Pages

Wednesday, July 29, 2009

சிறப்பு நேயர் "கைப்புள்ள" புகழ் மோகன்ராஜ்"

கைப்புள்ள என்று வலைப்பெயர் வைத்துக் கொண்டு பெயருக்கு சம்பந்தமே இல்லாமல் பரந்துபட்ட விஷய ஞானங்களுடன் எழுதிக் குவிக்கிறாரே என்று இவரைப் பற்றி அடிக்கடி நான் வியப்பதுண்டு. அக்டோபர் 2005 இல் இருந்து எழுதி வரும் இவர் இன்று வரை வலையுலக சர்ச்சைகளுக்குள் விழுந்து விடாமலும், தன் எழுத்துகளைச் சேதாரப்படுத்தாமலும் எழுதி வருவதுண்டு. எழுத்து வன்மையுடன், காமிராக் கண்களாலும் கைது செய்பவர் இவர். கைப்புள்ள காலிங் என்ற இவரின் வலைப்பதிவு சமீபத்தில் டபுள் செஞ்சுரி போட்டிருக்கு, இந்த வேளை என் வாழ்த்துக்களையும் சொல்லி வைக்கிறேன்.

சிறப்பு நேயர் பகுதியில் ஆக்கம் எழுதி அனுப்பி வைத்து விட்டு ஓய்ந்தார் என்று பார்த்தால் மேலதிகமாக நான்கு மடல்கள் அடுத்தடுத்த நாட்கள் வந்திருக்கு. முன்னர் எழுதிய பதிவை மெருகேற்றிக் கொண்டே இருந்தார். அவ்வளவு சிரத்தையாக ஒப்புக் கொண்ட விஷயத்தில் காட்டியது எனக்கு இன்னொரு ஆச்சரியம்.
பதிவில் ராஜா படம் தான் வேணும் என்று அடம்பிடித்து, ஒரு முறை ராஜா டவலைக் கட்டிக் கொண்டு இசையமைத்த காட்சிப் படத்தைப் போடுமாறு அடம்பிடித்தார். ஆனால் என் கைக்கு அது கிட்டவேயில்லை. யாராவது வைத்திருந்தால் சொல்லுங்கள் அதை இணைத்து விடுகின்றேன். இப்படி நேற்று நான் போட்டிருந்தேன். இன்று காலை என் மின்னஞ்சலைப் பார்த்தால் நம்ம தல கோபி அன்போடு தன் தெய்வத்தின் படத்தை அனுப்பியிருந்தார். ஆக, கைப்புள்ளையின் ஆசை நிறைவேறிடிச்சு ;)



சரி இனி நம்ம மோகன்ராஜ் பேசட்டும்

வணக்கம். ரேடியோஸ்பதியில் உங்கள் விருப்பப் பாடல்களைத் தேர்வு செய்து சொல்லுங்கள் என்று கானா அண்ணாச்சி சொன்னதும், நான் அவரைக் கேட்டது "நெஜமாத் தான் சொல்றீங்களா?". உண்மையைச் சொல்லனும்னா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அவர் இந்த சிறப்பு நேயர் பதிவுகளைத் தொடர்ச்சியா வழங்கிட்டு இருக்கும் போது நமக்கும் ஒரு நாள் சிறப்பு நேயராகறதுக்கு வாய்ப்பு கெடைக்குமான்னு நெனச்சிருக்கேன். ஏன்னா தமிழ் திரை இசை உலகைப் பொறுத்தவரை அவர் 'ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்' அவர்களுக்கு ஒப்பானவர். தமிழ் திரை இசையைப் பற்றியும் பாடல்களைப் பற்றியும் பல தகவல்களைத் தொகுத்து வைத்திருக்கும் ஒரு நடமாடும் தகவல் சுரங்கம். ஆகவே அவருடைய வலைப்பூவில் எனக்கு பிடித்த பாடல்களைப் பற்றி எழுதக் கிடைத்த வாய்ப்பு உண்மையிலேயே பெருமைக்குரியது. ஆனா சிறப்பு நேயர் வாய்ப்பு கிடைத்ததும் எனக்கு பிடித்த பல நூறு பாட்டுகளில் ஒரு சிலதை தேர்ந்தெடுப்பது சுலபமானதாக இருக்கவில்லை.

