Pages

Tuesday, July 31, 2007

"நெஞ்சத்தைக் கிள்ளாதே"



"நெஞ்சத்தைக் கிள்ளாதே"

ஒரு வருடம் ஓடி வெற்றி கண்ட படம்!
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது அசோக்குமாருக்கும், சிறந்த ஒலிப்பதிவாளருக்கான (முதல் முறை) தேசிய விருது "பிரசாத்" ராமநாதனுக்கும், சிறந்த மாநிலத்திரைப்பட விருது என்ற வகையில் இயக்குனர் மகேந்திரனுக்குமாக மூன்று தேசிய விருது கிடைத்த திரைப்படம்.

ஆனால் இப்படத்தின் கதைக்கரு சில வினாடிகளிலேயே இயக்குனர் மகேந்திரனின் சிந்தனையில் பிறந்தது என்றால் நம்ப முடிகின்றதா? ஆனால் அதுதான் உண்மை.

"சினிமாவும் நானும்" என்ற தன் நூலில் "நெஞ்சத்தைக் கிள்ளாதே" திரைக்கரு உருவான அந்த சுவாரஸ்யமான கணங்களை விபரிக்கின்றார் இயக்குனர் மகேந்திரன். அதை வானொலி வடிவமாக்கியிருந்ததை இங்கே தருகின்றேன், தொடர்ந்து அக் கதை பிறந்த கதையை நினைவுபடுத்தும்
"பருவமே புதிய பாடல் பாடு" என்ற இனிய பாடலும் ஒலிக்கின்றது. இதோ கேளுங்கள்.

24 comments:

  1. பிரபா இந்த படத்துல இன்னொரு பாட்டு வரும் மஞ்சள் வெயில் என்று ஆரம்பமாகும் என நினைக்கிறேன் ..அந்த பாட்டு முடிஞ்சா போடுங்க :)

    ReplyDelete
  2. மாயா

    வரவுக்கு நன்றி

    அய்யனாரே

    நீங்கள் கேட்ட பாடல் இந்தப் படத்தில் அல்ல, மகேந்திரன் இயக்கத்தில் வந்த " நண்டு" படப்பாடல். உமாரமணன் பாடிய "மஞ்சள் வெய்யில் மாலையிட்ட" என்று வரும் இல்லையா?

    ReplyDelete
  3. இந்தப் படத்தில் 'உறவெனும் புதிய வானில்...' எனக்கு ரொம்பப் பிடிக்கும்

    ReplyDelete
  4. இப்படத்தில் இளையராஜாவின் இசை படத்தின் ஓட்டத்தை எவ்விதத்திலும் பாதிக்காமல் இருக்கும். பார்வையாளன் அடுத்த பாட்டை எதிர்பார்க்கமாட்டான். இளையராஜா கொடிகட்டிப் பரந்த நேரம். நினைத்திருந்தால் அட்டகாசமான பாடலைக் கொடுத்திருக்கலாம். இவ்வாறான "அடக்கி வாசித்த" இசையமைப்புக்கு ம்கேந்திரனே காரணம் என நினைக்கிறேன்.

    இப்படம் யாழ்நகர் ஹரன் திரைஅரங்கில் ஓடியது. யாழ்நகர திரை அரங்குகளிலேயே மட்டமான அரங்கு அது. வெளியே மழை பெய்தால் முன்வரிசையில் (கலரி) இருப்போர் (கைக்காசை வழித்து துடைத்து படம் பார்ப்பவர்கள் - வேறு யார் நாம் தான்!!) செருப்புகளை களைந்துவிட்டு 'ரிலாக்ஸ்' ஆக படம் பார்க்க முடியாது. தகரச் சுவர்களின் கீழால் வரும் வெள்ளம் செருப்புகளை கொண்டு சென்று மறுபக்கத்தில் விட்டுவிடும். படம் முடிய சைக்கிளை தேடுவதா செருப்பைத்தேடுவதா???

