Pages

Friday, March 28, 2008

சிறப்பு நேயர் "ஸ்ரீராம்"

கடந்த வாரம் சினேகிதியின் வாரமாக அமைந்து இனிய பாடல்களோடு மகிழ்வித்தது. தொடர்ந்தும் உங்கள் ஆதரவுக்கு நன்றி கூறி இந்த வார சிறப்பு நேயர் விருந்துக்குச் செல்வோம்.

முத்தான ஐந்து பாடல்களுக்கு சுருக்கமான விளக்கம் தந்து இந்த வார சிறப்பு நேயராக வந்து சிறப்பிக்கின்றார் பதிவர் ஸ்ரீராம். இவர் பொதுவாகவே பதிவுகள் எழுதுவது அரிது, ஆனால் என்ன? வட்டியும் முதலுமாக இவரின் துணைவி புதுகைத் தென்றலே தொடர்ந்து பதிவுகளை அள்ளி விடுகின்றாரே.

Triplicane என்பது இவரின் தனித்துவமான தளமாகும். தொடர்ந்து ஸ்ரீராம் தரும் ஐந்து முத்தான பாடல்கள் குறித்த விளக்கங்களோடு பாடல்களைக் கேட்டு ரசிப்போம்.

தங்களுடைய சிறப்பு நேயர் விருப்பத்திற்கு எனது பாடல் தெரிவுகள்.

1. மன்னன் படத்திலிருந்து " அம்மா என்றழைக்காத உயிரில்லையே, அம்மாவை வணங்காது உயர்வில்லையே".
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்


பாடல் ஏன் விருப்பம்: பாடலின் வரிகளே சொல்லும். அன்னையைப் போல் வேறு தெய்வமில்லை. பாடலைக் கேட்கும் போதெல்லாம் அன்னையின் அருகாமை தந்த சுகம் தென்றலாய் வீசும்.



2. தர்மத்தின் தலைவன் படத்திலிருந்து "தென்மதுரை வைகைநதி தினம் பாடும் தமிழ் பாட்டு"
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன்


விருப்பம் ஏன்: இந்தப் பாடல் என் குடும்பத்தை பார்ததது போலிருக்கும். எனக்கும் தகப்பன் போன்ற அண்ணனும், தாயாய் அண்ணியும் இருக்கிறார்கள்.. அதனாலேயெ இந்தப் பாடல் என் மனம் கவர்ந்த பாடல்.



3.கிழக்கு வாசல் படத்திலிருந்து " பச்சைமலைப் பூவு, நீ உச்சி மலைத் தேனு, குத்தம் குறையேது, நீ நந்தவனத் தேரு"
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


விருப்பம் ஏன்: நான் விரும்பும் நடிகை ரேவதி. கார்த்திக்- ரேவதி ஜோடிப் பொருத்தம் மிக அருமை. தாலாட்டும் இந்தப் பாடல் எனக்கு மிக மிக விருப்பம்.



4. பொன்னுமணி திரைப்படத்திலிருந்து "நெஞ்சுக்குள்ள இன்னாருன்னு சொன்னாத் தெரியுமா?"
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி


செளந்தர்யா - எனக்கு மிகவும் பிடிக்கும். தவிர இந்தப் பாடலின் வரிகள் தன் மனதிலிருக்கும் காதலை அருமையாக வெளிப் படுத்தும் ஒரு பாடல். அதனால் மிக மிக விருப்பம்.



5. நல்லவனுக்கு நல்லவன் என்ற படத்திலிருந்து "உன்னனத் தானே தஞ்சம் என்று நம்பிவந்தாள் மானே".
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், மஞ்சுளா


திருமணம் ஒருவனுக்கு ஏன் அவசியம் என்பதை நான் நிஜத்தில் உணர்ந்தேன். என் மனதில் இருக்கும் வரிகள், பாடலாகவும், காட்சியாகவும் பார்க்கும்போது, மனம் ஆனந்தம அடையும்.



நன்றி.
அன்புடன்
ஸ்ரீராம்.

23 comments:

வடுவூர் குமார் said...

இதில் மூன்று பாடல்கள்,எனக்கும் பிடித்தவை.

பாரதிய நவீன இளவரசன் said...

பாடல்கள் superb! Thanks!

pudugaithendral said...

அஹா, இந்த வாரம் என்னவரின் வாரமா. எப்படி கரிக்டா அயித்தானுக்கு பிடிச்ச செளந்தர்யா படத்தை போட்டிங்க. அதுக்கே ஷ்பெஷல் நன்றி பிரபா.

கோபிநாத் said...

