Pages

Wednesday, April 25, 2007

காதலர் கீதங்கள் - மெளனமான நேரம்


காதலர் கீதங்களாக மெளனமான நேரம் என்ற தலைப்பில் முத்தான மூன்று காதல் ரசம் சொட்டும் பாடல்கள் இன்றைய சிறப்புப் படையலாக இடம்பெறுகின்றன.
இதில் மு.மேத்தாவின் காதற் கவிதைகளோடு, வைரமுத்துவின் திரையிசைப் பாடல்களான "மெளனமான நேரம்" (சலங்கை ஒலி), "ஊரு சனம் தூங்கிடிச்சு" (மெல்லத் திறந்தது கதவு), காதல் மயக்கம் ( புதுமைப்பெண்) ஆகிய பாடல்கள் வலம் வருகின்றன.

28 comments:

  1. எல்லாம் எனக்கு பிடித்த பாடல்கள் ;-)
    மிகவும் இரசித்தேன் :-)நன்றி

    ReplyDelete
  2. நல்ல பாடல் தெரிவுகள்....
    எல்லா பாடல்களும் பிரபலமானவை.

    ஆமா யாருக்காக இந்த பாடல்களை தெரிவு செஞ்சிங்க ? ;-)

    ReplyDelete
  3. //துர்கா|thurgah said...
    எல்லாம் எனக்கு பிடித்த பாடல்கள் ;-)
    மிகவும் இரசித்தேன் :-)நன்றி //


    மிக்க நன்றி துர்கா

    இன்னும் இருக்கிறது, அடிக்கடி கடைப்பக்கம் வாங்க ;-)

    ReplyDelete
  4. புண்பட்ட இதயத்தயத்தை இசையால் வருடி விட்டீர்கள் போங்கள் அனைத்தும் நல்ல தெரிவுகள் நன்றி கானாபிரபா

    ReplyDelete
  5. கானா பிரபா said...
    //வி. ஜெ. சந்திரன் said...
    ஆமா யாருக்காக இந்த பாடல்களை தெரிவு செஞ்சிங்க ? ;-) //


    கானா பிரபா: யாருக்காக இது யாருக்காக?
    கானா பிரபாவின் மனச்சாட்சி: ஜெயப்பிரதாவுக்காக இது ஜெயப்பிரதாவுக்காக...

    போதுமா வி.ஜெ. ;-)

    ReplyDelete
  6. //தமிழ்பித்தன் said...
    புண்பட்ட இதயத்தயத்தை இசையால் வருடி விட்டீர்கள் போங்கள்//


    தம்பி தமிழ்ப்பித்தா

    எனக்கு அழுவ அழுவையா வருது, உங்கள் மனசைப் புண்படுத்திய பேதை யாரவள்?
    என்ன உலகமப்பா இது, ஆண்கள் இந்தக் கொடிய காதல் நோயிலிருந்து மீள்வதெப்போது?

    ReplyDelete
  7. அநியாத்துக்கு யாருக்காக எண்டு கேட்க மாட்டன் !!!.
    யாருக்கெண்டாலும் பரவயில்ல
    பிடிச்ச பாட்டுகள்!!!!
    PS:: (ஒரே feelingsஸ.. இருக்கு :))

    ReplyDelete
  8. திலகன்

    பீலிங்ஸ் இருந்தால் தான் காதல், இல்லாவிட்டால் பீலா.
    இன்னும் பீலிங்க்ஸ் வரும், தமிழ்பித்தன் போன்ற காதல் குஞ்சுகுருமான்கள் இருக்கும் வரை ;-)

    ReplyDelete
  9. பிரபா!

    பாட்டைக் கேட்டுக்கொண்டு ஏதாவது எழுதுவமென்டிருந்தால், அது எங்க முடியுது. என்னென்வோ எல்லாம் ஞாபகத்துக்கு வருகுது. அருமையான
    பாடல்கள்.

    //தமிழ்பித்தன் போன்ற காதல் குஞ்சுகுருமான்கள் இருக்கும் வரை//


    இது சரியில்ல..:))

    ReplyDelete
  10. varan indaiku prabanna enna nadakuthu inga?? malainaadanku elutha mudiyaamal irukaam :-)))

    intha aunty aaru vadiva irukira....

    ReplyDelete
  11. //மலைநாடான் said...
    பிரபா!