    ReplyDelete
  5. // Boston Bala said...
    இந்தப் படத்தில் 'உறவெனும் புதிய வானில்...' எனக்கு ரொம்பப் பிடிக்கும் //


    வணக்கம் பாலா

    மகேந்திரன் ராஜா காம்பினேஷனில் வந்த எல்லாப் பாடல்களும் இனிமை என்பேன், உறவெனும் பாடல் காதலர் கீதங்களில் அருமையானதொன்று, பாட்டைப் பின்னர் நீங்கள் கேட்டவையில் தருகின்றேன்.

    ReplyDelete
  6. SurveySan said...
    No award for Raja for this?


    சர்வேசா

    நியாயமா பார்த்தா நம்ம ராக தேவனுக்கு ஓவ்வொரு படத்துக்கும் தேசிய விருது கொடுக்கணும், இந்தப் படத்துக்கு விருதுக்கு அந்த அதிஷ்டம் கிடைக்கவில்லை

    ReplyDelete
  7. அருமையான படம், யதார்த்தமான வசனம், மனதில் நிற்கும் படம். ஒவ்வொரு காட்சியும் மனதை உருக்கும் காட்சிகள் குறிப்பாக வெண்ணிற ஆடை மூர்த்தியின் பட்டறையில் வேலை பார்க்கும் ஒருவர் இறந்து போகும் காட்சி, மோகனை சுஹாசினி (பிரதாப்புடன் திருமணம் முடிந்த பிறகு) அவமானப் படுத்தும் காட்சி என அடுக்கிக் கொண்டே போகலாம். மௌன ராகம் படம் இந்த படத்தின் பாதிப்பாக தான் இருக்கும். -நாகூர் இஸ்மாயில்

    ReplyDelete
  8. //இப்படம் யாழ்நகர் ஹரன் திரைஅரங்கில் ஓடியது. யாழ்நகர திரை அரங்குகளிலேயே மட்டமான அரங்கு அது. //

    வணக்கம் நண்பரே

    ஹரன் தியேட்டர், சாந்தி தியேட்டரின் சகோதரன் தானே? அதாவது ஒரே சொந்தக்காரருடையது என்று நினைக்கிறேன். லிடோவும் அப்பிடித் தான், கொஞ்சம் திருத்த வெளிக்கிடவும் பிளேன் அடிக்கவும் சரியாகி சரிந்து இப்போது காணாமலே போய்விட்டது.


    தேவராஜ்-மோகன், பாரதிராஜாத் தனத்துக் கிராமிய இளையராஜாவை அடுத்த தளத்துக்குக் கொண்டு போனவர்களில் முக்கியமானவர் மகேந்திரன். ஒரு நல்ல கலைஞனிடமிருக்கும் இன்னொரு திறமையைக் காட்டவைத்தது இயக்குனர் திறமை கூட.

    ஹரன் தியேட்டரின் நிலையில் தான் அப்போதய நல்ல தியேட்டர்களின் இன்றைய நிலை யாழ்ப்பாணத்தில். மனோகரா தியேட்டர் மட்டும் பரவாயில்லை

    ReplyDelete
  9. // மௌன ராகம் படம் இந்த படத்தின் பாதிப்பாக தான் இருக்கும். -நாகூர் இஸ்மாயில் //


    வணக்கம் நண்பரே

    இப்படத்தை நன்கு ரசித்திருக்கின்றீர்கள் என்பதை உங்கள் பின்னூட்டம் மூலம் அறிய முடிகின்றது. மெளனராகத்தையும் இப்படத்தையும் இணைத்து இன்று காலை சிந்தித்தேன், உங்கள் சிந்தனையும் இப்போது ஒருமிக்கின்றது

    ReplyDelete
  10. இசையமைப்பாளர்களிடமிருந்து என்ன வாங்க வேண்டுமமென்று தெரிந்த இயக்குனர்களில் மகேந்திரனும் ஒருவர். நெஞ்சத்தைக் கிள்ளாதே....அருமையான படம். மெல்லிய உணர்வுகளைக் காட்டும் படும். அந்தப் படம் உருவான கதையை அறியத் தந்தமைக்கு நன்றி பிரபா.

