Pages

Tuesday, March 17, 2009

றேடியோஸ்புதிர் 38 - கடிகாரக் காதல் பாட்டு்?

தொடர்ந்து இரண்டு புதிர் கொஞ்சம் தாவு தீர வைத்ததால் இந்த முறை கொஞ்சம் இலகுவான புதிரோடு வந்திருக்கின்றேன். பொதுவாக பாடல்காட்சிகளுக்கு பின்னணி ஒலிச்சத்தங்களை இலாவகமாகப் புகுத்தி கலக்கியிருப்பார் இசைஞானி இளையராஜா. இங்கே நான் தந்திருக்கும் ஒலிச்சத்தம் கடிகாரத்தை சாவி கொடுப்பதோடு ஆரம்பிக்கிறது இந்தக் காதல் பாட்டு. சின்ன முள் காதலியாம், பெரிய முள் காதலனாம், காட்சி கூடக் கலக்கல் தான், பாடலைக் கண்டு பிடியுங்களேன் டிங்டாண்டாங்:)


38.mp3 -

ஒகே புதிர் இத்தோடு முடிவடைந்து விட்டது, ஏகப்பட்ட க்ளூக்கள் கொடுத்தும் ஆர்வக் கோளாறினால் முண்டியடித்துக் கொண்டு சில நண்பர்கள் தவறான விடையும் கொடுத்திருந்தீர்கள். சரியான பதில், பணக்காரன் திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் "இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது"

53 comments:

  1. //இந்த முறை கொஞ்சம் இலகுவான புதிரோடு வந்திருக்கின்றேன்//

    ரொம்ப ஈசியானதா????

    :(((

    சரி தல நான் அடுத்த புதிர்ல மீட் பண்றேன்! :)

    ReplyDelete
  2. பாடல் : இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது... :)))

    ReplyDelete
  3. இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
    ஒன்றும் அசையாமல் நின்று போனது
    காதல் காதல் டிங் டாங்
    கண்ணில் மின்னல் டிங் டாங்
    ஆடல் பாடல் டிங் டாங்
    அள்ளும் துள்ளும் டிங் டாங்

    ReplyDelete
  4. இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது
    பணக்காரன்
    இந்த பதிலாவது சரியா? :-)

    ReplyDelete
  5. ding dong dong ding dong - Pannakaran

    ReplyDelete
  6. இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது

    ஒன்றும் அசையாமல் நின்று போனது

    காதல் காதல் டிங்டாண்க்

    :))))

    ReplyDelete
  7. இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது....பணக்காரன்!

    ReplyDelete
  8. இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது,...
    பணக்காரன்.

    ReplyDelete
  9. காதல் இல்லா ஜீவனை நானும் பார்த்ததில்லை
    வானம் இல்லா பூமி தனை யாரும் பார்த்ததில்லை
    தேகம் எங்கும் இன்பம் என்னும் வேதனை வேதனை
    நானும் கொஞ்சம் போட வேண்டும் சோதனை சோதனை
    உங்கள் கை வந்து தொட்ட பக்கம்
    அங்கு முத்தங்கள் இட்ட சட்டம்
    அங்கும் இங்கும் டிங் டாங்
    ஆசை பொங்கும் டிங் டாங்
    நெஞ்சில் நெஞ்சம் மஞ்சம் கொள்ளும்

    ReplyDelete
  10. என்ன இது சின்னப்புள்ளதனமால்லாம் புதிர் போட்டுக்கிட்டு .. தலைவர் பாட்டை போட்டுட்டு என்ன விளையாட்டா?

    ReplyDelete
  11. காதல் கண்ணன் தோளிலே
    நானும் மாலை ஆனேன்
    தோளில் நீயும் சாயும் போது
    வானை மண்ணில் பார்த்தேன்
    நீயும் நானும் சேரும் போது
    கோடையில் மார்கழி
    வார்த்தை பேச நேரம் ஏது
    கூந்தலில் பாய் விரி
    எங்கு தொட்டாலும் நெஞ்சின் வேகம்
    அங்கும் இங்கும் டிங் டாங்
    சொர்க்கம் தங்கும் டிங் டாங்
    உந்தன் சேவை எந்தன் தேவை..

    ReplyDelete
  12. பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம் & சித்ரா
    இசை: இளையராஜா
    படம்: பணக்காரன்

    ReplyDelete
  13. பதில் உங்க ப்ளேயர்லேயே இருக்கு.

    ReplyDelete
  14. ஆர்.எம்.வீரப்பனின் "சத்யா மூவிஸ்'' அதன் வெம்ளி விழா ஆண்டையொட்டி, ரஜினியை வைத்து "பணக்காரன்'' என்ற படத்தைத் தயாரித்தது. அது 25 வாரங்களுக்கு மேல் ஓடி, வெம்ளி விழா கொண்டாடியது.