1. என்னைப் பொறுத்த வரையில்...இது போல ஒரு அற்புதமான இன்னொரு பாட்டை நான் கேட்டதில்லை. ஒரு பாட்டைக் கேட்டா பல வித உணர்ச்சிகள் மனதில் தோன்றலாம். ஆனா மனசை இதமா வருடிக் கொடுத்து அமைதி படுத்தற மாதிரியான இந்த மாதிரி ஒரு பாட்டைத் தேடிக்கிட்டே இருக்கேன். எந்த மனநிலையில நாம கேக்கறோமோ அந்த மனநிலைக்கேத்த மாதிரியே இந்த பாடலும் என் மனசுக்குத் தோனும். இன்னும் சொல்லப் போனா எனக்கு நினைவு தெரிஞ்சு நான் கேட்ட முதல் சில பாடல்களில் இது அடங்கும். அதனால தாய்மொழி, தாய்பாசம் இதெல்லாம் எவ்வளவு நெருக்கமானதோ அந்தளவுக்கு இப்பாட்டு என் மனசுக்கு ரொம்ப நெருக்கமானது. அதோட இந்த படப் பாடல்கள் வெளிவந்த போது தான் எங்க வீட்டுல டூ-இன்- ஒன் முதன் முதல்ல வந்தது. அந்த படம்...முதல் மரியாதை. அந்தப் பாடல்...வெட்டி வேரு வாசம். தேங்க் யூ வைரமுத்து அண்ட் இளையராஜா.

படம் : முதல் மரியாதை(1985)
பாடலாசிரியர் : வைரமுத்து
இசை : இளையராஜா
பாடியது : S.ஜானகி, மலேசியா வாசுதேவன்



2. சில நாட்களுக்கு முன்னாடி அலுவலகத்திலிருந்து திரும்பி வரும் போது பண்பலையில் ஒலிபரப்பான ஒரு பாட்டைக் கேட்டேன். அந்தப் படம் பிள்ளை நிலா. பேபி ஷாலினிக்குப் பேய் பிடித்து ஆட்டுவது போல வந்த ஒரு படம். மோகன், நளினி ஜோடியின் மகளாக வருவார் பேபி ஷாலினி(அப்போ பேபி தான்). அந்தப் பாட்டை என் தம்பி சிறுவயதில் "ராஜா மகள் ரோஜா தின்றாள்" என்று பாடுவான். அப்போது அந்த பாட்டு அவ்வளவு சிறப்பானதாக எனக்கும் தோன்றியதில்லை. ஆனால் அன்று மாலை கேட்டதிலிருந்து ஏனோ மனதை வெகுவாகக் கவர்ந்தது. நான் கண்டறிந்த வரை இளையராஜாவுடைய பாடல்களில் சிம்பிள் ஃபார்முலா ஒன்று உண்டு. அது பாடலின் தொடக்கம் சாதாரணமானதாக இருந்தாலும் மிக பிரமாண்டமானதாக இருந்தாலும் இடையில் வரும் வரிகளில் மீண்டும் மீண்டும் கேட்டு ஏங்கச் செய்யுமாறு இசையமைத்திடுவார். அதுவே பல நாளானாலும் அந்த பாடல் மனதை விட்டு நீங்கா இடம் பிடிப்பதற்கு காரணம் என நான் நினைக்கிறேன். இந்த பாடலில் பாடகர் ஜெயச்சந்திரன் அவர்களின் குரலில் சரணங்களில் வரும் வரிகள் யாவும் அத்தகையவே. இந்தப் பாடலைத் தேடி எடுத்து ஒரு நாள் என் அம்மாவிற்கு போட்டு காட்டினேன். கேட்ட மாத்திரத்தில் அவங்க சொன்னது "இந்தப் பாட்டை உன் தம்பி ராஜா மகள் ரோஜா தின்றாள்னு பாடுவானே". இது போன்ற நினைவுகளுக்கு விலையேது? அப்போ தான் புரிஞ்சது இளையராஜாவின் இசை என்பது எங்களுக்கு ஒரு வாழ்க்கை முறையாகவே இருந்திருக்கிறது என்பது. அதனால் தானோ என்னவோ நான் ரசிக்கும் தலைவரின் பாடல்களை யாராவது இகழ்ந்து பேசினால் ஏன் கோபம் வருகிறது என்று - ஏனென்றால் அது என்னை போன்ற பலரின் ரசனையையும், இது நாள் வரை நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையையே இகழ்வது போன்றானது. நான் இவ்வாறு சொல்வதில் மிகை ஏதுமில்லை என்பதிலும் உறுதியாக இருக்கிறேன்.

