Pages

Saturday, September 22, 2007

புதுப் பாட்டுக்கள் கேட்போமா....?

என்னடா இந்தாளு 80 களுக்கு முந்திய காலத்தின் பாட்டுக்களைப் போட்டுச் சாவடிக்கிறாரே என்று இளசுகள் ஏங்கும் குரல் கேட்கின்றது. எனவே இந்தப் பதிவில் சமீபத்தில் திரைக்கு வந்த, வரப் போகின்ற திரையிசைப் பாடல்களின் அணிவகுப்பு " புத்தம் புது வாசம்" என்ற பெயரில் இடம்பெறுகின்றது. இதில் விசேசமாக, தமிழ் திரையுலகில் சமீபகாலமாகக் கூட்டணி ஆட்சி செய்து வரும் ஏழு இசையமைப்பாளர்களின் பாடல்கள் இடம்பெறுகின்றன.
இந்தத் தொகுப்பில் பாடல்கள் குறித்த சிறு அறிமுகத் துணுக்குகளைக் கொடுத்து நிகழ்ச்சியைப் படைத்திருக்கின்றேன்.

பாகம் 1 இல் இடம் பெறும் பாடல்கள்

1. பள்ளிக்கூடம் திரைப்படத்தில் இருந்து பரத்வாஜ் இசையில் " இந்த நிமிடம்" என்ற பாடல் சிறீனிவாஸ், ஜனனி குரல்களில் ஒலிக்கின்றது.

2. அம்முவாகிய நான் திரைப்படத்தில் இருந்து சபேஷ்-முரளி இசையில் "உன்னைச் சரணடைந்தேன்" என்ற பாடல் ஹரிஸ் ராகவேந்தர், கல்யாணி குரல்களில் ஒலிக்கின்றது.

3. கருப்பசாமி குத்தகைதாரர் திரைப்படத்தில் இருந்து தீனா இசையில் " உப்புக்கல்லு" என்ற பாடல் பாம்பே ஜெயஸ்ரீ குரலில் ஒலிக்கின்றது.

பாகம் ஒன்றைக் கேட்க


பாகம் 2 இல் இடம்பெறும் பாடல்கள்

1. கிரீடம் திரைப்படத்தில் இருந்து ஜி.வி.பிரகாஷ் இசையில் "விழியில்" என்ற பாடல் சோனு நிகாம், சுவேதா குரல்களில் ஒலிக்கின்றது.

2. பீமா திரைப்படத்தில் இருந்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் "ரகசியக் கனவுகள்" என்ற பாடல் ஹரிஹரன், மதுஸ்ரீ மதுஸ்ரீ

3. வீராப்பு திரைப்படத்தில் இருந்து டி.இமானின் இசையில் " புலியை கிளி ஜெயிச்சாக் காதல்" என்ற பாடல் ஹரிஸ் ராகவேந்திரா மற்றும் மதுஸ்ரீ மதுஸ்ரீ

4. தொட்டால் பூ மலரும் திரைப்படத்தில் இருந்து யுவன் சங்கர் ராஜாவின் இசையில் " முகத்தை எப்போதும்" என்ற பாடல் ஹரிசரண் மற்றும் யுவன் சங்கர் ராஜா குரல்களில் ஒலிக்கின்றது.

பாகம் இரண்டைக் கேட்க

13 comments:

  1. இது போன்ற பாடல்களுக்கு பல தளங்கள் இருக்கிறது.

    ஆனால் எங்களுக்கு, எங்களுக்கென்று இருப்பது ரேடியோஸ்பதி மட்டும் தான்.

    இந்தப்பாடல்கள் ஒரு மாறுதலுக்காக மட்டுமென்றால் சரி!
    ஆனால் மாற்றி விடாதீர்கள் பிரபு!!!

    ReplyDelete
  2. We have so many sites for this songs. Don't waste your time. We need unforgetable mid rare songs.

    ReplyDelete
  3. வணக்கம் வெயிலான் மற்றும் சபேஷ்

    தங்கள் கருத்துக்களை வரவேற்கின்றேன்.