வாங்க...வாங்க ஸ்ரீராம் ;))

\\முத்தான ஐந்து பாடல்களுக்கு சுருக்கமான விளக்கம் தந்து இந்த வார சிறப்பு நேயராக வந்து சிறப்பிக்கின்றார் பதிவர் ஸ்ரீராம். இவர் பொதுவாகவே பதிவுகள் எழுதுவது அரிது, ஆனால் என்ன? வட்டியும் முதலுமாக இவரின் துணைவி புதுகைத் தென்றலே தொடர்ந்து பதிவுகளை அள்ளி விடுகின்றாரே. \\

ஆகா...அப்படியா!!! பதிவுல சுருக்கமாக பேசிட்டிங்க சரி...வீட்டில் எப்படி ..??அங்கேயும் அப்படி தானா!! ;))

குடும்பத்துடன் வலையுலகத்தை கலக்குறிங்க...வாழ்த்துக்கள் ;))

\\Triplicane என்பது இவரின் தனித்துவமான தளமாகும். தொடர்ந்து ஸ்ரீராம் தரும் ஐந்து முத்தான பாடல்கள் குறித்த விளக்கங்களோடு பாடல்களைக் கேட்டு ரசிப்போம். \\

கண்டிப்பாக....

ஒரு முக்கியமான விஷயம் அவருக்கு பிடித்த நடிகை ரேவதின்னு சொல்லியிருக்காரு..ஆனா தலைவர் கானா அவர்கள் செளந்தர்யா படத்தை போட்டுயிருக்காரு...இதுல ஏதே உள்குத்து இருக்கும் போல இருக்கே....;))

தலைவர் இதற்க்கு சரியான பதிலை அளிக்க அனைத்து தொண்டர் படையின் சார்ப்பாக கேட்டுக் கொள்கிறேன் ;))

கோபிநாத் said...

1.
\\பாடல் ஏன் விருப்பம்: பாடலின் வரிகளே சொல்லும். அன்னையைப் போல் வேறு தெய்வமில்லை. பாடலைக் கேட்கும் போதெல்லாம் அன்னையின் அருகாமை தந்த சுகம் தென்றலாய் வீசும். \\

அந்த வரிகளுக்கு சொந்தக்காரா திரு.வாலி அவர்கள். காட்சிகள் அமைத்த விதமும் அருமையாக இருக்கும். எனக்கும் பிடித்த பாடல் ;)

2.
வ\\ிருப்பம் ஏன்: இந்தப் பாடல் என் குடும்பத்தை பார்ததது போலிருக்கும். எனக்கும் தகப்பன் போன்ற அண்ணனும், தாயாய் அண்ணியும் இருக்கிறார்கள்.. அதனாலேயெ இந்தப் பாடல் என் மனம் கவர்ந்த பாடல். \\

இதுவும் அருமையான பாடல்...நல்ல வரிகள் கொண்ட பாடல்..;)

3.
\\விருப்பம் ஏன்: நான் விரும்பும் நடிகை ரேவதி. கார்த்திக்- ரேவதி ஜோடிப் பொருத்தம் மிக அருமை. தாலாட்டும் இந்தப் பாடல் எனக்கு மிக மிக விருப்பம்.\\


ஆர்.வி.உதயகுமார் + ராஜா கூட்டாணியில் வந்த பாடல்கள் அனைத்தும் மிக பெரிய ஹிட் பாடல்கள். தீபங்கள், ஊஞ்சல் என்று காட்சிகளை அழகாக எடுத்திருப்பார் இயக்குனார்.

4.
\\செளந்தர்யா - எனக்கு மிகவும் பிடிக்கும். தவிர இந்தப் பாடலின் வரிகள் தன் மனதிலிருக்கும் காதலை அருமையாக வெளிப் படுத்தும் ஒரு பாடல். அதனால் மிக மிக விருப்பம். \\

அழகான காதல் பாடல்....ஆர்.வி.உதயகுமார் படங்களுக்கு அவரே தான் பாடல்கள் எழுதுவார். இதிலும் அவரே தான் என்று நினைக்கிறேன். செளந்தர்யாவும் நன்றாக நடித்திருப்பார். ;)


5.
\\திருமணம் ஒருவனுக்கு ஏன் அவசியம் என்பதை நான் நிஜத்தில் உணர்ந்தேன். என் மனதில் இருக்கும் வரிகள், பாடலாகவும், காட்சியாகவும் பார்க்கும்போது, மனம் ஆனந்தம அடையும்.\\

அருமையான பாடல் ;))

\\நன்றி.
அன்புடன்
ஸ்ரீராம்.\\

என்னை போலவே அனைத்து பாடல்களும் இளையாராஜா பாடல்களை தந்தமைக்கு ஒரு ஸ்பெசல் நன்றி தல ;))

மங்களூர் சிவா said...