    ReplyDelete
  11. //யாழ்ப்பாணத்தில். மனோகரா தியேட்டர் மட்டும் பரவாயில்லை//

    உள்ள பெரிய தியேட்டரிலை வசதி குறைந்த தியேட்டராகா மனோகரா தான் இருந்தது . அதோடை யாழ் பஸ் நிலையத்திருந்து கூட தூரம் நடக்கோணும்.. காலத்தின் கோலம் தான்.

    அது சரி வின்ஸருக்கு என்ன நடந்தது

    ReplyDelete
  12. சின்னக்குட்டியர்

    வின்சர் தியேட்டர் இப்ப சதோச என்ற அரச அமைப்பின் உணவுக்களஞ்சியம் ;-(

    எங்கட மண் மட்டுமல்ல நினைவுகளும் அழிக்கப்படுகின்றன.

    ReplyDelete
  13. பருவமே பாடலுக்கு வரும் அந்த டப் டப் சத்தம் எப்படி வந்ததை இளையராஜா ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.
    இந்த மாதிரி ஓடுவதற்கு என்ன பின் இசை வைப்பது என்று யோசித்து தொடையில் தட்டிக்கொண்டிருக்கும் போது அந்த சத்தம் சரியாக இருக்கவே அதுவே இப்போதும் பாடலில் உள்ளது.வேண்டுமென்றால் தட்டிப்பாருங்கள்... அப்படியே இருக்கும்.
    நேற்று ஒரு பழைய ஜெயா TV -இளையராஜா நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது.அதில் பல நிகழ்வுகள் மக்களையும் பார்பவர்களையும் எங்கோ கொண்டு போய்விடுகிறது.
    ஒரு பாடலை காணும் போது யாராவது எழுந்து ஆடமாட்டார்களா என்று தோன்றிய சில நொடிகளில் ஒரு பெண் எழுந்து ஆடுவது கேமிராவில்.
    அடுத்து "ஜனனி,ஜனனி" பாட்டு
    பாலகுமாரன் எழுதுவது போல் வயிறு குழைந்து யாராவது கண்ணீர் விடுகிறார்களா என்று பார்க்க...
    ஓர் முகம் நல்ல களை,ஒப்பனையும் கூட,கேமிரா அவர்களைக்காட்ட கண்ணில் இருந்து பொல் பொல..வென்று.
    இசை ஒரு மனிதனை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறது என்பதை அதில் காணலாம்.
    உங்க ஆடியோ இப்போது கேட்கமுடியவில்லை.(என்னால் மட்டும்)

    ReplyDelete
  14. //G.Ragavan said...
    இசையமைப்பாளர்களிடமிருந்து என்ன வாங்க வேண்டுமமென்று தெரிந்த இயக்குனர்களில் மகேந்திரனும் ஒருவர்.//

    உண்மைதான் ராகவன்

    மகேந்திரன் - ராஜா சிறப்புப் படையல் ஒன்றை எதிர்காலத்தில் ஒலித்தொகுப்பாகச் செய்ய உத்தேசித்திருக்கின்றேன்.

    ReplyDelete
  15. வணக்கம் வடுவூர்குமார்

    நிறையத் தகவல்களை அள்ளி விட்டிருக்கீங்க. மிக்க நன்றி. முடிந்தால் ஒலிபதிவைப் பின்னர் கேளுங்க. படம் உருவான கதையும் சுவாரஸ்யமானதே.

    ReplyDelete
  16. தல

    அருமையான தெகுப்பு....நான் இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை....விரைவில் பார்த்துவிடுகிறேன்.

    ReplyDelete
  17. வாங்க தல

    படத்தை சீக்கிரமே எடுத்துப் பாருங்க.
    மகேந்திரனின் படங்கள் பொதுவாக எல்லாக் காலத்திலுமே ரசிக்கத் தக்கவை.

    ReplyDelete
  18. வந்துட்டேன்ன்ன்ன்...

    நல்லதொரு தெரிவு.இது தான் சுஹாசினி மணிரத்னம் ஹாசனோட முதல் படம்.காலை நேர ஓட்டத்தை அடிப்படையா வைத்து "சேவல் கூவும் சத்தம் கேட்டு"ன்னு ஒரு பாட்டு இப்போ கூட வந்தது.லவ்டுடே இயக்குநரோட ரெண்டாவது படம்.குஷ்பூ,அருண்குமார்,கரண்,ரகுவரன்,ரோஷினி நடிச்சிருப்பாங்க.அந்தப் பாட்டும் நல்லா இருக்கும்.