படம் : பிள்ளை நிலா (1985)
பாடலாசிரியர் : unknown
இசை : இளையராஜா
பாடியது : P.ஜெயச்சந்திரன்



3. விஜி மேனுவல்(Viji Manuel) என்பவர் இளையராஜாவிடம் பல நாட்களாக கீபோர்டு வாசிப்பாளராக இருப்பவர். கீபோர்டு வாசிப்பாளர் என்றால் வெறுமனே இசையமைப்பாளர் நோட்ஸ் கொடுத்தால் வாங்கி வாசிச்சுட்டு போற ஆள் இல்லை. சொந்தமாக ஆல்பம் எல்லாம் வெளியிட்டு இருக்கிறார். சுருக்கமாகச் சொன்னால் இவரும் ஒரு இசையமைப்பாளர் தான். இவருடைய தந்தை ஹாண்டேல் மேனுவல்(Handel Manuel) அவர்களும் பல சிறப்புகளைப் பெற்ற புகழ்பெற்ற பியானோ இசை கலைஞர். விஜி மேனுவல் சரளமான ஆங்கிலத்தில் ஏதோ ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் சில ஆண்டுகளுக்கு முன் தந்த தகவல் ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். ஏதோ ஒரு பாடலுக்கு(எந்த பாடல் என்று சரியாக நினைவில்லை) ராஜா அவர்கள் கொடுத்த நோட்ஸ் மிகவும் கடினமானதாக இருந்ததாம். அதை வாசிக்கும் போது அவருடைய இரு கைகளும் கீபோர்டின் ஒவ்வொரு கோடியில் இருந்தனவாம். இருப்பினும் பாடலின் கடைசியில் வரும் ஒரு நோட் தான் விரும்பியபடி வரவேண்டும் என்று ராஜா மிக உறுதியாக இருந்தாராம். கைகள் இரண்டும் இருவேறு இடங்களில் ஏற்கனவே தரப்பட்ட நோட்ஸ்களை வாசித்துக் கொண்டிருந்தபடியால் அந்த கடைசி நோட்டை எந்த கையாலும் வாசிக்க முடியாத நிலையில் இருந்தாராம் விஜி. இருப்பினும் ராஜா கொடுத்த அந்த கடைசி நோட்டையும் வாசித்தாராம் - எப்படி? - குனிந்து தன் மூக்கால் கீபோர்டை அழுத்தி வாசித்தாராம். இத்தகவலைத் தெரிவித்து விட்டு 'ராஜாவுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன்' என்று பொருள்படும் வகையில் 'Anything for Raaja' என்று கூறி முடித்தார்.

