Pages

Friday, November 7, 2008

றேடியோஸ்புதிர் 26 - லாலலா லாலலா லாலலா...!


ஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டும் றேடியோஸ்புதிர் ராகவேந்தனின் பின்னணி இசை கலந்து வருகின்றது. இந்தப் புதிரில் வரும் ஒலிப்பகிர்வு லாலலா லாலலா லாலலா என்று வருகின்ற ஒரு பின்னணிபாடல் மெட்டோடு கலக்கும் பின்னணி இசை இது.

இப்படம் குறித்து அதிக உபகுறிப்புக்கள் தேவை இல்லை என்றாலும் கொடுக்கின்றேன். இப்படத்தின் கதாசிரியர் பின்னாளில் பிரபலமான இயக்குனரார். இப்படத்தின் நாயகன் பின்னாளில் பின்னாளில் வேற்று மொழியில் பிரபல நகைச்சுவை நடிகனாரர். இப்படத்தின் இன்னொரு நாயகன் படத்தில் வருவது போலவே மதுவுக்கு அடிமையாகி பின்னர் படத்தின் இறுதிக் காட்சி போலவே அல்ப ஆயுசில் போய்ச் சேர்ந்து விட்ட நல்ல நடிகர்.


சரி இனி இந்தப் படம் என்னவென்று சொல்லுங்களேன், உங்கள் நினைவு மாறாமல் இருந்தால் ;-)

39 comments:

Anonymous said...

Niram Maaraatha Pookkal

Sudhaker - Commedian

Vijayan - innum oru Hero

Anna, Seekiram correcta enru sollunga

G.Ragavan said...

unfading flower. correcta?

sudhakar became comedian in telugu
Vijayan was the other hero
Bagyaraj is that Kathasiriyar

ஆயில்யன் said...

தல இது நிறம் மாறாத பூக்கள் படமாச்சே!

:)))

Anonymous said...

நிறம் மாறாத பூக்கள், ரதியும் விஜயனும் நடிச்சது

pudugaithendral said...

niram maratha pookal

குட்டிபிசாசு said...

நிறம் மாறாத பூக்கள் (1979), ஆயிரம் மலர்களே...!

Thamiz Priyan said...

நிறம் மாறாத பூக்கள்!

கானா பிரபா said...

மது நீங்க தான் முதல் ஆள், வாழ்த்துக்கள் ;-)

முரளிகண்ணன் said...

நிறம் மாறாத பூக்கள்?

சுதாகர் - தெலுங்கு காமெடி நடிகர்
விஜயன் - குடி

இது கிழக்கே போகும் ரயிலுக்கும் பொருந்துதே?
ஆனால் கதாசிரியர் வேறோ?

முரளிகண்ணன் said...

நிறம் மாறாத பூக்கள்?

கானா பிரபா said...

ஜிரா

உங்க மொழிப்பற்றை பாராட்டுறேன் ;)

தமிழ்பிரியன்

கலக்கல்ஸ்

M.Rishan Shareef said...

படம்- நிறம் மாறாத பூக்கள்
பாடல் - ஆயிரம் மலர்களே மலருங்கள்
பாடியவர் - ஜென்சி
நடித்தவர் - ராதிகா


இதுவெல்லாமொரு புதிரா பாஸ்?
புதிர்னா கொஞ்சமாவது கஷ்டமா இருக்கணும் பா :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பாட்டு தான் தெரியுது.. ஆயிரம் மலர்களே..மலருங்கள்..விஜயன் தெரியறாரு..அவ்வளவுதான்.. ஆனா விடை தெரியல..
:(

கானா பிரபா said...

ஆயில்ஸ்

இந்த முறை ஜிரம் கிரம் ஒண்ணும் வரலை போல, சரியான பதில் ;)


சின்ன அம்மணி

வாழ்த்துக்கள் ;-)

Anonymous said...

பாடல்: ஆயிரம் மலர்களே, மலருங்கள் (அருமையான பாட்டு!)
கதாசிரியர்: பாக்யராஜ்?
நாயகன்: சுதாகர் (வேற்றுமொழி தெலுங்கில் பிரபல நகைச்சுவை நடிகர்)
இன்னொரு நாயகன்: விஜயன் ( (மதுவுக்கு அடிமையாகி ...)
படம்: நிறம் மாறாத பூக்கள்

இதே படத்தில் வரும் ‘முதன்முதலாக காதல் டூயட் பாட வந்தேனே’ இன்னொரு டாப் க்ளாஸ் பாடல் - ’ஜீனத் என் கனவில் வந்தாள் உன்போலவே’ குறும்பை மறக்கமுடியுமா? :)

- என். சொக்கன்,
பெங்களூர்.

Haran said...

Niram maaratha pookkal

Anonymous said...

நிறம் மாறாத பூக்கள்?

அத்திரி said...

விஜயன், நிறம் மாறாத பூக்கள்

கப்பி | Kappi said...

நிறம் மாறாத பூக்கள்

கானா பிரபா said...

புதுகைத்தென்றல்

கலக்கீட்டிங்க ;-)

குட்டிப்பிசாசு

ஆண்டைக் கூட சொல்லீட்டிங்களே வாழக

தமிழ்பிரியன்

சரியான கணிப்பு

கானா பிரபா said...