ஓ அண்ணாத்த ஸ்பெஷலா!

வாழ்த்துக்கள்.

/
புதுகைத் தென்றல் said...
அஹா, இந்த வாரம் என்னவரின் வாரமா. எப்படி கரிக்டா அயித்தானுக்கு பிடிச்ச செளந்தர்யா படத்தை போட்டிங்க. அதுக்கே ஷ்பெஷல் நன்றி பிரபா.

/

ரிப்பீட்ட்டேய்

கானா பிரபா said...

தல

செளந்தர்யாவும் பிடிக்கும்னு சைக்கிள் கேப்பில் சொல்லியிருக்காரே, கவனிக்கலையா?

உங்களுக்கு ரேவதி படம் வேணும்னா கேட்டு வாங்கிக்க வேண்டியது தானே ;-)

சுரேகா.. said...

குடும்பமே பதிவு போட்டு...

குடும்பத்தலைவர் பாட்டுப்போட்டு...

அத்தனையும் அசத்தல் மெட்டு..

ஏ..டண்டனக்கா..ஏ டணக்கு னக்கா..

ஆக்ஹா.. தாடி வளர்ற மாதிரி இருக்கே.!
(லதிமுக தலைவர் வாசனை)

நல்லா இருக்குங்க..

ஆமா.. மங்களூராரே ..அப்படியே ரிப்பீட்டேய் போடக்கூடாதுப்பூ!

//அஹா, இந்த வாரம் என்னவரின் வாரமா. //

இதை எப்புடி ரிப்பீட் அடிக்கப்போச்சு?

:)

நிஜமா நல்லவன் said...

////பாடல் ஏன் விருப்பம்: பாடலின் வரிகளே சொல்லும். அன்னையைப் போல் வேறு தெய்வமில்லை. பாடலைக் கேட்கும் போதெல்லாம் அன்னையின் அருகாமை தந்த சுகம் தென்றலாய் வீசும். ////


அன்னையின் அருகாமையே கிடைக்கப்பெறாத எனக்கு இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் துளிர்க்கும் கண்ணீரை இதுவரையில் கட்டுப்படுத்த தெரியவில்லை.



///தர்மத்தின் தலைவன் படத்திலிருந்து "தென்மதுரை வைகைநதி தினம் பாடும் தமிழ் பாட்டு" ////


இன்னதென்று சொல்லத்தெரியாத உணர்வுகள் இந்தப்பாடலை கேட்கும் போது. இன்றளவும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.


////பொன்னுமணி திரைப்படத்திலிருந்து "நெஞ்சுக்குள்ள இன்னாருன்னு சொன்னாத் தெரியுமா?" /////

எனக்கு மிகவும் பிடித்த பாடல். காரணங்களை சொல்ல இயலாத நிலையில் நான்.

////நல்லவனுக்கு நல்லவன் என்ற படத்திலிருந்து "உன்னனத் தானே தஞ்சம் என்று நம்பிவந்தாள் மானே". /////

இந்தப்பாடலை கேட்காத நாட்களே குறைவு என்று சொல்லுமளவிற்கு உறங்கச் செல்லும் முன் கேட்கும் பாடல்.

நன்றி ஸ்ரீராம் சார்.

pudugaithendral said...

என்னோட பாஸ்வர்டை மறந்துட்டேன், அதான் மனைவியின் பெயரில் பதில் வருது.
வடுவூர்குமார், இளவரசன்,நன்றி.

pudugaithendral said...

கோபி எல்லோரும் பேசிகிட்டு இருந்தா கேக்க ஆள்வேணாமா?

எனக்கு பிடித்த பாடல்கள் உங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி

pudugaithendral said...

Mangalore siva,

varugaiku nandri

pudugaithendral said...

ரேவதி, சொளந்தர்யா இருவருமே எனக்கு பிடித்தமானவர்கள்தான் கோபி.

pudugaithendral said...

என் விருப்பப்பாடலை விட உங்க பாட்டு நல்லா இருக்கு சுரேகா..

கவிதை அருவியா கொட்டுது போல.

வாழ்த்துக்கும் ,வருகைக்கும் நன்றி.

sriram

pudugaithendral said...

ஆஹா, உங்க நிஜப் பெயரே நல்லா இருக்கு. இந்தப்பேரும் சூப்பர்தான் நிஜமா நல்லவன்,

தங்களுக்கும் பாட்டு பிடிச்சிருகறது மகிZச்சி.

sriram

நிஜமா நல்லவன் said...