இளையராஜா யாஹூ குழுமத்தில், உறுப்பினர்களுக்காக நடத்தப்பட்ட ஒரு க்விஸ் போட்டியில்(மின்னஞ்சல் மூலமாகத் தான்), இளையராஜா தலையில் துண்டு ஒன்றைப் போட்டுக் கொண்டு ஆர்க்கெஸ்ட்ராவை வழிநடத்திக் கொண்டிருக்கும் படம் ஒன்றைக் காட்டி அப்படத்தின் சிறப்பு என்று கேட்டிருந்தார்கள். எனக்கு விடை தெரிந்திருக்கவில்லை. பின்னால் தெரிந்து கொண்டது - ஆர்க்கெஸ்ட்ராவை வழிநடத்திக் கொண்டிருந்த அன்று கடும் காய்ச்சலால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தாராம் இளையராஜா. இருப்பினும் காய்ச்சலைத் தணிப்பதற்காக ஒரு ஈரத் துண்டினைத் தலையில் போட்டுக் கொண்டு ஸ்டூடியோவுக்கு வந்துவிட்டாராம். அப்போது தான் புரிந்தது தேர்ந்த இசை கலைஞர்கள் கூட ராஜாவுக்காக எதுவும் செய்ய துணிவதற்கான காரணம், இசைக்காக ராஜா எதையும் செய்யத் துணிவதனால் தான் என்று. மேலே சொன்ன படி கடும் காய்ச்சலோடு ராஜா இசையமைத்து வெளிவந்த படம் தான் மோகன்லால் நடித்த 'குரு'(1997) என்ற மலையாளத் திரைப்படம். இப்படத்திற்காக புதபெஸ்டிலிருந்து ஹங்கேரி சிம்பொனி ஆர்கெஸ்டிரா கலைஞர்கள் வாசித்தது இப்படத்தின் சிறப்பு.

'ஈ சீதைக்கும் ப்ரியம் அருளியதொரு மின்னாரம் மானத்து' - மொழி புரியலைன்னாலும் பாடலில் இந்த வரிகளைக் கேட்டு பாருங்க. உருகிடுவீங்க.

படம் : குரு (1997) - மலையாளம்
பாடலாசிரியர் : ரமேசன் நாயர்
இசை : இளையராஜா
பாடியது : சுஜாதா



4. தன்னுடைய வரிகளைத் தாங்கி இனிமையான பாடல்கள் வர வேண்டும் என்பதற்காகவே காசு போட்டு படம் எடுப்பாராம் கவிஞர் கண்ணதாசன். அப்படி அவருடைய தயாரிப்பில் வெளிவந்த படம் "கறுப்பு பணம்". விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையரின் இசையில் வந்த அழகானதொரு இரவு பாடல் அதுவும் இரவு படகு பாடல். எல்.ஆர்.ஈஸ்வரி அவர்களின் குரலில் என் அம்மாவுக்கு பிடித்த பாடல்களில் ஒன்று இது. பலரும் கேட்டிருக்க மாட்டார்கள் என்றெண்ணி இப்பாடலை இங்கு பகிர்கிறேன். அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி அமைதியான இரவு வேளைகளில் கேட்க நல்லதொரு பாடல் இது.

படம் : கறுப்பு பணம் (1964)
பாடலாசிரியர் : கவியரசர் கண்ணதாசன்
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியது : L.R. ஈஸ்வரி

எம்.எஸ்.வி. அவர்கள் இசையில் எனக்கு பிடித்த இன்னொரு பாடல் - சொல்லத் தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்




5. ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் இசையில் நான் மிகவும் ரசிக்கும் பாடல்களில் ஒன்று இது. ஆல் இந்தியா ரேடியோவின் ரெயின்போ எஃப்எம் அலைவரிசையில் இவ்வாண்டு பொங்கல் தினத்தன்று ரகுமான் ஒரு நேர்காணல் வழங்கினார். அதில் தன் இசையமைக்கும் பாணி பற்றி அவர் சொன்ன தகவல் ஒன்று - "எல்லாரும் சங்கராபரணம், கல்யாணி அப்படின்னு கர்நாடக இசை அடிப்படையாகக் கொண்ட ராகங்களை வைத்து இசை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களிலிருந்து நாம் தனித்து தெரிய என்ன செய்யலாம் என்று யோசித்த போது மாண்ட், திலாங் போன்ற இந்துஸ்தானி ராகங்களை அடிப்படையாகக் கொண்டு நாம் இசையமைக்கலாமே என்று". அவ்வாறு இந்துஸ்தானி இசை சாயல்கள் தெரியும் ஒரு அழகான பாடல் - "உதயா உதயா". எனக்கு மிகவும் பிடித்தமானதொரு பாடலும் கூட.