    பாட்டைக் கேட்டுக்கொண்டு ஏதாவது எழுதுவமென்டிருந்தால், அது எங்க முடியுது. என்னென்வோ எல்லாம் ஞாபகத்துக்கு வருகுது.//

    அண்ணேஏஏஏஏ! நீங்களுமா?

    (விவேக் பாணியில்) ஆஹா, தாடி வைக்காத தேவதாஸ் நிறையப்பேர் இருப்பாங்க போலிருக்கே!

    ReplyDelete
  12. //சினேகிதி said...
    varan indaiku prabanna enna nadakuthu inga?? malainaadanku elutha mudiyaamal irukaam :-)))

    intha aunty aaru vadiva irukira.... //


    தங்கச்சி

    நான் என்ன பண்ணுவேன், மூன்று காதல் பாட்டு எடுத்துவிட்டதுக்கு ஆளாளுக்கு இப்பிடி பீல் பண்ணுறாங்க.

    ஜெயப்பிரதாவை ஆன்ரி எண்டால் கெட்ட கோபம் வரும், சமீபத்தில் 1983 இல் வெளியாகிய சலங்கை ஒலியில் என்னமாய் நடித்திருப்பார்.

    ReplyDelete
  13. பாட்டெல்லாம் நல்லாயிருக்கெண்டு சொல்லப்பயமாயிருக்குது, இங்க நடக்கிறதைப் பாத்தா வாயமூடிக்கொண்டு பாட்டைக்கேக்கிறது நல்லமெண்டு படுகுது.

    ஆனாலும் ஒண்டு சொல்லோணும்..


    பிரபா, ஜெயப்பிரதாவின்ர படத்துக்குக்கீழ இருக்கிற படத்தில நீங்க குடுக்கிற போஸ், சூப்பராக்கும்!

    -மதி

    ReplyDelete
  14. \\பிரபா, ஜெயப்பிரதாவின்ர படத்துக்குக்கீழ இருக்கிற படத்தில நீங்க குடுக்கிற போஸ், சூப்பராக்கும்!\\

    :-) :-) :-)

    ReplyDelete
  15. சக்கரை நிலவே பாட்டை எப்ப போடுறியளோ அப்பதான் நான் மலைநாடான் மாதிரி பின்னூட்டம் போடுவன். ஆனாலும் உந்தப் பாட்டுக்கெல்லாம் மலையண்ணைக்கு ஞாபகங்கள் எல்லாம் வராதே.. கானா அண்ணை அவருக்காக ஏதாவது கறுப்பு வெள்ளை சோகப் பாட்டு போடுங்கோ

    ReplyDelete
  16. //இங்க நடக்கிறதைப் பாத்தா...//


    அப்பிடி என்னதான் நடக்குது?? :)

    ReplyDelete
  17. //மதி கந்தசாமி (Mathy) said...

    பிரபா, ஜெயப்பிரதாவின்ர படத்துக்குக்கீழ இருக்கிற படத்தில நீங்க குடுக்கிற போஸ், சூப்பராக்கும்!//


    வாங்கோ வாங்கோ, நீங்களும் உங்கட பங்குக்கு உள்குத்து பின்னூட்டம் போட்டிட்டீயள், நாங்களெல்லாம் ஜெயப்பிரதா இல்லாட்டி போய்கொண்டே இருப்பம், உப்பிடி தலைகீழாவெல்லாம் நிக்கேல்லை.

    ReplyDelete
  18. //உந்தப் பாட்டுக்கெல்லாம் மலையண்ணைக்கு ஞாபகங்கள் எல்லாம் வராதே.. கானா அண்ணை அவருக்காக ஏதாவது கறுப்பு வெள்ளை சோகப் பாட்டு போடுங்கோ//

    ஏய்!.. இதெல்லாம் ரொம்ப ஓவர்..:))

    ReplyDelete
  19. மிகவும் இனிமையான பாடலகள் மிக நல்ல தேர்வு

    ReplyDelete
  20. //பிரபா, ஜெயப்பிரதாவின்ர படத்துக்குக்கீழ இருக்கிற படத்தில நீங்க குடுக்கிற போஸ், சூப்பராக்கும்!//

    இதை தான் நான் சொல்ல வெளிக்கிட்டனான். நல்லா போஸ் குடுக்கிறியள் எண்டு. நீங்க சொல்லிபோட்டியள்...