    ReplyDelete
  19. பிரபா!
    மகேந்திரன் தரமான இயக்குநர், அவர் இந்தப் படத்துக்கு இப்படி ஒரு கதை உள்ளதை இப்போதே அறிந்தேன், இந்தப் பாடலும் இனிதே!

    ReplyDelete
  20. //..உள்ள பெரிய தியேட்டரிலை வசதி குறைந்த தியேட்டராகா மனோகரா தான் இருந்தது . ..//

    யாழ்பாண திரைஅரங்குகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான 'வாசனை' இருந்தது.
    செத்த மூட்டைப்பூச்சியும் மலத்தியோன் மருந்தும கலந்த ஒரு வாசனை வந்தால் கண்ணைமூடிக்கொண்டு மனோகரா எனச்சொல்லலாம்!

    //..அதோடை யாழ் பஸ் நிலையத்திருந்து கூட தூரம் நடக்கோணும்..//

    ஆனால் ஒரு வசதியும் உண்டு. பள்ளிக்கூடம் 'கட்' பண்ணி பார்க்க வசதியான தியேட்டர். ஒதுக்குப்புறத்தில் இருப்பதால் ஊர்க்காரர் கண்களில் இருந்து தப்பலாம். மற்றைய அரங்குகள் யாழ் நகரை அண்டியிருப்பதனால் ஊர்க்காரர் கழுகுக்கண்களுக்கு தப்ப முடியாது!

    //..அது சரி வின்ஸருக்கு என்ன நடந்தது..//
    யாழ்ப்பாணத்திலேயே , ஏன் இலங்கையிலேயே மிகச்சிறந்த திரைஅரங்கு "வின்ஸர்" என்பதே பலர் கருத்து. அங்குதான் ஒவ்வொருவரிசை ஆசனங்களும் ஒவ்வொரு உயரத்தில் இருக்கும்(Stadium Seating ). மிக ஆனந்தமாக பார்க்கவேண்டுமென்றால் இரவு 7.30 காட்சிக்குச் செல்லவேண்டும். காட்சி ஆரம்பமாகி அரைமணித்தியாலங்களில் மேலே இருக்கும் யன்னல்களை (7 அடி உயரம்!!) திறந்து விடுவார்கள். தென்றல் காற்று உள்ளேவரும். ஆறுதலாக சாய்ந்து பாதணிகளை களந்துவிட்டு சிலென்ற சீமெந்துத்தரை யில் கால்களை வைத்து படத்தை ரசிக்கலாம்!
    படம் முடிய (10.30) க்கு சைக்கிள் மிதிக்க வேண்டியது, ரோட்டில் நிற்கும் நாய்களும் சுடலைகளில் எரியும் பிணங்களும் தான் சிக்கல்.

    ReplyDelete
  21. //சுதர்சன்.கோபால் said...
    வந்துட்டேன்ன்ன்ன்...

    நல்லதொரு தெரிவு.இது தான் சுஹாசினி மணிரத்னம் ஹாசனோட முதல் படம்.காலை நேர ஓட்டத்தை அடிப்படையா வைத்து "சேவல் கூவும் சத்தம் கேட்டு"ன்னு ஒரு பாட்டு இப்போ கூட வந்தது.//


    நீங்கள் சொல்லும் படம் "துள்ளித் திரிந்த காலம். பாடல்கள் எல்லாமே அருமை. பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பில் வந்தது. படம் தோல்வி என்பதால் இசையமைப்பாளருக்கு வாய்ப்பு தொடர்ந்து கிட்டவில்லை.

    ReplyDelete
  22. //யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    பிரபா!
    மகேந்திரன் தரமான இயக்குநர், அவர் இந்தப் படத்துக்கு இப்படி ஒரு கதை உள்ளதை இப்போதே அறிந்தேன், இந்தப் பாடலும் இனிதே!//


    முடிந்தால் இவரின் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் அண்ணா, சுவாரஸ்மாக இருக்கும்.

    ReplyDelete