Pages

Tuesday, August 10, 2010

1971 இல் பட்டையைக் கிளப்பிய பாவலர் சகோதர்கள்

Nyayave Devaru என்ற படம் 1971 இல் கன்னடத்தில் தயாரான போது அதற்கு இசையமைத்தவர்கள் ராஜன் நாகேந்திரா இரட்டையர்கள். இந்தப் படத்தில் வரும் பி.பி.ஶ்ரீநிவாஸ் பாடும் "ஆகாசவி பீலலி மேலே" என்ற பாடல் கன்னடத்திரையிசையின் முத்துக்களில் ஒன்று.
அந்தப் பாடலைக் கேட்க



இதே பாடல் மெட்டை இவர்கள் மீளவும் "Moodu Mullu" என்ற தெலுங்குத் திரைப்படத்திற்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் பி.சுசீலா குரலில் "நீ கோசம் யவ்வன" என்ற பாடலுக்காகப் பயன்படுத்தியிருக்கின்றார்கள். இந்தப் படம் தமிழில் கலக்கிய முந்தானை முடிச்சு படத்தின் மொழிமாற்றுத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் பாடலைக் கேட்க



இந்தப் பதிவின் முதலில் இடம்பெற்ற Nyayave Devaru என்ற கன்னடப்படத்தில் இடம்பெற்ற "ஆகாசவி பீலலி மேலே" பாடலின் இசையை மீளவும் ஒரு வாத்திய இசையாகக் கொடுத்திருக்கின்றார்கள் "பாவலர் சகோதரர்கள்" என்ற இளையராஜா, கங்கை அமரன் (அமர்சிங்), பாஸ்கர் ஆகியோர். அதாவது இளையராஜா என்ற இசையமைப்பாளனை இந்த உலகம் கண்டுணராத காலம் அது. இந்த அரிய பொக்கிஷத்தை இசைஞானியின் ரசிகர் எஸ்.ஆர்.குமார் 1988 ஆம் ஆண்டில் 45 rpm EP record இல் இருந்து ஒலிநாடாவிற்கு மாற்றிப் பொக்கிஷமாக வைத்திருந்தார். இந்த அரிய பொக்கிஷம் நமது நண்பர்கள் ரவிசங்கர் ஆனந்த், சிங்கப்பூர் அலெக்ஸ் வழியாக என் கைக்கு வந்திருக்கின்றது. குமார் மற்றும் நண்பர்களுக்கு இனிய நன்றிகளைப் பகிர்வதோடு யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று அதை இங்கே பகிர்கின்றேன் கேட்டு அனுபவியுங்கள் ;)

8 comments:

  1. பகிர்வுக்கு நன்றி தல ;))

    தல ரவிஷங்கர் மற்றும் அலெக்ஸ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி ;)

    ReplyDelete
  2. உங்கள் முயற்சி மிக உன்னதமானது
    தொடரவும்

    ReplyDelete
  3. தல அற்புதம்,அருமை,உன்னதம்

    ReplyDelete
  4. அற்புதம்! ஹார்மோனியம் வாசிப்பது தலைவர் என்று நினைக்கிறேன். ஆரம்பத்திலேயே ஆர்கஸ்திரேசனில் தலைவர் கையெழுத்தை போட்டுவிட்டார். இதை பாதுகாத்து வைத்து உலகுக்கு வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிஸ்.

    ReplyDelete
  5. நாங்களும் கஷ்டபட்டு ஏதாவது மொக்கை போட்டுட்டு இருக்கமுல்ல, அடிக்கடி வந்து ஏதாவது சொல்லிட்டு போனால் தானே ஒரு பிடிப்பு இருக்கும், இல்லன்ன பதிவுலக நண்பர்கள் தங்கள் கருத்துக்களை சொல்ல வில்லை என்பதற்காக இந்த அப்பாவி பிள்ளை பதிவுகளை இடாமல் போயிடுவான், ஏன் இந்த பாவம் உங்களுக்கு ,, வாங்க உடனே வந்து பாருங்க என்னாத்த கிழிக்கிறான் எண்டு.

    ReplyDelete
  6. நன்றி தல.. உலக பொது மறையாக இருக்க வேண்டிய சில விஷியங்கள் பொக்கிஷமாகவே போய் விடுகிறது... திரு. குமார் அவர்கள் எங்கள் இளையாராஜா ஆற்குட் கம்யுநிட்டி நண்பர்களுக்கு இதை அனுப்பாமல் இருந்து இருந்தால் மற்றவர்கள் இதனை கேட்க்கும் பேறு இல்லது போய் இருக்கும்... அவருக்கு நான் றேடியோஸ்பதி வாயிலாக நன்றி சொல்ல விரும்புகிறேன்.

    ~ரவி

    ReplyDelete
  7. ம்ம்ம் வழமை போல அருமையான முயற்சி...!! பாவலர்கள் பற்றி நிறைய அறிய ஆவல். காத்திருக்கிறோம். தொடரட்டும்.

    ReplyDelete