படம் : உதயா (2003)
பாடலாசிரியர் : அறிவுமதி
இசை : ஏ.ஆர்.ரகுமான்
பாடியது : ஹரிஹரன், சாதனா சர்கம்



பி.கு: நேயர் விருப்பம் பதிவில் ஐந்து பாடல்களைத் தேர்வு செய்து தருமாறு சொல்லியிருந்தார் கானா அண்ணாச்சி. பாத்துக்கங்க மக்களே...நான் நியாயஸ்தன். அவரு சொன்ன நம்பரான அஞ்சை நான் தாண்டலை :)

0000000000000000000000000000000000000

நண்பர் மோகன்ராஜின் பாடல்களைக் கேட்டு ரசித்திருப்பீர்கள், அடுத்த வாரம் G3 இன் பாடல் தெரிவுகளோடு உங்களை சந்திக்கிறேன். நீங்களும் இதே போன்று உங்கள் பாடல் ரசனையை வெளிப்படுத்த விரும்பினால் kanapraba@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்.

34 comments:

நாமக்கல் சிபி said...

மீ த ஃபர்ஸ்ட்டேய்!

Iyappan Krishnan said...

சூப்பர். பாட்டுக்களும் அதைத் தொகுத்திருக்கும் விதமும். கைப்புள்ள கைப்புள்ள தான்யா...

ரசிகன்யா... நீ ரசிகன்யா

சென்ஷி said...

//பதிவில் ராஜா படம் தான் வேணும் என்று அடம்பிடித்து, ஒரு முறை ராஜா டவலைக் கட்டிக் கொண்டு இசையமைத்த காட்சிப் படத்தைப் போடுமாறு அடம்பிடித்தார். ஆனால் என் கைக்கு அது கிட்டவேயில்லை. யாராவது வைத்திருந்தால் சொல்லுங்கள் அதை இணைத்து விடுகின்றேன்.//

இது கானா எழுதுனது...

//காய்ச்சலைத் தணிப்பதற்காக ஒரு ஈரத் துண்டினைத் தலையில் போட்டுக் கொண்டு ஸ்டூடியோவுக்கு வந்துவிட்டாராம்.//

இது கைப்புள்ள சொன்னது..

இதை கைப்புள்ள எழுதாம விட்டிருந்தா ராஜா ஏதோ மும்தாஜ் ரேஞ்சுக்கு மியுசிக் செய்ய வந்தாருன்னு நினைக்க வச்சிருவாரு போலருக்குது தல :)))

சிக் பிடித்தாலும் மியுசிக் விடாத ராஜா எப்பவும் ராஜாதான்..

கலைக்கோவன் said...

//பி.கு: நேயர் விருப்பம் பதிவில் ஐந்து பாடல்களைத் தேர்வு செய்து தருமாறு சொல்லியிருந்தார் கானா அண்ணாச்சி. பாத்துக்கங்க மக்களே...நான் நியாயஸ்தன். அவரு சொன்ன நம்பரான அஞ்சை நான் தாண்டலை :)//
ஆனாலும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு

சந்தனமுல்லை said...

முதலும் கடைசியும்தான் கேட்ட மாதிரி இருக்கு!! பாடல்கள் சுவாரசியம்..அதைத் தொகுத்திருக்கும் விதம் மேலும் சுவையூட்டுகிறது!! :-)
"ராஜா மகள் ரோஜா தின்றாள்" - :-)))

கைப்புள்ள said...

//மீ த ஃபர்ஸ்ட்டேய்!//

தள...டாங்கீஸ் :)

//சூப்பர். பாட்டுக்களும் அதைத் தொகுத்திருக்கும் விதமும். கைப்புள்ள கைப்புள்ள தான்யா...

ரசிகன்யா... நீ ரசிகன்யா//

அண்ணாச்சி...வளர நன்னி.
:)

கைப்புள்ள said...

//இதை கைப்புள்ள எழுதாம விட்டிருந்தா ராஜா ஏதோ மும்தாஜ் ரேஞ்சுக்கு மியுசிக் செய்ய வந்தாருன்னு நினைக்க வச்சிருவாரு போலருக்குது தல :)))//

கானா அண்ணாச்சி எழுதிருக்கறதை படிச்சதும் எனக்கு கூட அந்த சந்தேகம் வந்துச்சு :)))

கைப்புள்ள said...