    ReplyDelete
  15. "லாவரிஸ்'' என்ற இந்திப்படம், "நாதேசம்'' என்ற பெயரில் தெலுங்கில் தயாரிக்கப்பட்டது. அந்த கதையை வைத்து தமிழில் தயாரிக்கப்பட்ட படம் "பணக்காரன்.''

    இந்தப் படத்துக்கு வசனம் எழுதி, டைரக்ட் செய்தவர் பி.வாசு.

    ரஜினியுடன், கவுதமி இணைந்து நடித்தார்.

    ReplyDelete
  16. கோடீசுவரரான விஜயகுமார், பாடகி சுமித்ராவை திருமணம் செய்து கொம்வதாகக் கூறி ஏமாற்றி, கர்ப்பிணி ஆனதும் கைவிட்டு விடுகிறார்.

    கர்ப்பிணியான சுமித்ராவுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. மாமா ராதாரவி, தாயார் சுமித்ரா ஆகியோரின் வாழ்க்கைப் போராட்டத்தில் குழந்தை ஒரு ரவுடியிடம் வந்து சேர்கிறது.

    சிறுவன் வாலிபனாகிறான். வேலை தேடும்போது தனது அப்பா யார் என்பது தெரிகிறது. அவர் கோடீசுவரர். இப்போது அவருக்கு இன்னொரு குடும்பம், குழந்தைகம் இருக்கிறார்கம்.

    என்றாலும் தன் தாயார் மீதான களங்கம் துடைக்கப்பட முயற்சிகம் மேற்கொம்கிறான். பல்வேறு அவமானங்கம் அடைகிறான். ஆனாலும் எடுத்துக்கொண்ட முயற்சியில் வென்று, கோடீசுவரரான விஜயகுமாருடன் தனது தாயாரை மறுபடியும் இணைத்து வைக்கிறான்.

    ReplyDelete
  17. உறவுகம் புனிதமானவை. அதை "பணம்'' என்ற போர்வைக்கும் போட்டு புதைத்து விடக்கூடாது என்பதை விளக்கிய படம்.

    ReplyDelete
  18. ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் கவுதமி. ரஜினி - கவுதமிகடிகார முட்களுடன் இணைந்து பாடும், "இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது'' என்ற பாடல் புதுமையாக படமாக்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது.

    ReplyDelete
  19. படத்தில் வரும் "நூறு வருஷம் இந்த மாப்பிம்ளையும் பொண்ணும்தான் பேரு விளங்க இங்கே வாழணும்'' என்ற பாடல், திருமண வீடுகளில் நிரந்தரமாகி விட்டது.

    ReplyDelete
  20. தனது நிலையை எண்ணி ரஜினி பாடுவதாக வரும், "நான் உம்ளுக்கும்ள சக்கரவர்த்தி; ஆனா உண்மையிலே மெழுகுவர்த்தி'' என்ற பாடல் காட்சியில் ரஜினியின் உருக்கமான நடிப்பு நெகிழ வைத்தது.

    ReplyDelete
  21. புவனா ஒரு கேம்விக்குறி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த சுமித்ரா, இந்தப் படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

    ReplyDelete
  22. 1990 பொங்கலுக்கு வெளிவந்த இந்தப்படம், 25 வாரங்கம் ஓடி, வெம்ளி விழா கொண்டாடியது.

    ReplyDelete
  23. panakarqan padathil

    kathal sollum neramaithu padal.

    :)))

    ReplyDelete
  24. இதெல்லாம் ஒரு புதிரா.. இது ஜூஜூபி

    ReplyDelete
  25. இரண்டு ஒன்றோடு ஒன்று சேர்ந்தது பாட்டு

    ReplyDelete
  26. //முத்துலெட்சுமி-கயல்விழி said...
    இதெல்லாம் ஒரு புதிரா.. இது ஜூஜூபி
    //


    றீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  27. பாடல் : இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது.

    படம் : பணக்காரன்.

    sivaramang.

    ReplyDelete
  28. தமிழ்பிரியன் அண்ணாகிட்டே சொல்லியிருக்கேன். அவர் வந்து சொல்லிடுவார்! ஓக்கே! :-)

    ReplyDelete
  29. G3, மைபிரண்ட், பரத், ARK, ஆயில்யன்

    சரியான கணிப்பு ;)

    ReplyDelete
  30. தமிழ்ப்பிரியன், கயல்விழி முத்துலெட்சுமி, சிவராமன்

    சரியான பதில், கலக்கல்ஸ் ;)

    silkywoven, மற்றும் புதுகை தென்றல்

    அதே படம் தான் ஆனா பாட்டு தப்பு

    ReplyDelete
  31. நிஜம்ஸ்

    தவற விட்டுட்டேன், நீங்களும் கலக்கல்ஸ் :)

    ReplyDelete
  32. இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது...
    நன்றி இஞ்சினீயர்

    ReplyDelete
  33. படம்; பணக்காரன் ;பாடல், இரண்டும் ஒன்றோடு.