////சுரேகா.. said...
குடும்பமே பதிவு போட்டு...

குடும்பத்தலைவர் பாட்டுப்போட்டு...

அத்தனையும் அசத்தல் மெட்டு..

ஏ..டண்டனக்கா..ஏ டணக்கு னக்கா..

ஆக்ஹா.. தாடி வளர்ற மாதிரி இருக்கே.!
(லதிமுக தலைவர் வாசனை)

நல்லா இருக்குங்க..

ஆமா.. மங்களூராரே ..அப்படியே ரிப்பீட்டேய் போடக்கூடாதுப்பூ!

//அஹா, இந்த வாரம் என்னவரின் வாரமா. //

இதை எப்புடி ரிப்பீட் அடிக்கப்போச்சு?//////


ரிப்பீட்டேய்

நிஜமா நல்லவன் said...

////புதுகைத் தென்றல் said...
என்னோட பாஸ்வர்டை மறந்துட்டேன், அதான் மனைவியின் பெயரில் பதில் வருது.
வடுவூர்குமார், இளவரசன்,நன்றி.////



சரி. ரொம்ப சந்தோஷம்



////புதுகைத் தென்றல் said...
ஆஹா, உங்க நிஜப் பெயரே நல்லா இருக்கு. இந்தப்பேரும் சூப்பர்தான் நிஜமா நல்லவன்,

தங்களுக்கும் பாட்டு பிடிச்சிருகறது மகிZச்சி.////


ரொம்ப நன்றி.


ஒரு ஒற்றுமை கவனிச்சீங்களா? அக்கா கமெண்ட் எழுதும் போது அடிக்கடி 'ஆஹா' னு தான் ஆரம்பிப்பாங்க.. நீங்களும் 'ஆஹா' னு தான் ஆரம்பிக்கிறீங்க.

நிஜமா நல்லவன் said...

சுரேகா சார் நல்லா நறுக்குன்னு குட்டுனீங்க மங்கலூராருக்கு. படிச்சு பார்த்துட்டு கமெண்ட் போடு சிவான்னு சொன்னா கேட்கிறதே இல்ல.

david santos said...

Really beautiful. POSTING AND PHOTO. Thank you.


NURIN JAZLIN
MURDERED. 9 YEARS OLD. WHY? ARE WE HUMAN?
.
Please!
TO AVOID SUCH A TRAGEDY HAPPENING AGAIN, AND FOR THE SALVATION OF OUR CHILDREN, WE ARE DOING A WORLDWIDE CAMPAIGN, DISPLAYING THE IMAGE OF NURIN JAZLIN JAZIMIN IN BLOGS ALL OVER THE WORLD ON 25TH APRIL 2008. LET'S NOT FORGET NURIN JAZLIN.

Swamy Srinivasan aka Kittu Mama said...

enakku miga miga pudicha paatukkal sriram idhu...ultimate collections

1. amma enrazaikkaadha - its the best reference song for all mothers

2. pacha mala poovu - innum freshaaana malliga poovu maadhiri irukku

3. nenjukkulae innarunnu - enna maa poatu thaaki irukaaru namba maestro...SPS voice badam alwa maadhiri sugam

4. thenmadhurai vaigai - super star casual apperance and SPB's voice - ultimate ultimate

5. unnaith thaanae thanjam - indha paatoda startingae oru maadhiri pannum ennai...pazaya ninaivugalukku gubeernu kondu pogum

semma collections sriram...infact i love music..also singingf :)

hear my karaoke songs in my blog when you get a chance

http://kittu-mama-solraan.blogspot.com

தமிழன்-கறுப்பி... said...

பாடல்களைப்பற்றி எல்லோரும் எல்லாம் சொல்லிட்டாங்க இனி இதில நான் என்னத்தை சொல்ல எல்லாமே நல்ல பாடல்கள்...

தென்மதுரை வைகைநதி பாட்டில் உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட கள்வன் என்று சிரித்திருப்பார் பாருங்கள் அதுதான் அவருடைய சிறப்பு எந்தப்பாடல் கொடுத்தாலும் அந்தப்பாடலின் இயல்பாக மாறுவது அவர் குரல்... படத்தில் அது ரஜனிக்கும் பொருந்தியிருக்கும்...

பாச மலர் / Paasa Malar said...

மிகவும் அருமையான ஐந்து பாடல்கள்..எனக்கு மிகவும் பிடித்தவை.

pudugaithendral said...

vanthavanga ellorukum mikka nandro. enakkaga paatgal kodutha prabhavuku oru special nandri.

Thanks for all .

Sriram.