வணக்கம் முரளிக்கண்ணன்

நீங்க சொன்ன மற்றப்படத்திலும் இதே கலைஞர்கள் இருந்தாலும் கொடுக்கப்பட்ட இசையும் இறுதிக் காட்சியும் வேறு,
சரியான கணிப்பு வாழ்த்துக்கள்

ரிஷான்

பாட்டாவே படிச்சீட்டிங்களா ;-) கலக்கல்ஸ்

கானா பிரபா said...

முத்துலெட்சுமி

பாட்டைத் தெரியும், படம் தெரியாதா :(

வாங்க சொக்கன்

ராஜாவுக்கு வெஸ்டர்ன் இசையும் அருமையா வரும்னு காட்டிய படங்களில் ஒன்றல்லவா இது.

கானா பிரபா said...

ஹரன்

சரியான கணிப்பு, வாழ்த்துக்கள்

வெயிலான்

கலக்கீட்டிங்க ;)

கானா பிரபா said...

அத்திரி

சரியான கணிப்பு, வாழ்த்துக்கள்

கப்பி

பின்னீட்டிங் ;)

Dr.Sintok said...

K Bakkiyaraj
Vijayan
rathiga

Dr.Sintok said...

//நாயகன் பின்னாளில் பின்னாளில் வேற்று மொழியில் பிரபல நகைச்சுவை நடிகனாரர்.//
பல தெலுங்கு படங்களும் சில தமிழ் படங்களும்..............பெயர் இப்போ வர மாட்டிங்கது...

thamizhparavai said...

niRam maaRaatha pookkaL

அரவிந்த் said...

ஆயிரம் மலர்களே மலருங்கள்..

நிறம் மாறாத பூக்கள்..

பாக்யராஜ், சுதாகர், விஜயன்..

அரவிந்த் said...

நண்பரே,

என்னால் பாடலை கேட்க முடியவில்லை.. குறிப்புகளை வைத்துதான் சொன்னேன். Quick Time Playerல் தான் தகராறு.. என்ன செய்யலாம்??

கோபிநாத் said...

தல
நிறம் மாறாத பூக்கள் ;))))

கானா பிரபா said...

வணக்கம் அரவிந்த்

உங்கள் கணிப்பு சரியானது, Quick Time Player ஐ மீள நிறுவி ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள், கேட்கிறதா என்று சொல்லங்கள்.

Dr Sintok

சரியான கணிப்பு வாழ்த்துக்கள் ;-)

ஆளவந்தான் said...

The movie name is "Niram maratha Pookal" and one more clue about this movie will be, in this movie only all their character names and their own names are same :)

கானா பிரபா said...

தமிழ் பறவை

கலக்கல்

தங்கக்கம்பி

வழக்கம் போலவே வாழ்த்துக்கள் ;)

கானா பிரபா said...

தல கோபி

பின்னீட்டிங்

ஆளவந்தான்

வெற்றி தான் உங்களுக்கு ;)

கலைக்கோவன் said...

விஜயனின் புகைப்படம் பார்த்தே சொல்லி விடுகிறேன்
படம் --- நிறம் மாறாத பூக்கள்
உள்ளம் கொள்ளை கொண்ட அந்த பாடல் - ஆயிரம் மலர்களே
இயக்கம் - பாரதி ராஜா

நடிப்பு - சுதாகர் (தற்போது தெலுங்கில் காமெடி நடிகர் ), ராதிகா , விஜயன் (நீங்கள் குறிப்பிட்ட ....மறைந்த நடிகர் ),ரதி ( ஏக் துஜே கேலியே - மூலம் ஹிந்தியில் அறிமுகமானார் )

வெளியான ஆண்டு - 1979

தொலைக்காட்சிகளில்
இப்படம் விஜய் தொலைக்காட்சியிடம் உள்ளது.

கானா பிரபா said...

கலைக்கோவன்

மேலதிக தகவலோடு சரியான விடை, நன்றி

கானா பிரபா said...

படம்: நிறம் மாறாத பூக்கள்
கதாசிரியர்: கே.பாக்யராஜ்
தெலுங்கு போன நாயகன்: சுதாகர்
நாயகி: ராதிகா
இன்னொரு அமரரான நாயகன்: விஜயன்


22 பேர் சரியான பதில்களோடு பயமுறுத்தியிருக்கிறீர்கள், அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

Anonymous said...

ஆயிரம் மலர்களே மலருங்கள்.. இந்த பாட்டிலே நீங்கள் கொடுத்த இசையை காணோமே.. எதிலிருந்து எடுத்தீர்கள்? அந்த முழு பாடலை பகிர முடியுமா?

நன்றி

கானா பிரபா said...

நல்லவன்

நான் இங்கே கொடுத்த இசை படத்தின் முகப்பு இசையாக இருந்தது. அதிலே ஆயிரம் மலர்களே பாடலை ஹம் பண்ணி கோர்த்திருப்பார்கள். அதைத் தான் அடுத்த பதிவில் இட்டிருக்கிறேன் பாருங்கள்.