//ஆனாலும் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு//

அட போங்கங்க...நீங்க வேற :(

உங்க கமெண்டுக்குப் பதில் சொல்லறதுக்குப் பதிலா கோழி கூவுது படத்துல வர்ற இளையராஜா பாடலோட சில வரிகளைச் சொல்லிக்கறேன்.

"நான் சொன்னா வெக்கக் கேடு சொல்லாட்டி மானக்கேடு"
:)

rapp said...

super collection:):):)

இராம்/Raam said...

கலக்கல் தெரிவு... :))

மொட்டை மீயூசிக்'லே என்னோட ஆல்-டைம் பேவரிட் :- "தென்பாண்டி சீமையிலே"தான்.. :)

துபாய் ராஜா said...

ஐந்து பாடலும் அருமையான தேர்வு.

பாடல்கள் குறித்த தகவல்களும் அருமை.

கைப்புள்ள கையில இருக்க புள்ளயும் அழகு.

புள்ள பேரு என்ன ராசா ?.இப்போ வயசு என்ன ஆச்சு ?.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல்லா இருந்தது தொகுப்பு..கைப்ஸ்..

அந்த மூக்கால நோட்ஸ் சுவாரசியமான குறிப்பு.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நெக்ஸ்ட் ஜி3 யா.. மீ த வெயிட்டிங்க் வெயிட்டிங்க்..:)

கோபிநாத் said...

தல மனமார்ந்த பாராட்டுக்கள்.....அட்டகாசம் பண்ணியிருக்கிங்க...அருமையான தொரு தொகுப்பு ஒவ்வொரு பாடலுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் அறிமுகம் அட்டகாசம் ;)

கோபிநாத் said...

1. "எனக்கு கிராமாத்து பாடல்கள் ரொம்ப பிடிக்கும் இதற்க்கு முன்னால் கிராமிய பாடல்கள் நிறைய வந்திருக்கு ஆனால் நானும் இளையராஜாவும் வந்த பிறகு தான் அப்பழுக்கு இல்லாத கிராமத்து பாடல்கள் வந்தது" (அவர் முன்னவர்களை தாழ்த்தி சொல்லவில்லை) என்று ஒரு இசை விழாவில் வைரமுத்து அவர்கள் சொன்னார். அந்த வார்த்தைக்கு மிக பொருத்தமான பாடல்களை கொண்ட படம் முதல் மாரியாதை.

இளையராஜா & வைரமுத்து கூட்டணி பற்றி சொல்ல நிறைய பாடல்கள் இருக்கு. அதில் மிக அற்புதமான படம் முதல் மாரியாதை அந்த படத்தில் அனைத்து பாடல்களுமே அருமை. இந்த பாடலும் மிக அருமையான ஒன்று.

2. \\இளையராஜாவின் இசை என்பது எங்களுக்கு ஒரு வாழ்க்கை முறையாகவே இருந்திருக்கிறது என்பது. அதனால் தானோ என்னவோ நான் ரசிக்கும் தலைவரின் பாடல்களை யாராவது இகழ்ந்து பேசினால் ஏன் கோபம் வருகிறது என்று - ஏனென்றால் அது என்னை போன்ற பலரின் ரசனையையும், இது நாள் வரை நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையையே இகழ்வது போன்றானது. நான் இவ்வாறு சொல்வதில் மிகை ஏதுமில்லை என்பதிலும் உறுதியாக இருக்கிறேன். \\

தல...கலக்கிட்டிங்க தல ;)))) வார்த்தைக்கு வார்த்தை வழிமொழிக்கிறேன் ;)

இப்போ வீட்டில் இந்த பாடல் தானா அம்மணிக்கு ;))

3. விஜி மேனுவல் - நாயகன் படத்தில் வரும் பியானோ இசை கூட இவர்தான் வாசிச்சார் போல..ஒரு மேடையில் அந்த இசையை கலைஞானி பாட ஒருதர் வாசிப்பார் அது இவரான்னு தெரியல.