    ReplyDelete
  34. கானா? ராஜாவின் the music messiah இசை தொகுப்பு கேட்டிருக்கிறிர்களா, அதைப்பற்றி ஒரு பதிவு போடுங்களேன்.

    ReplyDelete
  35. இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது.. (பணக்காரன்)

    ReplyDelete
  36. "இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது" - பணக்காரன்..

    நேத்து கே டிவி பாத்திங்களா??

    ReplyDelete
  37. இதெல்லாம் அநியாயம் கானா பிரபா ... இம்புட்டு ஈஸியாவா கேட்பீங்க? அதுவும் அத்தனை பிரபலமான முன்னிசையைக் கொடுத்துக் கேட்டா யாருக்குதான் தெரியாது? போதாக்குறைக்கு இத்தனை க்ளூ வேற ... :)))))

    சரி சரி, ரொம்பக் கேலி செஞ்சா அடுத்தவாட்டி கஷ்டமாக் கொடுத்துடுவீங்க (’அன்புச் சின்னம்’மாதிரி), அதனால அடக்கி வாசிக்கிறேன் ஆபீஸர் :)

    பணக்காரன் - இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது - எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா - கவிஞர் பெயர் தெரியவில்லை - இயக்கம்: பி. வாசு - ஓகேயா ஆபீசர்? :)

    ReplyDelete
  38. வெயிலான், மணி, நிலாக்காலம், அரவிந்த், சொக்கன்

    கலக்கீட்டீங்க

    வணக்கம் மணி

    அந்த இசைத்தொகுப்பு கேட்டிருக்கேன், நிச்சயம் ஒரு பதிவு எழுதுகிறேன், நன்றி

    சொக்கரே

    இந்த ஈசிக்கேள்விக்கு கூட தப்பான பதில்கள் வந்ததே தெரியுமா ;)

    ReplyDelete
  39. இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது- பணக்காரன்..

    ReplyDelete
  40. இளா

    உங்களுக்கு ஜீஜீபி ஆச்சே

    ReplyDelete
  41. படம் பணக்காரன்

    ReplyDelete
  42. Silence Silence..,காதல் செய்யும் நேரமிது..இவ்வளவு ஈஸியா

    ReplyDelete
  43. டிங் டிங் டாங் டிங்ட டாங்..,
    இரண்டும் ஒன்றோடு ஓன்று சேர்ந்தது..,

    திரும்பவும் வந்துட்டேனே

    ReplyDelete
  44. //டிங்டாண்டாங்:)//
    இதை நான் எப்பிடியோ மிஸ்
    பண்ணிட்டேனே..,
    இதுக்கு நேரா பாட்டே சொல்லியிருக்கலாம்

    ReplyDelete
  45. நீண்ட இடைவெளிக்கு பதில் போட்டியில் கலந்து கொள்ளுகின்றேன்

    இரண்டு சிங்கங்கள் ஒன்று சேர்ந்தது பாடல்.

    படம் பணக்காரன்

    ReplyDelete
  46. கலைக்கோவன்

    இரண்டாவது தடவையில் கலக்கீட்டீங்க, பார்த்தீங்களா சின்ன விஷயத்தையும் அலட்சியம் பண்ணக்கூடாது

    கார்த்திக், அருண்மொழி வர்மன்

    அதே தான் ;) பாட்டையும் சொல்லியிருக்கலாமே

    ReplyDelete
  47. இன்னா அண்ணாச்சி இது
    "டிங் டாங் டாங் டிங் டாங்
    இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது"

    கரிகிட்டா நைனா

    "டிங்டாண்டாங்" இதையாவது கொடுக்காம இருந்திருக்கலாம்
    என்னமோ போ நைனா

    ReplyDelete
  48. சுரேஷ் மாமு நீங்க சொன்னா கரெக்டு தான் மாமு ;)

    ReplyDelete
  49. ஒகே புதிர் இத்தோடு முடிவடைந்து விட்டது, ஏகப்பட்ட க்ளூக்கள் கொடுத்தும் ஆர்வக் கோளாறினால் முண்டியடித்துக் கொண்டு சில நண்பர்கள் தவறான விடையும் கொடுத்திருந்தீர்கள். சரியான பதில், பணக்காரன் திரைப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் "இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது"

    ReplyDelete
  50. கானா? ராஜா இசை அமைத்த ஆங்கிலபடமான blood stone பற்றியா தகவல் உங்களுக்கு தெரியுமா, அதில் ரஜினியும் நடித்துல்லார்.

    ReplyDelete
  51. வாங்க மணி

    Blood Stone படத்துக்கு ராஜா கூட இசையாச்சே. அது பின்னர் தமிழில் கூட டப் ஆனதா செய்தி இருக்கு

    ReplyDelete
  52. THAT WAS A GOOD ONE. I WELCOME YOU ALL TO PARTICIPATE IN MAESTRO QUIZ

    http://maestroquiz.blogspot.com/2009/04/maestro-quiz-no564.html

    ReplyDelete