    இந்தப் பதிவு சற்று மாறுதலுக்காகப் புதிய பாடல்களில் கேட்கக் கூடிய நல்ல தரத்தில் உள்ளவற்றின் தொகுப்பாக இருந்தது. ஆனால் 80 களை விட்டு நாம் விலக மாட்டோம் ;)

    ReplyDelete
  4. \\ஆனால் 80 களை விட்டு நாம் விலக மாட்டோம் ;)\\

    "தல" இன்னா அது
    "தல" கானா தான் :))

    ReplyDelete
  5. ஏன் சார், கேட்டு ரொம்ப ரொம்ப நாளான அரிய பாடல்கள் எல்லாம் கிடைக்குமா சார்? உதாரணத்துக்கு, மாடி வீட்டு மாமா, யாரைத் தேடி போனா ஒரு ட்ரிக் ட்ரிக் ட்ரிக்..

    ReplyDelete
  6. //கோபிநாத் said...
    \\ஆனால் 80 களை விட்டு நாம் விலக மாட்டோம் ;)\\

    "தல" இன்னா அது
    "தல" கானா தான் :))//

    சும்மா அதிருதில்ல ;)))

    ReplyDelete
  7. //என்னடா இந்தாளு 80 களுக்கு முந்திய காலத்தின் பாட்டுக்களைப் போட்டுச் சாவடிக்கிறாரே என்று இளசுகள் ஏங்கும் குரல் கேட்கின்றது.//

    அப்படியொண்ணும் நாங்க ஏங்கலையே - நீங்க உங்க காலத்துப் பாடல்களையே போடுங்க சார்.

    ReplyDelete
  8. //கொழுவி said...
    அப்படியொண்ணும் நாங்க ஏங்கலையே - நீங்க உங்க காலத்துப் பாடல்களையே போடுங்க சார்.//

    வந்துட்டாருய்யா நாட்டாமை ;))

    ReplyDelete
  9. //Mani said...
    ஏன் சார், கேட்டு ரொம்ப ரொம்ப நாளான அரிய பாடல்கள் எல்லாம் கிடைக்குமா சார்? உதாரணத்துக்கு, மாடி வீட்டு மாமா, யாரைத் தேடி போனா ஒரு ட்ரிக் ட்ரிக் ட்ரிக்..//

    வணக்கம் மணி சார்

    இயன்றவரை தேடுதலுக்கு அரிய பாடல்களையே கொடுக்க வேண்டும் என்பது இவ்வலைப்பதிவின் நோக்கம். நீங்கள் கேட்ட பாடல் குறித்த மேல் விபரம் ஏதாவது தரமுடியுமா? அதாவது படத்தின் பெயர்?

    ஏனெனில் " மாடி வீட்டுப் பொண்ணு மீனா" என்று ஒரு பாட்டு புகுந்த வீடு படத்தில் இருக்கின்றது. அது என் கைவசமும் இருக்கின்றது. நீங்கள் கேட்ட பாடலை நான் அறியவில்லை.

    ReplyDelete
  10. முகத்தை எப்போதும் மூடி வைக்காதே என்றா அந்தப் பாட்டு தொடங்கும்?? நல்ல செலக்ஸன்ஸ்!!

    ReplyDelete
  11. வாங்கோ தங்கச்சி

    அந்தப் பாட்டு அப்பிடித் தான் தொடங்கும். றேடியோஸ்பதியின் செலக்சன் எப்பவும் அப்பிடித் தான்.
    சும்மா அதுருதில்ல ;))

    ReplyDelete
  12. "கண்ணாமூச்சி ஏனடா"வில் இருந்து பாடல்களைத் தந்திருக்கலாமே??

    உப்புக்கல்லை ரொம்ப நாளாத் தேடிக்கிட்டு இருந்தேன்...நன்றிகள்...

    வாழ்க..வளர்க...

    ReplyDelete
  13. ஒரு இசையமைப்பாளருக்கு ஒரு பாட்டு வீதம் கொடுத்திருந்தேன், யுவனுக்கு வந்தது "தொட்டால் பூமலரும்" பாட்டு, அதனால "கண்ணாமூச்சி ஏனடா" மிஸ்ஸாயிடுச்சு

    ReplyDelete