இந்த குரு மலையாள படம் அந்த ஆண்டில் ஆஸ்கார்க்கு இந்தியாவின் சார்பில் சொன்ற படம். இந்த படத்தின் பின்னானி இசையையும் சேர்த்து தான் "Messiah" தொகுப்பு வெளியிட்டார் இசைஞானி.

தலயோட பாடல் தொகுப்பை தந்தமைக்கு நன்றி தல ;))

கோபிநாத் said...

\அடுத்த வாரம் G3 இன் பாடல் தெரிவுகளோடு உங்களை சந்திக்கிறேன். \\
ஆகா அடுத்த எங்க ஏரியா அம்மணியா!! ;)))

கலக்கிடுவோம் ;)

Admin said...

வணக்கம்...



தமிழ் மொழியை வளர்ப்பது யார்? தமிழ் மொழியை கொலை செய்வது யார்?..


உங்கள் கருத்துக்களை எதிர் பார்க்கின்றேன்..
http://shanthru.blogspot.com/2009/07/blog-post_29.html

நன்றி..

சந்ரு

கிடுகுவேலி said...

பல அரிய தகவல்கள். நன்றாக இருந்தது. 'கைப்புள்ள' பாடல்கள் தெரிவு அருமை.

கைப்புள்ள said...

//முதலும் கடைசியும்தான் கேட்ட மாதிரி இருக்கு!! பாடல்கள் சுவாரசியம்..அதைத் தொகுத்திருக்கும் விதம் மேலும் சுவையூட்டுகிறது!! :-)
//

வாழ்த்துகளுக்கு நன்றி முல்லை :)

கைப்புள்ள said...

//super collection:):):)//

பாராட்டுக்கு நன்றி ராப்.
:)

கைப்புள்ள said...

//மொட்டை மீயூசிக்'லே என்னோட ஆல்-டைம் பேவரிட் :- "தென்பாண்டி சீமையிலே"தான்.. :)//

வாப்பா ராயல்,
தென்பாண்டி சீமையிலே எனக்கும் பிடிக்கும். மொட்டை மீசிக்ல இது தான் பிடிக்கும்னு சொல்லறது எனக்கு கொஞ்சம் கஷ்டம்.
:)

கைப்புள்ள said...

//ஐந்து பாடலும் அருமையான தேர்வு.

பாடல்கள் குறித்த தகவல்களும் அருமை.

கைப்புள்ள கையில இருக்க புள்ளயும் அழகு.

புள்ள பேரு என்ன ராசா ?.இப்போ வயசு என்ன ஆச்சு ?.//

தேங்க் யூ ராஜாஜி. கைப்புள்ள கையில் இருக்கும் புள்ளையின் பேரு அர்ச்சனா. இந்த மாசத்தோட ஒரு வயசு ஆகப் போகுது. அந்த படம் அர்ச்சனா மூனு மாசமா இருக்கறப்போ எடுத்தது. உங்க ப்ரொஃபைலில் இருக்கும் பாப்பாவின் பேர் என்ன? எத்தனை வயசு ஆகுது?

கைப்புள்ள said...

//நல்ல்லா இருந்தது தொகுப்பு..கைப்ஸ்..

அந்த மூக்கால நோட்ஸ் சுவாரசியமான குறிப்பு.. :)//

மிக்க நன்றி மேடம்.
:)

கைப்புள்ள said...

//நெக்ஸ்ட் ஜி3 யா.. மீ த வெயிட்டிங்க் வெயிட்டிங்க்..:)//

மீ டூ...வெல்கம் ஜி3 :)

கைப்புள்ள said...

//தல மனமார்ந்த பாராட்டுக்கள்.....அட்டகாசம் பண்ணியிருக்கிங்க...அருமையான தொரு தொகுப்பு ஒவ்வொரு பாடலுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் அறிமுகம் அட்டகாசம் ;)//

கோபி...உங்க பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. நீங்க கொடுத்துருக்கற தகவல்களும் பிரமாதம்.
:)

கைப்புள்ள said...

