Pages

Monday, March 9, 2009

றேடியோஸ்புதிர் 37 - தெலுங்கு டப்பிங் பொற்காலம்

றேடியோஸ்புதிரில் முதல்முறையாக தெலுங்குப் படமொன்றின் பின்னணி இசையோடு புதிர் அமைகின்றது.

1989 ஆம் ஆண்டு தெலுங்குப் படங்கள் பல ஒரே சமயத்தில் தமிழில் மொழிமாற்றப்பட்டு வெற்றி வாகை சூடிய காலம். காதல் படங்களில் இருந்து அதிரடிப் படங்கள் என்று மொழிமாற்றப்பட்ட பெரும்பான்மைப் படங்கள் முதலுக்கு மோசமில்லாமல் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்தன. கீதாஞ்சலி, இதுதாண்டா போலீஸ், நான்தாண்டா எம்.எல்.ஏ, இதோ இன்னொரு தேவதாஸ், உதயம், அன்புச் சின்னம், மன்னிக்க வேண்டுகிறேன், ஆம்பள, வைஜெயந்தி ஐ.பி.எஸ், இந்திரன் சந்திரன் போன்ற படங்கள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படங்களாக அமைந்திருந்தன. இங்கே கொடுத்திருக்கும் புதிரின் விடையாக அமையும் படம் கூட இந்தப் பட்டியலில் இருந்து வருவது தான்.

இசைஞானி இளையராஜாவின் இரண்டு இசைத்துண்டங்களைக் கொடுக்கின்றேன். படம் என்னவென்று கண்டு பிடியுங்களேன். இப்பட இயக்குனர் தமிழிலும் பல அதிரடிப் படங்களைத் தந்தவர். ஆனால் இந்தப் படமோ சுகமான ஒரு காதல் காவியம். இதே படம் ஹிந்திக்குப் போன போது இப்பட நாயகியே நடித்தார். புதிரின் விடையினை தெலுங்குப் படத் தலைப்பாகவோ, அல்லது தமிழ் மொழிமாற்றுத் தலைப்பாகத் தரலாம்.

இசைத்துண்டம் ஒன்று இப்படத்தில் வரும் இனிமையான காதல் காட்சி ஒன்றின் பின்னணி இசை

p11.mp3 - IR

இசைத்துண்டம் இரண்டு இப்படத்தில் வரும் பாடலின் இடையிசை

puthir37.mp3 -

16 comments:

G3 said...

அன்புச் சின்னம்

:)))))))))))))))))))

G.Ragavan said...

Anbu Chinnam... eenade edho ayindhi-nu song kalakala irukum. Venkatesh, Revathy, Vaishnavi nadichirupaanga.

ஆயில்யன் said...

ஹைய்ய் மீ த பர்ஸ்ட்டூ :)))

(எனக்கு தெரியும்ங்கறது உங்களுக்கு தெரிஞ்சுதானே இப்படி ஒரு புதிர் போட்டிருக்கீங்க தல!)

கானா பிரபா said...

ஆயில்ஸ் இது ஓவரு, பதிலை சொல்லணும் ஆமா :)

முதலில் பதிலை சொன்ன G3, மற்றும் ஜி. ராகவன் சரியான பதிலே தான் :)

ஆயில்யன் said...

.//G3, மற்றும் ஜி. ராகவன்///

எப்பவுமே இவுங்க இப்படித்தான் !

பொறுமையா யோசிச்சு கரீக்டா சொல்லமாட்டாங்க!

அவசரவசரமா வந்து சொல்லிட்டு போயிடுவாஙக்!

ஹய்யோ ஹய்யோ! :)))

KARTHIK said...

கீதாஞ்சலி

கலைக்கோவன் said...

கொஞ்சம் கஷ்டமான் புதிர் தான் ....
ஆனாலும் கண்டுபிடிச்சிட்டோம்ல
ப்ரேமா...

கானா பிரபா said...

கார்த்திக்

அந்தப் படம் தவறானது

கலைக்கோவன்

பின்னீட்டிங்க :)

நிலாக்காலம் said...

திரைப்படம்: தமிழில் 'அன்புச் சின்னம்', தெலுங்கில் 'ப்ரேமா', ஹிந்தியில் 'லவ்'.
இயக்குனர்: சுரேஷ் கிருஷ்ணா.
இசை: தெலுங்கிலும் தமிழிலும் இளையராஜா, ஹிந்தியில் ஆனந்த்-மிலிந்த்
நடிகர்கள்: தமிழிலும் தெலுங்கிலும் வெங்கடேஷ்-ரேவதி, ஹிந்தியில் சல்மான் கான்-ரேவதி.

கானா பிரபா said...

நிலாக்காலம்

அந்த மூன்று படங்களையுமே சரியா சொல்லீட்டீங்க, வாழ்த்துக்கள்

கோபிநாத் said...

தல அன்புச்சின்னம் ;)

யப்பா இதை கண்டுபிடிக்க என்ன எல்லாம் செய்ய வேண்டி இருக்கு ;))

கானா பிரபா said...

தல கோபி

அதே தான் :)

நாரத முனி said...

paadum paravaigalaa???

கானா பிரபா said...

நாரதமுனி

பாடும் பறவைகள் தப்பு :)

G.Ragavan said...

பிரபா.. ஒங்களுக்குப் பட்டாம்பூச்சி விருது குடுத்திருக்கோம். வந்து வாங்கிக்கோங்க.

http://gragavan.blogspot.com/2009/03/blog-post.html

கானா பிரபா said...

ஒகே மக்கள்ஸ் இனியும் தாமதிக்க நேரமில்லை ;)

அந்தப் படம் வெங்கடேஷ், ரேவதி ஜோடியாக தெலுங்கில் ப்ரேமா, பின்னர் தமிழில் அன்புச்சின்னம் ஆக மொழி மாற்றம், ஹிந்திக்குப் போனபோது சல்மான்கான், ரேவதி ஜோடியாக லவ் என்று எடுக்கப்பட்டது. போட்டியில் கலந்த அனைவருக்கும் மிக்க நன்றி'

இந்தப்படம் பற்றி நான் முன்னர் எழுதிய பதிவு இதோ

http://radiospathy.blogspot.com/2007/06/blog-post_17.html

இன்னும் சில மணி நேரங்களில் பின்னணி இசைத்தொகுப்பு வரும் :)