    ReplyDelete
  21. //சயந்தன் said...
    சக்கரை நிலவே பாட்டை எப்ப போடுறியளோ அப்பதான் நான் மலைநாடான் மாதிரி பின்னூட்டம் போடுவன்.//

    கானா பிரபா: சயந்தன் , உப்பிடிப் பாட்டுக் கேட்டு உம்மை இன்னும் இளமையான ஆளாக் காட்ட நான் தயாரில்லை

    கானா பிரபாவின் மனச்சாட்சி : விட்டா விஜய்யின்ர அடுத்த படம் 'அழகிய தமிழ்மகன்' வரேக்கை தாங்கள் பிறக்கவேயில்லை எண்டும் சொல்லுவாங்கள் போல

    ReplyDelete
  22. //theevu said...
    //இங்க நடக்கிறதைப் பாத்தா...//


    அப்பிடி என்னதான் நடக்குது?? :)//

    அதுதானே ;-))

    //மலைநாடான் said...
    கானா அண்ணை அவருக்காக ஏதாவது கறுப்பு வெள்ளை சோகப் பாட்டு போடுங்கோ//

    ஏய்!.. இதெல்லாம் ரொம்ப ஓவர்..:))//

    நீங்கள் யோசியாதேங்கோ அண்ணை, எம்.ஜி.ஆர் நடிச்ச கலர்ப்படங்களும் இருக்கு

    ReplyDelete
  23. //மருதநாயகம் said...
    மிகவும் இனிமையான பாடலகள் மிக நல்ல தேர்வு//

    அடிக்கடி வாருங்கள் மருதநாயகம், நன்றி


    // வி. ஜெ. சந்திரன் said...
    //பிரபா, ஜெயப்பிரதாவின்ர படத்துக்குக்கீழ இருக்கிற படத்தில நீங்க குடுக்கிற போஸ், சூப்பராக்கும்!//

    இதை தான் நான் சொல்ல வெளிக்கிட்டனான்.//

    கனடாக்காரருக்கு குசும்பு சாஸ்தி

    ReplyDelete
  24. அண்ணை,
    நீங்கள் உதுகளில கரைகண்டவர் எண்டதால (இல்லாட்டி கரையிலயிருந்து மீளாக் கடலில இழுபட்டுப் போனியள் எண்டதால) தமிழ்ப்பித்தன் ஆக்களை 'குஞ்சுகுருமன்' எண்டு சொல்லிறது சரியில்லை.

    நாளைக்கே அவரும் உங்களைப்போல உதுகளில பேக்காயா வருவார்.
    ______________________
    "உங்கள் மனசைப் புண்படுத்திய பேதை யாரவள்?" எண்டு தமிழ்ப்பித்தனிட்ட ஒருமையில கேக்கிறது சரியில்லை.
    ஒண்டா, ரெண்டா அந்தாள் சொல்லிறது?
    இதை நான் சொல்லேல. அவரே சொல்லியிருக்கிறார்.
    தனது "காதலிகளுக்காக" (அதுவும் எல்லாமே ஒருதலைக் காதலாம்) இவர் பாட்டுப்பாடிப் புலம்பினதுகளைக் கேக்கேலயோ?

    ReplyDelete
  25. //ஒண்டா, ரெண்டா அந்தாள் சொல்லிறது?//

    :-)) பாடல் தெரிவு ரொம்ப நல்லாயிருக்கு.

    ReplyDelete
  26. வசந்தன்

    தமிழ்பித்தன் இப்பவே போக்காய் தான், சயந்தன் அந்தாளிட்ட வாங்கிக்கட்டுறது காணாதெண்டு என்னையும் மாட்டிவிடாதேங்கோ.

    அவர் பாட்டுப் பாடி கனடா முழுக்கக் கலவரமாம்.

    வாங்கோ யூ.பி

    பானையில இருக்கிறது தானே அகப்பையில வரும். இதே மாதிரி இன்னும் சில தொகுப்பு இருக்கு. பிறகு வரும்.

    ReplyDelete
  27. ஐசே,
    நான் பேக்காய் எண்டுதான் சொன்னன். நீர் 'போக்காய்' எண்டு சொல்லிறதில ஏதாவது உட்குத்து இருக்கா?

    ReplyDelete
  28. என் எழுத்து தடம்மாறிவிட்டது. உள்குத்து என்று சொல்லி கொழுவி வைக்கதையும். பயந்து பயந்து சீவிக்கவேண்டிக்கிடக்கு.

    ReplyDelete