//2. \\இளையராஜாவின் இசை என்பது எங்களுக்கு ஒரு வாழ்க்கை முறையாகவே இருந்திருக்கிறது என்பது. அதனால் தானோ என்னவோ நான் ரசிக்கும் தலைவரின் பாடல்களை யாராவது இகழ்ந்து பேசினால் ஏன் கோபம் வருகிறது என்று - ஏனென்றால் அது என்னை போன்ற பலரின் ரசனையையும், இது நாள் வரை நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையையே இகழ்வது போன்றானது. நான் இவ்வாறு சொல்வதில் மிகை ஏதுமில்லை என்பதிலும் உறுதியாக இருக்கிறேன். \\

தல...கலக்கிட்டிங்க தல ;)))) வார்த்தைக்கு வார்த்தை வழிமொழிக்கிறேன் ;)//

இந்த பத்தியைப் படிச்சிட்டு நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு பார்க்கனும்னு நெனச்சிட்டே இருந்தேன். என் எதிர்பார்ப்பு பொய்க்கலை. கரெக்டா ரீச் ஆயிடுச்சு போலிருக்கு.
:)

கைப்புள்ள said...

//இப்போ வீட்டில் இந்த பாடல் தானா அம்மணிக்கு ;))
//

ஹி...ஹி...இல்லை. அவங்க சிம்பு ஃபேன். வேர் இஸ் தி பார்ட்டி பாட்டு தான் அர்ச்சனாக்கு ரொம்ப புடிக்க்கும்.
:)

கைப்புள்ள said...

//பல அரிய தகவல்கள். நன்றாக இருந்தது. 'கைப்புள்ள' பாடல்கள் தெரிவு அருமை.//

உங்க வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி கதியால் சார்.

Geetha Sambasivam said...

தெரியாத பாட்டு மூணு இருந்தாலும் மத்த பாடுங்க நல்லாவே தெரியும்,தொகுத்திருக்கும் விதம் நல்லா இருக்கு. 200-வது பதிவுக்கும் வாழ்த்துகள். இங்கேயே சொல்லிக்கிறேன்.

M.Rishan Shareef said...

அருமையான தெரிவுகள் !

ambi said...

//ராஜா ஏதோ மும்தாஜ் ரேஞ்சுக்கு மியுசிக் செய்ய வந்தாருன்னு நினைக்க வச்சிருவாரு போலருக்குது தல//

:)))

ஐந்து பாடலும் அருமையான தேர்வு.
பாடல்கள் குறித்த தகவல்களும் அருமை kaips. :))

கைப்புள்ள said...

// ஒரு முறை ராஜா டவலைக் கட்டிக் கொண்டு இசையமைத்த காட்சிப் படத்தைப் போடுமாறு அடம்பிடித்தார். ஆனால் என் கைக்கு அது கிட்டவேயில்லை. யாராவது வைத்திருந்தால் சொல்லுங்கள் அதை இணைத்து விடுகின்றேன். இப்படி நேற்று நான் போட்டிருந்தேன். இன்று காலை என் மின்னஞ்சலைப் பார்த்தால் நம்ம தல கோபி அன்போடு தன் தெய்வத்தின் படத்தை அனுப்பியிருந்தார். ஆக, கைப்புள்ளையின் ஆசை நிறைவேறிடிச்சு ;)
//

கோபி,
இந்த படத்தைத் தேடி தந்து நீங்க எவ்வளவு பெரிய சந்தோஷத்தைத் தந்திருக்கீங்கன்னு வார்த்தையால சொல்ல முடியலை. இந்த படத்துக்காக ஒரு நாள் பூராவும் ஆபிசுல உக்காந்து கூகிளில் தேடுனேன், எங்க டேமேஜர் கூப்பிட்டு என்னை எச்சரிக்கிற வரை.

மிக்க நன்றி.
:)

கோபிநாத் said...

தல & தல ;))

இரண்டு தலைகளும் இசைஞானியின் எம்புட்டு பெரிய கொலைவெறி ரசிகர்கள் என்பது எனக்கு தெரியாதா!! ;)

என்னால முடிஞ்ச சிறிய "கடமை" இது ;)))

நாகை சிவா said...

Super Kaips :)