசிய விருது வாங்கினாரே பாலு........

    ReplyDelete
  21. காத்தரவராயன்

    அபூர்வ சகோதரர்கள் படத்துக்கு கவிஞர் வாலிக்குத் தான் தேசிய விருது கிட்டியது

    ReplyDelete
  22. கானா,

    எனக்குத் தெரிந்து வாலி இதுவரை எந்தப் பாடலுக்காகவும் தேசிய விருது வாங்கியது இல்லை. இந்த(அபூர்வ சகோதரர்கள்)ச் செய்தியைக் கொஞ்சம் உறுதிப்படுத்தமுடியுமா?

    - என். சொக்கன்,
    பெங்களூரு.

    ReplyDelete
  23. சொக்கரே

    இந்தச் செய்தியைப் பாருங்க

    http://600024.com/ta/vaali-turns-octogenarian-%E2%80%93-felicitated-by-friends/

    ReplyDelete
  24. கானா,

    இந்த sourceல் எனக்கு முழுத் திருப்தி இல்லை :) அபூர்வ சகோதரர்கள் எந்த வருடம் 1988? 1989? அந்த வருடங்களில் தேசிய விருது வாங்கியவர்கள் பெயர்கள் இந்தப் பட்டியலில் உள்ளன:

    http://www.mazaindia.com/bollywood/Awards/national/national_lyricist.html

    - என். சொக்கன்,
    பெங்களூரு.

    ReplyDelete
  25. சொக்கரே

    நான் கமல் சொன்னதை வைத்துத் தான் சொல்லியிருந்தேன்.ஆனால் வாலியின் நூலில் தேசிய விருதுச் செய்தி கண்ணில் படவில்லை. உங்களின் சுட்டியில் விரிவான பட்டியல் இருப்பதால் வாலிக்குத் தேசிய விருது கிட்டவில்லை என்பதாகவே முடிவு எடுக்க வேண்டியுள்ளது.
    தடங்கலுக்கு வருந்துகின்றோம் ;-)

    ReplyDelete
  26. இளையராஜா,எஸ்.பி.பாலசுப்ரமணியம் ,ஆகியோருக்கு எவ்வளவோ அவார்ட் கொடுத்தாலும் போதாது ,இப்படி சிறந்த கலைஞர்கள் பெற்ற
    இந்தியா பெருமைப்பட வேண்டும்

    ReplyDelete
  27. இளையராஜா,எஸ்.பி.பாலசுப்ரமணியம் ,ஆகியோருக்கு எவ்வளவோ அவார்ட் கொடுத்தாலும் போதாது ,இப்படி சிறந்த கலைஞர்கள் பெற்ற
    இந்தியா பெருமைப்பட வேண்டும்

    ReplyDelete
  28. பாரத ரத்னா விருதுக்கு மிகத் தகுதியானவர்கள் ராஜா அவர்களும் பாலு அவர்களும்.. நூறு வயதிற்கு மேல் அவர் பிரார்த்தனைகள்.. வாழ்த்த வயதில்லை பாலு அவர்களே.. என் வணக்கங்கள்.. பதிவிற்கு நன்றி பிரபா அவர்களே!

    ReplyDelete
  29. கானா பிரபா சார்.. ரொம்ப லேட்டாக இங்கு வந்திருக்கேன் இப்பதான் உங்கள் தளம் வாய்ப்பு கிடைத்தது. என் வாழ்த்துக்கும் என் அபிமான பாலுஜிக்கு.

    ReplyDelete